Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அரசாங்கம்

அரசாங்கம்

அரசாங்கம்

சொற்பொருள் விளக்கம்:  சட்டங்களை இயற்றுவதற்கும் செயல்படுத்துவதற்குமுரிய ஏற்பாடு. அரசாங்கங்கள் அவற்றின் அதிகார தோற்றுமூலம் மற்றும் செயல்பரப்பெல்லையின்படி அடிக்கடி வகைப்படுத்தப்படுகின்றன. யெகோவா தேவன் சர்வலோக ஈடற்றப் பேரரசர், அவர் தம்முடைய சித்தத்தின்படியும் நோக்கத்தின்படியும் மற்றவர்களுக்கு அதிகாரமளிக்கிறார். எனினும், யெகோவாவின் அரசாட்சிக்கு எதிராகக் கலகஞ்செய்த முதல் கலகக்காரனான பிசாசாகிய சாத்தான், “இந்த உலகத்தின் அதிபதி”யாக இருக்கிறான்—மட்டுப்பட்ட ஒரு காலப்பகுதிக்குக் கடவுளுடைய அனுமதியால் அவ்வாறு இருக்கிறான். இந்த அரசாங்க ஆட்சிக்குரிய பூகோள ஒழுங்குமுறையை மூர்க்க மிருகமாக பைபிள் சித்தரித்துக் காட்டி, “வலுசர்ப்பமானது [பிசாசாகிய சாத்தன்] தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் [அந்த மிருகத்துக்குக்] கொடுத்தது,” என்று சொல்லுகிறது.—யோவான் 14:30; வெளி. 13:2; 1 யோவான் 5:19.

நிலையான மகிழ்ச்சியை உண்மையில் கொண்டுவரும் ஓர் அரசாங்கத்தை நிலைநாட்டுவது மனிதருக்குச் சாத்தியமா?

மனித சரித்திரத்தின் பதிவு என்ன காட்டுகிறது?

பிர. 8:9: “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகி”றான். (சில அரசாங்கங்களும் அதிபதிகளும் உயர்ந்த குறிக்கோள்களுடன் தொடங்கினபோதிலும் இவ்வாறிருக்கிறது.)

“இருந்துவந்துள்ள ஒவ்வொரு நாகரிகமும் முடிவில் வீழ்ச்சியடைந்தது. சரித்திரம் தோல்வியடைந்த முயற்சிகளின், அல்லது மெய்ம்மையில் அடையப்பெறாத மிக விரும்பிய உயர் குறிக்கோள்களின் சரிதையாயிருக்கிறது, . . . ஆகையால், ஒரு சரித்திராசிரியனாக, ஒருவர் தவிர்க்கமுடியாத துன்பியல் நாடக உணர்வுடன் வாழவேண்டியிருக்கிறது.”—ஹென்ரி கிஸ்ஸிங்கர், அரசியல் விஞ்ஞானியும் அரசாங்கப் பேராசிரியரும், தி நியு யார்க் டைம்ஸ், அக்டோபர் 13, 1974, பக். 30B-ல் எடுத்துக் குறிப்பிட்டபடி.

அரசாங்கத் துறையில் மனித முயற்சிகளை எது தடைசெய்கிறது?

எரே. 10:23: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லையென்றும் தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லையென்றும் அறிவேன்.” (தி.மொ.) (தம்முடைய மனித சிருஷ்டி கடவுளைவிட்டு விலகித் தனித்தியங்கி தன் சொந்தப் பாதையைத் தானே திட்டமிட்டுக்கொள்ளும்படி கடவுள் அதிகாரம் கொடுக்கவில்லை.)

ஆதி. 8:21: “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.” (ஆளுகிறவர்கள் மட்டுமல்ல ஆளப்படுகிறவர்களுமான எல்லாரும் தன்னல மனச்சாய்வுகளுடன் பாவத்தில் பிறந்திருக்கின்றனர்.)

