Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அர்மகெதோன்

அர்மகெதோன்

அர்மகெதோன்

சொற்பொருள் விளக்கம்: எபிரெய மொழியிலிருந்து எடுக்கப்பட்டு ‘அர்மகெதோன்’ என்று பல மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல் ஹார்மெகதோன் (Har Ma.ge.don’) “மெகிதோ மலை” அல்லது “சேனைகள் ஒன்றுகூடும் மலை” என பொருள்படுகிறது. பைபிள் இந்தப் பெயரை அணுசக்திப் படுகொலை போரோடல்ல, வரவிருக்கும் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும்” சர்வலோகப்போருடன் இணைக்கிறது. (வெளி. 16:14, 16) இந்தப் பெயர் குறிப்பாக இந்தப் பூமியின் அரசியல் ஆட்சியாளர்கள் யெகோவாவுக்கும் அவருடைய குமாரன் மூலமான அவருடைய ராஜ்யத்துக்கும் எதிராகக் கூட்டிச் சேர்க்கப்படும் “இடத்திற்கு [கிரேக்கில், டோபன் (to’pon) அதாவது, நிலைமை அல்லது சூழ்நிலைமை]” பொருத்திப் பிரயோகிக்கப்படுகிறது. அத்தகைய எதிர்ப்பு, கடவுளுடைய ராஜ்யத்தின் காணக்கூடிய பிரதிநிதிகளான பூமியெங்குமுள்ள யெகோவாவின் ஊழியக்காரருக்கெதிரான உலகளாவிய செயல் நடவடிக்கையின்மூலம் வெளிக்காட்டப்படும்.

சிலர் அழைக்கிறபடி “அதிவெப்ப அடிப்படையிலான அணுசக்தி அர்மகெதோன்” மூலம் மனிதர் பூமியை அழிப்பதற்குக் கடவுள் அனுமதிப்பாரா?

சங். 96:10 “கர்த்தர் [யெகோவா] ராஜரீகம் பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் [எபிரெயுவில் டேவெல் (te.vel’), செழிப்புள்ள மற்றும் குடியேறப்பட்டுள்ள, உயிர்வாழ்க்கைக்கேற்ற நிலப்பகுதி] அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்.”

சங். 37:29: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”

வெளி. 11:18: “ஜாதிகள் கோபித்தார்கள். அப்பொழுது உம்முடைய (யெகோவாவுடைய) கோம் மூண்டது; . . . பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் (குறித்த) காலம் வந்தது.”

பைபிளில் குறிப்பிட்டுள்ள அர்மகெதோன் என்பது என்ன?

வெளி. 16:14, 16: “அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. . . . அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் எனப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.”

அர்மகெதோன் மத்திய கிழக்கில் மட்டுமே நடக்கும் போ?

எல்லாத் தேசங்களின் ஆட்சியாளர்களும் சேனைகளும் கடவுளுக்கு எதிராகக் கூட்டப்படுவர்

வெளி. 16:14: “அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது.”

வெளி. 19:19: “பின்பு மிருகமும் [மனிதரின் முழு அரசியல் ஆட்சியும்] பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.”

எரே. 25:33: “அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவங்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் [யெகோவாவால்] கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்.”

அர்மகெதோன் (Har–Magedon) என்ற பெயர் பயன்படுத்தியிருப்பது இந்தப் போர் சொல்லர்த்தமான மெகிதோ மலையில் நடக்குமெனக் குறிக்க முடியாது

சொல்லர்த்தமான மெகிதோ மலை எதுவும் இல்லை, ஒரு 70 அடி (21 மீ.) மண்மேடு மட்டுமே பூர்வ மெகிதோவின் இடிபாடுகளில் காணப்படுகிறது.

“பூகோளமெங்குமுள்ள” ராஜாக்களும் இராணுவச் சேனைகளும் மெகிதோவின் கீழ் உள்ள சொல்லர்த்தமான எஸ்ட்ரெலான் சமவெளியில் கூடிவரமுடியாது. இந்தச் சமவெளி முக்கோண வடிவமானது, 20 மைல்கள் (32 கி.மீ.) நீளமும், கிழக்கு முனையில் 18 மைல்கள் (29 கி.மீ.) அகலமும் மட்டுமே உள்ளது.—பைபிளின் நில இயல் (நியு யார்க், 1957), டெனிஸ் பாலி, பக். 148.

சரித்திரத்தில் மெகிதோ வகித்துள்ள பாகத்தினால் இந்தப் பெயர் பொருத்தமானது; மெகிதோவின் கீழுள்ள சமவெளி உறுதிமுடிவு தீர்க்கப்பட்ட போர்கள் நடந்த இடம்

அங்கே யெகோவா கானானிய சேனைத்தலைவனாகிய சிசெராவை, நியாயாதிபதி பாராக்குக்கு முன் தோல்வியுறச் செய்தார்.—நியா. 5:19, 20; 4:12-24.

