Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆவிக்கொள்கை

ஆவிக்கொள்கை

ஆவிக்கொள்கை

சொற்பொருள் விளக்கம்:  மனிதரின் ஓர் ஆவி பாகம் மாம்ச உடலின் மரணத்தின்போது சாகாமல் தொடர்ந்து வாழ்கிறது, அது உயிருள்ளோருடன் தொடர்புகொள்ளக்கூடும், பொதுவாய் ஆவியுலக மத்தியஸ்தம்செய்பவராகச் சேவிக்கும் ஒருவர் மூலமாய் அவ்வாறு செய்யக்கூடும் என்ற நம்பிக்கை. ஒவ்வொரு சடப்பொருளும் எல்லா இயற்கைநிகழ்ச்சிகளும் அவற்றிற்குள் வாசம் செய்யும் ஆவிகளைக் கொண்டுள்ளனவென்று சிலர் நம்புகின்றனர். மாந்திரீகம் பொல்லாத ஆவிகளிடமிருந்து வரும் சக்தியின் உபயோகமென ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆவிக்கொள்கையின் எல்லா வகைகளும் பைபிளில் மிகக்கண்டிப்பாய்க் கண்டனம் செய்யப்பட்டுள்ளன.

மரித்த அன்பான ஒருவரின் “ஆவியுடன்” தொர்பு கொள்வது ஒரு மனிதனுக்கு உண்மையில் சாத்தியமானதா?

பிர. 9:5, 6, 10: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே [பிரேதக்குழி] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”

எசே. 18:4, 20: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (ஆகையால் ஆத்துமா உடலின் மரணத்தின்போது சாகாமல் தொர்ந்திருக்கும் ஒன்றல்ல, அதன்பின் உயிருள்ள மனிதர் அதோடு தொர்புகொள்ள முடியாது.)

சங். 146:4: “அவனுடைய ஆவி பிரியும் [“வெளியே செல்கிறது,” NW], அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோனைகள் அழிந்துபோம்.” (ஆவி உடலைவிட்டு ‘வெளியே செல்கிறது’ என்று சொல்லப்படுவது, உயிர்ச்சக்தி செயல்படுவது நின்றுவிட்டது என்று சொல்வதன் வெறும் மற்றொரு முறையேயாகும். இவ்வாறு, ஒருவன் மரித்தப் பின்பு, அவனுடைய ஆவி தனியே உடலுக்குப் புறம்பாக யோசிக்க மற்றும் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய உடலற்ற ஜீவியாக வாழ்ந்திருப்பதில்லை. அது, ஒருவனின் மரணத்துக்குப்பின் உயிருள்ளோர் தொர்புகொள்ளக்கூடிய ஒன்றல்ல.)

மேலும் பக்கங்கள் 100-102-ல், “மரணம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

தீர்க்கதரிசி சாமுவேலின் மரணத்துக்குப்பின் அரசன் சவுல் சாமுவேலோடு தொடர்பு கொண்டானென பைபிள் காட்டுகிறதல்லவா?

இந்த விவரம் 1 சாமுவேல் 28:3-20-ல் காணப்படுகிறது. சவுல்தானே சாமுவேலைக் காணவில்லை, அந்த ஆவியுலக மத்தியஸ்தம் செய்பவள் கொடுத்த விவரிப்பிலிருந்து அவள் சாமுவேலைக் கண்டாளென அவன் கருதிக்கொண்டான் என்று 13-ம், 14-ம் வசனங்கள் காட்டுகின்றன. அது சாமுவேலே என்று நம்ப விரும்பும் கடும் மனமுறிவுற்ற நிலையில் சவுல் இருந்தான், ஆகவே ஏமாற்றப்பட தன்னை அனுமதித்தான். சாமுவேல் மரித்து அடக்கம்செய்யப்பட்டிருந்தானென 3-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறது. சவுலுடன் தொர்புகொள்ளக்கூடும்படி சாமுவேலின் எந்தப் பாகமும் மற்றொரு மண்டலத்தில் உயிருடன் இருக்கவில்லையென முந்தின உபதலைப்பின்கீழ் எடுத்துக் குறிப்பிட்டுள்ள வேதவசனங்கள் தெளிவாக்குகின்றன. சாமுவேலைப்போல் பாசாங்குசெய்த அந்தக் குரல் ஒரு வஞ்சக மோக்காரனே.

