Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அந்நிய பாஷைகளில் பேசுதல்

அந்நிய பாஷைகளில் பேசுதல்

அந்நிய பாஷைகளில் பேசுதல்

சொற்பொருள் விளக்கம்:  பூர்வ கிறிஸ்தவ சபையில் இருந்த சீஷர்கள் சிலருக்குப் பரிசுத்த ஆவியின்மூலம் கொடுக்கப்பட்ட ஒரு விசேஷித்தத் திறமை, இது தங்களுடைய மொழியல்லாத வேறொரு மொழியில் பிரசங்கிக்க அல்லது வேறுவகையில் சொல்ல கடவுளை மகிமைப்படுத்த இயலும்படி அவர்களைச் செய்வித்தது.

கடவுளுடைய ஆவியைப் பெறுவோர் யாவரும் ‘வேறு பாஷைகளில் பேசுவார்கள்’ என்று பைபிளில் சொல்லியிருக்கிறதா?

1 கொரி. 12:13, 30: “நாம் . . . எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்[டோம்] . . . எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா?” (மேலும் 1 கொரிந்தியர் 14:26)

1 கொரி. 14:5: “நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.”

ஒருவன் ஒருபோதும் கற்றிராத ஒரு பாஷையில் பரவசமான பேச்சைக் கொடுப்பது அவனுக்குப் பரிசுத்த ஆவி இருக்கிறதென நிரூபிக்கிறதா?

“அந்நிய பாஷைகளில் பேசும்” திறமை உண்மையான கடவுளிடமிருந்தல்லாமல் வேறு தோற்றுமூலத்திலிருந்து வரக்கூடுமா?

1 யோவான் 4:1: “பிரியமானவர்களே, . . . நீங்கள் எல்லா ஆவிகளையும் [KJ, RS] நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.” (மத்தேயு 7:21-23; 2 கொரிந்தியர் 11:14, 15-ஐயும் பாருங்கள்.)

இன்று ‘அந்நிய பாஷைகளில் பேசுவோரில்’ சிலர் பெந்தெகொஸ்தினரும் பாப்டிஸ்டினரும், மேலும் ரோமன் கத்தோலிக்கர், எப்பிஸ்கோப்பியர், மெத்தடிஸ்ட்டுகள், லூத்தரன்கள், பிரஸ்பிட்டேரியர்கள் ஆகியோருமாவர். பரிசுத்த ஆவி ‘தம்முடைய சீஷர்களைச் சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துமென’ இயேசு சொன்னார். (யோவான் 16:13) இந்த மதங்கள் ஒவ்வொன்றையும் சேர்ந்த உறுப்பினர் “அந்நிய பாஷைகளில் பேசும்” மற்றவர்களும் “சகல சத்தியத்துக்குள்ளும்” வழிநடத்தப்பட்டிருக்கிறார்களென்று நம்புகிறார்களா? இவர்கள் ஒற்றுமைப்பட்டில்லையாதலால், இது எவ்வாறு முடியும்? எந்த ஆவி அவர்களை “அந்நிய பாஷைகளில் பேசக்”கூடும்படி செய்விக்கிறது?

ஃபவுண்டன் டிரஸ்ட்டும் இங்கிலாந்து சர்ச் சுவிசேஷ ஆலோசனைக்குழுவும் ஒன்றுசேர்ந்து செய்த அறிவிப்பு பின்வருமாறு ஒப்புக்கொண்டது: “இதைப்போன்ற அதிசய நிகழ்ச்சிகள் மாயமந்திர/பேய்த்தன செல்வாக்கின்கீழும் நிகழக்கூடுமெனவும் நாங்கள் தெரிந்திருக்கிறோம்.” (சுவிசேஷமும் ஆவியும், ஏப்ரல் 1977, ஃபவுண்டன் டிரஸ்ட்டும் இங்கிலாந்து சர்ச் சுவிசேஷ ஆலோசனைக்குழுவும் பிரசுரித்தது, பக். 12) ஹேய்ட்டியில் ‘அந்நிய பாஷைகளில் பேசுதல்’ பெந்தெகொஸ்திய மற்றும் நீக்ரோவரின் பில்லி சூனிய மதங்கள் ஆகிய இரண்டுக்குமே உரிய தனித் தன்மையாக இருக்கிறதென, சமகால அமெரிக்காவில் மத இயக்கங்கள் என்ற புத்தகம் (L. P. ஜெர்லாக்கை மேற்கோளாகக் குறிப்பிட்டு, ஐர்விங் I. ஜரஸ்ட்ஸ்கியும் மார்க் P. லியோனும் பதிப்பித்தது) அறிவிக்கிறது.—(பிரின்ஸ்டன், N.J.; 1974), பக். 693; 2 தெசலோனிக்கேயர் 2:9, 10-ஐயும் பாருங்கள்.

