Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிமுகங்கள் வெளி-ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு

அறிமுகங்கள் வெளி-ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு

அறிமுகங்கள் வெளி-ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு

குறிப்புரை:நீங்கள் வெளி-ஊழியத்தில் பங்குகொள்கையில் எவ்வகை அறிமுகத்தைப் பயன்படுத்துவதெனத் தீர்மானிப்பதில், பின்வரும் மூன்று காரியங்கள் கவனமாய் எண்ணிப்பார்ப்பதற்குத் தகுந்தவை: (1) நாம் கொடுக்கும்படி கட்டளைபெற்றுள்ள செய்தி “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி”யாகும். (மத். 24:14, NW) இதை நாம் நேர்முகமாய்க் குறிப்பிட்டுப் பேசாத சமயத்திலும், அது தங்களுக்குத் தேவைப்படுவதைக் காணும்படி ஜனங்களுக்கு உதவிசெய்வதை, அல்லது அதைக் கவனித்துப் பார்க்க அவர்கள் மனங்கொள்வதற்குத் தடையாயுள்ள இடையூறுகளை விலக்கி வழியுண்டாக்குவதை நாம் மனதில் கொண்டிருக்க வேண்டும். (2) நாம் சந்திக்கும் ஆட்களின் நலனில் உண்மையான அக்கறை, இயேசுவைச் செய்வித்ததைப்போல், இருதயத்தை எட்டும்படி நமக்கு உதவிசெய்யும். (மாற்கு 6:34) இத்தகைய உண்மையான அக்கறையை, அன்புள்ள மென்சிரிப்பாலும் சிநேகப்பான்மையாலும், அவர்கள் பேசுகையில் செவிகொடுத்துக்கேட்க மனமுடையவராயிருந்து பின்பு நாம் சொல்பவற்றை அதற்கேற்றவாறு பொருத்தி அமைத்துக்கொள்வதாலும், மேலும் அவர்களுடைய நோக்குநிலையை நாம் நன்றாய் விளங்கிக்கொள்வதற்கேதுவாய் தங்கள் மனதிலுள்ளவற்றை வெளிப்படுத்திச் சொல்லும்படி அவர்களை ஊக்கப்படுத்தும் கேள்விகளை நாம் பயன்படுத்துவதனாலும் காட்டலாம். அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியைப் பிரசங்கிப்பதைத் தான் பேசின ஜனங்களின் சூழ்நிலைமைகளுக்குத் தக்கவாறு பொருத்தியமைத்துக்கொண்டானென 1 கொரிந்தியர் 9:19-23 காட்டுகிறது. (3) உலகத்தின் சில பாகங்களில், சந்திக்க வருவோர் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறுவதற்குமுன் குறிப்பிட்ட சில புற ஆசாரங்களைக் கைக்கொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். வேறு இடங்களில், வரவேற்கப்படாது வந்தவர் தான் வந்ததன் நோக்கத்தைத் தாமதியாமல் உடனடியாகக் கூறும்படி வீட்டுக்காரர் எதிர்பார்க்கலாம்.—லூக்கா 10:5-ஐ ஒத்துப்பாருங்கள்.

அனுபவம் வாய்ந்த சாட்சிகள் சிலர் உரையாடலைத் தொங்கும் முறையைப் பின்வரும் அறிமுகங்கள் காட்டுகின்றன. நீங்கள் தற்போது பயன்படுத்தும் அறிமுகங்கள் உரையாடலுக்கு வழிதிறப்பது அரிதாயிருந்தால், இந்த ஆலோசனைகளில் சிலவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள். அவ்வாறு செய்கையில், சந்தேகமில்லாமல், அவற்றை உங்கள் சொந்தச் சொற்களில் எடுத்துச் சொல்ல விரும்புவீர்கள். மேலும், ஆட்களை அணுகிப் பேசுவதில் நல்ல வெற்றிகாணும், உங்கள் சபையிலுள்ள மற்றச் சாட்சிகளிடமிருந்தும் ஆலோசனைகள் பெறுவதை உதவியாகக் காண்பீர்கள்.