2 தீமோ. 3:1-4: “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும் . . . எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . இணங்காதவர்களாயும், . . . இறுமாப்புள்ளவர்களாயும், . . . இருப்பார்கள்.” (இன்று மனிதவர்க்கத்தை எதிர்ப்படும் பிரச்னைகளை ஒரு தனித் தேசம் நிலையாய்த் தீர்க்க முடியாது; அவற்றிற்கு முழு சர்வதேச ஒத்துழைப்பு தேவை. ஆனால் தன்னல அக்கறைகள் அதைத் தடுக்கின்றன மேலும் தேசங்களுக்குள்தானே இருக்கும் பல்வேறு அமைப்புகளுக்குள் எவ்வகை உண்மையான ஒத்துழைப்பையும் வினைமையான முறையில் தடுக்கின்றன.)

மேலும் மனித இயல்புமீறிய ஆற்றல்வாய்ந்தவர்கள் மனிதரின் விவகாரங்களைக் கையாண்டு நடத்துகின்றனர். “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19) “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, . . . அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போட்டம் உண்டு.” (எபே. 6:12) “பேய் ஆவிகள்; [பேய்களால் ஏவப்பட்ட வெளிப்படுத்தல்கள், (NW)] அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்ல கடவுளுடைய மகா நாளின் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்க அவர்களிடம் புறப்பட்டுப் போகின்றன.”—வெளி. 16:14.

அரசாங்க ஊழல்களிலிருந்தும் ஒடுக்குதலிலிருந்தும் ஜனங்கள் எவ்வாறு நிலையான விடுதலைபெற முடியும்?

மற்ற மனிதரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவது இந்தப் பிரச்னையைத் தீர்க்குமா?

தடங்கலற்ற தேர்தல் இருக்குமிடங்களில் அதிகாரத்திலுள்ள ஆட்கள் பொதுவாய் ஒருசில ஆண்டுகளுக்குள் தேர்தலால் அதிகாரத்திலிருந்து நீக்கப்படுவது உண்மையல்லவா? ஏன்? பெரும்பான்மையர் அவர்களுடைய செயல்நிறைவேற்றத்தில் திருப்தியடைகிறதில்லை.

சங். 146:3, 4: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோனைகள் அழிந்துபோம்.” (ஆகையால் மேம்படுத்துவதற்கு ஆளுபவர்கள் தொங்கிவைக்கும் எந்தத் திட்டங்களும் விரைவில் மற்றவர்களின் கைகளுக்குள் கடத்தப்பட்டு பெரும்பாலும் கைவிடப்படுகின்றன.)

ஆளுபவன் யாராயினும் சரி, அவன் சாத்தானின் வல்லமைக்குள் கிடக்கும் இந்த உலகத்தின் பாகமாகவே இன்னும் இருப்பான்.—1 யோவான் 5:19.

வன்முறையான புரட்சி இதற்கு விடையாகுமா?

ஊழல்செய்யும் ஆளுநர்கள் அகற்றப்பட்டாலும் அநியாயமான சட்டங்கள் நீக்கப்பட்டாலும், புதிய அரசாங்கமும் அபூரணமான மனிதரால் உண்டாக்கப்பட்டிருக்கும், மேலும் அது, சாத்தானின்கீழ் இருக்கிறதென பைபிள் தெளிவாய்க் கூறும் அந்த அரசியல் ஒழுங்குமுறையின் பாகமாயிருக்கும்.

மத். 26:52: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு, பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போர்கள்.” (கடவுளுடைய குமாரனுக்குத்தானே எதிராக அரசாங்க அதிகாரத்தை அநியாயமாய்ப் பயன்படுத்தின ஒரு சமயத்தில் இயேசு தம்முடைய அப்போஸ்தலரில் ஒருவனிடம் இதைச் சொன்னார். இது செய்வதற்குச் சரியான காரியமாயிருந்தால், இதைவிட அதிக மதிப்புவாய்ந்த என்ன காரணத்துக்கு ஒருவன் போரிட்டிருக்கமுடியும்?)

நீதி. 24:21, 22: “மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்துநட, கலகக்காரரோடு உறவாடாதே. சடுதியில் அவர்களுக்குக் கேடுவரும், அவரிருவராலும் வரும் சங்காரத்தை அறிபவனார்?”தி.மொ.

அப்படியானால், ஊழல் மற்றும் ஒடுக்குதல் பிரச்னைகளுக்கு விடை என்ன?