மரித்தோருடன் பேச முயற்சிசெய்வோர் உண்மையில் யாருடன் தொர்புகொள்கிறார்கள்?

மரித்தோரின் நிலைமையைப்பற்றிய இந்த உண்மை பைபிளில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் மரணத்தைப்பற்றி முதல் மனித ஜோடியை ஏமாற்ற முயற்சி செய்தவன் யார்? கீழ்ப்படியாமை மரணத்தைக் கொண்டுவருமென்று கூறின கடவுளுடைய எச்சரிக்கையைச் சாத்தானே மறுத்து நேர்மாறாகப் பேசினான். (ஆதி. 3:4; வெளி. 12:9) சாவார்கள் என்று கடவுள் சொன்னபடி, நிச்சயமாகவே, மனிதர் மரித்தது காலப்போக்கில் தெளிவாயிற்று. அப்படியானால், மனிதர் உண்மையில் மரிக்கிறதில்லை ஆனால் மனிதனின் ஏதோ ஆவி பாகம் உடலின் மரணத்தின்போது சாகாமல் தொர்ந்திருக்கிறதென்ற எண்ணத்தைப் பொய்யாக உருவாக்கிவைத்ததற்கு உத்தரவாதமுள்ளவன் நியாயப்படி யார்? அத்தகைய வஞ்சனை பிசாசாகிய சாத்தானுக்கே பொருந்துகிறது, அவனையே இயேசு “பொய்க்குப் பிதா,” என்று விவரித்தார். (யோவான் 8:44; 2 தெசலோனிக்கேயர் 2:9, 10-ஐயும் பாருங்கள்.) மரித்தோர் மற்றொரு மண்டலத்தில் உண்மையில் உயிரோடிருக்கின்றனரென்ற மற்றும் நாம் அவர்களுடன் தொர்புகொள்ளலாம் என்ற நம்பிக்கை மனிதவர்க்கத்துக்கு நன்மை செய்யவில்லை. அதற்கு மாறாக, மகா பாபிலோனின் ஆவியுலகத்தொடர்பு பழக்கவழக்கங்களின் மூலமாய், “எல்லா ஜாதிகளும் மோம்போனார்களே,” என்று வெளிப்படுத்துதல் 18:23-ல் சொல்லியிருக்கிறது. ஆவியுலகத்தொடர்பு பழக்கமாகிய ‘மரித்தோருடன் பேசுவது’ உண்மையில், ஆட்களைப் பேய்களுடன் (கடவுளுக்கு எதிராகத் தன்னலக் கலகக்காரரான தூதர்களிடம்) தொர்புகொள்ள வைக்கக்கூடிய வஞ்சனைச் சூழ்ச்சியான ஏமாற்றுதலாகும், மேலும் வேண்டாதக் குரல்களை ஒருவன் கேட்பதற்கும் அந்தப் பொல்லாத ஆவிகளால் தொல்லைப்படுத்தப்படுவதற்கும் அடிக்கடி வழிநடத்துகிறது.

ஆவியுலகத் தொர்பு வழிவகைகளால் சுகப்படுத்துதலையும் பாதுகாப்பையும் தேடுவதில் தீங்கு உள்ளதா?

கலா. 5:19-21: “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம் [மாந்திரியம், தி.மொ.], . . . இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (உதவிக்காக ஆவியுலகத் தொர்பை நாடித்தேடுவது ஒருவன் மரணத்தைப்பற்றிய சாத்தானின் பொய்களை நம்புகிறானெனக் குறிக்கிறது; சாத்தானிடமிருந்தும் அவனுடைய பேய்களிடமிருந்தும் சக்தியைப் பெற முயற்சி செய்கிற ஆட்களிடமிருந்து ஆலோசனையை அவன் தேடுகிறான். இவ்வாறு, அத்தகைய ஆள் யெகோவா தேவனின் வெளிப்படையான எதிரிகளாயிருப்போருடன் தன்னை அடையாளங்காட்டுகிறான். இத்தகைய போக்கில் விடாமல் தொருகிற எவனும், உண்மையில் உதவிசெய்யப்படுவதற்குப் பதில், நிலையான தீங்கை அனுபவிக்கிறான்.)

