Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெருவெற்றி சார்ந்த புதுப்பாட்டைப் பாடுதல்

பெருவெற்றி சார்ந்த புதுப்பாட்டைப் பாடுதல்

அதிகாரம் 29

பெருவெற்றி சார்ந்த புதுப்பாட்டைப் பாடுதல்

தரிசனம் 9​—வெளிப்படுத்துதல் 14:1-20

பொருள்: 1,44,000 பேர் ஆட்டுக்குட்டியானவருடன் சீயோன் மலையில் இருக்கின்றனர்; தேவதூத அதிகார அறிவிப்புகள் பூமி முழுவதும் ஒலிக்கப்படுகின்றன; அறுவடைகள் அறுக்கப்படுகின்றன

நிறைவேற்றத்தின் காலம்: 1914 முதல் மிகுந்த உபத்திரவம் வரை

1. நாம் ஏற்கெனவே வெளிப்படுத்துதல் அதிகாரங்கள் 7, 12 மற்றும் 13-ல் என்ன கற்றுக்கொண்டோம், நாம் இப்போது என்ன கற்றுக் கொள்வோம்?

 யோவானின் அடுத்த தரிசனத்துக்குக் கவனத்தைத் திருப்புவது எத்தனை புத்துயிரளிப்பதாக இருக்கிறது! வலுசர்ப்பத்தின் விசித்திரமான மிருகத்துக்கொத்த அமைப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட யெகோவாவின் உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியர்களையும் கர்த்தருடைய நாளில் அவர்களுடைய செயல் நடவடிக்கைகளையும் நாம் இப்போது காண்கிறோம். (வெளிப்படுத்துதல் 1:10) ஏற்கெனவே வெளிப்படுத்துதல் 7:1, 3, இந்த 1,44,000 அபிஷேகம் செய்யப்பட்ட அடிமைகள் அனைவரும் முத்திரையிட்டு தீருமளவும் அழிவையுண்டாக்கும் நான்கு காற்றுகளும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறதென்பதை நமக்கு வெளிப்படுத்தியது. அந்தச் சமயத்திலே, சாத்தானாகிய வலுசர்ப்பத்திற்கு இந்த ‘[ஸ்திரீயினுடைய] சந்ததியான மற்றவர்கள்’ விசேஷித்த இலக்காகிறார்கள் என வெளிப்படுத்துதல் 12:17 தெரிவித்தது. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களின் மீது தீவிரமான அழுத்தத்தையும் கொடுமையான துன்புறுத்தலையும் சாத்தான் கொண்டுவர பூமியிலே ஏற்படுத்தியிருக்கும் அரசியல் அமைப்புகளை வெளிப்படுத்துதல் அதிகாரம் 13 தெளிவாக விளக்கிக்காட்டுகிறது. ஆனால் அந்தப் பிரதான எதிரி கடவுளுடைய நோக்கத்தைக் குலைத்துப்போட முடியாது! சாத்தானின் தீங்குவிளைவிக்கும் விருப்பார்வத்தின் மத்தியிலும் 1,44,000 பேரில் அனைவரும் வெற்றிகரமாக கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள் என்பதை நாம் இப்போது கற்றறிவோம்.

2. வெளிப்படுத்துதல் 14:1-ல் சந்தோஷகரமான முடிவின் என்ன முன்காட்சியை யோவான் நமக்குக் கொடுக்கிறார், அந்த ஆட்டுக்குட்டியானவர் யார்?

2 யோவானுக்கும் அவரோடுகூட இன்று யோவான் வகுப்பாருக்கும் அந்தச் சந்தோஷகரமான விளைவின் முன்காட்சிக் கொடுக்கப்பட்டது. “பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 14:1) நாம் பார்த்தபடி இந்த ஆட்டுக்குட்டியானவர் பிசாசையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளி அதைச் சுத்திகரித்த மிகாவேலேயாவார். இந்த மிகாவேலை “[கடவுளுடைய] ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற”வராகவும் யெகோவாவின் நீதியுள்ள நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற ‘எழுந்து நிற்க’ தயாராகுபவராகவும் தானியேல் விவரிக்கிறார். (தானியேல் 12:1; வெளிப்படுத்துதல் 12:7, 9) சுய-தியாகம் செய்யும் இந்தத் தேவ ஆட்டுக்குட்டியானவர் 1914 முதற்கொண்டு சீயோன் மலையின்மீது மேசியானிய ராஜாவாக நின்றுகொண்டிருக்கிறார்.

3. ஆட்டுக்குட்டியானவரும் 1,44,000 பேரும் ‘நிற்கும்,’ “சீயோன் மலை” எது?

