Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதல் துயரம்—வெட்டுக்கிளிகள்

முதல் துயரம்—வெட்டுக்கிளிகள்

அதிகாரம் 22

முதல் துயரம்—வெட்டுக்கிளிகள்

1. தூதர்கள் எக்காள சத்தங்களை ஊதுகையில் யார் தொடர்கிறார்கள், மேலும் ஐந்தாவது எக்காள சத்தம் எதை அறிவிக்கிறது?

 ஐந்தாவது தூதன் அவருடைய எக்காளத்தை ஊத ஆயத்தம்செய்கிறார். நான்கு பரலோக எக்காளங்கள் ஏற்கெனவே ஊதப்பட்டுவிட்டன, நான்கு வாதைகள் யெகோவா மிக அதிக குற்றஞ்சாட்டுக்குரியதாக கருதும் பூமியின் மூன்றிலொரு பங்காகிய கிறிஸ்தவமண்டலத்திடமாக கட்டளையிடப்பட்டுவிட்டன. அவளுடைய மரணத்துக்குரிய நோயுற்ற நிலைமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தூதர்கள் எக்காளங்களை ஊதுகையில், பூமியில் மானிட முன்னறிவிப்பாளர்கள் அதைத் தொடர்கிறார்கள். இப்பொழுது ஐந்தாவது தூதனுடைய எக்காளம் முதல் வாதையை அறிவிக்க இருக்கிறது. முன்னால் போனதையும் விட அதிக பயங்கரமானது. அது திகிலடையச் செய்யும் வெட்டுக்கிளி வாதையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எனினும், முதலாவதாக, இந்த வாதையை நன்றாக புரிந்துகொள்ள நமக்கு உதவும் மற்ற வேதவசனங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

2. யோவான் பார்க்கிறதைப் போன்ற வெட்டுக்கிளியின் வாதையை எந்தப் பைபிள் புத்தகம் விவரிக்கிறது, மேலும் பூர்வ இஸ்ரவேலின் மீது அது என்ன பாதிப்பை உடையதாயிருந்தது?

2 பொ.ச.மு. ஒன்பதாவது நூற்றாண்டின் சமயத்தில் எழுதப்பட்ட பைபிள் புத்தகமாகிய யோவேல், யோவான் பார்க்கிறதை அதே போன்ற, வெட்டுக்கிளிகளை உள்ளடக்கும் ஒரு பூச்சிகளின் வாதையை விளக்குகிறது. (யோவேல் 2:1-11, 25) a அது விசுவாசதுரோக இஸ்ரவேலுக்கு அதிக அசெளகரியத்தை உண்டாக்குவதாக இருந்தது, ஆனால் தனிப்பட்ட யூதர்கள் மனந்திரும்பி, யெகோவாவின் தயவுக்கு திரும்புவதிலும்கூட இது விளைவடையும். (யோவேல் 2:6, 12-14) அந்தக் காலம் வந்தபோது, யெகோவா அவருடைய ஆவியை “மாம்சமான யாவர் மேலும்” ஊற்றுவார், “யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே” அச்சம் தரும் அடையாளங்களும் திகிலூட்டும் அறிகுறிகளும் இருக்கும்.யோவேல் 2:11, 28-32, NW.

ஒரு முதல் நூற்றாண்டு வாதை

3, 4. (அ) யோவேல் இரண்டாம் அதிகாரத்தின் நிறைவேற்றம் எப்பொழுது இருந்தது, மேலும் எவ்வாறு? (ஆ) பொ.ச. முதல் நூற்றாண்டில் வெட்டுக்கிளியின் கூட்டத்தைப் போன்ற ஒரு வாதை எப்படி இருந்தது, மேலும் வாதிப்பதானது எவ்வளவு காலம் நீடித்திருந்தது?

3 முதல் நூற்றாண்டில் யோவேல் இரண்டாம் அதிகாரத்தின் நிறைவேற்றம் இருந்தது. அப்பொழுதுதானே, பொ.ச. 33-ல், பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு, முதல் கிறிஸ்தவர்களை அபிஷேகம் செய்து, அநேக பாஷைகளில் “தேவனுடைய மகத்துவங்களைப்” பேசும்படியாக அதிகாரம் கொடுத்தது. இதன் விளைவாக, ஒரு பெரிய கூட்டம் கூடினது. அப்போஸ்தலனாகிய பேதுரு ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம், யோவேல் 2:28, 29 வசனங்களை மேற்கோள் காண்பித்து அதன் நிறைவேற்றத்தை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக பேசினார். (அப்போஸ்தலர் 2:1-21) ஆனால் அந்த நேரத்தில், சிலருக்கு அசெளகரியத்தை உண்டாக்கி மற்றவர்களை மனந்திரும்புதலுக்கு வழிநடத்திய, சொல்லர்த்தமான பூச்சிகளின் வாதையைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லை.

