Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆவி

ஆவி

ஆவி

சொற்பொருள் விளக்கம்:  “ஆவி” என்று அடிக்கடி மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெயச் சொல் ரூஅக் மற்றும் கிரேக்கச் சொல் ப்னியூமா, பல அர்த்தங்களையுடையன. அவை யாவும் மனித பார்வைக்குத் தென்படாதிருப்பதும் இயங்குநிலையில் சக்தியின் அத்தாட்சியைக் கொடுப்பதுமானதைக் குறிப்பிடுகின்றன. இந்த எபிரெய மற்றும் கிரேக்கச் சொற்கள் (1) காற்றை, (2) பூமிக்குரிய சிருஷ்டிகளில் இயங்கும் உயிர்ச்சக்தியை, (3) ஒருவனின் அடையாளக்குறிப்பான இருதயத்திலிருந்து வெளிப்படுவதும் காரியங்களை குறிப்பிட்ட முறையில் பேச அல்லது செய்ய அவனைச் செய்விப்பதுமான அந்தத் தூண்டுவிக்கும் சக்தியை, (4)காணக்கூடாத ஒரு தோற்றுமூலத்திலிருந்து தோன்றிவரும் ஏவப்பட்ட வசனிப்புகளை, (5) ஆவி ஆட்களை, மற்றும் (6) கடவுளுடைய செயல்நடப்பிக்கும் சக்தி, அல்லது பரிசுத்த ஆவியைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தியிருப்பவற்றில் பல வெளி ஊழியத்தில் எழும்பக்கூடிய பேச்சுப்பொருள்களின் சம்பந்தமாக இங்கே தர்க்கிக்கப்பட்டுள்ளன.

பரிசுத்த ஆவி என்பது என்ன?

பரிசுத்த ஆவியைக் குறிப்பிடும் பைபிள் வசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், அது ஆட்களை ‘நிரப்புவதாகப்’ பேசப்பட்டிருக்கிறதெனவும்; அவர்கள் அதால் ‘முழுக்காட்டப்படலாம்’ எனவும்; மற்றும் அவர்கள் அதால் “அபிஷேகஞ்செய்யப்படலாம்” எனவும் காட்டுகிறது. (லூக்கா 1:41; மத். 3:11; அப். 10:38) பரிசுத்த ஆவி ஓர் ஆளாக இருந்தால் சொல்லப்பட்டுள்ள இவற்றில் எதுவும் பொருந்தாது.

இயேசு பரிசுத்த ஆவியைச் “சகாயர்” (கிரேக்கில், பராக்ளிட்டாஸ்) எனவும் குறிப்பிட்டார், மேலும் இந்தச் சகாயர் ‘போதிப்பார்,’ “சாட்சி கொடுப்பார்,” “அறிவிப்பார்,” செவிகொடுத்துக் ‘கேட்பார்,’ என்றும் அவர் சொன்னார். (யோவான் 14:16, 17, 26, தி.மொ.; 15:26; 16:13) வேத எழுத்துக்களில் ஒன்றை ஆளுருவகஞ்செய்து பேசுவது அசாதாரணமல்ல. உதாரணமாக, ஞானம் “பிள்ளைகளை” உடையதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (லூக்கா 7:35) பாவமும் மரணமும் அரசர்களாயிருப்பதாகப் பேசப்பட்டிருக்கிறது. (ரோமர் 5:14, 21) ஆவி ‘பேசினதென’ சில வசனங்களில் சொல்லியிருக்கையில், மற்றப் பகுதிகள் அது தேவதூதர்கள் அல்லது மனிதர்கள் மூலம் பேசப்பட்டதென தெளிவாக்குகின்றன. (அப். 4:24-26, தி.மொ.; 28:27; மத். 10:19, 20; அப். 20:23-ஐ 21:10, 11-உடன் ஒப்பிடுங்கள்.) 1 யோவான் 5:6-8-ல், ஆவி மட்டுமல்ல ‘ஜலமும் இரத்தமுங்கூட’ ‘சாட்சி பகருகின்றன’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள எதுவும், பரிசுத்த ஆவி ஓர் ஆள் என அவற்றில்தாமே நிரூபிக்கிறதில்லை.

