Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அந்திக்கிறிஸ்து

அந்திக்கிறிஸ்து

அந்திக்கிறிஸ்து

சொற்பொருள் விளக்கம்: அந்திக்கிறிஸ்து என்பதற்கு கிறிஸ்துவுக்கு எதிராக அல்லது பதிலாக என்பது பொருள். இயேசு கிறிஸ்துவைப்பற்றி பைபிள் சொல்வதை மறுதலிக்கும் எல்லாருக்கும், அவருடைய ராஜ்யத்தை எதிர்க்கும் எல்லாருக்கும், அவரைப் பின்பற்றுவோரைத் தவறாக நடத்தும் எல்லாருக்கும் இந்தப் பெயர் பொருந்துகிறது. அது கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்வதாகப் பொய் உரிமைப்பாராட்டுகிற அல்லது தங்களுக்கு மேசியாவின் பாகத்தைத் தவறாகப் பொருத்திக்கொள்ளும் தனிப்பட்ட நபர்களையும் அமைப்புகளையும் மற்றும் தேசங்களையும் உள்ளடக்குகிறது.

பைபிள் ஒரேயொரு அந்திக்கிறிஸ்துவையே குறிப்பிடுகிறதா?

1 யோவான் 2:18: “பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது. அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக் காலமென்று அறிகிறோம்.”

2 யோவான் 7: “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தேறியிருக்கிறார்கள், இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.” (“அநேக அந்திக்கிறிஸ்துகள்” என்று 1 யோவான் 2:18-ல் குறிப்பிடப்பட்டது இங்கு மொத்தமாக “அந்திக்கிறிஸ்து” என்று குறிப்பிடப்படுவதைக் கவனியுங்கள்.)

அந்திக்கிறிஸ்து வருவது ஏதோ எதிர்காலத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டதா?

1 யோவான் 4:3: “மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.” (அது பொ.ச. முதல் நூற்றாண்டு முடியும் சமயத்தில் எழுதப்பட்டது.)

1 யோவான் 2:18: “இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக் காலமென்று அறிகிறோம்.” (“கடைசிக்காலம்” என்று யோன் சொன்னது தெளிவாகவே அப்போஸ்தலர் காலத்தின் முடிவைக் குறித்தது. மற்ற அப்போஸ்தலர்கள் மரித்துவிட்டார்கள் மற்றும் யோன்தானே மிகவும் வயது சென்றவனாக இருந்தான்.)

அந்திக்கிறிஸ்து என அடையாளங்காட்டப்படும் சிலர்—

இயேசுவே உண்மையில் மேசியா என்பதை மறுக்கும் ஆட்கள்

1 யோவான் 2:22: “இயேசுவைக் கிறிஸ்து [அல்லது மேசியா, அபிஷேகம்பண்ணப்பட்டவர்] அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? . . . அந்திக்கிறிஸ்து.”

இயேசு கடவுளுடைய தனித்தன்மைவாய்ந்த குமாரன் அல்ல என்று மறுதலிக்கும் எல்லாரும்

1 யோவான் 2:22: “பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.”

யோவான் 10:36; லூக்கா 9:35 ஆகியவற்றை ஒப்பிவும்.

விசுவாசத்துரோகிகள்

1 யோவான் 2:18, 19: “அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; . . . அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை.”

கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களை எதிர்க்கிறவர்கள்

யோவான் 15:20, 21: “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; . . . என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.”

கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கிற அல்லது தாங்களே மேசியா எனப் பொய்யாக உரிமைபாராட்டும் தனிப்பட்ட நபர்களும் மற்றும் தேசங்களும்

சங். 2:2: “கர்த்தருக்கு [யெகோவாவுக்கு] விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு [கிறிஸ்து அல்லது மேசியாவுக்கு] விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி”னார்கள்.

வெளிப்படுத்துதல் 17:3, 12-14; 19:11-21 ஆகியவற்றையும் பாருங்கள்.

மத். 24:24: “கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.”