அர்மகெதோன்

‘பலர் அர்மகெதோனைப்பற்றிக் கவலைக் கொண்டிருக்கின்றனர். உலகத் தலைவர்கள் இந்தப் பதத்தை முழு அணுசக்திப் போரக் குறிப்பிடப் பயன்படுத்துவதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கின்றனர். அர்மகெதோன் மனிதவர்க்கத்துக்கு எதைக் குறிப்பிடுமென நீங்கள் நம்புகிறீர்கள்? . . . உண்மையில், அர்மகெதோன் என்ற இந்தப் பெயர் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் இந்தப் பதம் பொதுவாய் எதைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறதோ அதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒன்றையே குறிக்கிறது. (வெளி. 16:14, 16) மேலும் தப்பிப்பிழைப்பதற்கு நாம் தனியே ஒவ்வொருவரும் செய்யக்கூடிய காரியங்கள் இருப்பதையும் பைபிள் காட்டுகிறது. (செப். 2:2, 3)’ (மேலும் பக்கங்கள் 44-49, “அர்மகெதோன்” என்ற முக்கிய தலைப்பின்கீழ் பாருங்கள்.)

பைபிள்/கடவுள்

‘வணக்கம். உங்களிடம் ஒரு முக்கிய செய்தியைப் பகிர்ந்துகொள்ள நான் வெறும் ஒரு சுருக்கமான சந்திப்பைச் செய்கிறேன். பைபிளில் இங்கே சொல்லியிருப்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். (வெளிப்படுத்துதல் 21:3, 4 போன்ற வசனத்தை வாசியுங்கள்.) இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது உங்களுக்கு நல்லதாகத் தொனிக்கிறதா?’

‘வாழ்க்கையின் பிரச்னைகளைச் சமாளிக்க நடைமுறையான உதவியை எங்கே கண்டடைவது என்பதைப்பற்றி நாங்கள் எங்கள் அயலாரிடம் பேசிவருகிறோம். சென்ற காலத்தில், பல ஆட்கள் பைபிளின் அறிவுரையை நாடித்தேடினர். ஆனால் மனப்பான்மைகள் மாறும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். நீங்கள் இதைப்பற்றி எவ்வாறு உணருகிறீர்கள்? பைபிள் கடவுளுடைய வார்த்தையென நீங்கள் நம்புகிறீர்களா அல்லது அது மனிதர் எழுதிய வெறும் ஒரு நல்ல புத்தகமென உணருகிறீர்களா? . . . அது கடவுள் கொடுத்ததென்றால், ஒருவர் எவ்வாறு அதைப்பற்றி நிச்சயமாயிருக்க முடியுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?’ (பக்கங்கள் 58-68-ல் “பைபிள்” என்ற முக்கிய தலைப்பின்கீழ் பாருங்கள்.)

‘உங்களை வீட்டில் பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் என் அயலாருடன் பைபிளிலிருந்து (அல்லது, பரிசுத்த வேத எழுத்துக்களிலிருந்து) ஊக்கந்தரும் ஓர் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். நீங்கள் எப்போதாவது இவ்வாறு யோசித்ததுண்டா: . . . ? (கலந்துபேசுவதற்கான உங்கள் பேச்சுப்பொருளுக்குள் வழிநடத்தும் ஒரு கேள்வியைக் கேளுங்கள்.)’

‘பைபிளை வாசிக்கும்படி நாங்கள் எல்லாரையும் ஊக்கப்படுத்துகிறோம். முக்கியமான கேள்விகளுக்கு அது கொடுக்கும் விடைகள் ஆட்களை ஆச்சரியமடையும்படி அடிக்கடி செய்கிறது. உதாரணமாக: . . . (சங். 104:5; அல்லது தானி. 2:44; அல்லது வேறு ஏதாவது).’

‘இன்று நாங்கள் எங்கள் அயலாரைச் சுருக்கமாய்ச் சந்தித்துப் பேசுகிறோம். நாங்கள் பேசும் சில ஆட்கள் கடவுளில் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் அவரில் நம்பிக்கை வைப்பதைக் கடினமாய்க் காண்கின்றனர். நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? . . . சடப்பொருளான சர்வலோகத்தின் உட்கருத்தை ஆழ்ந்து கவனிக்கும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (சங். 19:1) யாருடைய சட்டங்கள் இந்த வானொளிக்கோளங்களை ஆண்டு நடத்துகின்றனவோ அவர் நமக்கும் விலைமதியா வழிநடத்துதலை அளித்திருக்கிறார். (சங். 19:7-9)’ (மேலும் பக்கங்கள் 145-151, 84-88-ல் “கடவுள்” மற்றும் “சிருஷ்டிப்பு” என்ற முக்கிய தலைப்புகளின்கீழ் பாருங்கள்.)

