Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கொலை செய்யப்பட்ட ஆத்துமாக்கள்’ வெகுமதியளிக்கப்படுதல்

‘கொலை செய்யப்பட்ட ஆத்துமாக்கள்’ வெகுமதியளிக்கப்படுதல்

அதிகாரம் 17

‘கொலை செய்யப்பட்ட ஆத்துமாக்கள்’ வெகுமதியளிக்கப்படுதல்

1. எந்தக் காலப்பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், மேலும் இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

 கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி செய்கிறது! வெள்ளைக் குதிரையின் சவாரியாளர் அவருடைய ஜெயத்தை முடிவுக்கு கொண்டு வரப்போகிறார்! சிவப்புக் குதிரை, கறுப்புக் குதிரை, மேலும் மங்கின நிறமுள்ள குதிரை பூமியினூடாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன! மறுக்கமுடியாத வகையில், அவருடைய ராஜரீக வந்திருத்தலைப் பற்றிய இயேசுவின் சொந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. (மத்தேயு, அதிகாரங்கள் 24, 25; மாற்கு, அதிகாரம் 13; லூக்கா, அதிகாரம் 21) ஆம், நாம் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) அது அவ்வாறு இருப்பதனால், ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து, அந்தப் புஸ்தகச் சுருளின் ஐந்தாவது முத்திரையை உடைத்து திறக்கையில் நாம் கூர்ந்து கவனம் செலுத்துவோமாக. மேலுமான என்ன வெளிப்படுத்துதலில் நாம் இப்பொழுது பங்குபெற உள்ளோம்?

2. (அ) ஐந்தாவது முத்திரை உடைக்கப்பட்டபோது யோவான் என்ன பார்த்தார்? (ஆ) பரலோகத்தில் பலிக்குரிய ஓர் அடையாள அர்த்தமுள்ள பலிபீடத்தைக் குறித்து வாசிப்பது நமக்கு ஏன் ஆச்சரியமாயிருக்கக்கூடாது?

2 உணர்ச்சியை எழுப்புகிற ஒரு காட்சியை யோவான் விவரிக்கிறார்: “அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 6:9) அது என்ன? ஓர் பலிக்குரிய பலிபீடம், மேலே பரலோகத்திலா? ஆம்! யோவான் முதல் முறையாக ஒரு பலிபீடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஆயினும், ஏற்கெனவே, யெகோவா அவருடைய சிங்காசனத்தின் மேல் இருப்பது, சுற்றியுள்ள கேருபீன்கள், கண்ணாடிக் கடல், விளக்குகள், மற்றும் தூபவர்க்கத்தை எடுத்துச் செல்லும் 24 மூப்பர்கள் ஆகியவற்றை அவர் விவரித்து இருந்தபோதிலும்—இவை எல்லாம் இஸ்ரவேலில் யெகோவாவின் பரிசுத்த ஸ்தலமாகிய பூமிக்குரிய கூடாரத்தின் அம்சங்களுக்கு ஒத்திருந்தன. (யாத்திராகமம் 25:17, 18; 40:24-27, 30-32; 1 நாளாகமம் 24:4) அப்படியென்றால், பரலோகத்தில் அடையாள அர்த்தமுடைய ஒரு பலிபீடத்தையும் காண்பது நமக்கு ஆச்சரியமாக இருக்க வேண்டுமா?—யாத்திராகமம் 40:29.

3. (அ) பூர்வ யூத கூடாரத்தில், “பலிபீடத்தின் அடியில்” ஆத்துமாக்கள் எவ்வாறு ஊற்றப்பட்டன? (ஆ) பரலோகத்தில் அடையாள அர்த்தமுள்ள ஒரு பலிபீடத்தின் கீழ் கொலை செய்யப்பட்ட சாட்சிகளின் ஆத்துமாக்களை யோவான் ஏன் பார்த்தார்?