இன்று ‘அந்நிய பாஷைகளில் பேசுவது’ முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்ததைப் போன்றதா?

முதல் நூற்றாண்டில், “அந்நிய பாஷைகளில் பேசும்” திறமை உட்பட ஆவியின் அற்புத வரங்கள், கடவுளுடைய தயவு அந்த யூத வணக்க ஒழுங்குமுறயிலிருந்து புதிதாய் ஸ்பிக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு மாற்றப்பட்டுவிட்டதென்ற உண்மையை உறுதிசெய்தன. (எபி. 2:2-4) இந்த நோக்கம் முதல் நூற்றாண்டில் நிறைவேற்றித் தீர்க்கப்பட்டதனால், அதே காரியத்தை நம்முடைய நாளில் மறுபடியும் மறுபடியுமாக நிரூபிப்பது அவசியமா?

முதல் நூற்றாண்டில் “அந்நிய பாஷைகளில் பேசும்” திறமை, இயேசு தம்மைப் பின்பற்றுவோர் செய்யும்படி கட்டளையிட்டிருந்த சர்வதேச சாட்சிகொடுக்கும் வேலைக்கு ஊக்கத்தூண்டுவிசையை அளித்தது. (அப். 1:8; 2:1-11; மத். 28:19) இன்று “அந்நிய பாஷைகளில் பேசுகிறவர்கள் அந்தத் திறமையை இவ்வாறு பயன்படுத்துகிறார்களா?

முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவர்கள் ‘அந்நிய பாஷைகளில் பேசினபோது,’ அவர்கள் சொன்னவை அந்தப் பாஷைகளை அறிந்தவர்களுக்கு விளங்கின. (அப். 2:4, 8) இன்று ‘அந்நிய பாஷைகளில் பேசுவது’ பொதுவாய் மெய்மறந்த நிலையில் திடீரென வெடித்து வெளிப்படும் விளங்கிக்கொள்ள முடியாத ஒலிகளாய் இருக்கிறதல்லவா?

முதல் நூற்றாண்டில் ‘அந்நிய பாஷைகளில் பேசுவதை,’ கொடுக்கப்பட்ட எந்தக் கூட்டங்களிலாவது இரண்டு அல்லது மூன்று ஆட்களுக்கே சபைகள் மட்டுப்படுத்தவேண்டுமென பைபிள் காட்டுகிறது. அவர்கள் அவ்வாறு “ஒவ்வொருவராய்ப் பேச” வேண்டும், அதற்கு அர்த்தஞ்சொல்பவர் எவரும் இல்லாவிடில் அவர்கள் பேசாமல் இருக்கவேண்டும். (1 கொரி. 14:27, 28) இன்று இவ்வாறுதான் செய்யப்படுகிறதா?

பக்கங்கள் 381, 382-ல், “ஆவி” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

வேத எழுத்துக்களில் காணப்படுவதற்கும் அப்பால் சென்றெட்டும் பழக்கவழக்கங்களுக்குள் காரிஸ்மாட்டிக் கூட்டத்தாரைப் பரிசுத்த ஆவி ஒருவேளை வழிநடத்தக்கூடுமா?

2 தீமோ. 3:16, 17: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவை.” (இயேசுவின் மற்றும் அவருடைய அப்போஸ்தலரின் மூலம் கடவுளுடைய ஆவி செய்துள்ள வெளிப்படுத்தல்களோடு முரண்படும் ஓர் ஏவப்பட்ட செய்தியைக் கொண்டிருப்பதாக எவராவது உரிமைபாராட்டினால், அது ஒரே தோற்றுமூலத்திலிருந்து வந்திருக்க முடியுமா?)

கலா. 1:8: “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு [மாறுபட்ட, RS] சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.”