குற்றச்செயல்களும்/பாதுகாப்பும்

‘வணக்கம். ஆட்களின் சொந்தப் பாதுகாப்புக்குரிய காரியத்தைப்பற்றி நாங்கள் எல்லாரிடமும் பேசிவருகிறோம். நம்மைச் சுற்றிக் குற்றச்செயல்கள் பேரளவாய் நடந்துகொண்டிருக்கின்றன, இது நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது. உங்களையும் என்னையும் போன்ற ஆட்கள் இரவில் பாதுகாப்பு உணர்ச்சியுடன் வீதிகளில் நடக்கக்கூடிய ஒரு காலம் வருமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? (அல்லது, இந்தப் பிரச்னையை உண்மையில் தீர்க்கும் வழியை எவராவது கொண்டிருக்கின்றனரென நீங்கள் உணருகிறீர்களா?) . . . (நீதி. 15:3; சங். 37:10, 11)’

‘என் பெயர்——. இந்த வட்டாரத்தில் நான் வாழ்கிறேன். இந்தக் காலையில் நான் வந்துகொண்டிருக்கையில், (கவலைக்குரியதாய்ச் சமீபத்தில் அந்த வட்டாரத்தில் நடந்த ஒரு குற்றச்செயலை அல்லது மற்றக் காரியத்தைக் குறிப்பிடுங்கள்), எல்லாரும் பேசிக்கொண்டிருப்பதை நான் கவனித்தேன். நீங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? . . . நம்முடைய வாழ்க்கையை மேலும் பாதுகாப்புள்ளதாக்க உதவிசெய்யுமென நீங்கள் உணரும் ஏதாவது இருக்கிறதா? . . . (நீதி. 1:33; 3:5, 6)’

தற்போதைய நிகழ்ச்சிகள்

‘வணக்கம். என் பெயர்——. நான் (வீதி அல்லது பகுதி பெயரைக் குறிப்பிடுங்கள்) -லிருந்து வருகிறேன். நேற்றிரவு டெலிவிஷன் செய்தியைக் கண்டீர்களா? . . . (கவலைக்குரிய தற்போதைய செய்திக் குறிப்பு விவரம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்)—அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? . . . இந்த உலகம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது? என ஆட்கள் வினவுவதைக் கேட்பது அசாதாரணமாயில்லை. பைபிளில் சொல்லியிருக்கும் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோமென யெகோவாவின் சாட்சிகளான நாங்கள் நம்புகிறோம். 2 தீமோத்தேயு 3:1-5-ல் கொடுத்துள்ள இந்த நுட்பமான விவரிப்பைக் கவனியுங்கள்.’ (பக்கங்கள் 234-243-ஐயும் பாருங்கள்.)

‘இந்த வார செய்தித்தாளில் இதை நீங்கள் வாசித்தீர்களா? (வெட்டிவைத்துள்ள பொருத்தமான செய்தித்தாள் துணுக்கைக் காட்டுங்கள்.) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . . . ?’

‘நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் தெரிந்துகொள்ளக்கூடுமானால், இப்பொழுது இவ்வுலகத்தை எதிர்ப்படும் பல பிரச்னைகளில் எது முதல் திருத்தப்படுவதைக் காண விரும்புவீர்கள்? (வீட்டுக்காரருக்கு மிக அதிக அக்கறைக்குரியது என்னவென தெரிந்துகொண்டபின், இதை உங்கள் உரையாடலின் அடிப்படை பொருளாகப் பயன்படுத்துங்கள்.)’

வேலை/வீட்டுவசதி

‘எல்லாருக்கும் வேலையும் வீட்டுவசதியும் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம் என்பதைப்பற்றி நாங்கள் உங்கள் அயலகத்தாருடன் பேசிவருகிறோம். மனித அரசாங்கங்கள் இதை நிறைவேற்றுமென்று எதிர்பார்ப்பது பொருத்தமாயிருக்கிறதென நீங்கள் நம்புகிறீர்களா? . . . ஆனால் இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பது எவ்வாறென ஒருவர் அறிந்திருக்கிறார்; அவரே மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகர். (ஏசா. 65:21-23)’

‘நல்ல அரசாங்கத்தைப்பற்றி ஓர் எண்ணத்தை நாங்கள் எங்கள் அயலாரோடு பகிர்ந்துகொள்கிறோம். ஊழல்களிலிருந்து விடுதலையான, மற்றும் எல்லாருக்கும் வேலையும் நல்ல வீட்டு வசதியும் அளிக்கும் இவ்வகையான அரசாங்கத்தைப் பெரும்பான்மையர் கொண்டிருக்க விரும்புவர். எந்த வகையான அரசாங்கம் இந்த எல்லாவற்றையும் செய்ய முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? . . . (சங். 97:1, 2; ஏசா. 65:21-23)’ (மேலும் பக்கங்கள் 152-156-ல் “அரசாங்கம்” என்ற முக்கிய தலைப்பின்கீழ், பாருங்கள்.)