4 அந்த நாட்களிலே அடையாள அர்த்தமுள்ள ஒரு வாதை இருந்ததா? ஆம், உண்மையாகவே! புதிதாக அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் விடா முயற்சியான பிரசங்கிப்பின் விளைவாக அது வந்தது. b அவர்கள் மூலமாக, யெகோவா செவிகொடுக்கும் யூதர்களை மனந்திரும்பி தம்மிடமிருந்து ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்படியாக அழைத்தார். (அப்போஸ்தலர் 2:38-40; 3:19) பிரதிபலித்த தனிப்பட்ட நபர்கள் அவருடைய தயவை குறிப்பிடத்தக்க அளவுக்குப் பெற்றார்கள், ஆனால் அழைப்பை ஏற்க மறுத்தவர்களுக்கு, அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பாழாக்கும் வெட்டுக்கிளியின் கூட்டத்தைப் போல் ஆனார்கள். எருசலேமில் ஆரம்பித்து, அவர்கள் எல்லா யூதேயா மற்றும் சமாரியாவுக்கு பரவினார்கள். சீக்கிரத்தில் அவர்கள் எங்கும் இருந்தார்கள், இயேசுவின் உயிர்த்தெழுதலை, அது உட்படுத்தின எல்லாவற்றோடும், பகிரங்கமாக அறிவிப்பதன் மூலம் விசுவாசியாத யூதர்களைச் சித்திரவதைச் செய்துகொண்டிருந்தார்கள். (அப்போஸ்தலர் 1:8; 4:18-20; 5:17-21, 28, 29, 40-42; 17:5, 6; 21:27-30) அந்த வாதை “மகா பயங்கரமுமான நாள்” பொ.ச. 70 வரையாக தொடர்ந்தது, அப்பொழுது யெகோவா எருசலேமை அழிப்பதற்காக அதற்கு விரோதமாக ரோம சேனைகளைக் கொண்டு வந்தார். விசுவாசத்தில் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொண்ட அந்தக் கிறிஸ்தவர்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்டார்கள்.—யோவேல் 2:32; அப்போஸ்தலர் 2:20, 21; நீதிமொழிகள் 18:10.

இன்றைய வெட்டுக்கிளி வாதை

5. யோவேலின் தீர்க்கதரிசனம் 1919-லிருந்து எவ்வாறு ஒரு நிறைவேற்றத்தை உடையதாயிருந்திருக்கிறது?

5 நியாயமாகவே, யோவேலின் தீர்க்கதரிசனம் முடிவின் காலத்தில் ஓர் இறுதி நிறைவேற்றத்தை உடையதாயிருக்கும் என நாம் எதிர்பார்க்கக்கூடும். இது எவ்வளவு உண்மையாக நிரூபித்திருக்கிறது! அ.ஐ.மா., ஒஹாயோ, சீடர் பாய்ன்ட் என்ற இடத்தில் செப்டம்பர் 1-8, 1919-ல் நடந்த பைபிள் மாணாக்கரின் மாநாட்டிலே யெகோவாவுடைய ஆவியின் குறிப்பிடத்தக்க பொழிவு அவருடைய ஜனங்களை உலகளாவிய பிரசங்க நடவடிக்கையை ஒழுங்குப்படுத்தி அமைக்க ஊக்குவித்தது. கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டின எல்லாரிலும், அவர்கள் மட்டுமே, இயேசு பரலோக அரசராக சிங்காசனத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார் என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த நற்செய்தியை யாவரும் அறியும்படி செய்வதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தார்கள். தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, அவர்கள் விடாமுயற்சியுடன் சாட்சிகொடுத்தது, விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்துக்கு ஒரு வேதனை தரும் வாதையைப் போல் ஆனது.—மத்தேயு 24:3-8, 14; அப்போஸ்தலர் 1:8.

6. (அ) ஐந்தாவது தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினபோது, யோவான் என்ன பார்த்தார்? (ஆ) இந்த ‘நட்சத்திரம்’ யாரை அடையாளப்படுத்துகிறது, ஏன்?

6 எருசலேமின் அழிவிற்குப் பின் 26 வருடங்கள் கழித்து எழுதப்பட்ட வெளிப்படுத்துதல்கூட அந்த வாதையை விவரிக்கிறது. யோவேலின் விவரிப்புக்கு, அது எதைக் கூட்டுகிறது? யோவான் அறிவித்த பதிவிலிருந்தே பார்ப்போம்: “ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின் மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக் குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 9:1) இந்த ‘நட்சத்திரம்,’ வெளிப்படுத்துதல் 8:10-ல் விழும் செயலில் யோவான் பார்த்ததாக சொல்லப்பட்டிருப்பதிலிருந்து வித்தியாசமானதாக இருக்கிறது. அவர் “வானத்திலிருந்து விழுந்த ஒரு நட்சத்திரத்தை” காண்கிறார். அது இப்பொழுது இந்தப் பூமியின் சம்பந்தமாக ஒரு வேலையைக் கொண்டிருக்கிறது. இது ஓர் ஆவிக்குரிய ஆளா மாம்சத்துக்குரிய ஆளா? “பாதாளக் குழியின் திறவுகோலை” வைத்திருப்பவர் பின்னர் சாத்தானை ‘பாதாளத்துக்குள்’ தள்ளுவதாக விவரிக்கப்பட்டிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 20:1-3) ஆகவே, அவர் ஒரு வல்லமை வாய்ந்த ஆவி ஆளாக இருக்க வேண்டும். வெளிப்படுத்துதல் 9:11-ல் வெட்டுக்கிளிகள் ‘ஒரு ராஜனை, பாதாளத்தின் தூதனை’ உடையதாயிருப்பதை யோவான் நமக்குச் சொல்லுகிறார். இரண்டு வசனங்களும் ஒரே தனி நபரைத்தான் குறிக்க வேண்டும், ஏனென்றால் பாதாளத்தின் திறவுகோலை வைத்திருக்கும் தூதன் நியாயமாகவே பாதாளத்தின் தூதனாக இருக்க வேண்டும். மேலும் நட்சத்திரம் யெகோவாவின் நியமிக்கப்பட்ட ராஜாவை அடையாளப்படுத்த வேண்டும், ஏனென்றால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒரு தேவதூத ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.—கொலோசெயர் 1:13; 1 கொரிந்தியர் 15:25.