3 பின்வருமாறு யெகோவா முன்னறிவித்தவிதமாகவே அது இருக்கிறது: “நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன்.” (சங்கீதம் 2:6; 110:2) தாவீதின் வம்சத்தில் வந்த மனித ராஜாக்கள் ஆட்சிசெய்துகொண்டிருந்த நகரமாகிய, நிலயியல் சார்ந்த இடத்திலுள்ள பூமிக்குரிய எருசலேமை, பூமிக்குரிய சீயோன் மலையை இது ஒருபோதும் குறிப்பதில்லை. (1 நாளாகமம் 11:4-7; 2 நாளாகமம் 5:2) இல்லை, இயேசு, பொ.ச. 33-ல் தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின், ‘ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமை’ வைக்க யெகோவா தீர்மானித்திருந்த பரலோகப் பகுதியில், பரலோக சீயோன் மலையில் அஸ்திபார மூலைக்கல்லாக அபிஷேகம் செய்யப்பட்டார். எனவே “சீயோன் மலை,” பரலோக எருசலேமை, அதாவது ராஜ்யத்தை உண்டுபண்ணும் இயேசு மற்றும் அவருடைய உடன்சுதந்தரவாளிகளின் உயர்த்தப்பட்ட நிலையை இது பிரதிநிதித்துவம் செய்கிறது. (எபிரெயர் 12:22, 28; எபேசியர் 3:3) கர்த்தருடைய நாளில் இந்த மகிமைபொருந்திய ராஜரீக நிலைக்கு யெகோவா அவர்களை உயர்த்துகிறார். கடந்த நூற்றாண்டுகளினூடே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், “ஜீவனுள்ள கற்க”ளாக தனிப்பெருஞ்சிறப்பு வாய்ந்த ராஜ்யத்தில், மகிமைப்படுத்தப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பரலோக சீயோன் மலையின்மீது நிற்பதற்கு மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.—1 பேதுரு 2:4-6; லூக்கா 22:28-30; யோவான் 14:2, 3.

4. எவ்விதத்தில் 1,44,000 பேரில் அனைவரும் இந்தச் சீயோன் மலையின்மீது நிற்கின்றனர்?

4 யோவான் இயேசுவை மட்டுமல்லாமல் பரலோக ராஜ்யத்தின் உடன்சுதந்தரவாளிகளாகிய 1,44,000 பேரடங்கிய முழு குழுவையும் சீயோன் மலையின்மீது நிற்கக் காண்கிறார். தரிசனம் குறிப்பிடும் காலத்தில் 1,44,000 பேரில் எல்லாரும் அல்ல, ஆனால் அநேகர் ஏற்கெனவே பரலோகத்தில் இருந்தனர். பின்னர், இதே தரிசனத்தில் பரிசுத்தவான்களில் சிலர் இன்னும் சகித்திருந்து உண்மையுள்ளோராக மரிக்கவேண்டியிருந்தனர் என்பதை யோவான் அறிந்துகொள்கிறார். (வெளிப்படுத்துதல் 14:12, 13) எனவே, தெளிவாகவே, 1,44,000 பேரில் சிலர் இன்னும் பூமியிலிருக்கின்றனர். எனவே சீயோன் மலையில் இயேசுவோடு அவர்கள் அனைவரும் நிற்பதை யோவான் காண்பது எவ்வாறு கூடியகாரியமாகும்? a இது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையின் உறுப்பினர்களாக இவர்கள் இப்போது “சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும்” வந்திருக்கின்றனர். (எபிரெயர் 12:22) பவுலைப்போல அவர் இன்னும் பூமியிலிருந்தபோதிலும்,—ஆவிக்குரிய அர்த்தத்தில்—அவர்கள் ஏற்கெனவே உன்னதங்களில் கிறிஸ்து இயேசுவுடன் ஐக்கியப்பட்டிருக்கும்படி உயர்த்தப்பட்டிருக்கின்றனர். (எபேசியர் 2:5, 7) மேலுமாக, 1919-ல் “இங்கே ஏறிவாருங்கள்,” என்ற அழைப்புக்கு அடையாள அர்த்தத்தில் ‘மேகத்தில் ஏறி வானத்திற்குப் போவ’தன் மூலம் அவர்கள் பிரதிபலித்தார்கள். (வெளிப்படுத்துதல் 11:12) இந்த வசனங்களின் நோக்குநிலையில் இந்த 1,44,000 பேரில் அனைவரும்—ஆவிக்குரிய விதமாக பேசும்போது—இயேசு கிறிஸ்துவுடன் சீயோன் மலையின்மீது இருப்பதை நாம் காணலாம்.

5. யாருடைய பெயர்கள் 1,44,000 பேருடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருக்கின்றன, ஒவ்வொரு பெயரின் முக்கியத்துவம் என்ன?

5 அடையாள எண்ணாகிய 666 என்று முத்திரையிடப்பட்டவர்களாகிய மூர்க்க மிருகத்தின் வணக்கத்தாருடன் இந்த 1,44,000 பேருக்கு எந்தப் பங்குமில்லை. (வெளிப்படுத்துதல் 13:15-18) இதற்கு நேர்மாறாக இந்த உண்மைப்பற்றுறுதியுள்ளவர்கள் தேவனுடைய மற்றும் ஆட்டுக்குட்டியானவருடைய பெயரை தங்கள் நெற்றிகளில் எழுதப் பெற்றிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமில்லாமல் யோவான், ஒரு யூதனாக, יהוה என்ற எபிரெய எழுத்துக்களில் கடவுளுடைய நாமத்தைக் கண்டார். b தங்களுடைய நெற்றிகளில் அடையாள அர்த்தத்தில் இயேசுவுடைய பிதாவின் பெயர் எழுதப்பட்டவர்களாக இந்த முத்திரையிடப்பட்டவர்கள் தாங்கள் யெகோவாவின் சாட்சிகள், அவருடைய அடிமைகள் என்பதை எல்லாருக்கும் தெரிவிக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 3:12) அவர்கள் இயேசுவின் பெயரையும் தங்கள் நெற்றிகளில் காணும்படி செய்வது அவர்கள் இயேசுவிற்கு சொந்தமானவர்கள் என்பதை ஒப்புக்கொள்வதைக் குறிக்கிறது. அவர்களுடைய நிச்சயிக்கப்பட்ட “மணவாள”னாக இருக்கிறார், அவர்கள் பரலோக வாழ்க்கையை நோக்காகக் கொண்டு கடவுளைச் சேவிக்கும் “புதிய சிருஷ்டி”யாக அவருடைய எதிர்கால “மணவாட்டி”யாக இருக்கின்றனர். (எபேசியர் 5:22-24; வெளிப்படுத்துதல் 21:2, 9; 2 கொரிந்தியர் 5:17) யெகோவாவுடனும் இயேசுகிறிஸ்துவுடனும் அவர்கள் கொண்டிருக்கும் நெருக்கமான உறவு அவர்களுடைய எண்ணங்கள், செயல்களனைத்தையும் பாதிக்கிறது.

புதுப்பாட்டைப் போன்றதைப் பாடுதல்

6. என்ன பாட்டை யோவான் கேட்கிறார், அதை அவர் எவ்வாறு விவரிக்கிறார்?

6 இதற்குப் பொருத்தமாக யோவான் பின்வருமாறு அறிக்கை செய்கிறார்: “அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் [போன்றதை, NW] பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.” (வெளிப்படுத்துதல் 14:2, 3) 1,44,000 பேருடைய குரல்கள் அனைத்தும் சேர்ந்து ஒரே குரலில் இன்னிசையை எழுப்புவது பேரொலி எழுப்பும் நீர்வீழ்ச்சியையும் முழங்கும் இடிமுழக்கத்தையும் யோவானுக்கு நினைப்பூட்டியதைக் குறித்து ஆச்சரியப்படவேண்டியதில்லை. தெளிவான சுரமண்டலத்தைப்போன்ற இசை பின்தொடருதல் எத்தனை இனிமையாக இருக்கிறது! (சங்கீதம் 81:2) பூமியிலுள்ள எந்தப் பாடற்குழுவாவது மகிமைபொருந்திய, அந்தச் சேர்ந்திசையின் பேரழகை எப்போதாவது அடையப்பெற முடியுமா?

7. (அ) வெளிப்படுத்துதல் 14:3-ன் புதுப்பாட்டு என்ன? (ஆ) சங்கீதம் 149:1-ன் பாட்டு எவ்வாறு நம்முடைய நாளில் புதிதானதாக இருக்கிறது?