குடும்பம்/பிள்ளைகள்

‘குடும்ப வாழ்க்கையின் பிரச்னைகளை நாம் எவ்வாறு மேலும் நன்றாய்ச் சமாளிக்கலாம் என்பதன்பேரில் அக்கறைகொண்ட ஆட்களிடம் நாங்கள் பேசுகிறோம். நாம் எல்லாரும் நம்மால் இயலும் மிகச் சிறந்ததைச் செய்ய முயற்சி செய்கிறோம், ஆனால் மேலுமதிக வெற்றிபெறச் செய்ய நமக்கு உதவிசெய்யக்கூடிய ஏதாவதொன்று இருக்குமானால், அதில் நாம் அக்கறை கொள்கிறோம், அல்லவா? . . . (கொலோ. 3:12, 18-21) நம்முடைய குடும்பங்களுக்கு உண்மையான எதிர்காலத்தை அளிக்க முன்வரும் ஒரு நம்பிக்கையை பைபிள் நமக்குமுன் வைக்கிறது. (வெளி. 21:3, 4)’

‘நம்முடைய பிள்ளைகள் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைக் கொண்டிருக்க நாம் எல்லாரும் விரும்புகிறோம். ஆனால் இன்று இந்த உலகம் உட்பட்டிருக்கும் தொந்தரவிலிருந்து ஒரு மகிழ்ச்சியான முடிவை எதிர்பார்க்க நல்ல காரணமுண்டென நீங்கள் நினைக்கிறீர்களா? . . . அப்படியானால், நம்முடைய பிள்ளைகள் வளருகையில் என்ன வகையான உலகத்தை எதிர்ப்படவிருக்கிறார்களென நீங்கள் நினைக்கிறீர்கள்? . . . கடவுள் இந்தப் பூமியை வாழ்வதற்கு மிக அதிசயமான இடமாக்கப்போகிறாரென பைபிள் காட்டுகிறது. (சங். 37:10, 11) ஆனால் நம்முடைய பிள்ளைகள் அதில் பங்குகொள்வார்களா இல்லையா என்பது நாம் செய்யும் தெரிவின்பேரில் பெரும்பாலும் சார்ந்திருக்கலாம். (உபா. 30:19)’

எதிர்காலம்/பாதுகாப்பு

‘வணக்கம். நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? . . . நாங்கள் எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையான ஒரு கருத்தை எங்கள் அயலாருடன் பகிர்ந்துகொள்ள பிரயாசப்படுகிறோம். வாழ்க்கையை இந்த முறையிலேயே நோக்க நீங்களும் முயற்சி செய்கிறீர்களா? . . . இவ்வாறு செய்வதைச் சில சூழ்நிலைமைகள் கடினமாக்குகின்றனவென நீங்கள் காண்கிறீர்களா? . . . இந்தக் காரியத்தில் பைபிள் வெகு உதவியாயிருக்கிறதென நான் கண்டேன். நம்முடைய நாளில் இருந்துவரும் நிலைமைகளை அது உண்மையில் இருக்கிறபடி விவரிக்கிறது, அதுமட்டுமல்ல, அவை குறிக்கும் உட்பொருளையும் அது விளக்கி முடிவு என்னவாயிருக்குமென்பதையும் நமக்குச் சொல்கிறது. (லூக்கா 21:28, 31)’

‘வணக்கம். என் பெயர்——. உன் பெயரென்ன? . . . பைபிள் நமக்குக் கொடுக்கும் மிக மேன்மையான எதிர்காலத்தைக் கவனித்துப் பார்க்க உன்னைப்போன்ற இளைஞரை நான் ஊக்கப்படுத்துகிறேன். (வெளிப்படுத்துதல் 21:3, 4 போன்ற வேதவசனத்தை வாசியுங்கள்.) இது உனக்கு நல்லதாகத் தொனிக்கிறதா?’