7. (அ) “பாதாளக்குழி” திறக்கப்படுகையில் என்ன நடக்கிறது? (ஆ) அந்தப் ‘பாதாளம்’ என்ன, மேலும் அதில் கொஞ்சகாலத்தைச் செலவழித்தவர்கள் யார்?

7 பதிவு தொடர்ந்து சொல்கிறது: “அவன் பாதாளக் குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப் போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின் மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 9:2, 3) வேதப்பூர்வமாக, ‘பாதாளம்’ செயலின்மைக்குரிய, ஏன் மரணத்துக்குமுரிய ஓர் இடம். (ஒப்பிடவும்: ரோமர் 10:7; வெளிப்படுத்துதல் 17:8; 20:1, 3.) இயேசுவின் சகோதரர்களான சிறிய கூட்டம் முதல் உலக யுத்தத்தின் முடிவில் இவ்வகையான சம்பந்தப்பட்ட செயலின்மையின் ஒரு ‘பாதாளத்தில்’ கொஞ்ச காலத்தைச் செலவழித்தார்கள் (1918-19). ஆனால் 1919-ல் யெகோவா அவருடைய ஆவியை அவருடைய மனந்திரும்பின ஊழியர்கள் மீது ஊற்றினபோது, செய்வதற்கிருந்த வேலையின் சவாலை எதிர்கொள்வதற்குக் கூட்டமாகச் சென்றார்கள்.

8. வெட்டுக்கிளிகளின் விடுவிப்புடன் எவ்வாறு அதிகமான “புகை” கிளம்பியது?

8 யோவான் பார்க்கிற பிரகாரம், வெட்டுக்கிளிகளின் விடுவிப்புடன் “பெருஞ்சூளையின் புகையைப் போல,” அதிகமான புகை கிளம்பினது. c 1919-ல் அது அவ்விதமாகத்தான் நிரூபித்தது. கிறிஸ்தவமண்டலத்துக்கும் பொதுவாக உலகத்திற்கும் நிலைமை இருண்டதாகியது. (யோவேல் 2:30, 31-ஐ ஒப்பிடவும்.) அந்த வெட்டுக்கிளிகள், யோவான் வகுப்பார் விடுதலையானது உண்மையிலேயே கிறிஸ்தவமண்டலத்தின் குருமாருக்கு ஒரு தோல்வியாக இருந்தது, அவர்கள் ராஜ்ய வேலையை என்றைக்குமாக கொல்லுவதற்கு சதிசெய்து திட்டம் போட்டிருந்தனர், மேலும் அவர்கள் இப்பொழுது கடவுளுடைய ராஜ்யத்தை நிராகரித்தார்கள். அந்த வெட்டுக்கிளி கூட்டம் தெய்வீக அதிகாரம் கொடுக்கப்பட்டு, வல்லமை வாய்ந்த நியாயத்தீர்ப்பு செய்திகளை அறிவிப்பதில் அதை அப்பியாசிக்க ஆரம்பித்தபோது புகையைப் போன்ற மூடியின் அத்தாட்சி விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தின் மேல் பரவத் தொடங்கியது. கிறிஸ்தவமண்டலத்தில் ‘சூரியன்’—அவளுடைய அறிவொளியின் தோற்றம்—ஒரு கிரகணத்தை அனுபவித்தது. இந்த உலகத்தின் ‘ஆகாயத்து அதிகாரப் பிரபு’ கிறிஸ்தவமண்டலத்தின் கடவுளாக காண்பிக்கப்படுகையில், ‘ஆகாயம்’ தெய்வீக நியாயத்தீர்ப்புகளின் அறிவிப்புகளினால் அடர்த்தியாயிற்று.—எபேசியர் 2:2; யோவான் 12:31; 1 யோவான் 5:19.

அந்த வாதிக்கும் வெட்டுக்கிளிகள்!

9. வெட்டுக்கிளிகள் என்ன போர் கட்டளைகளை பெற்றன?

9 அந்த வெட்டுக்கிளிகள் என்ன போர் கட்டளைகளை பெற்றன? யோவான் அறிவிக்கிறான்: “பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களைக் கொலை செய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்து மாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப் போலிருக்கும். அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.”—வெளிப்படுத்துதல் 9:4-6.