‘அந்நிய பாஷைகளில் பேசுவதை’ ஆதரவாக நோக்கும் அமைப்பின் உறுப்பினர்களின் வாழ்க்கைமுறை அவர்கள் கடவுளுடைய ஆவியைப் பெற்றிருக்கிறார்களென அத்தாட்சி அளிக்கிறதா? 

ஒரு தொகுதியாக அவர்கள் சாந்தம், தன்னடக்கம் போன்ற ஆவியின் இத்தகைய கனிகளை முனைப்பான முறையில் வெளிப்படுத்துகிறார்களா? வணக்கத்துக்காக அவர்களுடைய கூட்டங்களுக்கு வரும் ஆட்கள் இந்தக் குணங்களை உடனடியாகக் காண்கிறார்களா?—கலா. 5:22, 23.

அவர்கள் உண்மையில் “இவ்வுலகத்தின் பாகமல்லாதவர்களா”? இதனால் கடவுளுடைய ராஜ்யத்துக்குத் தங்கள் முழுபக்தியையும் கொடுக்கிறார்களா அல்லது இந்த உலகத்தின் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? போர்க் காலங்களில் இரத்தப்பழிக்கு முற்றிலும் விலகியவர்களாக இருந்திருக்கிறார்களா? உலகத்தின் ஒழுக்கக்கேடான நடத்தையைத் தவிர்ப்பதனால் ஒரு தொகுதியாக அவர்கள் நற்பெயர் பெற்றிருக்கிறார்களா?—யோவான் 17:16; ஏசா. 2:4; 1 தெச. 4:3-8.

இன்று உண்மையான கிறிஸ்தவர்கள் ‘அந்நிய பாஷைகளில் பேசும்’ திறமையால் அடையாளங் கண்டுகொள்ளப்படுகிறார்களா?

யோவான் 13:35: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”

1 கொரி. 13:1, 8: “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்.”

பரிசுத்த ஆவி தம்மைப் பின்பற்றுவோரின்மேல் வரும் எனவும் அவர்கள் பூமியின் மிகத் தொலைதூரப் பாகம் வரையில் தமக்குச் சாட்சிகளாயிருப்பார்களெனவும் இயேசு சொன்னார். (அப். 1:8, NW) “சகல ஜாதிகளையும் சீஷராக்”கும்படி அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 28:19) மேலும் ‘ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருப்புள்ள பூமி முழுவதிலும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்,’ என்றும் அவர் முன்னறிவித்தார். (மத். 24:14, NW) இன்று யார் ஒரு தொகுதியாகவும் தனியாட்களாகவும் இந்த வேலையைச் செய்கின்றனர்? இயேசு சொன்னதற்குப் பொருந்த, இது ஒரு தொகுதி பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறதென்பதற்கு ஓர் அத்தாட்சியாக நாம் நோக்கவேண்டுமல்லவா?

“நிறைவானது” வரும் வரையில் ‘அந்நிய பாஷையில் பேசுவது’ தொரவேண்டுமா?

1 கொரிந்தியர் 13:8-ல் தீர்க்கதரிசனம், அந்நிய பாஷைகள், அறிவு—போன்ற பல வரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 9-ம் வசனத்தில் இந்த வரங்களில் இரண்டு—அறிவும் தீர்க்கதரிசனமும்—மறுபடியும் குறிப்பிடப்பட்டு பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.” பின்பு 10-ம் வசனத்தில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.” (UV) “நிறைவானது” என்ற இந்தச் சொல், முழு வளர்ச்சியடைந்த, முழுமையான, அல்லது பரிபூரணமானதாயிருப்பதன் எண்ணத்தைத் தரும் கிரேக்கச் சொல் டேலியன் என்பதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Ro, By, மற்றும் NW இந்த இடத்தில் இதை “நிறைவானது” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. இங்கே “குறைவுள்ளது,” அல்லது “குறைவானது” என்று சொல்லியிருப்பது அந்நிய பாஷைகளின் வரத்தையல்ல என்பதைக் கவனியுங்கள். “தீர்க்கதரிசனத்தையும்,” “அறிவையும்” குறித்தே அவ்வாறு சொல்லியிருக்கிறது. வேறு முறையில் சொல்லவேண்டுமானால், அந்த அற்புத வரங்களை உடையோராயிருந்தும், பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளுடைய நோக்கத்தைப்பற்றிக் குறைவான அல்லது நிறைவற்ற தெளிந்துணர்வையே உடையோராயிருந்தனர். ஆனால் அந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றமடைகையில், கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றப்படும்போது, அப்பொழுது “நிறைவானது,” அல்லது முழுமையானது வரும். ஆகையால், இது ‘அந்நிய பாஷைகளின் வரம்’ எவ்வளவு காலம் தொருமென விவாதிக்கிறதில்லையென்பது தெளிவாயிருக்கிறது.