வீட்டு பைபிள் படிப்பு

‘உங்களுக்கு பைபிளை இலவசமாய்க் கற்பிக்க நான் முன்வருகிறேன். நீங்கள் அனுமதித்தால், 200-க்கு மேற்பட்ட நாடுகளில் ஆட்கள் குடும்பத் தொகுதிகளாக வீட்டில் பைபிளைக் கலந்தாலோசிக்கும் முறையை நடத்திக்காட்ட ஒருசில நிமிடங்கள் மாத்திரமே எடுக்க நான் விரும்புகிறேன். இந்தத் தலைப்புகளில் எதையாவது கலந்தாலோசிப்புக்கு ஆதாரமாக நாம் பயன்படுத்தலாம். (படிப்புப் புத்தகத்திலிருந்து பொருளடக்க அட்டவணையைக் காட்டுங்கள்.) எது உங்கள் அக்கறையைக் கவருகிறது?’

‘இந்த பைபிள் படிப்பு உதவி நூலை எங்கள் அக்கம்பக்கத்திலுள்ளோருக்கு நாங்கள் காட்டிவருகிறோம். (அதைக் காண்பியுங்கள்.) நீங்கள் இதை முன்னால் பார்த்திருக்கிறீர்களா? . . . அப்படியானால் உங்களுக்கு ஒருசில நிமிடங்கள் மாத்திரமே இருந்தால், அதை எவ்வாறு பயன்படுத்துவதென உங்கள் சொந்த பைபிள் பிரதியைக்கொண்டு நடத்திக்காட்ட நான் விரும்புகிறேன்.’

அநீதி/துன்பம்

‘நீங்கள் எப்போதாவது இவ்வாறு யோசித்ததுண்டா: மனிதர் அனுபவிக்கும் அநீதியையும் துன்பத்தையும் பற்றிக் கடவுள் உண்மையில் கவலைகொள்கிறாரா? . . . (பிர. 4:1; சங். 72:12-14)’ (“துன்பம்” “ஊக்கமூட்டுதல்” என்ற முக்கிய தலைப்புகளையும் பாருங்கள்.)

ராஜ்யம்

‘என் அக்கம்பக்கத்திலுள்ளோருடன் பேசுகையில், இன்று நம்மை எதிர்ப்படுகிற—குற்றச்செயல்கள் மற்றும் மீறியவண்ணம் உயர்ந்துவிட்டிருக்கும் வாழ்க்கைச் செலவு (அல்லது தற்போது பலர் மனதிலிருக்கும் எதுவாயினும்)—போன்ற பெரும் பிரச்னைகளை உண்மையில் தீர்க்கக்கூடிய ஓர் அரசாங்கத்தின்கீழ் வாழ பலர் ஆவலாயிருப்பதை நான் கவனித்தேன். இது விரும்பத்தக்கதே, நீங்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்களல்லவா? . . . இத்தகைய ஓர் அரசாங்கம் இன்று இருக்கிறதா? . . . இந்தக் காரியங்களைச் செய்யக்கூடிய ஓர் அரசாங்கத்துக்காகப் பலர் உண்மையில் ஜெபித்திருக்கின்றனர். சந்தேகமில்லாமல் நீங்களும் அதற்காக ஜெபித்திருக்கிறீர்கள், ஆனால் அதை ஓர் அரசாங்கமாகப் பலர் நினைக்கிறதில்லை. (தானி. 2:44; சங். 67:6, 7; மீகா 4:4)’ (மேலும் பக்கங்கள் 225-234 மற்றும் 152-156 ஆகியவற்றில், “ராஜ்யம்,” “அரசாங்கம்” என்ற முக்கிய தலைப்புகளின்கீழ் பாருங்கள்.)

‘நாங்கள் எங்கள் அயலாரை ஒரு கேள்வி கேட்கிறோம். அதன்பேரில் உங்கள் குறிப்பையும் நாங்கள் போற்றுவோம். கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காகவும் அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதற்காகவும் ஜெபிக்கும்படி இயேசு கற்பித்தாரென உங்களுக்குத் தெரியும். கடவுளுடைய சித்தம் மெய்யாகவே இங்கே பூமியில் செய்யப்படும்படி இந்த ஜெபத்துக்கு எப்போதாவது விடைகொடுக்கப்படுமென நீங்கள் நினைக்கிறீர்களா? . . . (ஏசா. 55:10, 11; வெளி. 21:3-5)’