பரிசுத்த ஆவி இன்னதென்ற திருத்தமான குறிப்பு அந்த ஆவியைக் குறிப்பிடும் வேதவசனங்கள் எல்லாவற்றுடனும் பொருந்தவேண்டும். இந்த நோக்குநிலையுடன், பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல்நடப்பிக்கும் சக்தி என்ற முடிவுக்கு வருவது நியாயப்படி பொருத்தமாயிருக்கிறது. அது ஓர் ஆளல்ல, ஆனால் கடவுள் தம்முடைய பரிசுத்த சித்தத்தை நிறைவேற்றுவதற்குத் தம்மிலிருந்து வெளிப்பட செய்விக்கும் வல்லமைவாய்ந்த சக்தியாகும்.—சங். 104:30; 2 பேதுரு 1:21; அப். 4:31.

மேலும் பக்கங்கள் 406, 407-ல், “திரித்துவம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

ஒருவன் உண்மையில் “பரிசுத்த ஆவியை” உடையவன் என்பதற்கு எது சாட்சி பகருகிறது?

லூக்கா 4:18, 31-35, தி.மொ.: “[இயேசு தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் சுருளிலிருந்து வாசித்தார்:] கர்த்தருடைய [யெகோவாவின், NW] ஆவி என்மேலிருக்கிறது; . . . சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர் என்னை அபிஷேகம் பண்ணினாரே. . . . பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் ஊருக்கு வந்து ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போகம் பண்ணினார். அவர் பேசினது அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக் குறித்து அவர்கள் பிரமித்தார்கள். ஜெபாலயத்திலே அசுத்தப் பேய் என்னும் ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். அவன்: . . . என்று சத்தமிட்டுச் சொல்லவே [உரத்த சத்தமிட்டான், UV] இயேசு: நீ பேசாதே, இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பேய் அவனை மத்தியில் விழத்தள்ளி அவனுக்கு ஒரு சேதமுஞ் செய்யாமல் அவனைவிட்டுப் போய்விட்டது.” (இயேசுவுக்குக் கடவுளுடைய ஆவி இருந்ததென்பதற்கு எது சாட்சி பகர்ந்தது? அவர் நடுங்கினார் அல்லது உரத்த சத்தமிட்டார் அல்லது வெறியார்வத்துடன் அங்குமிங்கும் சென்றார் என்று இந்த விவரப்பதிவு சொல்கிறதில்லை. மாறாக, அவர் அதிகாரத்துடன் பேசினார் என்று அதில் சொல்லியிருக்கிறது. எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பேய் ஆவி ஒரு மனிதனை உரத்த சத்தமிடவும் தரையில் விழவும் செய்வித்தது கவனிக்கத்தக்கது.)

இயேசுவைப் பின்பற்றினவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுகையில் அவர்கள் அவரைப்பற்றிப் பேசும் சாட்சிகளாயிருப்பார்களென்று அப்போஸ்தலர் 1:8-ல் சொல்லியிருக்கிறது. அப்போஸ்தலர் 2:1-11-ன்படி, அவர்கள் அந்த ஆவியைப் பெற்றபோது, பேசிக்கொண்டிருந்தவர்கள் யாவரும் கலிலேயராயிருந்தபோதிலும், அங்குவந்திருந்த பல அயல்நாட்டாருக்குப் பழக்கமான மொழிகளில் அவர்கள் கடவுளுடைய மகத்துவங்களைப் பற்றிப் பேசுவதைக் கேட்டு, அங்கே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மனங்கவரப்பட்டார்கள். ஆனால் ஆவியைப் பெற்றவர்கள் எவ்வாறாவது உணர்ச்சிவசப்பட்டு கத்திக் கூச்சல்போட்டதாக அந்தப் பதிவு சொல்கிறதில்லை.

