Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள்—அதன் மகிழ்ச்சியுள்ள பலன்!

கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள்—அதன் மகிழ்ச்சியுள்ள பலன்!

அதிகாரம் 41

கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள்—அதன் மகிழ்ச்சியுள்ள பலன்!

தரிசனம் 15​—வெளிப்படுத்துதல் 20:11–21:8

பொருள்: பொது உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு நாள், புதிய வானங்கள் மற்றும் ஒரு புதிய பூமியின் ஆசீர்வாதங்கள்

நிறைவேற்றத்தின் காலம்: ஆயிர ஆண்டு ஆட்சி

1. (அ) ஆதாமும் ஏவாளும் பாவஞ்செய்தபோது மனிதவர்க்கம் எதை இழந்தது? (ஆ) கடவுளுடைய எந்த நோக்கம் மாறிவிடவில்லை, நமக்கு எவ்வாறு தெரியும்?

 மனிதர்களாக, நாம் என்றென்றும் வாழும்படி படைக்கப்பட்டோம். ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர்கள் ஒருபோதும் மரித்திருக்க மாட்டார்கள். (ஆதியாகமம் 1:28; 2:8, 16, 17; பிரசங்கி 3:10, 11) ஆனால் அவர்கள் பாவஞ்செய்தபோது, பரிபூரணத்தையும் உயிரையும் தங்களுக்கும் தங்கள் சந்ததியாருக்கும் இழந்தார்கள், மரணம் இரக்கமற்ற சத்துருவாக மனிதவர்க்கத்தின்மீது ஆட்சி செய்ய தொடங்கிற்று. (ரோமர் 5:12, 14; 1 கொரிந்தியர் 15:26) எனினும், பரிபூரண மனிதர்கள் பரதீஸான பூமியில் என்றென்றுமாக வாழச் செய்யவேண்டுமென்ற கடவுளுடைய நோக்கம் மாறிவிடவில்லை. மனிதவர்க்கத்தின்பேரிலுள்ள தம்முடைய மிகுந்த அன்பினால், அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பினார், இவர், ஆதாமின் சந்ததியார் ‘அநேகருக்காகத்’ தம்முடைய பரிபூரண மனித உயிரை மீட்கும்பொருளாகக் கொடுத்தார். (மத்தேயு 20:28; யோவான் 3:16) விசுவாசிக்கும் மனிதர்களைப் பரதீஸான பூமியில் பரிபூரண வாழ்க்கைக்குத் திரும்ப நிலைநாட்டுவதற்கு இயேசு, தம்முடைய பலியின் இந்தச் சட்டப்பூர்வ மதிப்பை இப்பொழுது பயன்படுத்த முடியும். (1 பேதுரு 3:18; 1 யோவான் 2:2) மனிதவர்க்கம் “களிகூர்ந்து மகிழு”வதற்கு எத்தகைய மகத்தான காரணம்!—ஏசாயா 25:8, 9.

2. வெளிப்படுத்துதல் 20:11-ல் யோவான் என்ன அறிவிக்கிறார், அந்தப் ‘பெரிய வெள்ளைச் சிங்காசனம்’ என்ன?

2 சாத்தான் அபிஸ்ஸில் கட்டுப்படுத்தப்பட்டிருக்க, இயேசுவின் மகிமையான ஆயிர ஆண்டு ஆட்சி தொடங்குகிறது. கடவுள் ‘தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்க்கும்படி’ நோக்கங்கொண்டுள்ள அந்த ‘நாள்’ இப்பொழுது வந்திருக்கிறது. (அப்போஸ்தலர் 17:31; 2 பேதுரு 3:8) யோவான் அறிவிப்பதாவது: “பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.” (வெளிப்படுத்துதல் 20:11) இந்தப் ‘பெரிய வெள்ளைச் சிங்காசனம்’ என்ன? இது “யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனு”டைய நியாயத்தீர்ப்பு சிங்காசனமல்லாமல் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. (எபிரெயர் 12:23) இயேசுவின் மீட்கும் பலியிலிருந்து யார் நன்மையடைவரென்பதைக் குறித்து அவர் இப்பொழுது மனிதவர்க்கத்தை நியாயந்தீர்ப்பார்.—மாற்கு 10:45.

3. (அ) கடவுளுடைய சிங்காசனம் ‘பெரியது’ எனவும் “வெள்ளை”யாக இருக்கிறதெனவும் சொல்லப்பட்டிருக்கும் இந்த உண்மை எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) நியாயத்தீர்ப்பின் நாளில் யார் நியாயத்தீர்ப்பு செய்வார், எந்த ஆதாரத்தின்பேரில்?