‘நாம் எல்லாரும் எதிர்ப்பட வேண்டிய ஒரு விவாதத்தைப்பற்றி நான் என் அயலாருடன் கலந்துபேசி வருகிறேன்: கடவுள் ஆளும் அரசாங்கத்தை நாம் விரும்புகிறோமா, அல்லது மனித ஆட்சியை விரும்பித் தெரிந்துகொள்கிறோமா? இன்று உலகத்திலுள்ள நிலைமைகளைக் கவனிக்கையில், மனிதர் உண்டுபண்ணியுள்ளவற்றிற்கு வேறுபட்ட ஒன்று நமக்குத் தேவையென நீங்கள் உணருகிறீர்களா? . . . (மத். 6:9, 10; சங். 146:3-5)’

கடைசி நாட்கள்

‘இன்று உலகத்தில் நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருப்பவை குறிக்கும் உட்பொருளைக் கலந்துபேச நாங்கள் வந்திருக்கிறோம். கடவுளிலும் பைபிளில் குறித்துவைக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்குரிய அவருடைய தராதரங்களிலும் அக்கறை பல ஆட்களுக்குள் குறைந்துவிட்டிருக்கிறது. இது ஒருவர் மற்றொருவரிடம் ஜனங்களின் மனப்பான்மையை வெகுவாய் பாதித்திருக்கிறது. 2 தீமோத்தேயு 3:1-5-ல் பதிவுசெய்துள்ள இந்த விவரிப்பை தயவுசெய்து நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள அனுமதித்து, இது இன்று இந்த உலகத்துக்குப் பொருந்துகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்களாவென எனக்குச் சொல்லுங்கள். (வாசியுங்கள்) . . . எதிர்காலத்தில் நல்ல நிலைமைகளை எதிர்பார்க்க நேர்மையான காரணம் இருக்கிறதா? (2 பேதுரு 3:13)’

‘இந்த உலகத்துக்குக் காலம் விரைவில் முடிவுறுகிறதென பலர் நம்புகின்றனர். நம்முடைய காலத்தைக் “கடைசி நாட்கள்,” என்று அவர்கள் பேசுகின்றனர். ஆனால் இந்தத் தற்போதைய உலகத்தின் முடிவை நாம் எவ்வாறு தப்பிப்பிழைத்துப் பரதீஸாக்கப்படும் ஒரு பூமியில் வாழமுடியுமென பைபிளில் நமக்குச் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? (செப். 2:2, 3)’ (மேலும் பக்கங்கள் 234-243-ல், “கடைசி நாட்கள்” என்ற முக்கிய தலைப்பின்கீழ் பாருங்கள்.)

ஆலோசிக்கப்படும் இந்த அறிமுகங்கள் பட்டியலில் “தற்போதைய நிகழ்ச்சிகள்” பகுதியையும் பாருங்கள்.

உயிர்/மகிழ்ச்சி

‘வாழ்க்கையின் உட்பொருளைக் குறித்து ஆழ்ந்த அக்கறைகொண்டுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்க நாங்கள் எங்கள் அயலாரைச் சந்திக்கிறோம். பெரும்பான்மையர் ஓரளவு மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். ஆனால் அவர்கள் மிகுந்த பிரச்னைகளையும் எதிர்ப்படுகின்றனர். நாம் வயதாகிவருகையில், வாழ்க்கை வெகு குறுகியதென உணருகிறோம். வாழ்க்கை இருக்கும்படி கருதப்பட்டதெல்லாம் இதுதானா? நீங்கள் இதைப்பற்றி எவ்வாறு உணருகிறீர்கள்? . . . (ஏதேனில் பிரதிபலித்த கடவுளுடைய தொக்க நோக்கத்தின்பேரில் குறிப்புச் சொல்லுங்கள்; பின்பு யோன் 17:3-ம் வெளிப்படுத்துதல் 21:3, 4-ம்.)’ (மேலும் பக்கங்கள் 243-248, “உயிர்” என்ற முக்கிய தலைப்பின்கீழ் பாருங்கள்.)