3 அந்தப் பலிபீடத்தின் கீழே “தேவ வசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்ட ஆத்துமாக்கள்” இருக்கின்றன. இது எதை அர்த்தப்படுத்துகிறது? புறமத கிரேக்கர்கள் நம்பினதைப் போன்ற உடலிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆத்துமாக்களாக இவை இருக்க முடியாது. (ஆதியாகமம் 2:7; எசேக்கியேல் 18:4) மாறாக, ஆத்துமா அல்லது உயிர், இரத்தத்தினால் அடையாளப்படுத்தப்படுகிறது என்பதை யோவான் அறிந்திருக்கிறார். மேலும், பூர்வ யூத கூடாரத்தில் பலிக்குரிய ஒரு மிருகத்தை ஆசாரியர்கள் கொன்றபோது, அவர்கள் இரத்தத்தை “பலிபீடத்தின் மேல் சுற்றிலும்” தெளித்தார்கள் அல்லது “தகன பலிபீடத்தின் அடியிலே” ஊற்றினார்கள் என்பதை யோவான் அறிந்திருக்கிறார். (லேவியராகமம் 3:2, 8, 13; 4:7; 17:6, 11, 12) அதனால், மிருகத்தின் ஆத்துமா பலிக்குரிய பலிபீடத்துடன் நெருங்க அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஏன் கடவுளுடைய இந்தக் குறிப்பிட்ட ஊழியர்களின் ஆத்துமாக்கள் அல்லது இரத்தம் பரலோகத்தில் அடையாள அர்த்தமான பலிபீடத்தின் கீழ் காணப்பட வேண்டும்? ஏனெனில் அவர்களுடைய மரணங்கள் தியாகத்திற்குரியதாக கருதப்படுகின்றன.

4. ஆவியால்-பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் மரணம் என்ன வழியில் பலிக்குரியது?

4 உண்மையாகவே, கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக பிறப்பிக்கப்பட்டவர்கள் ஒரு தியாகத்துக்குரிய மரணத்தை அடைகிறார்கள். ஏனெனில், யெகோவாவின் பரலோக ராஜ்யத்தில் அவர்கள் வகிக்க இருக்கும் பங்கின் காரணமாக, பூமியின் மீதான நித்திய ஜீவனுக்கான எந்த ஒரு நம்பிக்கையையும் அவர்கள் துறந்து தியாகம் செய்வதானது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. இந்த வகையில், யெகோவாவின் அரசாட்சியின் சார்பில் ஒரு தியாக மரணத்திற்கு அவர்கள் உட்படுகிறார்கள். (பிலிப்பியர் 3:8-11; 2:17-ஐ ஒப்பிடவும்.) பலிபீடத்தின் கீழ் யோவான் பார்த்தவர்களைக் குறித்ததில் இது அதிக உண்மையான கருத்தில் சரியாக இருக்கிறது. அவர்கள் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், யெகோவாவின் வார்த்தையையும் அரசாட்சியையும் ஆதரிப்பதில் அவர்களுடைய வைராக்கியமான ஊழியத்திற்காக அவர்களுடைய நாளில் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய “ஆத்துமாக்கள் தேவ வசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சி வேலையினிமித்தமும் [mar·ty·riʹan, மார்ட்டரையன்] கொலை செய்யப்பட்டன.’

5. உண்மையுள்ளவர்களின் ஆத்துமாக்கள், மரித்திருந்தபோதிலும், பழிவாங்குதலுக்காக எவ்வாறு சத்தமிட்டுக்கொண்டிருக்கின்றன?

5 காட்சியின் கதை தொடர்ந்து திறக்கப்படுகிறது: “அவர்கள்: பரிசுத்தமும், சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 6:10) மரித்தவர்கள் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள் என்று பைபிள் காண்பிக்கிறதினால், அவர்களுடைய ஆத்துமாக்கள், அல்லது இரத்தம், பழிவாங்குதலுக்காக எவ்வாறு சத்தமிட முடியும்? (பிரசங்கி 9:5) நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் அவனை காயீன் கொலை செய்த பிறகு சத்தமிடவில்லையா? யெகோவா அப்பொழுது காயீனிடம் சொன்னார்: “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.” (ஆதியாகமம் 4:10, 11; எபிரெயர் 12:24) இது ஆபேலின் இரத்தம் சொல்லர்த்தமாக வார்த்தைகளைப் பேசினதாக இல்லை. மாறாக, ஆபேல் குற்றமற்றவனாக மரித்திருந்தான், மேலும் அவனைக் கொலை செய்தவன் தண்டிக்கப்படும்படியாக நீதி கேட்டது. அதேவிதமாகவே, அந்தக் கிறிஸ்தவ உயிர்த் தியாகிகளும் குற்றமற்றவர்கள், நீதியினால் அவர்கள் பழிவாங்கப்படவேண்டும். (லூக்கா 18:7, 8) பழிவாங்குதலுக்கான கூச்சல் அதிக சத்தமாக இருக்கிறது, ஏனெனில் அநேக ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு மரித்திருக்கின்றனர்.—எரேமியா 15:15, 16-ஐ ஒப்பிடவும்.