எலிசபெத்து பரிசுத்த ஆவியைப் பெற்று பின்பு “உரத்த சத்தமாய்ப்” பேசினபோது அவள், வணக்கத்துக்காகக் கூடின ஒரு கூட்டத்தில் இல்லை ஆனால் தன்னைப் பார்க்கவந்த உறவினளை வாழ்த்தி வரவேற்றிக்கொண்டிருந்தாள் என்பது கவனிக்கத்தக்கது. (லூக்கா 1:41, 42) அப்போஸ்தலர் 4:31-ல் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ஒன்றாய்க் கூடியிருந்த சீஷர்களின்மேல் பரிசுத்த ஆவி இறங்கினபோது, அந்த இடம் அசைந்தது, ஆனால் சீஷர்கள்மீது அந்த ஆவியின் பாதிப்பு என்னவெனில் அவர்கள் “தேவவசனத்தைத் தைரியமாய்ப் பேசினார்கள்,” அவர்கள் நடுடுங்கவோ உருண்டுபிரளவோ இல்லை. அவ்வாறே இன்றும், கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாய்ப் பேசுவதும், சாட்சிகொடுக்கும் வேலையில் ஆர்வமாய் ஈடுபட்டிருப்பதும்—ஆகியவையே ஒருவருக்குப் பரிசுத்த ஆவி இருக்கிறதென்று சாட்சி பகருகின்றன.

கலா. 5:22, 23: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” (உண்மையில் கடவுளுடைய ஆவியைப் பெற்றிருக்கும் ஜனத்தைக் கண்டடைய தேடுகையில், மத வெறியார்வ வெளிப்பாடுகளையல்ல, அதற்கு மாறாக, இந்தக் கனிகள் காணப்படுகின்றனவாவென்றே கவனிக்கவேண்டும்.)

ஒருவன் ஒருபோதும் படித்திராத ஒரு மொழியில் பெரும் உணர்ச்சிவேகத்துடன் பேசும் திறமை அவனுக்குக் கடவுளுடைய ஆவி இருக்கிறதென்று நிரூபிக்கிறதா?

“அந்நிய பாஷைகளில் பேசுதல்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

நம்முடைய நாளில் கடவுளுடைய ஆவியைக்கொண்டு அற்புத சுகப்படுத்துதல் நடப்பிக்கப்படுகிறதா?

“சுகப்படுத்துதல்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

யார் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படுகின்றனர்?

பக்கம் 56-ல், “முழுக்காட்டுதல்” என்பதன் கீழும், “மறுபடியும் பிறத்தல்” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.

மனிதனின் ஆவிபாகம் என்ற ஒன்று உடலின் மரணத்தைத் தப்பிப்பிழைக்கிறதா?

எசே. 18:4: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (RS, NE, KJ, மற்றும் Dy ஆகிய இவை யாவும் இந்த வசனத்தில் எபிரெயச் சொல்லாகிய நேபெஷ் என்பதை “ஆத்துமா,” என மொழிபெயர்த்திருக்கின்றன, இவ்வாறு ஆத்துமாவே சாகிறதென்று சொல்கின்றன. நேபெஷ் என்பதை “ஆத்துமா” என மற்றப்பகுதிகளில் மொழிபெயர்த்துள்ள சில மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தில் “அந்த மனிதன்” அல்லது “அந்த ஒருவன்” என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆகையால், அந்த நேபெஷ், அந்த ஆத்துமா, அந்த ஆளே, அவனுடைய உடல் சாகையில் தப்பிப்பிழைத்திருக்கும் அவனுடைய ஓர் உடலற்றப் பாகமல்ல.) (மேலுமான நுட்பவிவரங்களுக்கு “ஆத்துமா” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

சங். 146:4: “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோனைகள் அழிந்துபோம்.” (“ஆவி” என்று இங்கே மொழிபெயர்த்துள்ள எபிரெயச் சொல் ரூஅக் என்பதன் அடிப்படையாகப் பிறந்த ஒரு சொல்லாகும். சில மொழிபெயர்ப்பாளர்கள் இதை “சுவாசம்” என மொழிபெயர்க்கின்றனர். இந்த ரூஅக், அல்லது செயல்படும் உயிர்ச்சக்தி, உடலைவிட்டு நீங்குகையில், அந்த ஆளின் சிந்தனைகள் அழிந்துபோகின்றன; அவை வேறொரு மண்டலத்தில் தொர்ந்திருப்பதில்லை.)