தானி. 2:44: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [அரசாங்கத்தை] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”

சங். 72:12-14: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் [யெகோவாவின் நியமிக்கப்பட்ட அரசராகிய, இயேசு கிறிஸ்து] விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” (தாம் பூமியில் இருந்தபோது இத்தகைய ஆட்களுக்கு அவர் காட்டின அக்கறை—அவர் அவர்களைச் சுகப்படுத்தினது, பெருங்கூட்டங்களுக்கு உணவளித்தது, அவர்களுக்காகத் தம் உயிரையும் கொடுத்தது—தீர்க்கதரிசனத்தில் முன்னறிவித்துள்ள இந்த வகையான அரசராக உண்மையில் இருப்பாரெனக் காட்டுகிறது.)

மேலும் பக்கங்கள் 227-232-ல், “ராஜ்யம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

எதிர்கால அரசாங்கத்தைப்பற்றி பைபிள் சொல்வதை நாம் ஏன் அக்கறையோடு கவனிக்க வேண்டும்?

மனிதவர்க்கத்துக்கு அவசரமாய்த் தேவைப்படுவதை மனித ஆளுநர்கள் அளிக்கிறதில்லை

எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களுக்குத் தேவைப்படுபவையும், மனித அரசாங்கங்கள் அளிக்காதவையும் ஆனால் கடவுள் வாக்குக் கொடுத்திருப்பவையுமான காரியங்களைக் கவனியுங்கள்: (1) போர் பயமுறுத்தலுக்கு விடுலையான உலகத்தில் வாழ்க்கை.—ஏசா. 2:4; சங். 46:9, 10. (2) எல்லாருக்கும் தாராளமான உணவு.—சங். 72:16. (3) எல்லாருக்கும் செளகரியமான வீட்டுவசதி.—ஏசா. 65:21. (4) தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் வேண்டியவற்றை அளிக்கக்கூடும்படி, தேவைப்படும் எல்லாருக்கும் திருப்தியளிக்கும் வேலை.—ஏசா. 65:22. (5) உடல்நலக்கேட்டாலும் நோயாலும் கெடுக்கப்படாத வாழ்க்கை.—வெளி. 21:3, 4. (6) நீதி; மத, ஜாதிபேத, பொருளாதார, மற்றும் தேசீய தப்பெண்ணங்களிலிருந்து விடுதலை.—ஏசா. 9:7; 11:3-5. (7) குற்றச்செயல் நடப்பிப்போரிலிருந்து ஆளுக்கும் உடைமைக்கும் அபாயம் இல்லாமல், பாதுகாப்பை அனுபவித்து மகிழ்தல்.—மீகா 4:4; நீதி. 2:22. (8) அன்பு, தயவு, உடன் மனிதனுக்கான அக்கறை, மற்றும் உண்மை உட்பட நற்பண்புகள் மிக உயர்வாய்க் கருதி மதிக்கப்படும் ஓர் உலகம்.—சங். 85:10, 11; கலா. 5:22, 23.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அரசியல் அதிபதிகள் தங்கள் ஜனங்களுக்கு மேம்பட்ட நிலைமைகளை வாக்குக்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவுகள் என்ன? பல தேசங்களிலுள்ள மக்கள் அதிகப் பொருளுடைமைகளைக் கொண்டிருக்கிறபோதிலும் அவர்கள் அதிக மகிழ்ச்சியுடையோராய் இல்லை, அவர்கள் எதிர்ப்படும் பிரச்னைகள் முன்னொருபோதும் இருந்ததைப் பார்க்கிலும் அதிகச் சிக்கலானவையாயிருக்கின்றன.

பைபிள் தீர்க்கதரிசனங்கள் முற்றிலும் நம்பத்தக்கவையாக நிரூபிக்கின்றன

பாபிலோனின் உலக ஆதிக்க நிலையையும், முடிவில் அதன் அதிகாரம் கவிழ்க்கப்படும் முறையையும், மேலும் ஒருமுறை பாழாக்கப்பட்ட பின்பு, அதன் தலைநகர் மறுபடியும் ஒருபோதும் குடியிருக்கப்படாதெனவும் கடவுளுடைய வார்த்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே முன்னறிவித்தது. (ஏசா. 13:17-22) ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே, கோரசு பிறப்பதற்கு முன்பே, பைபிள் அவன் பெயரையும் குறிப்பிட்டு சர்வதேச விவகாரங்களில் அவன் வகிக்கப்போகும் பாகத்தையும் முன்னறிவித்தது. (ஏசா. 44:28; 45:1, 2) மேதிய-பெர்சியா உலக வல்லரசாவதற்கு முன்பே, அதன் ஆதிக்கம், அதன் இரட்டையாட்சி தன்மை, அது முடிவுறும் முறை ஆகிய எல்லாவற்றையும் முன்னறிவித்தது. கிரேக்க உலக வல்லரசு அதன் முதல் அரசனின்கீழ் மேற்கொள்ளப்போகும் போக்கையும், அதற்குப் பிற்பட்டு அந்தப் பேரரசு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படுவதையும் அதற்கு இரண்டுக்கு மேற்பட்ட நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிள் முன்னறிவித்தது.—தானி. 8:1-8, 20-22.