லூக்கா 9:24: “தன் ஜீவனை [ஆத்துமாவை, NW] இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் [அவன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோனாக இருப்பதனால்] தன் ஜீவனை [ஆத்துமாவை, NW] இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.” (ஒருவன், தன்னுடைய தற்போதைய உயிரைப் பாதுகாக்க அல்லது காப்பாற்ற எடுக்கும் முயற்சியில், கடவுளுடைய வார்த்தையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள கட்டளைகளைத் தெரிந்தும் வேண்டுமென்றே மீறினால், அவன் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பை இழந்துபோவான். இது எவ்வளவு முட்டாள்தனம்!)

2 கொரி. 11:14, 15: “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது, ஆச்சரியமல்லவே.” (ஆகையால் ஆவியுலகத் தொர்பின் வழிவகைகளைக்கொண்டு நிறைவேற்றப்படும் சில காரியங்கள் தற்காலிகமாகப் பயனுள்ளவையாய்த் தோன்றுகையில் நாம் நம்மை மோம்போக விடக்கூடாது.)

மேலும் பக்கங்கள் 156-160-ல், “சுகப்படுத்துதல்,” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

எதிர்காலம் வைத்திருப்பதென்னவென தெரிந்துகொள்ள அல்லது மேற்கொள்ளும் ஏதோவொன்றில் தனக்கு வெற்றியை நிச்சயப்படுத்த ஆவியுலகத் தொர்புகொள்ளும் வழிவகைகளைத் தேடுவது ஞானமானதா?

ஏசா. 8:19: “அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ?”

லேவி. 19:31, தி.மொ.: “அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடாதிருங்கள், குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே உங்களை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்; நானே உங்கள் கடவுளாகிய யெகோவா.”

2 இரா. 21:6, தி.மொ.: “[அரசன் மனாசே] சகுனம் பார்க்கிறவனும் குறிகேட்கிறவனுமாயிருந்து அஞ்சனம்பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்துக்கொண்டு யெகோவாவுக்குக் கோமுண்டாக அவர் பார்வையிலே தீமையானதை மிகுதியாய்ச் செய்துவந்தான்.” (இத்தகைய ஆவியுலகத்தொடர்பு பழக்கவழக்கங்கள் உதவிக்காகச் சாத்தானிடமும் அவனுடைய பேய்களிடமும் திரும்பினதையே உண்மையில் உட்படுத்தின. அது ‘யெகோவாவின் பார்வையில் தீமையாயிருந்து’ அதற்காக அவர் மனாசேயின்மேல் கடுமையான தண்டனையைக் கொண்டுவந்தது ஆச்சரியமல்ல. ஆனால் அவன் மனஸ்தாபப்பட்டுத் திரும்பி இந்தக் கெட்டப் பழக்கச் செயல்களை விட்டுவிட்டபோது, யெகோவா அவனை ஆசீர்வதித்தார்.)

ஒருவகையான குறிகேட்டலை உட்படுத்தும் விளையாட்டுகளை விளையாடுவதில் அல்லது நல்ல சகுனம்போல் தோன்றும் ஒன்றின் அர்த்தத்தைத் தேடுவதில் என்ன தீங்கு இருக்க முடியும்?