7 இந்தப் ‘புதுப்பாட்டு’ என்ன? நாம் வெளிப்படுத்துதல் 5:9, 10-ஐ சிந்திக்கும்போது அறிந்துகொண்டபடி, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களை இயேசு கிறிஸ்துவின் மூலம் ‘எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் [ராஜ்யமாகவும், NW] ஆசாரியர்களுமாக்கிய,’ யெகோவாவின் ராஜ்ய நோக்கங்களுடனும் அவருடைய அற்புதமான ஏற்பாட்டுடனும் சம்பந்தப்பட்ட பாட்டாக இருக்கிறது. தேவனுடைய இஸ்ரவேலர் மூலமாகவும் அவர்களுக்காக யெகோவா நிறைவேற்றிய புதிய காரியங்களை அறிவிக்கும் விதத்திலும் அவரைத் துதிக்கும் பாடலாக அது இருந்தது. (கலாத்தியர் 6:16) இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலரின் உறுப்பினர்கள் சங்கீதக்காரனின் பின்வரும் அழைப்புக்குப் பிரதிபலிக்கின்றனர்: “அல்லேலூயா, கர்த்தருக்குப் [யெகோவாவைத் துதியுங்கள், யெகோவாவுக்குப், NW] புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.” (சங்கீதம் 149:1, 2) இந்த வார்த்தைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை என்பது உண்மையே, ஆனாலும் நம்முடைய நாளில், அவை புதிய புரிந்துகொள்ளுதலோடு பாடப்படுகின்றன. 1914-ல் மேசியானிய ராஜ்யம் பிறந்தது. (வெளிப்படுத்துதல் 12:10) 1919-ல் பூமியிலுள்ள யெகோவாவின் ஜனங்கள் “ராஜ்யத்தின் வசனத்தை” வலுவூட்டப்பட்ட வைராக்கியத்தோடு அறிவிக்க ஆரம்பித்தனர். (மத்தேயு 13:19) 1919-ன் வருடாந்தர வசனத்தினால் (ஏசாயா 54:17) தூண்டப்பட்டவர்களாகவும் ஆவிக்குரிய பரதீஸில் திரும்பநிலைநாட்டப்பட்டதால் உற்சாகப்படுத்தப்பட்டவர்களாகவும் அவர்கள் அந்த வருடத்தில் ‘இசையைத் தங்கள் இருதயங்களில் கொண்டவர்களாக யெகோவாவைக் குறித்துப் பாட’ ஆரம்பித்தார்கள்.—எபேசியர் 5:19, NW.

8. வெளிப்படுத்துதல் 14:3-ன் புதுப்பாட்டை ஏன் 1,44,000 பேர் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்?

8 வெளிப்படுத்துதல் 14:3-ல் குறிப்பிடப்பட்டுள்ள பாட்டை ஏன் 1,44,000 பேர் மட்டுமே கற்றுக்கொள்ள முடிகிறது? ஏனெனில் கடவுளுடைய ராஜ்யத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்தரவாளிகளாக அவர்களுடைய அனுபவத்துடன் தொடர்பு கொண்ட ஒன்றாக அது இருக்கிறது. அவர்கள் மட்டுமே கடவுளுடைய குமாரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மட்டுமே அந்தப் பரலோக ராஜ்யத்தின் பாகமாகும்படி பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் மட்டுமே மனிதவர்க்கத்தைப் பரிபூரணத்துக்குக் கொண்டுவர இயேசு கிறிஸ்துவுடன் ஆயிரம் வருஷம் “ஆசாரியராயிருந்து . . . அரசாளுவார்கள்.” அவர்கள் மட்டுமே யெகோவாவின் முன்னிலையில் ‘புதுப்பாட்டைப் போன்றதைப் பாடு’வதாகக் காணப்பட்டார்கள். c இந்தத் தனித்தன்மைவாய்ந்த அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் ராஜ்யத்திற்கான ஒப்பிணைவற்ற போற்றுதலை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது மற்றும் அதைக்குறித்து ஒருவரும் பாடக்கூடாதமுறையில் பாட அவர்களைச் செய்விக்கிறது.—வெளிப்படுத்துதல் 20:6; கொலோசெயர் 1:13; 1 தெசலோனிக்கேயர் 2:11, 12.

9. அபிஷேகம்பண்ணப்பட்டவர்களின் பாட்டிற்கு எவ்வாறு திரள்கூட்டத்தினர் பிரதிபலித்திருக்கின்றனர், இவ்வாறு அவர்கள் என்ன அறிவுரையை நிறைவேற்றியிருக்கின்றனர்?

9 இருந்தபோதிலும், மற்றவர்கள் அவர்களுடைய பாடலுக்கு செவிசாய்த்துப் பிரதிபலித்திருக்கின்றனர். 1935 முதற்கொண்டு வேறே ஆடுகளின் வளர்ந்துவரும் திரள்கூட்டத்தினர் அவர்களுடைய வெற்றிக்களிப்பு மிக்க பாட்டைக் கேட்டு, கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து அறிவிக்க, அவர்களுடன் சேர்ந்து கொள்ள உந்துவிக்கப்பட்டிருக்கின்றனர். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9) கடவுளுடைய ராஜ்யத்தின் எதிர்கால ஆட்சியாளர்கள் பாடக்கூடிய அதேவிதமாக அந்தப் புதுப்பாட்டைப் பாட இந்தப் புதியவர்கள் கற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் அவர்களும்கூட யெகோவா நிறைவேற்றும் புதிய காரியங்களுக்காக அவருக்கு போற்றுதலைத் துதியின் கீதமாக ஒரே குரலில் சேர்ந்து இன்னிசையை ஒலிக்கச் செய்யமுடியும். இவ்வாறு அவர்கள் பின்வரும் சங்கீதக்காரனின் அறிவுரையை நிறைவேற்றுவார்கள்: “யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் யெகோவாவைப் பாடுங்கள். யெகோவாவைப் பாடி அவருடைய திருநாமத்தை ஸ்தோத்திரித்து நாளுக்கு நாள் அவர் இரட்சிப்பை நற்செய்தியாகப் பிரஸ்தாபியுங்கள். புறஜாதிகளுக்குள் அவர் மகிமையையும் சகல ஜனங்களுக்குள்ளும் அவர் அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். ஜனங்களின் சந்ததிகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், யெகோவாவுக்கே செலுத்துங்கள். யெகோவா அரசாளுகிறார், . . . என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.”—சங்கீதம் 96:1-3, 7, 10; 98:1-9.