எனினும், ‘அந்நிய பாஷைகளின் வரம்’ எவ்வளவு காலம் கிறிஸ்தவ அனுபவத்தின் பாகமாயிருக்குமென பைபிள் நிச்சயமாகவே குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதன் பதிவின்படி, இந்த வரமும் ஆவியின் மற்ற வரங்களும் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கைகளை வைத்ததன்மூலம் அல்லது அவர்களுடைய முன்னிலையிலேயே எப்பொழுதும் மற்ற ஆட்களுக்கு அளிக்கப்பட்டன. (அப். 2:4, 14, 17; 10:44-46; 19:6; அப்போஸ்தலர் 8:14-18-ஐயும் பாருங்கள்.) இவ்வாறு, அவர்களுடைய மரணத்துக்குப் பின்னும் அந்த முறையில் வரங்களைப் பெற்ற ஆட்கள் மரித்துவிட்ட பின்னும், கடவுளுடைய ஆவியின் கிரியையின் பலனாக உண்டான அந்த அற்புத வரங்கள் முடிவடைந்திருக்கவேண்டும். இத்தகைய கருத்து, எபிரெயர் 2:2-4-ல் கூறியிருக்கிற அந்த வரங்களின் நோக்கத்துடன் ஒத்திருக்கிறது.

“நவமான பாஷைகளைப் பேசும்” திறமை விசுவாசிகளைக் கண்டுகொள்ள செய்யும் அடையாளமாயிருக்குமென மாற்கு 16:17, 18 (UV) காட்டுகிறதா?

இந்த வசனங்கள் ‘நவமான பாஷைகளைப் பேசுவதை’ மட்டுமல்லாமல் சர்ப்பங்களைக் கைகளில் எடுப்பதையும் சாவுக்கேதுவான நஞ்சைக் குடிப்பதையும் பற்றியுங்கூட குறிப்பிடுகின்றனவென்பதைக் கவனிக்கவேண்டும். “அந்நிய பாஷைகளில் பேசும்” எல்லாரும் இந்தப் பழக்கங்களையும் ஊக்குவிக்கிறார்களா?

இந்த வசனங்களை பைபிள் ஆராய்ச்சியாளர்கள் எல்லாரும் ஏற்காததன் காரணங்களின்பேரில் குறிப்புகளுக்கு, பக்கங்கள் 158, 159-ல், “சுகப்படுத்துதல்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘அந்நிய பாஷைகளைப் பேசுவதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘யெகோவாவின் சாட்சிகள் பல பாஷைகள் பேசுகிறார்கள், ஆனால் “தெரியாத பாஷைகளில்” மெய்மறந்த நிலையில் பேசுவதில் நாங்கள் ஈடுடுவதில்லை. ஆனால், இன்று செய்யப்படும் “அந்நிய பாஷைகளில் பேசுவது” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்ததைப்போன்றதென நீங்கள் நம்புகிறீர்களாவென நான் கேட்கலாமா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘வெகுவாய்க் கவனத்தைக் கவருவதாக நான் கண்ட ஒத்துப்பார்க்கும் சில குறிப்புகள் இங்கே இருக்கின்றன. (பக்கங்கள் 401, 402-லிருந்து குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் “அந்நிய பாஷைகளில் பேசினார்கள்” என்றும் அது அச்சமயத்தில் திட்டமான தேவைகளை நிரப்பினவென்றும் நாங்கள் நிச்சயமாகவே நம்புகிறோம். அந்தத் தேவைகள் எவையென உங்களுக்குத் தெரியுமா?’

பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘கடவுள் தம்முடைய தயவை அந்த யூத ஒழுங்குமுறையிலிருந்து விலக்கி புதிதாய் நிறுவனஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு மாற்றிவிட்டாரென்பதற்கு ஓர் அடையாளமாகச் சேவித்தது. (எபி. 2:2-4)’ (2) ‘அது நற்செய்தியைக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் பரவச் செய்வதற்கு நடைமுறையான வழிவகையாயிருந்தது. (அப். 1:8)’