3 கடவுளுடைய சிங்காசனம் ‘பெரியது’ என்பது ஈடற்றப் பேரரசரான கர்த்தராக யெகோவாவின் மகத்துவத்தை அறிவுறுத்துகிறது, மேலும் அது “வெள்ளை”யாக இருப்பது அவருடைய மாசற்ற நீதியைக் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. அவரே மனிதவர்க்கத்தின் இறுதியான நியாயாதிபதி. (சங்கீதம் 19:7-11; ஏசாயா 33:22; 51:5, 8) எனினும், அவர் இந்த நியாயத்தீர்ப்பு வேலையை இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைத்திருக்கிறார். “பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.” (யோவான் 5:22) இயேசுவுடன் 1,44,000 துணைவர்கள் இருக்கின்றனர், ‘ஆயிரம் வருஷங்களுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.’ (வெளிப்படுத்துதல் 20:4) அவ்வாறாயினும், நியாயத்தீர்ப்பின் நாளின்போது ஒவ்வொரு ஆளுக்கும் நடக்கவிருப்பதைத் தீர்மானிப்பது யெகோவாவின் தராதரங்களே.

4. “பூமியும் வானமும் அகன்றுபோயின” என்பதன் பொருள் என்ன?

4 “பூமியும் வானமும் அகன்றுபோயின” என்பது எவ்வாறு? ஆறாவது முத்திரை உடைக்கப்பட்டபோது புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு விலகிப்போன அதே வானமே இது—“அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிற” ஆளும் மனித அதிகாரங்கள். (வெளிப்படுத்துதல் 6:14; 2 பேதுரு 3:7) அந்தப் பூமி, இந்த ஆட்சியின்கீழிருக்கும் இணைத்தமைக்கப்பட்ட காரிய ஒழுங்குமுறையாகும். (வெளிப்படுத்துதல் 8:7) அந்த மூர்க்க மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், அவர்களோடுகூட மூர்க்க மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதன் சொரூபத்துக்கு வணக்கஞ்செலுத்தினவர்களும் அழிக்கப்பட்டுப்போவது, இந்த வானமும் பூமியும் அகன்றுபோவதைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:19-21) சாத்தானுடைய பூமியின்மீதும் வானத்தின்மீதும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்டுத் தீர்ந்துவிட்டதால், இந்தப் பெரிய நியாயாதிபதி மற்றொரு நியாயத்தீர்ப்பு நாளைக் கட்டளையிடுகிறார்.

அந்த ஆயிரம் ஆண்டு நியாயத்தீர்ப்பு நாள்

5. பழைய பூமியும் பழைய வானமும் அகன்றுபோனபின்பு, நியாயந்தீர்க்கப்படுவதற்கு யார் விடப்பட்டிருக்கின்றனர்?

5 அந்தப் பழைய பூமியும் பழைய வானமும் அகன்று போய்விட்ட பின்பு நியாயந்தீர்க்கப்படுவதற்கு யார் விடப்பட்டிருக்கின்றனர்? அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 பேரில் மீந்தவர்கள் அல்லர், ஏனெனில் இவர்கள் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டு முத்திரையிடப்பட்டுவிட்டனர். அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களில் யாராவது அர்மகெதோனுக்குப் பின்பு பூமியில் இன்னும் உயிரோடிருந்தால், அதற்குப்பின் அவர்கள் சீக்கிரத்தில் மரித்து, உயிர்த்தெழுதல் மூலம் தங்களுடைய பரலோகப் பரிசைப் பெறவேண்டும். (1 பேதுரு 4:17; வெளிப்படுத்துதல் 7:2-4) எனினும், இப்பொழுது மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளிவந்திருக்கிற லட்சக்கணக்கான திரள் கூட்டத்தார் “சிங்காசனத்திற்கு முன்பாக” கவனத்தைக் கவரும் முறையில் நிற்கின்றனர். இவர்கள் இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் வைத்த தங்கள் விசுவாசத்தினிமித்தம் தப்பிப்பிழைப்பதற்கு ஏற்கெனவே நீதியுள்ளோராக எண்ணப்பட்டிருந்தனர், ஆனால் அந்த ஆயிரம் ஆண்டுகளினூடே இயேசு இவர்களை “ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்குத்” தொடர்ந்து வழிநடத்திக்கொண்டிருக்கையில் இவர்களுடைய நியாயத்தீர்ப்பு தொடரவேண்டும். பின்பு, மனித பரிபூரணத்துக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டு, அதன்பின்பு சோதிக்கப்பட்டு, முழுமையான கருத்தில் நீதியுள்ளோராக அவர்கள் தீர்க்கப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14, 17) மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும் பிள்ளைகளும் அந்த ஆயிர ஆண்டுகளின்போது திரள் கூட்டத்தாருக்குப் பிறக்கும் பிள்ளைகளும் அந்த ஆயிர ஆண்டுகளின்போது இவ்வாறே நியாயந்தீர்க்கப்பட வேண்டியவர்களாக இருப்பார்கள்.—ஒப்பிடுக: ஆதியாகமம் 1:28; 9:7; 1 கொரிந்தியர் 7:14.