10. அடையாள அர்த்தமுள்ள 24 மூப்பர்களின் “முன்பாக” இந்த 1,44,000 பேர் பாடுவது எவ்வாறு கூடியகாரியமாகும்?

10 அந்த 24 மூப்பர்கள்தாமே தங்களுடைய மகிமைபொருந்திய நிலைகளிலிருக்கும் 1,44,000 பேராக இருக்கும்போது இந்த 1,44,000 பேர் எப்படி மூப்பர்களுக்கு “முன்பாக” பாடக்கூடும்? கர்த்தருடைய நாளின் ஆரம்பத்தில், “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்” ஆவி சிருஷ்டிகளாக உயிர்த்தெழுப்பப்பட்டனர். இவ்வாறு, வெற்றிசிறந்த, உண்மையுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இப்போது பரலோகத்திலிருக்கின்றனர், ஆசாரிய மூப்பர்களின் 24 பிரிவுகளுடன் ஒப்பிட அடையாள அர்த்தத்தில் கடமைகளை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் யெகோவாவின் பரலோக அமைப்பு பற்றிய தரிசனத்தில் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். (1 தெசலோனிக்கேயர் 4:15, 16; 1 நாளாகமம் 24:1-18; வெளிப்படுத்துதல் 4:4; 6:11) இவ்வாறு 1,44,000 பேரில் இன்னும் பூமியிலிருக்கும் மீதமானோர் புதுப்பாட்டை பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட தங்கள் சகோதர்களுக்கு முன்பாக அல்லது அவர்களின் பார்வையில் பாடுகின்றனர்.

11. அபிஷேகம் செய்யப்பட்ட வெற்றிபெற்றவர்கள் ஏன் 24 மூப்பர்களாகவும் 1,44,000 பேர்களாகவும் குறிப்பிடப்படுகின்றனர்?

11 இந்தச் சமயத்தில் நாம் பின்வருமாறும் கேட்கக்கூடும்: இந்த அபிஷேகம் செய்யப்பட்ட வெற்றிபெற்றவர்கள் ஏன் அடையாள அர்த்தத்தில் 24 மூப்பர்களென்றும் 1,44,000 பேரென்றும் குறிப்பிடப்படுகின்றனர்? இது ஏனென்றால் இந்த ஒரு குழுவை வெளிப்படுத்துதல் இரண்டு வேறுபட்ட நோக்குநிலையிலிருந்து காண்கிறது. இந்த 24 மூப்பர்கள் எப்பொழுதும் யெகோவாவின் சிங்காசனத்தைச் சுற்றி பரலோகத்தில் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் தங்களுடைய இறுதியான நிலைகளில் இருப்பதாக காண்பிக்கப்படுகிறார்கள். தற்போது குறைந்த எண்ணிக்கையிலுள்ள மீதமானவர்கள் இன்னும் பூமியிலிருந்தபோதும் அவர்கள் பரலோக நிலையில் உள்ள 1,44,000 பேரின் முழுத் தொகுதியையும் அடையாளப்படுத்துகின்றனர். (வெளிப்படுத்துதல் 4:4, 10; 5:5-14; 7:11-13; 11:16-18) என்றபோதிலும், வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரம் மனிதவர்க்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் என்பதாக இந்த 1,44,000 பேர்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது; மேலும் அது தனிப்பட்ட ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் முழு எண்ணிக்கையை முத்திரையிட்டு தீர்ப்பதும், எண்ணிக்கையற்ற திரள் கூட்டத்தாருக்கு இரட்சிப்பைக் கொடுப்பதுமாகிய யெகோவாவின் மகத்தான நோக்கத்தை அழுத்திக்காட்டுகிறது. வெளிப்படுத்துதல் 14-ம் அதிகாரம் தனிப்பட்ட வெற்றிபெற்றவர்களடங்கிய 1,44,000 பேரின் முழு ராஜ்ய வகுப்பும் சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடேகூட ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்ற உறுதியான காட்சியை அளிக்கிறது. இப்போது நாம் பார்க்கப்போகும் விதமாகவே, இந்த 1,44,000 பேருடன் சேர்ந்தவர்களாக கணக்கிடப்படுவதற்குத் தேவையான தகுதிகளும்கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. d

ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுபவர்கள்

12. (அ) 1,44,000 பேரைப் பற்றிய தன்னுடைய வர்ணனையை யோவான் எவ்வாறு தொடருகிறார்? (ஆ) என்ன அர்த்தத்தில் 1,44,000 பேர் கற்புள்ளவர்கள் என குறிப்பிடப்படுகின்றனர்?

12 “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட” 1,44,000 பேரைக் குறித்த வர்ணனையைத் தொடருகையில் யோவான் பின்வருமாறு நமக்குச் சொல்லுகிறார்: “ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் . . . மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:4, 5) இந்த 1,44,000 பேர் “கற்புள்ளவர்கள்” என்ற உண்மையானது இந்த வகுப்பின் உறுப்பினர்கள் மாம்சப்பிரகாரமாய் கட்டாயமாக மணம் செய்யாதவர்களாக இருக்கவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. பரலோக அழைப்பைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்தவ மணமாகாத நிலையின் அனுகூலங்களையும், குறிப்பிட்ட நிலைமைகளின்கீழ் திருமணம் விரும்பத்தக்கதே எனவும் அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 7:1, 2, 36, 37) இந்த வகுப்பாரைத் தனிச்சிறப்புவாய்ந்தோராக்குவது ஆவிக்குரிய கற்புள்ள தன்மையாகும். அவர்கள் உலகப் பிரகாரமான அரசியலோடும் பொய் மதத்தோடும் ஆவிக்குரிய விபசாரத்தைத் தவிர்த்திருக்கின்றனர். (யாக்கோபு 4:4; வெளிப்படுத்துதல் 17:5) கிறிஸ்துவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணவாட்டிகளாக அவர்கள் தங்களை “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே . . . மாசற்ற”வர்களும் சுத்தமானவர்களுமாக தங்களை வைத்துக்கொண்டிருக்கின்றனர்.—பிலிப்பியர் 2:15.

13. ஏன் 1,44,000 பேர் இயேசு கிறிஸ்துவிற்குப் பொருத்தமான மணவாட்டியாக இருக்கின்றனர், அவர்கள் எவ்வாறு “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்க”ளாக இருக்கின்றனர்?

13 மேலுமாக, “இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை.” இந்த விதத்தில் அவர்கள் தங்கள் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவைப்போல் இருக்கின்றனர். ஒரு பரிபூரண மனிதராக “அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.” (1 பேதுரு 2:21, 22) மாசற்றவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் ஒரே சமயத்தில் இருப்பதினால், இந்த 1,44,000 பேர் யெகோவாவின் சிறந்த பிரதான ஆசாரியருக்கு கற்புள்ள மணவாட்டியாக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். இயேசு பூமியிலிருந்தபோது, நேர்மை இருதயமுள்ளவர்கள் தம்மைப் பின்பற்றும்படி அழைப்புக்கொடுத்தார். (மாற்கு 8:34; 10:21; யோவான் 1:43) அதற்கு பிரதிபலித்தவர்கள் அவருடைய வாழ்க்கை முறையை பின்பற்றி, அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். இவ்வாறு, தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் போது, அவர் சாத்தானுடைய உலகத்தினூடே வழிநடத்துவதால் “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்று”கிறார்கள்.

14. (அ) எவ்வாறு 1,44,000 பேர் “தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக” இருக்கின்றனர்? (ஆ) எந்த அர்த்தத்தில் திரள்கூட்டத்தினரும் முதற்பலனாக இருக்கின்றனர்?

14 இந்த 1,44,000 பேர் “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்,” ‘மனுஷரிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.’ அவர்கள் கடவுளுடைய குமாரர்களாக தத்தெடுக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர்கள் இனிமேலும் மாம்சமும் இரத்தமுமுள்ள மனிதர்களாக இருக்கமாட்டார்கள். 4-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்கள் “தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக” ஆகிறார்கள். முதல் நூற்றாண்டில் இயேசு ‘மரணத்தில் நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்,’ என்பது உண்மையே. (1 கொரிந்தியர் 15:20, 23) ஆனால், இயேசுவின் பலியின் மூலமாக அபூரண மனிதவர்க்கத்திலிருந்து விலைக்கு வாங்கப்பட்ட இந்த 1,44,000 பேர் “நிச்சயமான முதற்பலன்களாக” இருக்கின்றனர். (யாக்கோபு 1:18, NW) என்றபோதிலும், மனிதவர்க்கத்திலிருந்து கனிகளைக் கூட்டிச்சேர்ப்பது அவர்களுடன் முடிந்துவிடவில்லை. வெளிப்படுத்துதல் புத்தகம் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற உங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக,” என மகா சத்தமிடும் எண்ணிக்கையற்ற திரள் கூட்டத்தினரை அறுவடை செய்வதைப்பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டது. இந்தத் திரள்கூட்டம் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைத்து, “ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுக”ளின்மூலம் அவர்கள் தொடர்ந்து புத்துயிரூட்டப்பட்டு, பூமியில் மனித பரிபூரணத்திற்கு உயர்த்தப்படுவார்கள். மிகுந்த உபத்திரவத்திற்குச் சற்று பின் ஹேடீஸ் வெறுமையாக்கப்பட்டு, எண்ணிக்கையற்ற லட்சக்கணக்கான மற்ற ஆட்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு, அதே ஜீவத்தண்ணீரைப் பருகுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறுவர். இதை மனதில் கொண்டவர்களாக திரள் கூட்டத்தினரை வேறே ஆடுகளின் முதற்பலன்—இவர்களே முதலாவதாக ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்து’ பூமியிலே என்றென்றும் வாழும் நம்பிக்கை கொண்டவர்கள்—என அழைப்பது சரியானதே.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 14, 17; 20:12, 13.

15. மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் ஆசரிக்கப்பட்ட பண்டிகைகளுக்கும் மூன்று வித்தியாசமான முதற்பலன்களுக்கும் இடையே என்ன இடை ஒப்புமைகள் இருக்கின்றன?

15 பண்டை காலங்களில் மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி ஆசரிக்கப்பட்ட பண்டிகைகளுடன் அக்கறையைத் தூண்டும் இடை ஒப்புமையை இந்த மூன்று முதற்பலன்கள் (இயேசு கிறிஸ்து, 1,44,000 பேர், திரள் கூட்டத்தினர்) கொண்டிருக்கின்றனர். நிசான் 16, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின்போது, வாற்கோதுமை அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டு யெகோவாவுக்குச் செலுத்தப்பட்டது. (லேவியராகமம் 23:6-14) நிசான் 16-ம் தேதியன்று தான் மரித்தோரிலிருந்து இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். மூன்றாம் மாதம், நிசான் 16-லிருந்து 50-வது நாள், கோதுமை பயிர்களின் விளைந்த முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையை இஸ்ரவேலர்கள் ஆசரித்தனர். (யாத்திராகமம் 23:16; லேவியராகமம் 23:15, 16) இந்த ஆசரிப்பு பெந்தெகொஸ்தே என (“ஐம்பதாவது” எனப் பொருள்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து) அழைக்கப்பட தொடங்கியது, இந்த பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் தான் 1,44,000 பேரின் முதல் அங்கத்தினர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டனர். இறுதியாக, ஏழாவது மாதத்தில், முழு அறுவடையும் சேர்க்கப்பட்டபோது சந்தோஷகரமான நன்றிசெலுத்தும் சமயமாக மற்ற அனைத்துடனும் குருத்தோலைகளால் உண்டாக்கப்பட்ட கூடாரங்களில் ஒரு வாரம் தங்கி கூடாரப்பண்டிகையை ஆசரித்தனர். (லேவியராகமம் 23:33-43) இதற்கு இணையாக, மிகப்பெரிய கூட்டிச்சேர்த்தலின் பாகமாகிய திரள்கூட்டத்தினர் “தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து” சிங்காசனத்திற்கு முன்பாக நன்றிசெலுத்துகின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:9.

நித்திய சுவிசேஷத்தை அறிவித்தல்

16, 17. (அ) தேவதூதன் எங்கே பறப்பதாக யோவான் காண்கிறார், என்ன அறிவிப்பை அந்தத் தேவதூதன் செய்கிறார்? (ஆ) ராஜ்ய-பிரசங்கிப்பு வேலையில் யார் உட்பட்டிருக்கின்றனர், என்ன அனுபவங்கள் இதைக் குறித்துக்காட்டுகின்றன?

16 அடுத்து யோவான் எழுதுகிறார்: “பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.” (வெளிப்படுத்துதல் 14:6, 7) தேவதூதன் பறவைகள் பறக்கும் ‘வானத்தின் மத்தியில்’ பறந்துகொண்டிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 19:17-ஐ ஒப்பிடுங்கள்.) எனவே, அவருடைய சத்தம் உலகம் முழுவதும் கேட்கப்படக்கூடும். எந்தத் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பையும்விட எத்தனை விரிவான பரப்பெல்லையை இந்தத் தேவதூதனின் உலகளாவிய பிரசங்கிப்பு கொண்டிருக்கிறது!