எகிப்தின் பார்வோனாகிய மூன்றாம் தட்மோஸ் பின்வருமாறு சொன்னான்: “மெகிதோவைப் பிடிப்பது ஆயிரம் பட்டணங்களைப் பிடிப்பதற்கு ஒப்பாகும்!”—பழைய ஏற்பாடு சம்பந்தப்பட்ட பூர்வ அண்மை கிழக்கத்திய மூலவாக்கியம் (பிரின்ஸ்டன், நியு.ஜெ.; 1969), ஜேம்ஸ் பிரிட்சார்ட் பதிப்பித்தது, பக். 237.

மெகிதோவைக் (“சேனைகள் ஒன்றுகூடுதல்” என்பது பொருள்) குறிப்பிட்டது பொருத்தமானது, ஏனென்றால் அர்மகெதோன் தேசங்களின் ஆட்சியாளர்களின் இராணுவச் சேனைகளும் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களும் உட்படும் ஓர் உலக நிலைமை.

அர்மகெதோனில் யார் அல்லது எது அழிக்கப்படும்?

தானி. 2:44: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார், . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”

வெளி. 19:17, 18: “பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக் கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: “நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தயும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தயும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர், அடிமைகள், சிறியோர் பெரியோர் இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.”

1 யோவான் 2:16, 17: “ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”

வெளி. 21:8: “பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.”

அந்த அழிவு என்றென்றைக்குமானதா?

மத். 25:46: “இவர்கள் [கிறிஸ்துவின் “சதோதரருக்கு” நன்மை செய்ய மறுப்பவர்கள்] நித்திய ஆக்கினையை அடையவும் . . . போர்கள்.”

2 தெச. 1:7, 10: “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு . . . நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.”

தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்களா?

செப். 2:3: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய [யெகோவாவின்] கோத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”

ரோமர் 10:13: “கர்த்தருடைய [யெகோவாவின்] நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.”

சங். 37:34: “கர்த்தருக்குக் [யெகோவாவுக்குக்] காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.”

யோவான் 3:16: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் [அழிக்கப்பட்டுப்போகாமல், NW] நித்திய ஜீவனை அடையும்படிக்கு . . . அவரைத் தந்தருளி”னார்.

வெளி. 7:9, 10, 14: “நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். . . . இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்.”

சிறு பிள்ளைகளுக்கு அர்மகெதோனில் என்ன சம்பவிக்கும்?

பைபிள் இந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதில்லை, நாமும் நியாயாதிபதிகள் அல்ல. இருப்பினும், மெய்க் கிறிஸ்தவர்களின் சிறு பிள்ளைகளைப் “பரிசுத்தமாயிருக்கின்றன”ரென கடவுள் கருதுவதாக பைபிள் காட்டுகிறது. (1 கொரி. 7:14) கடந்த காலங்களில் கடவுள் துன்மார்க்கரை அழித்தபோது அவர்களுடைய சிறுபிள்ளைகளையும் அழித்ததாக அது மேலும் வெளிப்படுத்துகிறது. (எண். 16:27, 32; எசே. 9:6) எவரேனும் அழிக்கப்படுவதைக் கடவுள் விரும்புவதில்லை. ஆகவே, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும் வகையில் இப்பொழுது அவர் எச்சரிப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே இப்பொழுதும், அர்மகெதோனிலும் கடவுள் தங்களுடைய பிள்ளைகளைத் தயவாய்க் கருதுவதில் பயனடையும் ஒரு போக்கைப் பெற்றோர் பின்தொடருவது ஞானமல்லவா?

துன்மார்க்கர் அழிக்கப்படுவது கடவுளுடைய அன்புக்கு எதிரானதா?

2 பேதுரு 3:9: “கர்த்தர் . . . ஒருவரும் கெட்டுப்போகாமல் [அழிக்கப்பட்டுப்போகாமல், NW] எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமையுள்ளவராயிருக்கிறார்.”

லூக்கா 18:7, 8: “தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரா? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

2 தெச. 1:6: “உங்களை [தம் ஊழியர்களை] உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும் . . . பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.”

டுநிலை வகிக்க முடியுமா?

2 தெச. 1:7: “தேவனை அறியாதவர்களுக்கும் [அறியாதிருக்கத் தெரிந்துகொள்ளுகிறவர்களுக்கும்] நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு” வருவார்.

மத். 24:37-39: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே . . . ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள். அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”

மத். 12:30: “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.”

உபாகமம் 30:19, 20-ஐ ஒப்பிடவும்.

யாருடைய செல்வாக்கு, கடவுளுக்கு எதிராகப் போர்செய்வதில் விளைவடையும் அந்த உலக நிலைமைக்குத் தேசங்களை உந்துவிக்கிறது?

வெளி. 16:13, 14: “வலுசர்ப்பத்தின் [பிசாசாகிய சாத்தானின்; வெளி. 12:9] வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டு வரக்கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள், அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.”

லூக்கா 4:5, 6; 1 யோவான் 5:19; மேலும் அப்போஸ்தலர் 5:38, 39; 2 நாளாகமம் 32:1, 16, 17 ஆகியவற்றை ஒப்பிடுங்கள்.