‘இன்று நாங்கள், எங்கள் அயலார், தங்கள் பைபிளில் “நித்திய ஜீவன்” என்ற சொற்றொடரை வாசிக்கையில் என்ன நினைக்கிறார்களெனக் கேட்கிறோம்? இந்தச் சொற்றொடர் பைபிளில் ஏறக்குறைய 40 தடவைகள் தோன்றுவதால் தனிப்பட்ட அக்கறைக்குரியது. இத்தகைய ஜீவன் நமக்கு எதைக் குறிக்கலாம்? . . . இதை நாம் எவ்வாறு அடையலாம்? (யோவான் 17:3; வெளி. 21:4)’

‘இன்று வாழ்க்கையின் தன்மையைப்பற்றி உண்மையில் அக்கறைகொண்டுள்ள ஆட்களுடன் பேசுகிறோம். நம்மில் பெரும்பான்மையர் உயிரோடிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால், உண்மையில் மகிழ்ச்சியுள்ள வாழ்க்கை சாத்தியமாயிருக்கிறதா? என்று பலர் எண்ணமிடுகின்றனர். நீங்கள் இதைப்பற்றி எவ்வாறு உணருகிறீர்கள்? . . . இன்று மகிழ்ச்சிக்கு மிகப் பெரிய தடைகளில் ஒன்று என்னவென நீங்கள் சொல்வீர்கள்? . . . (சங். 1:1, 2; வீட்டுக்காரரின் அக்கறைக்குப் பொருந்தும் மேலுமான வசனங்கள்)’

அன்பு/தயவு

‘இந்த உலகத்தில் உண்மையான அன்பு குறைவுபடுவதைப்பற்றிப் பலர் மிகக் கவலையுற்றிருப்பதை நாங்கள் காண்கிறோம். நீங்களும் அவ்வாறே உணருகிறீர்களா? . . . இந்தப் போக்கின் காரணமென்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? . . . பைபிள் இந்த நிலைமையை முன்னறிவித்ததென உங்களுக்குத் தெரியுமா? (2 தீமோ. 3:1-4) அதற்குக் காரணத்தையும் அது விளக்குகிறது. (1 யோவான் 4:8)’

‘என் பெயர்——. நான் உங்கள் அயலாரில் ஒருவன். என்னை மிக அதிகமாய்ப் பாதிக்கும் ஒன்றைப்பற்றி என் அயலாருடன் பேச நான் வெறும் ஒரு சுருக்கமான சந்திப்பு செய்கிறேன், நீங்களும் இதைக் கவனித்திருப்பீர்களென நான் நிச்சயமாயிருக்கிறேன். தயவு அதிக விலையுள்ளதல்ல, ஆனால் அது இன்று அவ்வளவு மிக அரிதாயிருப்பதாய்த் தோன்றுகிறது. இந்நிலைமை இருந்துவருவதன் காரணம் என்னவென நீங்கள் எப்போதாவது வியந்து சிந்தித்ததுண்டா? . . . (மத். 24:12; 1 யோவான் 4:8)’

முதிர்வயது/மரணம்

‘நாம் ஏன் முதிர்வயதடைந்து மரிக்கிறோம் என நீங்கள் எப்போதாவது வியந்து சிந்தித்ததுண்டா? சில கடல் ஆமைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்கின்றன. சில மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் மனிதர் 70 அல்லது 80 ஆண்டுகள் மாத்திரமே வாழ்ந்து பின்பு மரிக்கின்றனர். இது ஏன் என்று நீங்கள் வியந்ததுண்டா? . . . (ரோ. 5:12) இந்த நிலைமை எப்போதாவது மாறுமா? . . . (வெளி. 21:3, 4)’

‘நீங்கள் எப்போதாவது இவ்வாறு கேட்டதுண்டா: மரணமே எல்லாவற்றின் முடிவா? அல்லது மரணத்துக்குப் பின் வேறு ஏதாவது உண்டா? . . . மரணத்தைப்பற்றி நமக்கு இருக்கும் எந்தக் கேள்விக்கும் பைபிள் தெளிவாக விடையளிக்கிறது. (பிர. 9:5, 10) மேலும் விசுவாசமுள்ள ஆட்களுக்கு உண்மையான நம்பிக்கை இருக்கிறதெனவும் அது காட்டுகிறது. (யோவான் 11:25)’ (மேலும் பக்கங்கள் 98-104 மற்றும் 118, “மரணம்,” “ஊக்கமூட்டுதல்” என்ற தலைப்புகளின்கீழ் பாருங்கள்.)