பிர. 3:19-21, தி.மொ.: “மனிதருக்குச் சம்பவிப்பதே மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் சம்பவிப்பது ஒன்றே; இவைகள் சாவதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; எல்லாவற்றிலும் ஒரே [ஆவி, NW] சுவாசமே, மிருகத்திலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலிருந்து உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. மனுஷனுடைய ஆவி உயர ஏறுகிறதோ என்றும் மிருகங்களின் ஆவி கீழே பூமியில் இறங்குகிறதோ என்றும் அறிகிறவன் யார்?” (ஆதாமிலிருந்து பாவத்தையும் மரணத்தையும் சுதந்தரித்ததனால், எல்லா மனிதரும், மிருகங்களுக்கு ஏற்படுவதுபோல், மரித்து மண்ணுக்குத் திரும்புகின்றனர். ஆனால் உடலில் செயல்படுவது நின்றபின் ஓர் அறிவுள்ள ஆளாக தொர்ந்து வாழும் ஓர் ஆவி ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறதா? இல்லை; மனிதருக்கும் மிருகங்களுக்கும் “எல்லாவற்றிற்கும் ஒரே ஆவியே உள்ளது,” என்று 19-ம் வசனம் (NW) சொல்கிறது. ஆவியைக் குறித்து 21-ம் வசனத்தில் எழுப்பப்படும் கேள்விக்கு, வெறும் மனித கவனிப்பின்பேரில் ஆதாரங்கொண்டு, ஒருவரும் அதிகாரப்பூர்வமாய் பதிலளிக்க முடியாது. மனிதர் சாகையில் மிருகங்களுக்கு மேலாக மேம்பட்ட நிலையைக் கொடுக்கும் எதுவும் பிறப்பின் பலனாக மனிதருக்கு இல்லை என்று கடவுளுடைய வார்த்தை பதிலளிக்கிறது. எனினும், கிறிஸ்துவின் மூலமாகச் செய்துள்ள கடவுளுடைய இரக்கமுள்ள ஏற்பாட்டினால், விசுவாசங்காட்டும் மனிதருக்கு என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு திறக்கப்பட்டிருக்கிறது, ஆனால் மிருகங்களுக்கு அவ்வாறில்லை. மனிதவர்க்கத்தார் பலருக்கு, உயிர்த்தெழுதலின் மூலம் இது கூடியதாக்கப்படும், அப்பொழுது கடவுளிடமிருந்து வரும் செயல்படும் உயிர்ச்சக்தி அவர்களை மறுபடியும் உயிர்ப்பிக்கும்.)

லூக்கா 23:46: “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை [கிரேக்கில், ப்னியூமா] ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.” (இயேசு ஜீவனை விட்டார் என்பதைக் கவனியுங்கள். அவருடைய ஆவி வெளியில் சென்றபோது அவர் பரலோகத்துக்குச் சென்றுகொண்டில்லை. இதிலிருந்து மூன்றாம் நாள்வரையில் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படவில்லை. பின்பு, அப்போஸ்தலர் 1:3, 9-ல் காட்டியுள்ளபடி, அவர் பரலோகத்துக்கு ஏறிச்செல்வதற்குமுன் இன்னும் 40 நாட்கள் சென்றன. ஆகையால், தம்முடைய மரண சமயத்தில் இயேசு சொன்னதன் பொருளென்ன? தாம் மரித்தபோது, தம்முடைய எதிர்கால வாழ்க்கை-எதிர்பார்ப்புகள் கடவுளின் பொறுப்பிலேயே முழுவதுமாய்த் தங்கியிருந்தனவென்று தாம் அறிந்தாரென அவர் சொன்னார். ‘ஆவி கடவுளிடம் திரும்புகிறது’ என்பதைக் குறித்து மேலுமான விளக்கக் குறிப்புகளுக்கு, பக்கம் 378-ல், “ஆத்துமா” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘ஆம், அதனால்தான் நான் உங்கள் வாசலுக்கு இன்று வந்திருக்கிறேன். (அப். 2:17, 18)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘அதுவே இந்தக் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வதை எனக்குச் சாத்தியமாக்குகிறது. ஆனால் ஒருவன் உண்மையில் கடவுளுடைய ஆவியைப் பெற்றிருக்கிறான் என்பதற்கு சாட்சி பகருவது எது என்பதைக்குறித்து எல்லாரும் ஒரே எண்ணத்தைக் கொண்டில்லையென நான் காண்கிறேன். நீங்கள் எதைக் காணும்படி எதிர்பார்க்கிறீர்கள்?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (பக்கங்கள் 381, 382-ல் உள்ள குறிப்புகள் சிலவற்றைக் கலந்துபேசுதல்.)