நம்முடைய நாளின் உலக நிலைமைகளை பைபிள் நுட்பவிவரமாய் முன்னறிவித்தது, மேலும் மனித அரசாங்கங்கள் யாவற்றையும் கடவுள் முடிவு செய்வார் எனவும் கடவுளுடைய குமாரனான, இயேசு கிறிஸ்துவின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கம் முழுவதன்மீதும் ஆளுகை செய்யும் எனவும் நமக்கு முன்னறிவிப்பு செய்கிறது.—தானி. 2:44; 7:13, 14.

மாறாமல் நிலையாய் நம்பத்தக்கதாக நிரூபித்துள்ள தகவல் தோற்றுமூலத்துக்குக் கவனஞ்செலுத்துவது ஞானமான போக்கு அல்லவா?

கடவுள் ஆளும் அரசாங்கமே மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு ஒரே உண்மையான தீர்வு

இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தேவைப்படும் வல்லமையும், திறமைகளும், பண்புகளும் மனிதர் எவருக்கும் இல்லை. கடவுளே மனிதவர்க்கத்தைப் பிசாசின் மற்றும் அவனுடைய பேய்களின் செல்வாக்கிலிருந்து விடுலையாக்க முடியும், அவ்வாறு செய்வாரெனவும் அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார், ஆனால், எந்த மனிதனும் அதைச் செய்யமுடியாது. மருத்துவ விஞ்ஞானம் ஒருபோதும் நிறைவேற்ற முடியாததைச் செய்வதற்கு—பாவத்தை நீக்கி, இவ்வாறு நோயையும் மரணத்தையும் முடிவுசெய்து மக்கள் தாங்கள் உண்மையில் இருக்க விரும்பும் வகையான ஆட்களாக இருப்பதைச் சாத்தியமாக்க— கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். உணவு உற்பத்தியின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் அபாயகரமான தூய்மைக்கேட்டைத் தடுப்பதற்கும் (பூமியைப் பற்றிய மற்றும் எல்லா உயிர் வழிமுறைகளையும் பற்றிய) தேவைப்படும் அறிவைச் சிருஷ்டிகர் கொண்டிருக்கிறார், மனித முயற்சிகளோ பெரும்பாலும் மேலுமதிகப் பிரச்னைகளையே உண்டுபண்ணுகின்றன. கடவுளுடைய வார்த்தை ஏற்கெனவே வாழ்க்கைகளை மாற்றிக்கொண்டிருக்கிறது, இவ்வாறு அதன் வழிநடத்துதலுக்குச் செவிகொடுத்து நடப்பவர்கள் உயர்ந்த ஒழுக்க நெறிகளையுடையோராய் தயவும், அன்புமுள்ள ஆட்களாகிறார்கள், இவர்கள் எல்லாத் தேசங்களிலிருந்தும், ஜாதிகளிலிருந்தும், மொழி தொகுதிகளிலிருந்தும் வருகிறபோதிலும் தங்கள் உடன்மனிதருக்கு எதிராகப் போயுதங்களை எடுக்க மறுத்து, உண்மையான சமாதானத்திலும் சகோதரத்துவத்திலும் வாழ்கிற ஆட்களாலாகிய ஒரு சமுதாய மக்களாக இருக்கின்றனர்.

தற்போதைய ஒழுங்குமுறையைக் கடவுளுடைய ராஜ்யம் எப்பொழுது ஒழிக்கும்? “தேதிகள்” மற்றும் “கடைசி நாட்கள்” என்ற முக்கிய தலைப்புகளின்கீழ்ப் பாருங்கள்.