10. (அ) வாதை முதலாவதாக யாருக்கு எதிராக கொண்டு வரப்படுகிறது, மேலும் அவர்கள் மேல் என்ன பாதிப்புடன்? (ஆ) என்ன விதமான வாதனை உட்பட்டிருக்கிறது? (அடிக்குறிப்பையும் காணவும்.)

10 இந்த வாதை முதலாவதாக ஜனங்களுக்கு அல்லது அவர்களின் மத்தியில் இருக்கும் பிரபலமானவர்களுக்கு எதிராக கொண்டு வரப்படுவதில்லை என்பதைக் கவனியுங்கள்—‘பூமியின் பூண்டும் மரங்களும்.’ (வெளிப்படுத்துதல் 8:7-ஐ ஒப்பிடவும்.) வெட்டுக்கிளிகள், தங்களுடைய நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனிதர்களை மட்டுமே சேதப்படுத்த வேண்டும், முத்திரை தரித்தவர்களாக உரிமைபாராட்டும் கிறிஸ்தவமண்டலத்தில் உள்ளவர்களானாலும், அவர்களுடைய பதிவு அந்த உரிமைபாராட்டுதலை பொய்யெனக் காட்டுகிறது. (எபேசியர் 1:13, 14) இவ்வாறு, இந்த நவீன கால வெட்டுக்கிளிகளின் வாதிக்கும் சொற்கள் முதலாவதாக கிறிஸ்தவமண்டலத்தின் மதத் தலைவர்களுக்கு எதிராக பேசப்பட்டன. வீம்புக்காரராய் இருக்கும் இந்த மனிதர்கள், தங்களுடைய மந்தைகளைப் பரலோகத்துக்கு வழிநடத்துவதற்கு தவறுகிறவர்களாக மட்டும் இல்லாமல் அவர்கள் தாமே அங்கே பிரவேசிக்கமாட்டார்கள் என்பதை பகிரங்கமாக அறிவிக்கப்படுவதைக் கேட்பதில் எவ்வாறு வாதிக்கப்பட்டிருக்க வேண்டும்! d உண்மையிலே, ‘குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கும்’ ஒரு காரியமாக இது இருந்திருக்கிறது!—மத்தேயு 15:14.

11. (அ) கடவுளுடைய சத்துருக்களை வாதிப்பதற்கு வெட்டுக்கிளிகளுக்கு எவ்வளவு காலம் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றன, மேலும் அது ஏன் உண்மையிலேயே ஒரு குறுகிய காலம் அல்ல? (ஆ) வாதனை எவ்வளவு கடுமையாக இருக்கிறது?

11 வாதனை ஐந்து மாதங்கள் நீடித்திருக்கிறது. அது ஒப்பீட்டடிப்படையில் ஒரு குறுகிய காலமா? ஒரு சொல்லர்த்தமான வெட்டுக்கிளியின் நோக்குநிலையில் அப்படியல்ல. ஐந்து மாதங்கள் இந்தப் பூச்சிகளில் ஒன்று சாதாரணமாக வாழும் காலத்தை விவரிக்கிறது. எனவே, கடவுளுடைய சத்துருக்கள் எவ்வளவு காலம் உயிரோடிருக்கிறார்களோ அவ்வளவு காலம் நவீன கால வெட்டுக்கிளிகள் அவர்களை கொட்டிக் கொண்டிருக்கும். இதுவும் அல்லாமல் வாதனை அவ்வளவு கடினமாக இருப்பதன் காரணமாக மனிதர் சாவைத் தேடுகிறார்கள். உண்மைதான், வெட்டுக்கிளிகளினால் கொட்டப்பட்ட எவரும் தங்களையே அழித்துக்கொள்ளும்படி முயற்சி செய்தார்கள் என்பதற்கு நமக்கு எந்தப் பதிவும் இல்லை. ஆனால் அந்தச் சொற்றொடர் வாதனையின் கடுமையை நாம் படமாக பார்ப்பதற்கு உதவுகிறது—தேள்களின் தொடர்ந்த தாக்குதலின் மூலம் வரும் வாதனை மாதிரி. பாபிலோனிய வெற்றிகொள்கிறவர்களால் சிதறடிக்கப்பட்டு மேலும் ஜீவனைப் பார்க்கிலும் மரணத்தையே விரும்பிய உண்மையற்ற இஸ்ரவேலருக்காக எரேமியாவால் முன்னறிந்த துன்பத்தைப் போல் இது இருக்கிறது.—எரேமியா 8:3; பிரசங்கி 4:2, 3-ஐயும் காண்க.

12. வெட்டுக்கிளிகள் கிறிஸ்தவமண்டலத்தின் மதத் தலைவர்களை, ஏன் ஆவிக்குரிய கருத்தில், கொலை செய்வதற்காக அல்லாமல் வாதிக்கும்படி அதிகாரமளிக்கப்படுகிறார்கள்?