6. (அ) என்ன பெருங்கூட்டத்தை யோவான் காண்கிறார், “சிறியோரையும் பெரியோரையும்” என்ற வார்த்தைகள் குறிப்பிட்டுக் காட்டுவது என்ன? (ஆ) கடவுளுடைய நினைவிலிருக்கும் எண்ணற்ற லட்சக்கணக்கானோர், சந்தேகமில்லாமல் எவ்வாறு வெளிக்கொண்டுவரப்படுவர்?

6 எனினும், யோவான், அந்தத் தப்பிப்பிழைத்திருக்கும் திரள் கூட்டத்தாரைப் பார்க்கிலும் மிகப் பலர் அடங்கிய பெருங்கூட்டத்தைக் கவனிக்கிறார். அது பல கோடிக்கணக்கான எண்ணிக்கையாக இருக்கும்! “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் [புஸ்தகச்சுருள்கள், NW] திறக்கப்பட்டன.” (வெளிப்படுத்துதல் 20:12அ) “சிறியோரையும் பெரியோரையும்” என்பது, கடந்த 6,000 ஆண்டுகளின்போது பூமியில் வாழ்ந்து மரித்திருக்கும் மனிதரில் முக்கியத்துவம் வாய்ந்தோரையும் குறைந்த முக்கியத்துவமுடையோரையும் உள்ளடக்குகிறது. வெளிப்படுத்துதலுக்குச் சிறிது காலத்துக்குப் பின்பு அப்போஸ்தலன் யோவான் எழுதின சுவிசேஷத்தில், பிதாவைக் குறித்து இயேசு பின்வருமாறு சொன்னார்: “அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் [இயேசுவுக்குக்] கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் [கேட்டு வெளிவரும், NW] காலம் வரும்.” (யோவான் 5:27-29) சரித்திரம் முழுவதிலும் நடந்த மரணங்களையும் சவ அடக்கங்களையும் கட்டவிழ்ப்பது எத்தகைய மிகப் பெரிய ஏற்பாடு! இவ்வாறு, உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் முதன்முதலில் தங்கள் பழைய வாழ்க்கை நடைமுறையை, அதன் மாம்ச பலவீனங்களுடனும் மனப்பான்மைகளுடனும் பின்பற்றி நடக்கும் போக்கையுடையோராக இருக்கலாமாதலால், எழும்பக்கூடிய பிரச்சினைகளை—ஒப்பிடுகையில் சொற்பமாயிருக்கும்—அந்தத் திரள் கூட்டத்தார் கையாளக்கூடியோராக இருக்கும்படி கடவுளுடைய நினைவிலிருக்கும் எண்ணற்ற லட்சக்கணக்கானோர் சந்தேகமில்லாமல், படிப்படியாய் வெளிக் கொண்டுவரப்படுவார்கள்.

எழுப்பப்பட்டு நியாயந்தீர்க்கப்படுவோர் யார்?

7, 8. (அ) என்ன புஸ்தகச்சுருள் திறக்கப்படுகிறது, அதன்பின் என்ன நடைபெறுகிறது? (ஆ) யாருக்கு உயிர்த்தெழுதல் இராது?

7 யோவான் மேலும் கூறுவதாவது: “ஜீவபுஸ்தகம் [ஜீவ புஸ்தகச்சுருள், NW] என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் [புஸ்தகச்சுருள்களில், NW] எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் [ஹேடீஸும், NW] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:12ஆ, 13) நிச்சயமாகவே திகைக்கவைக்கும் ஒரு காட்சி! ‘சமுத்திரமும் மரணமும் ஹேடீஸும்’ ஒவ்வொன்றும் ஒரு பங்கை வகிக்கிறது, ஆனால் இந்தப் பதங்கள் ஒன்றுக்கொன்று பரிமாற்றமான ஒன்றாக இல்லையென்பதைக் கவனியுங்கள். a யோனா, மீனின் வயிற்றில் இருந்ததனால் சமுத்திரத்தின் மத்தியில் இருந்தபோதும், ஷியோலில் அல்லது ஹேடீஸில் இருந்ததாகத் தன்னைக் குறித்துப் பேசினார். (யோனா 2:2, NW) ஆதாமினால் உண்டான மரணப் பிடிப்பில் ஒருவர் வைக்கப்பட்டிருந்தால், அப்பொழுது அவரும் ஹேடீஸில் இருக்கலாம். ஒருவரும் கவனிக்காமல் விடப்படுவதில்லையென இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் உறுதியான நிச்சயத்தை அளிக்கின்றன.