உபா. 18:10-12: “குறிசொல்லுகிறவனும் சகுனம் பார்க்கிறவனும் குறிகேட்கிறவனும் சூனியக்காரனும் மந்திரவாதியும் சன்னதக்காரனும் அஞ்சனம்பார்க்கிறவனும் செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்.” (குறிசொல்லுதல், ஆராய்ச்சியின் பலனாக அல்ல, சகுனங்களுக்கு அர்த்தங்கூறுதலால் அல்லது இயற்கைமீறிய ஆவி சக்திகளின் உதவியால், மறைவான அறிவை வெளிப்படுத்த அல்லது சம்பவங்களை முன்னறிவிக்க நாடுவதாகும். தம்முடைய ஊழியர்களுக்குள் இத்தகைய பழக்கச் செயல்கள் இருக்கக் கூடாதென யெகோவா தடைகட்டளையிட்டார். ஏன்? இந்த எல்லாப் பழக்கவழக்கங்களும் அசுத்த ஆவிகளுடன், அல்லது பேய்களுடன் தொர்புகொள்வதற்கு அல்லது அவற்றால் பீடிக்கப்படுவதற்கு வரவழைப்பாயிருக்கின்றன. இத்தகைய காரியங்களில் ஈடுடுவது படுமோசமானமுறையில் யெகோவாவுக்கு உண்மையற்று நடப்பதாகும்.)

அப். 16:16-18: “குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் [“பேயைக்,” NW] கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.” (நீதியை நேசிக்கும் ஒருவனும், அக்கறையுள்ள நோக்கத்தோடாயினும் விளையாட்டுக்காயினும், அத்தகைய செய்தித் தோற்றுமூலத்தினிடம் தகவல் கேட்கமாட்டானென்பதில் சந்தேகமில்லை. அவள் சத்தமிட்டுக்கொண்டிருந்ததன்பேரில் பவுல் சலிப்புற்று, அவளைவிட்டு வெளியே வரும்படி அந்த ஆவிக்குக் கட்டளையிட்டான்.)

பொல்லாத ஆவிகள் மனித உருவெடுக்கக் கூடுமா?

நோவாவின் நாட்களில், கீழ்ப்படியாதத் தூதர்கள் மனித உருவெடுத்தனர். அவர்கள் உண்மையில் மணம்செய்து, பிள்ளைகளைப் பிறப்பித்தார்கள். (ஆதி. 6:1-4) எனினும், ஜலப்பிரளயம் வந்தபோது, அந்தத் தூதர்கள் ஆவி மண்டலத்துக்குள் திரும்பச் செல்லும்படி வற்புறுத்தப்பட்ட நிலைமைக்குள்ளானார்கள். இவர்களைக் குறித்து, யூதா 6-ல் (தி.மொ.) பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும் மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய கட்டுகளில் அந்தகாரத்தின்கீழ் அடைத்து வைத்திருக்கிறார்.” கடவுள் அவர்களை அவர்களுடைய முந்தின பரலோக சிலாக்கியங்களிலிருந்து தாழ்த்தி யெகோவாவின் நோக்கங்களைக் குறித்து அந்தகாரத்தில் இருக்கும்படி வைத்ததுமட்டுமல்லாமல், கட்டுகள் என குறிப்பிடப்படுவது அவர் அவர்களைக் கட்டுப்படுத்தியும் வைத்திருக்கிறார் என்றும் காட்டுகிறது. எதிலிருந்து? ஜலப்பிரளயத்துக்குமுன் அவர்கள் செய்ததுபோல், பெண்களுடன் பாலுறவுகளைக் கொள்ளக்கூடும்படி மாம்ச உடல்களை ஏற்பதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டனரெனத் தெரிகிறது. பொ.ச. முதல் நூற்றாண்டுவரையில் உண்மையுள்ள தூதர்கள் கடவுளுடைய செய்திகொண்டுசெல்வோராகத் தங்கள் வேலைகளை நடப்பிக்கையில் காணக்கூடிய உருவெடுத்தனரென்று பைபிளில் அறிவித்திருக்கிறது. ஆனால் ஜலப்பிரளயத்தைப் பின்தொடர்ந்து, இந்தத் தங்கள் வரத்தைத் தகாப்பிரயோகம் செய்த அந்தத் தூதர்கள் மனித உருவேற்கும் இந்தத் திறமையை இழக்கும்படி செய்யப்பட்டனர்.