12 இவர்களை, ஆவிக்குரிய கருத்தில், கொலை செய்யாதபடிக்கு வாதிக்கும்படி அனுமதிக்கப்பட்டதேன்? கிறிஸ்தவமண்டலத்தின் பொய்களையும் அவளுடைய தவறுதல்களையும் வெளிப்படுத்துவதில் இது ஒரு முதல் துயரம், ஆனால் பின்னர் மட்டுமே, கர்த்தருடைய நாள் முன்னேறுகையில், அவளுடைய மரணத்தைப் போன்ற ஆவிக்குரிய நிலை முழுமையாக பலரறியச் செய்யப்படும். இரண்டாவது துயரத்தின்போதுதானே மூன்றிலொரு மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 1:10; 9:12, 18; 11:14.

யுத்தத்திற்கு வெட்டுக்கிளிகள் ஆயத்தப்படுத்துதல்

13. வெட்டுக்கிளிகள் என்ன தோற்றத்தையுடையனவாக இருக்கின்றன?

13 அந்த வெட்டுகிளிகள் என்னே குறிப்பிடத்தக்க தோற்றத்தையுடையதாக இருக்கின்றன! யோவான் அதை விவரிக்கிறார்: “அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின் மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள் போலிருந்தன. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல் போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள் போலிருந்தன. இருப்புக் கவசங்களைப் போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகக் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.”—வெளிப்படுத்துதல் 9:7-9.

14. வெட்டுக்கிளிகளைப் பற்றிய யோவானின் விவரிப்பு 1919-ல் உயிர்ப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதிக்கு ஏன் பொருந்தினது?

14 இது நன்றாகவே 1919-லிருந்த பற்றுமாறாத உயிர்ப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதியை விளக்குகிறது. குதிரைகளைப் போன்று, யுத்தத்திற்கு ஆயத்தமாயிருந்து, அப்போஸ்தலனாகிய பவுலால் விவரிக்கப்பட்டிருக்கிற விதத்தில் சத்தியத்துக்காக யுத்தம் செய்ய ஆவலுள்ளவர்களாக இருந்தார்கள். (எபேசியர் 6:11-13; 2 கொரிந்தியர் 10:4) பொன் கிரீடங்கள் போன்று தோன்றுகிற கிரீடங்கள் அவர்களுடைய தலைகளில் இருப்பதாக யோவான் பார்க்கிறார். அவர்கள் உண்மையான கிரீடங்களைக் கொண்டிருப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், இன்னும் பூமியில் இருக்கையில் ஆட்சி செய்ய தொடங்குவதில்லை. (1 கொரிந்தியர் 4:8; வெளிப்படுத்துதல் 20:4) ஆனால் 1919-ல் அவர்கள் ஏற்கெனவே ஓர் அரசருக்குரிய தோற்றத்தையுடையவர்களாயிருந்தனர். அவர்கள் ராஜாவுடைய சகோதரர்களாக இருந்தார்கள், மேலும் அவர்களுடைய பரலோக கிரீடங்கள், முடிவு வரை உண்மையுள்ளவர்களாக தொடர்ந்திருந்ததால், அவர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன.—2 தீமோத்தேயு 4:8; 1 பேதுரு 5:4.

15. வெட்டுக்கிளிகளைப் பற்றிய இவை எதைக் குறிக்கின்றன: (அ) இருப்பு மார்க்கவசங்கள்? (ஆ) மனுஷர்களைப் போன்ற முகங்கள்? (இ) ஸ்திரீயினுடையதைப் போன்ற கூந்தல்? (ஈ) சிங்கங்களைப் போன்ற பற்கள்? (உ) மிகுதியான இரைச்சலை உண்டாக்குவது?

15 தரிசனத்தில், முறிக்கமுடியாத நீதியை அடையாளப்படுத்தும் வகையில், வெட்டுக்கிளிகள் இரும்பு மார்க்கவசங்களைக் கொண்டிருக்கின்றன. (எபேசியர் 6:14-18) அவை மனுஷர்களுடைய முகங்களைக் கொண்டிருக்கின்றன, இந்த அம்சம் அன்பின் தன்மையை சுட்டிக்காட்டுகிறது, ஏனென்றால் மனிதன் கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டான், கடவுள் அன்பாக இருக்கிறார். (ஆதியாகமம் 1:26; 1 யோவான் 4:16) அவற்றின் கூந்தல் ஸ்திரீகளுடையதைப் போன்று நீண்டதாக இருக்கிறது, இது அவர்களுடைய ராஜாவாகிய பாதாளத்தின் தூதனுக்குக் கீழ்ப்பட்டிருப்பதை நன்கு படமாக காண்பிக்கிறது. மேலும் அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களைப்போல் இருக்கின்றன. ஒரு சிங்கம் அதனுடைய பற்களை மாம்சத்தைக் கிழிப்பதற்குப் பயன்படுத்துகிறது. 1919 முதற்கொண்டு, யோவான் வகுப்பார் மீண்டும் பலமான ஆவிக்குரிய உணவை, குறிப்பாக ‘யூதா கோத்திரத்தின் சிங்கமாகிய’ இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியங்களை உட்கொள்ள முடிகிறவர்களாக இருந்திருக்கிறார்கள். சிங்கம் தைரியத்தை அடையாளப்படுத்துகிறதுபோல, இந்தக் கடினமாகத் தாக்கும் செய்தியை மனதிற்கொள்ளவும், அதைப் பிரசுரங்களில் கொண்டு வரவும், மேலும் அதை உலகம் முழுவதும் விநியோகிப்பதற்கும் மிகுதியான தைரியம் தேவையாக இருந்திருக்கிறது. அந்த அடையாள அர்த்தமுள்ள வெட்டுக்கிளிகள் “யுத்தத்திற்கு ஓடுகிற அநேக குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலை” போன்று மிகுதியான இரைச்சலை உண்டாக்கியிருக்கின்றன. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாக, அமைதியாக இருக்க அவர்களுக்கு உத்தேசம் இல்லை.—1 கொரிந்தியர் 11:7-15; வெளிப்படுத்துதல் 5:5.