8 நிச்சயமாகவே, அறியப்படாத எண்ணிக்கையான ஆட்கள் உயிர்த்தெழுப்பப்படுவதில்லை. இயேசுவையும் அப்போஸ்தலரையும் ஏற்க மறுத்துவிட்ட மனந்திரும்பாத வேதபாரகரும் பரிசேயரும், மதசம்பந்தப்பட்ட “அக்கிரம மனுஷனும்,” “மறுதலித்துப்போனவர்களான” அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களும், இவர்களுக்குள் இருப்பர். (2 தெசலோனிக்கேயர் 2:3, தி.மொ.; எபிரெயர் 6:4-6; மத்தேயு 23:29-33) உலகத்தின் முடிவில், ‘பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்குள்,’ அதாவது “நித்திய ஆக்கினையை” அடையப்போகிற வெள்ளாடுகளைப்போன்ற ஆட்களைக் குறித்தும் இயேசு பேசினார். (மத்தேயு 25:41, 46) இவர்களுக்கு உயிர்த்தெழுதல் கிடையாது!

9. உயிர்த்தெழுதலில் சிலர் தனிப்பட்ட முறையில் தயவுகூரப்படுவரென அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டுகிறார், இவர்களில் அடங்கியிருப்போர் யாவர்?

9 மறுபட்சத்தில், சிலர், உயிர்த்தெழுதலில் தனிப்பட்ட முறையில் தயவுகூரப்படுவர். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னபோது இதைக் குறிப்பிட்டுக் காட்டினார்: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . தேவனிடத்தில் . . . நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:15) பூமிக்குரிய உயிர்த்தெழுதலைக் குறித்ததில், ‘நீதிமான்கள்,’ கடவுளுடன் நட்புறவு சம்பந்தமாக, நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டவர்களான ஆபிரகாம், ராகாப், இன்னும் மற்றப் பலராகிய உண்மையுள்ள பூர்வ ஆண்களும் பெண்களும் அடங்கியோராக இருப்பர். (யாக்கோபு 2:21, 23, 25) தற்காலங்களில் யெகோவாவுக்கு உண்மையுள்ளோராய் மரித்த நீதியுள்ள அந்த மற்றச் செம்மறியாடுகளும் இதே தொகுதியில் இருப்பர். உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்களான இத்தகைய எல்லாரும், இயேசுவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் முற்பகுதியில் பெரும்பாலும் உயிர்த்தெழுப்பப்படுவர். (யோபு 14:13-15; 27:5; தானியேல் 12:13; எபிரெயர் 11:35, 39, 40) உயிர்த்தெழுப்பப்பட்ட நீதிமான்களாகிய இவர்களில் பலர், பரதீஸில் திரும்பப் புதுப்பிக்கும் மிகப்பெரிய வேலையை மேற்பார்வையிடுவதில், சந்தேகமில்லாமல், தனிப்பட்ட சிலாக்கியங்கள் அளிக்கப்படுவர்.—சங்கீதம் 45:16; ஒத்துப்பாருங்கள்: ஏசாயா 32:1, 16-18; 61:5; 65:21-23.

10. உயிர்த்தெழுப்பப்படவிருப்போரில், “அநீதிமான்கள்” யார்?

10 எனினும், அப்போஸ்தலர் 24:15-ல் குறிப்பிடப்பட்ட அந்த ‘அநீதிமான்கள்’ யார்? சரித்திரமுழுவதிலும் மரித்த மனிதவர்க்கத்தினரான அந்தப் பெரும்பான்மைப் பொதுமக்கள், முக்கியமாய், ‘அறியாமையுள்ள காலங்களில்’ வாழ்ந்தவர்கள், இவர்களில் அடங்கியிருப்பர். (அப்போஸ்தலர் 17:30) இவர்கள், தாங்கள் பிறந்த இடத்தின் அல்லது தாங்கள் வாழ்ந்த காலத்தின் காரணமாக, யெகோவாவின் சித்தத்துக்குக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள வாய்ப்பற்றிருந்தனர். மேலும், இரட்சிப்பின் செய்தியைக் கேட்டபோதிலும் அந்தச் சமயத்தில் முழுமையாய் பிரதிபலிக்காதவர்கள் அல்லது ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் முன்னேறுவதற்கு முன்பாக மரித்துவிட்டவர்கள் சிலரும் அதில் இருக்கலாம். உயிர்த்தெழுதலில் இத்தகையோர் நித்திய ஜீவனை அடைவதற்கான இந்த வாய்ப்பிலிருந்து நன்மையடையப் போகிறார்களென்றால், தங்கள் சிந்தனையிலும் வாழ்க்கைப் போக்கிலும் மேலுமான சரிப்படுத்தல்களைச் செய்ய வேண்டும்.

ஜீவ புஸ்தகச்சுருள்

11. (அ) ‘ஜீவ புஸ்தகச்சுருள்’ என்பது என்ன, இந்தச் சுருளில் யாருடைய பெயர்கள் பதிவுசெய்யப்படுகின்றன? (ஆ) அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது இந்த ஜீவ புஸ்தகச்சுருள் ஏன் திறக்கப்படும்?

11 ‘ஜீவ புஸ்தகச்சுருளைப்பற்றி’ யோவான் பேசுகிறார். அது யெகோவாவிடமிருந்து நித்திய ஜீவனைப் பெறவிருப்போரைப் பற்றிய ஒரு பதிவு. இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்கள், திரள் கூட்டத்தார் மற்றும் மோசேயைப்போன்ற உண்மையுள்ள பூர்வ மனிதரின் பெயர்கள் இந்தச் சுருளில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. (யாத்திராகமம் 32:32, 33; தானியேல் 12:1; வெளிப்படுத்துதல் 3:5) உயிர்த்தெழுப்பப்பட்ட ‘அநீதிமான்கள்’ எவரும், இன்னும், இந்த ஜீவ புஸ்தகச்சுருளில் தங்கள் பெயர்களை உடையோராக இல்லை. ஆகையால் தகுதிபெறுவோராகும் மற்றவர்களின் பெயர்களை எழுத அனுமதிப்பதற்கு அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது இந்த ஜீவ புஸ்தகச்சுருள் திறக்கப்படும். ஜீவனுக்குரிய புஸ்தகச்சுருளில், அல்லது புஸ்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட செய்யாதிருப்பவர்கள் ‘அக்கினியும் கந்தகமுமான கடலுக்குள் தள்ளப்படுகிறார்கள்.’—வெளிப்படுத்துதல் 20:15, NW; எபிரெயர் 3:19-ஐ ஒத்துப்பாருங்கள்.

12. திறக்கப்பட்டுள்ள ஜீவ புஸ்தகச்சுருளில் ஒருவருடைய பெயர் எழுதப்படுமா என்பதை எது தீர்மானிக்கும், யெகோவாவின் நியமிக்கப்பட்ட நியாயாதிபதி எவ்வாறு முன்மாதிரியை வைத்தார்?

12 அவ்வாறெனில், திறக்கப்பட்டுள்ள ஜீவ புஸ்தகச்சுருளில், அந்தச் சமயத்தில் ஒருவருடைய பெயர் எழுதப்படுமா என்பதை எது தீர்மானிக்கும்? ஆதாம் ஏவாளின் நாட்களில் இருந்ததே—அதாவது யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலே—அந்த மிக முக்கிய காரணமாயிருக்கும். மிக நேசமான உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் யோவான் எழுதினபிரகாரம்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:4-7, 17) கீழ்ப்படிதலின் காரியத்தில், யெகோவா நியமித்த நியாயாதிபதி, முன்மாதிரியை வைத்தார்: “அவர் [இயேசு] குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரா”னார்.—எபிரெயர் 5:8, 9.

மற்ற சுருள்கள் திறக்கப்படுதல்

13. உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் தங்கள் கீழ்ப்படிதலை எவ்வாறு மெய்ப்பித்துக் காட்ட வேண்டும், என்ன நியமங்களை அவர்கள் பின்பற்ற வேண்டும்?

13 உயிர்த்தெழுப்பப்பட்ட இவர்கள் தங்கள் கீழ்ப்படிதலை எவ்வாறு மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்? இயேசுதாமே அந்த இரண்டு பெரிய கட்டளைகளைக் குறிப்பிட்டு, பின்வருமாறு கூறினார்: “இஸ்ரவேலே கேள், கர்த்தரே [யெகோவாவே, NW] நமது கடவுள், கர்த்தர் [யெகோவா, NW] ஒருவரே; உன் கர்த்தராகிய [யெகோவாவாகிய, NW] கடவுளிடம் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்புகூரவேண்டுமென்பதே முதன்மையான கற்பனை. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூரவேண்டுமென்பது இரண்டாங் கற்பனை.” (மாற்கு 12:29-31, தி.மொ.) மேலும் திருடுதல், பொய்ச் சொல்லுதல், கொலைசெய்தல், ஒழுக்கக்கேடு ஆகியவற்றை வெறுத்து விலக்கவேண்டும் என்பதைப்போன்ற, அவர்கள் பின்பற்ற வேண்டிய, யெகோவாவின் நிலையாக ஸ்தாபிக்கப்பட்ட நியமங்களுங்கூட இருக்கின்றன.—1 தீமோத்தேயு 1:8-11; வெளிப்படுத்துதல் 21:8.

14. வேறு என்ன சுருள்கள் திறக்கப்படுகின்றன, அவற்றில் என்ன அடங்கியிருக்கின்றன?

14 எனினும், அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது திறக்கப்படவிருக்கிற மற்றச் சுருள்களை யோவான் இப்பொழுது குறிப்பிட்டார். (வெளிப்படுத்துதல் 20:12) இவை என்னவாக இருக்கும்? சில சமயங்களில், குறிப்பிட்ட சூழ்நிலைமைகளுக்குத் தனிப்பட்ட கட்டளைகளை யெகோவா கொடுத்திருக்கிறார். உதாரணமாக, மோசேயின் நாளில் நுட்பவிவரமாய் வரிசையாக அமைந்த ஒரு தொகுதி சட்டங்களை அவர் கொடுத்தார், இஸ்ரவேலர் இவற்றிற்குக் கீழ்ப்படிந்தால் அவர்களுக்கு இவை ஜீவனைக் குறித்தன. (உபாகமம் 4:40; 32:45-47) முதல் நூற்றாண்டின்போது, கிறிஸ்தவ காரிய ஒழுங்குமுறையின்கீழ் யெகோவாவின் நியமங்களைப் பின்பற்றும்படி உண்மையுள்ளோருக்கு உதவிசெய்ய புதிய கட்டளைகள் கொடுக்கப்பட்டன. (மத்தேயு 28:19, 20; யோவான் 13:34; 15:9, 10) இப்பொழுது யோவான், “அந்தப் புஸ்தகங்களில் [புஸ்தகச்சுருள்களில், NW] எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைய”விருக்கிறார்களென அறிவிக்கிறார். அவ்வாறெனில், இந்தச் சுருள்களைத் திறப்பது, அந்த ஆயிரம் ஆண்டுகளின்போது மனிதவர்க்கத்துக்குக் கொடுக்கப்படும் யெகோவாவின் நுட்பவிவரமான கட்டளைகளை யாவரறிய தெரிவிக்குமென்பது தெளிவாயிருக்கிறது. அந்தச் சுருள்களில் அடங்கிய விதிகளையும் கட்டளைகளையும் தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்துவதால், கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் தங்கள் நாட்களை நீடிக்கவும், முடிவில் நித்திய ஜீவனைப் பெறவும் முடியும்.

15. உயிர்த்தெழுதலின் காலத்தின்போது என்ன வகையான கல்வி ஏற்பாடு தேவைப்படும், உயிர்த்தெழுதல் பெரும்பாலும் எவ்வாறு நடைபெறக்கூடும்?

15 தேவராஜ்ய கல்விக்குரிய எத்தகைய விரிவான ஏற்பாடு தேவையாயிருக்கும்! யெகோவாவின் சாட்சிகள் 2005-ல் உலகமெங்கும் விரிவாக பல்வேறு இடங்களில் சராசரியாக 60,61,534 பைபிள் படிப்புகள் நடத்தினர். ஆனால் இந்த உயிர்த்தெழுப்பப்படுதலின்போது, பைபிளையும் இந்தப் புதிய சுருள்களையும் ஆதாரமாகக் கொண்டு எண்ணற்ற லட்சக்கணக்கான படிப்புகள், சந்தேகமில்லாமல் நடத்தப்படும்! கடவுளுடைய ஜனங்கள் எல்லாரும் கற்பிப்போராகி, தங்களைக் கடுமுயற்சியில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும். உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள், தாங்கள் படிப்படியாய் முன்னேறுகையில், சந்தேகமில்லாமல் இந்த மிகப்பரந்த கற்பிக்கும் திட்டத்தில் பங்குகொள்வர். உயிரோடிருப்பவர்கள் தங்கள் முன்னாள் குடும்ப உறுப்பினர்களையும் பழக்கமானவர்களையும் வரவேற்று போதிக்கும் மகிழ்ச்சியுடையோராயும், இவர்கள் தங்கள் முறையாக மற்றவர்களை வரவேற்று போதிப்போராயும் இருக்கக்கூடிய அத்தகைய ஒரு முறையில் இந்த உயிர்த்தெழுதல் ஒருவேளை படிப்படியாக நடைபெறலாம். (1 கொரிந்தியர் 15:19-28, 58-ஐ ஒப்பிடுக.) இன்று சுறுசுறுப்பாய்ச் சத்தியத்தைப் பரவச் செய்துகொண்டிருக்கும் 60 லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள், அந்த உயிர்த்தெழுதலின்போது தாங்கள் கொண்டிருக்கும்படி நம்புகிற சிலாக்கியங்களுக்காக நல்ல அஸ்திபாரத்தைப் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.—ஏசாயா 50:4; 54:13.