6. பொ.ச.மு. 607-ல் என்ன குற்றமற்ற இரத்தம் சிந்துதலானது பழிவாங்கப்பட்டது?

6 இந்த நிலைமையை பொ.ச.மு. 716-ல் அரசனாகிய மனாசே சிங்காசனத்திற்கு வந்தபோது விசுவாசதுரோக யூதாவில் இருந்த நிலைமைக்கும் கூட ஒப்பிடலாம். அவன் அதிகமாக குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினான், அநேகமாக ஏசாயா தீர்க்கதரிசியை ‘வாளால் வெட்டினான்.’ (எபிரெயர் 11:37; 2 இராஜாக்கள் 21:16) பின்னர் மனாசே மனந்திரும்பி சீர்திருந்தினபோதிலும், அந்த இரத்தப்பழி நிலைத்திருந்தது. பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்கள் யூதா ராஜ்யத்தை பாழ்க்கடித்தபோது, “மனாசே தன் எல்லாச் செய்கைகளிலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமூகத்தைவிட்டு அகற்றும்படி கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] கட்டளையினால் அப்படி நடந்தது. அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் [யெகோவா, NW] மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.”—2 இராஜாக்கள் 24:3, 4.

7. ‘பரிசுத்தவான்களின் இரத்தத்தை’ சிந்துவதில் முதலாவது குற்றமுள்ளவர்களாயிருப்பது யார்?

7 பைபிள் காலத்தைப் போன்றே, இன்று, கடவுளுடைய சாட்சிகளைக் கொன்ற தனிப்பட்ட நபர்களில் அநேகர் மரித்து நீண்ட காலமாகியிருக்கக்கூடும். ஆனால், அவர்களுடைய உயிர்த்தியாகத்திற்கு காரணமாயிருந்த அமைப்பு இன்னும், அதிக உயிருள்ளதாகவும் இரத்தப் பழியுள்ளதாகவும் இருக்கிறது. இது சாத்தானுடைய பூமிக்குரிய அமைப்பு, அவனுடைய பூமிக்குரிய வித்து. அதில் பிரபலமானது மகா பாபிலோன், பொய் மத உலகப் பேரரசு. a அவள் “பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கி”றாள் என்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறாள். ஆம், “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும், பரிசுத்தவான்களுடைய இரத்தமும், பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 17:5, 6; 18:24; எபேசியர் 4:11; 1 கொரிந்தியர் 12:28) இரத்தப்பழியின் என்னே ஒரு பாரம்! மகா பாபிலோன் இருக்கும் வரையாக, அவளுக்கு பலியானவர்களின் இரத்தம் நீதிக்காக சத்தமிடும்.—வெளிப்படுத்துதல் 19:1, 2.

8. (அ) யோவானின் வாழ்நாளின்போது என்ன தியாக மரணங்கள் ஏற்பட்டன? (ஆ) ரோம பேரரசர்களால் என்ன துன்புறுத்தல்கள் தூண்டிவிடப்பட்டன?

8 அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் வளர்ந்துகொண்டிருந்த சபையின் மீது கொடூரமான சர்ப்பமும் அவனுடைய பூமிக்குரிய வித்தும் போர் தொடுக்கையில் முதல் நூற்றாண்டில் தியாக மரணங்களுக்கு யோவான்தானேயும் சாட்சியாக இருந்தார். நம்முடைய கர்த்தர் கழுமரத்தில் அறையப்பட்டதை யோவான் பார்த்திருந்தார், மேலும் ஸ்தேவான், அவருடைய சொந்த சகோதரன் யாக்கோபு, மேலும் பேதுரு, பவுல் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் கொலை செய்யப்பட்டதினூடாக தப்பியிருந்தான். (யோவான் 19:26, 27; 21:15, 18, 19; அப்போஸ்தலர் 7:59, 60; 8:2; 12:2; 2 தீமோத்தேயு 1:1; 4:6, 7) பொ.ச. 64-ல் ரோம பேரரசர் நீரோ அவன் குற்றமுடையவன் என்ற வதந்தியை எதிரிடையாக்குவதற்காக, கிறிஸ்தவர்கள் நகரத்தை எரித்ததாக குற்றஞ்சாட்டி அவர்கள் பிறர் பழிசுமக்கும்படி செய்தான். வரலாற்று ஆசிரியர் டேசிடஸ் அறிக்கை செய்கிறார்: “அவர்கள் (கிறிஸ்தவர்கள்) இகழ்ச்சிக்குரிய முறைகளினால் இறந்தார்கள்; சிலர் துஷ்ட மிருகங்களின் தோல்களால் மூடப்பட்டு பின்னர் நாய்களினால் பீறுண்டுபோனார்கள், சிலர் [கழுமரத்தில் அரையப்பட்டார்கள்], b சிலர் இரவில் வெளிச்சத்திற்காக தீவட்டிகளாக எரிக்கப்பட்டார்கள்.” பேரரசர் டோமீஷியனின்கீழ் (பொ.ச. 81-96) மேலுமான ஒரு துன்புறுத்தல் அலையானது யோவான் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்படுவதில் விளைவடைந்திருந்தது. இயேசு சொன்ன பிரகாரம்: “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.”—யோவான் 15:20; மத்தேயு 10:22.

9. (அ) பொ.ச. நான்காம் நூற்றாண்டிற்குள் சாத்தான் என்ன வஞ்சகத்தின் தலைசிறந்த படைப்பைக் கொண்டு வந்தான், மேலும் எது அதனுடைய முக்கிய பாகமாகும்? (ஆ) முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின்போது சில கிறிஸ்தவமண்டல ஆட்சியாளர்கள் யெகோவாவின் சாட்சிகளை எவ்வாறு நடத்தினார்கள்?

9 பொ.ச. நான்காவது நூற்றாண்டிற்குள், அந்தப் பழைய பாம்பு, பிசாசாகிய சாத்தான், அவனுடைய வஞ்சகத்தின் தலைசிறந்த படைப்பு, கிறிஸ்தவமண்டலத்தின் விசுவாசதுரோக மதம்—“கிறிஸ்தவ” வெளிப்பகட்டின் கீழ் மறைந்திருக்கும் ஒரு பாபிலோனிய முறையை—கொண்டு வந்திருந்தான். இது சர்ப்பத்தினுடைய வித்தின் முக்கியப் பகுதியாக இருக்கிறது, மேலும் முரண்படுகிற பிரிவுகளின் ஒரு திரள் கூட்டமாகவும் வளர்ந்திருக்கிறது. உண்மையற்ற பூர்வ யூதாவைப் போன்று, முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களில் இரண்டு பக்கங்களிலும் அதிகம் உட்பட்டிருந்ததால், கிறிஸ்தவமண்டலம் அதிகமான இரத்தப்பழியைத் தாங்குகிறது. கிறிஸ்தவமண்டலத்தின் சில அரசியல் ஆட்சியாளர்கள் தேவனுடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட ஊழியர்களை கொலை செய்வதற்கு ஒரு சாக்குப்போக்காகவும்கூட இந்த யுத்தங்களைப் பயன்படுத்தினார்கள். யெகோவாவின் சாட்சிகள் மீதான ஹிட்லரின் துன்புறுத்தலை அறிக்கையிடுகையில், ப்ஃரட்ரிச் சிப்ஃபெல்லின் ஜெர்மனியிலுள்ள சர்ச்சுகளின் சண்டை (Kirchenkampf in Deutschland) என்ற புத்தக விமரிசனம் குறிப்பிட்டது: “அவர்களில் [சாட்சிகளில்] மூன்றில் ஒரு பங்கானோர் தூக்கிலிடப்படுவதன் மூலம், மற்ற மூர்க்கமான செயல்கள், பசி, வியாதி அல்லது அடிமை உழைப்பு, இவற்றினால் கொல்லப்பட்டார்கள். இந்த அடக்குதலின் கடுமை முன்னொருபோதும் இருந்ததில்லை, மேலும் தேசிய பொதுவுடைமை கொள்கையோடு ஒத்திணங்குவிக்க முடியாத விட்டுக்கொடுக்காத விசுவாசத்தின் விளைவாக இருந்தது.” உண்மையாகவே, கிறிஸ்தவமண்டலத்தைக் குறித்து அதன் ஆசாரியத்துவத்தையும் சேர்த்து, இவ்விதமாக சொல்ல முடியும்: “உன் வஸ்திர ஓரங்களில் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது.”—எரேமியா 2:34. c

10. அநேக தேசங்களில் திரள் கூட்டத்தின் இள வயது ஆண்கள் என்ன துன்புறுத்தல்களை அனுபவித்திருக்கின்றனர்?

10 திரள் கூட்டத்தின் உண்மையுள்ள இளவயது ஆண்கள் அநேக நாடுகளில் 1935-லிருந்து துன்புறுத்தலின் முதன்மையான தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9) இரண்டாம் உலக யுத்தம் ஐரோப்பாவில் முடிவடைந்தாலுங்கூட, ஒரே ஒரு பட்டணத்தில் மட்டும் யெகோவாவின் 14 இளம் சாட்சிகள் தூக்கினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டனர். அவர்களுடைய குற்றம்? “இனிமேலும் யுத்தத்தைக் கற்றுக்கொள்ள” மறுத்ததாகும். (ஏசாயா 2:4) அதிக சமீபத்தில், கிழக்கத்திய நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் இளவயது ஆண்கள் அதே காரணத்திற்காக சாகும் வரையாக அடிக்கப்பட்டோ சுட்டுக்கொல்லும் குழுவினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டோ இருக்கின்றனர். தியாகிகளாக மரித்த இந்த இளைஞர், இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களின் தகுதிவாய்ந்த ஆதரவாளர்கள், வாக்குப்பண்ணப்பட்ட புதிய பூமிக்குள் நிச்சயமாகவே உயிர்த்தெழுதலைக் கொண்டிருப்பார்கள்.—2 பேதுரு 3:13; ஒப்பிடவும்: சங்கீதம் 110:3; மத்தேயு 25:34-40; லூக்கா 20:37, 38.

வெள்ளை அங்கி

11. தியாக மரணத்திற்குட்படுத்தப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன அர்த்தத்தில் ‘ஒரு வெள்ளை அங்கியைப்’ பெறுகிறார்கள்?

11 பூர்வ காலங்களில் உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்களின் விசுவாசத்தைக் குறித்து வேதப்பூர்வ ஆதாரங்களை எடுத்துக் காண்பித்தப் பிறகு, அப்போஸ்தலன் பவுல் சொல்கிறான்: “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.” (எபிரெயர் 11:39, 40) பவுலும் மற்ற அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் எதிர்நோக்கியிருந்த ‘நன்மையானது’ என்னவாக இருக்கிறது? இங்கே தரிசனத்தில் யோவான் இதை பார்க்கிறார்: “அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சக்காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 6:11) அவர்கள் ‘வெள்ளை அங்கியை’ பெற்றுக்கொள்வதானது, அழியாத ஆவி சிருஷ்டிகளாக உயிர்த்தெழுப்பப்படுவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. பலிபீடத்தின் கீழ் கொலை செய்யப்பட்ட ஆத்துமாக்களாக அவர்கள் இனிமேலும் இருப்பதில்லை, ஆனால் தேவனுடைய பரலோக சிங்காசனத்திற்கு முன்பாக ஆராதனை செய்கிற அந்த 24 மூப்பர்களுடைய தொகுதியின் பாகமாக இருப்பதற்கு அவர்கள் எழுப்பப்பட்டிருக்கிறார்கள், அங்கே, அவர்கள்தாமேயும் சிங்காசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் ராஜரீக சிலாக்கியங்களுக்குள் பிரவேசித்திருக்கின்றனர் என்பதை இது காண்பிக்கிறது. மேலும் “வெண்வஸ்திரத்தை அணிந்தும்” இருக்கின்றனர் என்பது அவர்கள் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர், அந்தப் பரலோக வழக்குமன்றத்தில் யெகோவாவுக்கு முன்பாக ஒரு கனத்துக்குரிய ஸ்தானத்திற்கு பாத்திரவான்களாயிருக்கின்றனர் என்பதை குறிக்கிறது. இதுவும்கூட சர்தை சபையைச் சேர்ந்த உண்மையுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கான இயேசுவினுடைய வாக்குறுதியின் நிறைவேற்றமாகவும்கூட இருக்கிறது: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்.”—வெளிப்படுத்துதல் 3:5; 4:4; 1 பேதுரு 1:4.

12. உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்ன வழியில் ‘இன்னும் கொஞ்சகாலம் இளைப்பாறுகின்றனர்,’ மேலும் எது வரையாக?

12 இயேசு 1914-ல், சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டு, சாத்தான் அவனுடைய பேய்கள் அங்கு இல்லாதபடி பரலோகங்களைச் சுத்தம் செய்வதன் மூலம் அவருடைய ராஜரீக ஜெயத்தை ஆரம்பித்த அவருடைய சவாரிக்குப் பின்னர், இந்தப் பரலோக உயிர்த்தெழுதலானது 1918-ல் ஆரம்பித்தது என்பதை எல்லா ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன. இருப்பினும், அந்த உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ‘தங்கள் உடன்பணிவிடைக்காரர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னும் கொஞ்சக் காலம் இளைப்பாற வேண்டும்’ என்பதாக சொல்லப்பட்டிருக்கிறார்கள். பூமியின் மீது இன்னுமுள்ள அந்த யோவான் வகுப்பார் சோதனை மற்றும் துன்புறுத்தலின் கீழ் அவர்களுடைய உத்தமத்தை நிரூபிக்க வேண்டும், மேலும் இவர்களில் சிலர் இன்னும் கொல்லப்பட வேண்டியும் இருக்கக்கூடும். இருப்பினும், முடிவாக, மகா பாபிலோன் மற்றும் அவளுடைய அரசியல் கள்ளக்காதலர்களாலும் சிந்தப்பட்ட எல்லா நீதியான இரத்தமும் பழிவாங்கப்பட வேண்டும். இதற்கிடையில், உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் சந்தேகமில்லாமல் பரலோக கடமைகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். பேரின்பமான செயலற்றத்தன்மையில் ஓய்வெடுப்பதின் மூலம் அல்ல, ஆனால் யெகோவாவின் பழிவாங்கும் நாளுக்காக பொறுமையாய் காத்திருப்பதன் மூலம் அவர்கள் இளப்பாறுகிறார்கள். (ஏசாயா 34:8; ரோமர் 12:19) பொய் மதத்தின் அழிவை அவர்கள் கண்டு, ‘அழைக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமாய்’ இந்தப் பூமியிலுள்ள சாத்தானிய துன்மார்க்க வித்தின் மற்ற எல்லா பகுதிகளின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சேர்ந்துகொள்கையில் அவர்களுடைய இளைப்பாறுதல் முடிவுக்கு வரும்.—வெளிப்படுத்துதல் 2:26, 27; 17:14; ரோமர் 16:20.

‘மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்’

13, 14. (அ) அப்போஸ்தலனாகிய பவுலின் பிரகாரம், பரலோக உயிர்த்தெழுதல் எப்போது ஆரம்பமாகிறது, மேலும் யார் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்? (ஆ) கர்த்தருடைய நாளுக்குள் உயிரோடிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோகத்திற்கு எப்போது உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்?

13 ஐந்தாவது முத்திரை உடைக்கப்படுவதன் மூலம் அளிக்கப்படும் உட்பார்வை, பரலோக உயிர்த்தெழுதலுடன் சம்பந்தப்படும் மற்ற வேதவாக்கியங்களுடன் முழுமையாக ஒத்திருக்கிறது. உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் [மரணத்தில், NW] நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.”—1 தெசலோனிக்கேயர் 4:15-17.

14 இந்த வசனங்கள் என்னே ஓர் உந்துவிக்கக்கூடிய கதையைச் சொல்லுகின்றன! இயேசுவின் வந்திருத்தல் வரையாக உயிரோடிருக்கிற அந்த இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களை, அதாவது, அவருடைய வந்திருத்தலின்போது பூமியின் மீது இன்னும் உயிரோடிருக்கிறவர்களை, ஏற்கெனவே மரித்திருப்பவர்கள் பரலோகத்திற்குப் போவதில் முந்திக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், மரணத்தில் இயேசுவுடன் ஐக்கியப்பட்டுள்ளவர்கள், முதலில் எழுந்திருக்கிறார்கள். இயேசு இறங்கி வருகிறார், அதாவது, அவர்களிடமாக தம்முடைய கவனத்தைத் திருப்புகிறார், மற்றும் ஆவி வாழ்க்கைக்கு அவர்களை உயிர்த்தெழுப்புகிறார், ‘ஒரு வெள்ளை அங்கியை’ அவர்களுக்குக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு, மனிதர்களாக இன்னும் உயிரோடிருப்பவர்கள் அவர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கிறார்கள், அவர்களில் அநேகர் எதிர்ப்பாளர்களின் கைகளில் கொடூரமாக மரிக்கின்றனர். இருப்பினும், அவர்களுடைய முன்னோர்கள் செய்ததைப் போன்று அவர்கள் மரணத்தில் நித்திரையடைவதில்லை. மாறாக, மரிக்கும்போது அவர்கள் உடனடியாக மாற்றப்படுகிறார்கள்—“ஒரு இமைப்பொழுதிலே”—பரலோகத்திற்கு இயேசுவுடனும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் உடன் அங்கத்தினர்களுடனும் இருப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 15:50-52; வெளிப்படுத்துதல் 14:13-ஐ ஒப்பிடவும்.) இவ்வாறாக, திருவெளிப்பாட்டின் நான்கு குதிரை வீரர்கள் அவர்களுடைய சவாரியை ஆரம்பித்தவுடனே அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உயிர்த்தெழுதல் தொடங்குகிறது.

15. (அ) ஐந்தாவது முத்திரையை உடைப்பதானது என்ன நற்செய்தியைக் கொடுத்திருக்கிறது? (ஆ) வெள்ளைக் குதிரையின் மேலுள்ள ஜெயங்கொள்ளுகிறவரின் சவாரி எவ்வாறு முடிவடைகிறது?

15 புஸ்தகச் சுருளின் ஐந்தாவது முத்திரையை உடைப்பதானது, மரணம் வரையாக உண்மையுள்ளவர்களாயிருந்து, ஜெயங்கொண்ட அபிஷேகம் செய்யப்பட்ட உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்களைப் பற்றிய நற்செய்தியைக் கொடுக்கிறது. ஆனால் அது சாத்தானுக்கும் அவனுடைய வித்துக்கும் நற்செய்தியைக் கொடுக்கிறதில்லை. வெள்ளைக் குதிரையின் மேலுள்ள ஜெயங்கொள்ளுகிறவரின் சவாரியானது தடுக்க முடியாதபடி தொடர்கிறது, மேலும் ‘பொல்லாங்கனின் வல்லமைக்குள் இருந்துகொண்டிருக்கிற’ உலகத்திற்கு கணக்குத் தீர்க்க வேண்டிய நாளில் முடிவடைகிறது. (1 யோவான் 5:19) ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையை உடைக்கும்போது இது தெளிவாக்கப்படுகிறது.

[அடிக்குறிப்புகள்]

a மகா பாபிலோனைப் பற்றிய அடையாளமானது அதிகாரம் 33-ல் விவரமாக ஆராயப்பட்டுள்ளது.

b புதிய உலக மொழிபெயர்ப்பு துணைக்குறிப்புகளுள்ள பைபிள் பக்கம் 1577, பிற்சேர்க்கை 5சி, “வாதனையின் கழுமரம்” என்பதை ஒப்பிடவும்.

c மதத்தின் இரத்தப்பழியைக் குறித்த நிரூபணம் அதிகாரம் 36-ல் இன்னும் விவரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

[கேள்விகள்]

[பக்கம் 102-ன் பெட்டி]

‘கொலை செய்யப்பட்ட ஆத்துமாக்கள்’

மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் கலைக்களஞ்சியம் ஜான் ஜார்ட்டின், 18-வது நூற்றாண்டின் ஆங்கில புராட்டஸ்டன்ட், ஃபிரெஞ்சு புராட்டஸ்டன்ட் பெற்றோருக்கு பிறந்தவர், இவ்வாறு சொல்வதாக மேற்கோள் காண்பிக்கிறது: “எங்கே துன்புறுத்தல் ஆரம்பிக்கிறதோ, கிறிஸ்தவம் முடிகிறது . . . இது கிறிஸ்தவமானது [ரோம] பேரரசின் மதமாக நிலைநாட்டப்பட்ட பிறகும் செல்வமும் புகழும் அதனுடைய ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பிறகும், துன்புறுத்தலின் கொடிய தீமை இராட்சத உருவெடுத்தது, மேலும் இதனுடைய அழிக்கும் செல்வாக்கை சுவிசேஷத்தின் மதத்தின்மீது போட்டது.”

[பக்கம் 103-ன் படம்]

‘அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டது’