போர்/சமாதானம்

‘இந்நாட்களில் ஏறக்குறைய எல்லாரும் அணுப்போரின் பயமுறுத்தலைப்பற்றிக் கவலையுடையோராய் இருக்கின்றனர். இந்தப் பூமியில் உண்மையான சமாதானத்தை நாம் எப்போதாவது காண்போமென நீங்கள் நினைக்கிறீர்களா? . . . (சங். 46:8, 9; ஏசா. 9:6, 7)’

‘போரே இல்லாத உலகத்தில் வாழ விரும்பும் ஆட்களுக்காக நான் தேடுகிறேன். இந்த நூற்றாண்டில் மாத்திரமே இரண்டு உலகப் போர்கள் உட்பட நூற்றுக்கணக்கான போர்கள் நடந்திருக்கின்றன. இப்பொழுது அணுசக்திப் போரின் பயமுறுத்தலை நாம் எதிர்ப்படுகிறோம். இத்தகைய போரத் தவிர்க்கவேண்டுமானால் என்ன தேவையென நீங்கள் உணருகிறீர்கள்? . . . யார் ஒரு சமாதான உலகத்தைக் கொண்டுவர முடியும்? . . . (மீகா 4:2-4)’

‘ஏறக்குறைய எல்லாரும் சமாதான உலகம் தனக்கு வேண்டுமென்று சொல்வதை நாம் காண்கிறோம். உலக அதிகாரிகளில் பெரும்பான்மையரும் அதைச் சொல்கின்றனர். அப்படியானால், ஏன் அதை அடைவது அவ்வளவு கடினமாயிருக்கிறது? . . . (வெளி. 12:7-12)’

‘எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது,’ என்று பலர் சொல்கையில்

‘வணக்கம். உங்கள் கட்டிடத் தொகுப்பிலுள்ள (அல்லது, இந்தப் பகுதியிலுள்ள) எல்லாக் குடும்பங்களையும் நாங்கள் சந்தித்துவருகிறோம், அவர்களில் பெரும்பான்மையர் தங்கள் சொந்த மதத்தைக் கொண்டிருக்கின்றனரெனக் காண்கிறோம். சந்தேகமில்லாமல் உங்களுக்கும் அவ்வாறு இருக்கும். . . . ஆனால், நம்முடைய மதம் என்னவாயிருப்பினும், நாம் ஒரேவகையான பல பிரச்னைகளால்—வாழ்க்கையின் விலைவாசி உயர்வு, குற்றச் செயல்கள், நோய்—போன்றவற்றால் பாதிக்கப்படுகிறோமல்லவா? . . . இந்தக் காரியங்களுக்கு உண்மையான தீர்வு ஏதாவது உண்டென நீங்கள் உணருகிறீர்களா? . . . (2 பேதுரு 3:13; முதலியன)’

‘நான் வேலையாயிருக்கிறேன்,’ என்று பலர் சொல்கையில்

‘வணக்கம். ஒரு முக்கிய செய்தியுடன் இந்த வட்டாரத்திலுள்ள எல்லாரையும் நாங்கள் சந்திக்கிறோம். சந்தேகமில்லாமல் நீங்கள் வேலைநெருக்கடியில் இருக்கிறீர்கள், ஆகையால் நான் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறேன்.’

‘நல்வாழ்த்துக்கள். என் பெயர்——. நான் வந்ததன் நோக்கம், உங்களுடன் கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களையும் அவற்றில் நீங்கள் எவ்வாறு பங்குகொள்ள முடியும் என்பதையும் கலந்துபேசுவதற்கேயாகும். ஆனால் நீங்கள் மிக வேலையாயிருப்பதை (அல்லது, வெளியில் போவிருப்பதை) நான் காண்கிறேன். சிந்தனைக்குரிய ஒரு சுருக்கமான குறிப்பை மட்டும் நான் உங்களுக்கு விட்டுச் செல்லலாமா?’

அடிக்கடி வேலைசெய்யப்படுகிற பிராந்தியத்தில்

‘உங்களை வீட்டில் காண முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இந்தச் சுற்றுப்புறத்தில் எங்கள் வாராந்தர சந்திப்பைச் செய்துகொண்டிருக்கிறோம். கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்துக்குச் செய்யப்போகிற அதிசயமான காரியங்களைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள இன்னுமதிகம் வைத்திருக்கிறோம்.’

‘வணக்கம். உங்களை மறுபடியும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். . . . வீட்டில் எல்லாரும் சுகமாயிருக்கிறார்களா? . . . உங்களுடன் . . . என்றதன்பேரில் ஓர் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள நான் வந்துள்ளேன்.’

‘வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? . . . உங்களுடன் பேச மற்றொரு வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். (பின்பு நீங்கள் கலந்துபேச விரும்பும் அந்தத் தனிப் பொருளைக் குறிப்பிடுங்கள்.)’