16. வெட்டுக்கிளிகள் ‘தேள்களைப் போல வால்களையும் கொடுக்குகளையும்’ உடையனவாயிருப்பதன் கருத்து என்ன?

16 இந்தப் பிரசங்கிப்பு, பேசப்படும் வார்த்தையை விட அதிகத்தை உட்படுத்துகிறது! “அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.” (வெளிப்படுத்துதல் 9:10) இது எதை அர்த்தப்படுத்தக்கூடும்? யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய வேலையைச் செய்கையில், தங்களது வார்த்தைகளின் மூலமாகவும் பிரசுரங்களின் மூலமாகவும், கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமான விஷயங்களை அறிவிக்கிறார்கள். அவர்களுடைய செய்தி தேள்களைப் போன்ற கொடுக்கை உடையது, ஏனென்றால் அவை நெருங்கிக் கொண்டிருக்கும் யெகோவாவின் பழிவாங்குதலின் நாளைக் குறித்து எச்சரிக்கின்றன. (ஏசாயா 61:2) ஆவிக்குரிய வெட்டுக்கிளிகளின் தற்போதைய தலைமுறையின் வாழ்நாட்காலத்தை முடிக்குமுன், எல்லா வணங்காக் கழுத்துடைய கடவுளைத் தூஷிக்கிறவர்களுக்கு கேடு உண்டாக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கும் கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை முடிக்கப்பட்டுவிடும்.

17. (அ) பைபிள் மாணாக்கர்களின் 1919 மாநாட்டிலே அவர்களுடைய சாட்சி கொடுத்தலின் கொட்டுதலைத் தீவிரப்படுத்தும் எது அறிவிக்கப்பட்டது? (ஆ) குருமார் எவ்வாறு வாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?

17 அந்த வெட்டுக்கிளி கூட்டத்தினர் தங்களுடைய 1919 மாநாட்டில் ஒரு புதிய பத்திரிகை, பொற்காலம், அறிவிக்கப்பட்டபோது அதிக மகிழ்ச்சியடைந்தார்கள். அது இரு வாரத்திற்கு ஒருமுறை வரும் பத்திரிகையாயிருந்து, அவர்களுடைய சாட்சி கொடுத்தலின் கொட்டுதலைத் தீவிரப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. e அதன் வெளியீடு எண் 27, செப்டம்பர் 29, 1920, 1918-19 காலத்தின்போது ஐக்கிய மாகாணங்களில் பைபிள் மாணாக்கர்களை துன்புறுத்துவதில் குருமாரின் வஞ்சகத்தை வெளிப்படுத்தினது. 1920 மற்றும் 1930-களில், பொற்காலம், அரசியலில் குருமார்களுடைய தந்திரமுள்ள விளையாட்டை வெளிப்படுத்தும் கட்டுரைகள் மற்றும் கேலிச் சித்திரங்கள் விசேஷமாக கத்தோலிக்க குரு மரபு பாஸிஸ மற்றும் நாசி வல்லாட்சியாளர்களோடு செய்த ஒப்பந்தங்கள்கொண்டு மேலுமாக கொட்டி அவர்களை வாதித்தது, இதற்குப் பிரதிபலிப்பாக, குருமார் “தீமையைக் கட்டளையினால் பிறப்பித்து” கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதமாக கும்பல் தாக்குதலை ஏற்பாடு செய்தார்கள்.—சங்கீதம் 94:20, கிங் ஜேம்ஸ் வர்ஷன்.

உலக ஆட்சியாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்

18. வெட்டுக்கிளிகள் செய்ய வேண்டிய என்ன வேலை இருந்தது, மேலும் ஐந்தாவது எக்காளச் சத்தத்திற்குப் பிரதிபலிப்பாக என்ன நடந்தது?