எனினும், மனிதரைக் காட்சிகள் காணும்படி பேய்கள் செய்ய முடியுமெனவும், அவர்கள் காண்பது உண்மைபோல் தோன்றலாம் எனவும் தெரிகிறது, இது கவனிப்புக்குரியது. பிசாசு இயேசுவைச் சோதித்தபோது, “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” இயேசுவுக்குக் காண்பிப்பதற்கு இத்தகைய வழிவகையை அவன் பயன்படுத்தினதாகத் தெரிகிறது.—மத். 4:8.

ஆவியுலகப் பாதிப்பிலிருந்து ஒருவன் எவ்வாறு விடுவிக்கப்பட முடியும்?

நீதி. 18:10, தி.மொ.: “யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.” (கடவுளுடைய சொந்தப் பெயரைப் பயன்படுத்துவது தீங்கைத் தடுத்துவிலக்குவதற்கு ஒரு மந்திரச் சொல்லாகச் சேவிக்கிறதென்று இது பொருள்கொள்கிறதில்லை. யெகோவாவின் “நாமம் [பெயர்]” அவரைத்தானே குறிக்கிறது. நாம் அவரைப்பற்றி அறிந்து நம்முடைய முழு நம்பிக்கையையும் அவரில் வைத்து, அவருடைய அதிகாரத்துக்கு நம்மைக் கீழ்ப்படுத்தி அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்துவருகையில், நாம் பாதுகாக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் செய்தால், அவருடைய சொந்தப் பெயரைப் பயன்படுத்தி, உதவிக்காக நாம் அவரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் தம்முடைய வார்த்தையில் வாக்குக்கொடுத்திருக்கிற அந்தப் பாதுகாப்பை அளிக்கிறார்.)

மத். 6:9-13, தி.மொ.: “ஆதலால் நீங்கள் ஜெபஞ் செய்யவேண்டிய விதமாவது: . . . எங்களைச் சோனைக்குட்படப்பண்ணாமல் தீயோனினின்று எங்களை இரட்சியும்.” மேலும் நீங்கள் “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திரு”க்க வேண்டும். (ரோமர் 12:12) (சத்தியத்தை அறியவும் கடவுளுக்குப் பிரியமான முறையில் அவரை வணங்கவும் உண்மையில் விரும்புகிறவர்கள் செய்யும் இத்தகைய ஜெபங்களுக்குக் கடவுள் செவிகொடுக்கிறார்.)

1 கொரி. 10:21, NW: “நீங்கள் ‘யெகோவாவின் மேசையிலும்’ பேய்களின் மேசையிலும் பங்குகொண்டிருக்க முடியாது.” (யெகோவாவின் சிநேகத்தையும் பாதுகாப்பையும் விரும்புகிறவர்கள் ஆவியுலகத்தொடர்பு கூட்டங்களிலிருந்து எல்லாப் பங்கெடுப்பையும் துண்டித்துக்கொள்ளவேண்டும். அப்போஸ்தலர் 19:19-ல் பதிவுசெய்துள்ள முன்மாதிரிக்குப் பொருந்த, தங்களுடைமையில் வைத்திருக்கும் ஆவிக்கொள்கை சம்பந்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழித்துப்போடுவது அல்லது தக்கமுறையில் ஒழித்துப்போடுவதும் முக்கியம்.)

யாக். 4:7: “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” (இதைச் செய்ய, கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொள்ளவும் அதை உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தவும் தளரா ஊக்கத்துடன் பிரயாசப்படுங்கள். கடவுள்மீதுள்ள அன்பு மனிதனுக்குப் பயப்படுவதற்கு எதிராக உங்களை மன உரமுள்ளவர்களாக்கியிருக்க, ஆவிக்கொள்கை சம்பந்தப்பட்ட எந்த வழக்கங்களிலும் பங்குகொள்ள அல்லது ஆவியுலகத் தொடர்பு கொள்வோன் வைக்கும் எந்த விதிகளுக்காயினும் கீழ்ப்படிய உறுதியாய் மறுத்துவிடுங்கள்.)

எபேசியர் 6:10-18-ல் விவரித்துள்ள “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்” தரித்துக்கொண்டு அதன் ஒவ்வொரு பாகத்தையும் நல்ல நிலைமையில் வைத்துக்கொள்வதைப்பற்றி ஆர்வத்துடனிருங்கள்.