16. (அ) ஜீவ புஸ்தகத்தில் அல்லது சுருளில் யாருடைய பெயர்கள் எழுதப்படா? (ஆ) தங்களுடைய உயிர்த்தெழுதல் “ஜீவனுக்குரிய” ஒன்றாக நிரூபிக்கும் அத்தகையோர் யாவர்?

16 ‘நன்மைசெய்தவர்கள் ஜீவனுக்கான ஓர் உயிர்த்தெழுதலையும் பழக்கமாய் தீமைசெய்தவர்கள் நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலையும் அடையும்படி எழுந்திருப்பார்கள்” என பூமிக்குரிய உயிர்த்தெழுதலைக்குறித்து இயேசு சொன்னார். இங்கே ‘ஜீவனும்,’ ‘நியாயத்தீர்ப்பும்’ ஒன்றுக்கொன்று எதிர்மாறாக உள்ளதானது, தேவாவியால் ஏவப்பட்ட வேதவார்த்தைகளிலும் புஸ்தகச்சுருள்களிலும் போதிக்கப்பட்ட பின்பு “தீமைசெய்தவர்”களான அந்த உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள், ஜீவனுக்குத் தகுதியற்றவர்களாகத் தீர்க்கப்பட்டவர்களெனக் காட்டுகிறது. இவர்களுடைய பெயர்கள் அந்த ஜீவ புஸ்தகத்தில், அல்லது புஸ்தகச்சுருளில் எழுதப்படா. (யோவான் 5:29) முன்னால் உண்மையுள்ள போக்கைப் பின்பற்றியிருந்து, ஆனால் ஏதோ காரணத்தினிமித்தமாக அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது அதைவிட்டு விலகிச் சென்றுவிடுவோரைக் குறித்ததிலும் இவ்வாறேயிருக்கும். பெயர்கள் அழிக்கப்படக்கூடும். (யாத்திராகமம் 32:32, 33) மறுபட்சத்தில், அந்தச் சுருள்களில் எழுதப்பட்ட காரியங்களைக் கீழ்ப்படிதலுடன் பின்பற்றி நடப்போர் தங்கள் பெயர்களை அந்த எழுதப்பட்ட பதிவாகிய, ஜீவ புஸ்தகச்சுருளில் காத்து வைத்து, தொடர்ந்து வாழ்வர். அவர்களுக்கு, இந்த உயிர்த்தெழுதல் ‘ஜீவனுக்குரிய’ ஒன்றாக நிரூபித்திருக்கும்.

மரணம் மற்றும் ஹேடீஸின் முடிவு

17. (அ) என்ன அதிசயமான நடவடிக்கையை யோவான் விவரிக்கிறார்? (ஆ) ஹேடீஸ் எப்பொழுது வெறுமையாக்கப்படும்? (இ) ஆதாமினால் உண்டான மரணம் எப்பொழுது “அக்கினிக் கடலிலே எறியப்”படும்?

17 அடுத்தபடியாக, உண்மையில் அதிசயமான ஒன்றை யோவான் விவரிக்கிறார்! “அப்பொழுது மரணமும் பாதாளமும் [ஹேடீஸும், NW] அக்கினிக்கடலிலே எறியப்பட்டன. இதுவே இரண்டாம் மரணம், அக்கினிக்கடல். ஜீவபுஸ்தகத்தில் [ஜீவ புஸ்தகச்சுருளில், NW] எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் அக்கினிக்கடலில் எறியுண்டான்.” (வெளிப்படுத்துதல் 20:14, 15, தி.மொ.) அந்த ஆயிர ஆண்டு நியாயத்தீர்ப்பு நாளின் முடிவுக்குள், ‘மரணமும் ஹேடீஸும்’ முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. இது ஏன் ஆயிரம் ஆண்டுகள் எடுக்கின்றன? கடவுளுடைய நினைவில் இருக்கிற கடைசியானவன் உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு, மனிதவர்க்கம் முழுவதற்குமுரிய பொதுவான பிரேதக்குழியாகிய ஹேடீஸ் வெறுமையாக்கப்படும். ஆனால் சுதந்தரிக்கப்பட்ட பாவத்தால் மனிதர் எவராவது கறைப்பட்டிருக்கும் வரையில், ஆதாமினால் உண்டான மரணம் இன்னும் அவர்களில் இருக்கிறது. பூமியில் உயிர்த்தெழுப்பப்பட்ட யாவரும், மேலும் அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் திரள் கூட்டமும், இயேசுவின் மீட்கும்பலியின் மதிப்பு பயன்படுத்தப்பட்டு நோயையும், முதிர்வயதடைவதையும், சுதந்தரிக்கப்பட்ட மற்ற குறைபாடுகளையும் முழுமையாக நீக்கும் வரையில், அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருப்பவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும். பின்பு ஆதாமினால் உண்டான மரணம், ஹேடீஸோடுகூட, “அக்கினிக்கடலிலே எறியப்ப”டுகிறது. அவை என்றென்றுமாக ஒழிந்துபோய்விட்டிருக்கும்!

18. (அ) அரசராக இயேசுவின் ஆட்சியின் வெற்றிகரமான நிறைவேற்றத்தை அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) பரிபூரணராக்கப்பட்ட மனித குடும்பத்தை இயேசு என்ன செய்கிறார்? (இ) அந்த ஆயிர ஆண்டுகளின் முடிவில் வேறு என்ன காரியங்கள் நடைபெறுகின்றன?

18 இவ்வாறு அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியருக்கு எழுதின தன்னுடைய நிருபத்தில் பின்வருமாறு விவரிக்கிற அந்தத் திட்டம் பூர்த்தியடையும்: “எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்தின் கீழ்ப் போடும் வரைக்கும் [இயேசு] அரசாளவேண்டியது. ஒழிக்கப்படுங் கடைசிச் சத்துரு [ஆதாமினால் உண்டான] மரணம்.” அடுத்தபடியாக என்ன நடக்கிறது? “எல்லாம் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போதோ கடவுளே எல்லாரிலும் எல்லாமாயிருப்பதற்குக் குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.” வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், இயேசு தம்முடைய “கடவுளும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுக்”கிறார். (1 கொரிந்தியர் 15:24-28, தி.மொ.) ஆம், ஆதாமினால் உண்டான மரணத்தைத் தம்முடைய மீட்கும் பலியின் மதிப்பின் மூலம், இயேசு வென்றுவிட்டதால், பரிபூரணராக்கப்பட்ட மனித குடும்பத்தைத் தம்முடைய பிதாவாகிய, யெகோவாவிடம் ஒப்புக்கொடுப்பார். அந்த ஆயிர ஆண்டுகளின் முடிவில், இந்தக் கட்டத்தின்போதே, சாத்தான் விடுவிக்கப்பட்டு ஜீவ புஸ்தகச்சுருளில் யாருடைய பெயர்கள் நிலையான பதிவுடையவையாய் நிலைத்திருக்குமென்பதைத் தீர்மானிப்பதற்கு கடைசி சோதனை நடைபெறுகிறதெனத் தெரிகிறது. இவர்களுக்குள் உங்கள் பெயரும் இருக்கும்படி “கடும் முயற்சியுடன் உங்களைச் சுறுசுறுப்பாய் ஈடுபடுத்துங்கள்”!—லூக்கா 13:24, NW; வெளிப்படுத்துதல் 20:5.

[அடிக்குறிப்பு]

a சமுத்திரத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவோரில், நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தில் அழிந்த பூமியின் ஒழுக்கங்கெட்ட குடிமக்கள் உட்பட்டிரார்; அந்த அழிவு கடைமுடிவானதாக இருந்தது, அவ்வாறே யெகோவா அளித்த ஆக்கினைத்தீர்ப்பு மிகுந்த உபத்திரவத்தில் நிறைவேற்றப்படுவதும் இருக்கும்.—மத்தேயு 25:41, 46; 2 பேதுரு 3:5-7.

[கேள்விகள்]

[பக்கம் 298-ன் படம்]

அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது திறக்கப்படும் புஸ்தகச்சுருள்களில் உள்ளவற்றிற்குக் கீழ்ப்படியும் உயிர்த்தெழுப்பப்பட்ட ‘அநீதிமான்களும்’ ஜீவ புஸ்தகச்சுருளில் தங்கள் பெயர்கள் எழுதப்பட செய்யலாம்