18 நவீன கால வெட்டுக்கிளிகளுக்குச் செய்வதற்கு வேலை இருந்தது. ராஜ்ய நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டியதாயிருந்தது. தவறுகள் வெளிப்படுத்தப்பட வேண்டியதாயிருந்தன. காணாமற்போன ஆடுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெட்டுக்கிளிகள் இந்த வேலைகளைச் செய்கையில், உலகமானது உட்கார்ந்து கவனிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டது. தூதர்களின் எக்காள சத்தங்களுக்குக் கீழ்ப்படிதலுடன், யோவான் வகுப்பார், கிறிஸ்தவமண்டலம் யெகோவாவின் பாதகமான நியாயத்தீர்ப்புகளுக்குத் தகுதியுள்ளதென, தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஐந்தாவது எக்காளத்திற்குப் பிரதிபலிக்கும் வகையில், இந்த நியாயத்தீர்ப்புகளின் ஒரு குறிப்பிட்ட அம்சம் மே 25-31, 1926 லண்டன், இங்கிலாந்தில் நடந்த பைபிள் மாணாக்கர்களின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதில் “உலகத்தின் ஆட்சியாளர்களுக்கு ஓர் சாட்சி” என்ற ஒரு தீர்மானமும் ராயல் ஆல்பெர்ட் மன்றத்தில் “உலக வல்லரசுகள் ஏன் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன—பரிகாரம்” என்ற தலைப்பில் ஒரு பொதுப் பேச்சும் முக்கியமாக இடம்பெற்றிருந்தது. இவ்விரண்டின் முழு வாசகமும் அடுத்த நாளில் ஒரு முக்கிய லண்டன் செய்தித்தாளில் அச்சடிக்கப்பட்டிருந்தது. பின்னர், வெட்டுக்கிளி கூட்டத்தினர், ஒரு துண்டுப்பிரதியாக, அந்தத் தீர்மானத்தின் ஐந்து கோடிப் பிரதிகளை உலகம் முழுவதும் விநியோகித்தார்கள், உண்மையிலேயே குருமாருக்கு ஒரு வாதனை! அநேக வருடங்களுக்குப் பின்னர், இங்கிலாந்தில் உள்ள ஜனங்கள் அந்தக் கொட்டும் வெளிப்படுத்தலைக் குறித்து இன்னும் பேசினார்கள்.

19. அடையாள அர்த்தமுள்ள வெட்டுக்கிளிகள் என்ன மேலுமான போர் செய்யும் தளவாடங்களைப் பெற்றன, அது லண்டன் கொள்கை அறிவிப்பைக் குறித்து சொல்லுவதற்கு எதை உடையதாயிருந்தது?

19 இந்த மாநாட்டில், அடையாள அர்த்தமுள்ள வெட்டுக்கிளிகள் மேலும் போர் செய்யும் தளவாடங்களை, குறிப்பாக விடுதலை (ஆங்கிலம்) என்ற தலைப்பையுடைய ஒரு புதிய புத்தகத்தைப் பெற்றன. அதில், ‘மனித பிள்ளை’ அரசாங்கம், கிறிஸ்துவின் பரலோக ராஜ்யம், 1914-ல் பிறந்துவிட்டது என்பதை நிரூபிக்கும் அடையாளத்தைப் பற்றிய வேதப்பூர்வமான கலந்தாய்வு அடங்கியிருந்தது. (மத்தேயு 24:3-14; வெளிப்படுத்துதல் 12:1-10) அதன் பிறகு, 1917-ல் லண்டனில் பிரசுரிக்கப்பட்டு மற்றும் “உலகத்தின் மிகப் பெரிய பிரசங்கிமார்கள்” மத்தியில் இருப்பதாக விவரிக்கப்பட்ட எட்டு குருமாரால் கையொப்பமிடப்பட்ட கொள்கை அறிவிப்பை அது மேற்கோள் காட்டியது. அவர்கள் முக்கியமான புராட்டஸ்டன்ட் மதப்பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்தார்கள்—பாப்டிஸ்டு, காங்கிரிகேஷனல், பிரஸ்பிட்டேரியன், எப்பிஸ்கோப்பலியன் மற்றும் மெதடிஸ்ட். இந்தக் கொள்கை அறிவிப்பு, “தற்போதைய நெருக்கடி புறஜாதிகளுடைய காலங்களின் முடிவை சுட்டிக்காட்டுகிறது” மேலும் “கர்த்தரின் வெளிப்படுதல் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கலாம்” என்பதாக விளம்பரப்படுத்தினது. ஆம், அந்தக் குருமார் இயேசுவினுடைய வந்திருத்தலின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார்கள்! ஆனால் அதைக் குறித்து ஏதாகிலும் செய்ய விரும்பினார்களா? விடுதலை என்ற புத்தகம் நமக்குச் சொல்லுகிறது: “காரியத்தின் மிகக் குறிப்பிடத்தக்க பாகம் என்னவென்றால், அந்தக் கொள்கை அறிவிப்பில் கையொப்பமிட்ட அதே நபர்கள் அதை மறுதலித்தார்கள், மேலும் நாம் உலகத்தின் முடிவிலும் கர்த்தரின் இரண்டாவது வந்திருத்தலின் நாளிலும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் அத்தாட்சியை தள்ளிவிட்டனர்.”

20. (அ) குருமார், வெட்டுக்கிளி கூட்டத்தினர் மற்றும் அவர்களுடைய ராஜாவைக் குறித்து என்ன தெரிவை செய்திருக்கிறார்கள்? (ஆ) யார் வெட்டுக்கிளி கூட்டத்தின் மேல் இருப்பதாக யோவான் சொல்லுகிறார், மேலும் அவருடைய பெயர் என்ன?