17 மூர்க்க மிருகத்துக்கும் அதன் சின்னத்துக்கும் அல்ல ஆனால் சாத்தானால் அடக்கி ஆளப்படும் எந்த அடையாள அர்த்தமுள்ள மிருகத்தைக்காட்டிலும் ஒப்பிடப்படமுடியாத அளவு அதிக வல்லமையுடைய யெகோவாவுக்குப் பயப்படும்படி ஒவ்வொருவரும் தூண்டப்படுகின்றனர். ஏன், யெகோவாவே வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார், இப்போது அவர் நியாயத்தீர்ப்பு செய்வதற்கான காலம் வந்திருக்கிறது! (ஒப்பிடுங்கள்: ஆதியாகமம் 1:1; வெளிப்படுத்துதல் 11:18.) இயேசு பூமியிலிருக்கையில் நம்முடைய நாளைப் பற்றி பின்வருமாறு அவர் தீர்க்கதரிசனமுரைத்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை இந்தப் பொறுப்பை நிறைவேற்றி வருகிறது. (1 கொரிந்தியர் 9:16; எபேசியர் 6:15) இந்தப் பிரசங்க வேலையில் காணக்கூடாத தேவதூதர்களும் உட்பட்டிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துதல் இங்கே வெளிப்படுத்துகிறது. துயரத்தில் இருந்து ஏங்கிக்கொண்டும், ஆவிக்குரிய உதவிக்காக ஜெபித்துக்கொண்டும்கூட இருக்கும் சில ஆத்துமாக்களின் வீட்டினிடமாக அடிக்கடி ஒரு யெகோவாவின் சாட்சியை கொண்டு சென்ற தேவதூதர்களின் வழிநடத்துதல் எத்தனை அடிக்கடி ஒரு வெளிப்படையாக இருக்கிறது!

18. வானத்தின் மத்தியில் பறக்கும் தேவதூதனின்படி, எதற்கான வேளை வந்தது, யார் மேலுமான அறிவிப்புகளைச் செய்வார்கள்?

18 வானத்தின் மத்தியில் பறந்த தூதன் அறிவித்த விதமாகவே நியாயத்தீர்ப்புக்கான வேளை வந்தது. என்ன நியாயத்தீர்ப்பைக் கடவுள் இப்போது வழங்குவார்? இப்போது இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் தூதனால் செய்யப்படவிருக்கும் அறிவிப்புகளால் செவிகள் கிளர்ச்சி உணர்வடையும்.—எரேமியா 19:3.

[அடிக்குறிப்புகள்]

a இங்கே பூமியிலிருக்கும் போது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ராஜாக்களாக ஆட்சிசெய்ய மாட்டார்கள் என 1 கொரிந்தியர் 4:8 காண்பிக்கிறது. இருந்தபோதிலும், வெளிப்படுத்துதல் 14:3, 6, 12, 13-ன் சூழமைவு காண்பிக்கும் விதமாக தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவுபரியந்தம் சகித்திருக்கையில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் அவர்கள் புதுப்பாட்டைப் பாடுவதில் பங்கு கொள்கின்றனர்.

b மற்ற தரிசனங்களில் எபிரெய பெயர்கள் உபயோகிக்கப்படுவதன் மூலம் இது ஆதரிக்கப்படுகிறது; “அபெத்தோன்” என்ற (“அழிவு” என பொருள்படும்) எபிரெயப் பெயர் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. “எபிரெயு பாஷையிலே அர்மகெதோன்” என்னப்பட்ட இடத்தில் அவர் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.—வெளிப்படுத்துதல் 9:11; 16:16.

c பூர்வ காலங்களில் தீர்க்கதரிசன வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்ட பாட்டைத் தானே வசனம் ‘புதுப்பாட்டைப் போன்றதை’ என்று சொல்கிறது. ஆனால் அதைப் பாட ஒருவரும் அப்போது தகுதிபெற்றில்லை. இப்போது, ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுதலுடனும், பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுப்பப்படுதலுடனும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் மெய்ம்மைகள் வெளிப்பட்டன, மற்றும் அதன் எல்லா பேரழகுடனும் அதைப் பாடுவதற்கான காலமாக அது இருந்தது.

d இந்தச் சூழ்நிலை ஏற்றக்காலத்தில் வேலைக்காரருக்கு உணவளிக்கும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையுடன் ஒப்பிடப்படலாம். (மத்தேயு 24:45, NW) அடிமை ஒரு குழுவினராக உணவளிக்க பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர், ஆனால் வேலைக்காரர், அந்தக் குழுவின் தனிப்பட்ட உறுப்பினர்கள், அந்த ஆவிக்குரிய ஏற்பாட்டில் பங்குகொள்வதன் மூலம் வலுவூட்டப்படுகின்றனர். அவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்—மொத்தமாகவும், தனிப்பட்டவிதமாகவும்—வித்தியாசமான சொல் தொகுதிகளால் விவரிக்கப்பட்டிருக்கின்றனர்.

[கேள்விகள்]

[பக்கம்  202, 203 படம்]

1,44,000

24 மூப்பர்கள்

ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து இயேசுவின் உடன் சுதந்தரவாளிகள் இரண்டு வேறுபட்ட நிலைகளிலிருந்து நோக்கப்படும்போது