20 வந்துகொண்டிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்பதற்கு பதிலாக, கிறிஸ்தவமண்டல குருமார் சாத்தானுடைய உலகத்துடன் இருப்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெட்டுக்கிளி கூட்டம் மற்றும் அவற்றின் ராஜாவோடு எந்தப் பங்கும் கொண்டிருக்க விரும்பவில்லை, இவர்களைக் குறித்து யோவான் இப்பொழுது சொல்லுகிறார்: “அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் [அர்த்தம் “அழிவு”] என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் [அர்த்தம், “அழிக்கிறவர்”] என்றும் அவனுக்குப் பெயர்.” (வெளிப்படுத்துதல் 9:11) “பாதாளத்தின் தூதன்” மற்றும் “அழிக்கிறவராக” இயேசு, கிறிஸ்தவமண்டலத்தின் மீது உண்மையிலேயே ஒரு வாதிக்கும் துயரத்தை அவிழ்த்துவிட்டுவிட்டார். ஆனால் இன்னும் அதிகம் வர இருக்கிறது!

[அடிக்குறிப்புகள்]

a யோவேல் 2:4, 5, 7 வசனங்களை (பூச்சிகள் அங்கே, குதிரைகள், ஜனங்கள் மற்றும் மனிதர்கள் என்பதாகவும் இரதத்தைப் போல் சப்தம் உண்டாக்குவதாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது) வெளிப்படுத்துதல் 9:7-9-உடன் ஒப்பிடவும்; மேலும், யோவேல் 2:6, 10 வசனங்களை (பூச்சிகளின் வாதை நோவு உண்டாக்கும் பாதிப்பை விவரிக்கிறது) வெளிப்படுத்துதல் 9:2, 5-உடன் ஒப்பிடவும்.

b டிசம்பர் 1, 1961 காவற்கோபுரத்தில் (ஆங்கிலம்) “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கில் தேசங்களுக்கு எதிராக ஐக்கியப்பட்டிருத்தல்” என்ற தலைப்பையுடைய கட்டுரையைப் பார்க்கவும்.

c பாதாளம் ஏதோ ஒருவகையான நரக அக்கினிபோல், பாதாளத்தில் அக்கினி இருந்தது என்பதை நிரூபிப்பதற்கு இந்த வசனத்தை பயன்படுத்த முடியாது என்பதைக் கவனிக்கவும். பெருஞ்சூளையின் புகைக்கு “ஒப்பாக” அல்லது பெருஞ்சூளையின் புகையைப் போல அடர்ந்த புகையை அவர் பார்த்ததாக யோவான் சொல்லுகிறார். (வெளிப்படுத்துதல் 9:2) பாதாளத்தின் அக்கினியைப் பார்ப்பதாக அவர் அறிவிக்கவில்லை.

d இங்கே பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல் பாஸானிஸோ (ba·saniʹzo) என்ற வேர்சொல்லிலிருந்து வருகிறது, இது சில சமயங்களில் சொல்லர்த்தமான வாதனைக்குப் பயன்படுத்தப்படுகிறது; எனினும், இது மனதின் பிரகாரமான வாதனைக்கும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, 2 பேதுரு 2:8-ல் சோதோமில் அவர் கண்ட கொடுமையினால் லோத்து ‘அவருடைய நீதியுள்ள ஆத்துமாவை வாதித்துக் கொண்டிருந்ததாக’ நாம் வாசிக்கிறோம். மிகவும் வித்தியாசமான காரணத்திற்காக இருந்தபோதிலும், அப்போஸ்தல சகாப்தத்தில் மதத் தலைவர்கள் மனதின் பிரகாரமான வாதனையை அனுபவித்தார்கள்.

e இந்தப் பத்திரிகை, 1937-ல் ஆறுதல் என்ற பெயராலும் 1946-ல் விழித்தெழு! என்ற பெயராலும் அழைக்கப்பட்டது.

[கேள்விகள்]

[பக்கம் 143-ன் படம்]

ஐந்தாம் எக்காளம் ஊதப்படுவதானது மூன்று துயரங்களில் முதல் துயரத்தை அறிமுகப்படுத்துகிறது

[பக்கம் 146-ன் படம்]

உம்முடைய அம்புகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் கூர்மையானவையாக இருக்கின்றன. (சங்கீதம் 45:5) மேலே கொடுக்கப்பட்டுள்ள கேலிச்சித்திரமானது, இந்த முனைப்பான முகவுரையை கொண்டதாய் 1930-களில் வெளியிடப்பட்ட அநேக பிரசுரங்களின் கேலிச்சித்திரத்தோடு ஒத்திருக்கிறது, இது “தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை” கொட்டியது

[பக்கம் 147-ன் படம்]

ராயல் ஆல்பர்ட் மன்றம், இங்கேயே விடுதலை என்ற புத்தகமானது வெளியிடப்பட்டது மற்றும் “உலக ஆட்சியாளர்களுக்கு ஓர் சாட்சி” என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது