Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரட்சிப்பு

இரட்சிப்பு

இரட்சிப்பு

சொற்பொருள் விளக்கம்:  ஆபத்து அல்லது அழிவிலிருந்து பாதுகாத்தல் அல்லது விடுதலைசெய்தல் ஆகும். அந்த விடுதலை துன்புறுத்துவோரின் அல்லது கொடுமைப்படுத்துவோரின் கைகளிலிருந்து விடுவிக்கும் விடுதலையாயிருக்கலாம். உண்மையான கிறிஸ்தவர்கள் யாவருக்கும், யெகோவா, தம்முடைய குமாரன்மூலம் இந்தத் தற்போதைய பொல்லாக் காரிய ஒழுங்குமுறையிலிருந்து விடுதலையையும் மேலும் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைப்பட்டிருப்பதிலிருந்து இரட்சிப்பையும் அருளுகிறார். இந்தக் “கடைசி நாட்களின்”போது வாழ்ந்துகொண்டிருக்கும் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியரின் திரள்கூட்டத்துக்கு, இந்த இரட்சிப்பு மிகுந்த உபத்திரவத்தினூடே பாதுகாப்பதும் உட்பட்டிருக்கும்.

கடவுள், தம்முடைய மிகுந்த இரக்கத்தில், மனிதவர்க்கம் முழுவதையுமே காப்பாற்றுவாரா?

உலகமுழுவதும் இரட்சிக்கப்படுமென 2 பேதுரு 3:9 காட்டுகிறதா? அதில் சொல்லியிருப்பதாவது: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் [“எவரும் அழிக்கப்படும்படி அவர் விரும்புகிறதில்லை,” TEV] எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” ஆதாமின் சந்ததியார் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்பது கடவுளுடைய இரக்கமுள்ள விருப்பம், அவ்வாறு மனந்திரும்புவோரின் பாவங்களை மன்னிப்பதற்கு அவர் மிகுந்த தயவுடன் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் அந்த ஏற்பாட்டை ஏற்கும்படி அவர் எவரையும் கட்டாயப்படுத்துகிறதில்லை. (உபாகமம் 30:15-20-ஐ ஒத்துப் பாருங்கள்.) பலர் அதை ஏற்க மறுத்துவிடுகின்றனர். நீரில் மூழ்கிப்போகிற ஒரு மனிதன், தனக்கு உதவிசெய்ய விரும்பும் ஒருவர் அவனுக்கு உயிர்-பாதுகாப்பு ஏதுவை எறிகையில் அதைத் தூரத் தள்ளிப்போடும் ஆளைப்போல் அவர்கள் இருக்கிறார்கள். எனினும், மனந்திரும்பாவிட்டால் நரக அக்கினியில் நித்தியகாலமாய் இருப்பார்கள் என்பதும் இல்லை என்ற இதைக் கவனிக்கவேண்டும். 2 பேதுரு 3:9 காட்டுகிறபடி, மனந்திரும்பாதவர்கள் அழிந்துபோவார்கள், அல்லது “அழிக்கப்படுவார்கள்.” 7-ம் வசனத்திலும், “தேவபக்தியில்லாதவர்கள் அழிந்துபோவது” குறிப்பிட்டிருக்கிறது. முழு உலகமும் இரட்சிக்கப்படும் எண்ணம் இங்கே இல்லை.—“நரகம்” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.

எல்லா மனிதரும் முடிவில் இரட்சிக்கப்படுவரென 1 கொரிந்தியர் 15:22 நிரூபிக்கிறதா? அதில் சொல்லியிருப்பதாவது: “அன்றியும் ஆதாமில் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறீஸ்துநாதரில் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (கத்.பை.) சுற்றியுள்ள வசனங்களில் காட்டியிருக்கிறதுபோல், இங்கே தர்க்கிக்கப்படுவது உயிர்த்தெழுதலாகும். யார் உயிர்த்தெழுப்பப்படுவர்? ஆதாமின் பாவத்தினிமித்தம் மரணமடைந்தனரென சொல்லப்பட்டுள்ள எல்லாரும் (21-ம் வசனத்தைப் பாருங்கள்) எனினும் தாங்கள்தாமேயும் எபிரெயர் 10:26-29-ல் குறித்து வைக்கப்பட்டுள்ள, அறிந்து வேண்டுமென்றே செய்யும் பாவஞ்செய்யாதவர்கள். இயேசு ஹேடீஸிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டதுபோல் (அப். 2:31), ஹேடீஸிலிருக்கும் மற்ற எல்லாரும் உயிர்த்தெழுப்பப்படுவதனால் “உயிரோடிருக்கச் செய்யப்படுவர்.” (வெளி. 1:18; 20:13) இவர்கள் எல்லாரும் நித்திய இரட்சிப்பை அடைவார்களா? அந்த வாய்ப்பு அவர்களுக்குத் திறந்திருக்கும், ஆனால், யோன் 5:28, 29-ல் குறிப்பாய்க் காட்டியுள்ளபடி, எல்லாரும் அதை அனுகூலப்படுத்திக்கொள்ளமாட்டார்கள், சிலருடைய “தீர்ப்பு” பிரதிகூலமானதாயிருக்கும்.

“எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பைப்”பற்றிப் பேசும் தீத்து 2:11 போன்ற வசனங்களைப் பற்றியதென்ன? யோன் 12:32, ரோமர் 5:18, மற்றும் 1 தீமோத்தேயு 2:3, 4 போன்ற மற்ற வசனங்கள் RS, KJ, NE, TEV போன்ற மொழிபெயர்ப்புகளில் இத்தகைய எண்ணத்தைக் கொடுக்கின்றன. இந்த வசனங்களில் “எல்லா” மற்றும் “எல்லாரும்” என மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொற்கள் பாஸ் (pas) என்றச் சொல்லின் விகற்பத்துக்குட்பட்ட வகைகளாகும். வைன் என்பவர் இயற்றிய புதிய ஏற்பாட்டுச் சொற்களின் விளக்கவிவர அகராதி (லண்டன், 1962, புத். I, பக். 46) என்பதில் காட்டியுள்ளபடி, பாஸ் என்பது “எல்லா வகை அல்லது பலவகை” என்றும் பொருள்படக்கூடும். ஆகையால், மேற்குறிப்பிட்ட வசனங்களில் “எல்லா” என்பதற்குப் பதில் “எல்லா வகையான” என்றத் தொடரை; அல்லது NW மொழிபெயர்ப்பிலுள்ளபடி “எல்லா விதமான” என்பதைப் பயன்படுத்தலாம். எது திருத்தமானது—“எல்லாரும்” என்பதா அல்லது “எல்லா விதமான” என்பது தெரிவிக்கும் எண்ணமா? எந்த மொழிபெயர்ப்பு பைபிளின் மீதிபாகத்தோடும் பொருந்தியுள்ளது? பிந்தியதே. அப்போஸ்தலர் 10:34, 35; வெளிப்படுத்துதல் 7:9, 10; 2 தெசலோனிக்கேயர் 1:9 ஆகியவற்றைக் கவனித்துப் பாருங்கள். (குறிப்பு: மத்தேயு 5:11-ல் இந்தக் கிரேக்கச் சொல்லை—“எல்லா வகையான,” RS, TEV; “ஒவ்வொரு வகையான,” NE, “எல்லா மாதிரியான,” KJ, என்றவாறு மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்த்திருப்பது காட்டுகிறபடி, மற்ற மொழிபெர்ப்பாளர்களும் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கின்றனர்.)

சிலர் ஒருபோதும் இரட்சிக்கப்படுவதில்லையென திட்டவட்டமாய்க் காட்டும் வேதவசனங்கள் இருக்கின்றனவா?

2 தெச. 1:10: “அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.” (தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.)

வெளி. 21:8, கத்.பை.: “ஆனால் கோழகளும், அவிசுவாசிகளும், அருவருப்புக்குரியவர்களும், கொலை பாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிராதனைக்காரர், பொய்யர் அனைவரும் அக்கினியும், கந்தகமும் எரிகிற தடாகத்திலே பங்கடைவார்கள். இரண்டாம் மரணம் இதுவே.”

மத். 7:13, 14: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”

ஒருமுறை இரட்சிக்கப்பட்ட ஆள், எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவனா?

யூதா 5: “நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.” (தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.)

மத். 24:13: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (ஆகையால் ஒருவனின் முடிவான இரட்சிப்பு அவன் இயேசுவில் விசுவாசம் வைக்கத் தொங்கும் தருணத்தில் தீர்மானிக்கப்படுகிறதில்லை.)

பிலி. 2:12: “ஆதலால் எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும் அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” (இது, பிலிப்பியர் 1:1-ல் சொல்லியுள்ளபடி, பிலிப்பியிலிருந்த “பரிசுத்தவான்களுக்கு” எழுதப்பட்டது. அவர்கள் மட்டுக்குமீறி தன்னம்பிக்கையுடையோராயிராமல், தங்கள் முடிவான இரட்சிப்பு இன்னும் நிச்சயிக்கப்படவில்லையென உணரவேண்டுமென்று பவுல் அவர்களை ஊக்குவித்தான்.)

எபி. 10:26, 27, தி.மொ.: “சத்தியத்தையறியும் முற்றறிவை அடைந்த பின்பு நாம் வேண்டுமென்றே பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால் பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க பலி இனியிராது; நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடு எதிர்பார்த்தலும் விரோதிகளைப் பட்சிக்கும் கோக்கினியுமே இருக்கும்.” (இவ்வாறு பைபிள், ஒருவன் தான் “இரட்சிக்கப்பட்ட” பின்பு அவன் என்ன பாவங்களைச் செய்தாலும் கவலையில்லை அவன் தன் இரட்சிப்பை இழக்கமாட்டான் என்ற எண்ணத்தை ஆதரிக்கிறதில்லை. உண்மையுள்ளோராயிருக்கும்படி அது ஊக்குவிக்கிறது. எபிரெயர் 6:4-6-ஐயும் பாருங்கள், அங்கே, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவருங்கூட தன் இரட்சிப்பின் நம்பிக்கையை இழக்கக்கூடுமெனக் காட்டியிருக்கிறது.)

இரட்சிப்படைவதற்கு விசுவாசத்தைப்பார்க்கிலும் அதிகப்பட்ட ஏதாவது தேவைப்படுகிறதா?

எபே. 2:8, 9: “கிருபையினாலே [“தகுதியற்றத் தயவினால்,” NW] விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” (இரட்சிப்புக்கான அந்த முழு ஏற்பாடும் கடவுளுடைய தகுதியற்ற தயவின் வெளிக்காட்டாகும். ஆதாமின் ஒரு சந்ததியான், தன்னுடைய கிரியைகள் எவ்வளவு மேன்மையாயிருந்தாலும் சரிதான், அவன் தன் சொந்தமாய் இரட்சிப்பைச் சம்பாதிப்பதற்கு ஒரு வழியுமில்லை. இரட்சிப்பு கடவுள் கொடுத்தப் பரிசு, அவருடைய குமாரனின் பலியின் பாவநிவாரண விலைமதிப்பில் விசுவாசம் வைப்போருக்கு அதை அவர் அளிக்கிறார்.)

எபி. 5:9: “தமக்குக் [இயேசுவுக்குக்] கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்.” (தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.) (கிறிஸ்தவர்கள் ‘விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்படுகிறார்கள்’ என்ற இந்தக் கூற்றுக்கு இது முரண்படுகிறதா? இல்லவே இல்லை. கீழ்ப்படிதல் அவர்கள் விசுவாசம் உண்மையானதென்று மெய்ப்பிக்கவே செய்கிறது.)

யாக். 2:14, 26: “என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.” (ஒருவன் தன் கிரியைகளினால் இரட்சிப்பைச் சம்பாதிக்கிறதில்லை ஆனால் உண்மையான விசுவாசமுள்ள எவனும் அதோடு செல்லும் கிரியைகளை—கடவுளின் மற்றும் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் கிரியைகளை, விசுவாசத்தையும் அன்பையும் மெய்ப்பிக்கும் கிரியைகளை நிச்சயமாய் உடையவனாயிருப்பான். அத்தகைய கிரியைகளில்லாமல் அவனுடைய விசுவாசம் செத்தது.)

அப். 16:30, 31: “ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள் [பவுலும் சீலாவும்] கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, . . . போதித்தார்கள்.” (இந்த மனிதனும் அவனுடைய வீட்டாரும் உண்மையில் விசுவாசித்தால், தங்கள் விசுவாசத்துக்குப் பொருந்தியவாறு செயல்படுவார்களல்லவா? நிச்சயமாகவே.)

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘அதை அறிவதில் நான் சந்தோஷப்படுகிறேன், ஏனெனில் நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களென்று அது எனக்குச் சொல்லுகிறது. நான் பங்குகொள்ளும் இந்த வேலை இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்குச் செய்யும்படி நியமித்த ஒன்று, அதாவது அவருடைய ராஜ்யம் ஸ்பிக்கப்பட்டதைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதாகும். (மத். 24:14)’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘அந்த ராஜ்யம் என்ன? அதன் வருகை இந்த உலகத்துக்கு எதைக் குறிக்கும்? (தானி. 2:44)’ (2) ‘இந்தப் பரலோக அரசாங்கத்தின்கீழ் இங்கே பூமியில் என்ன நிலைமைகள் இருக்கும்? (சங். 37:11; வெளி. 21:3, 4)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘அப்படியானால் இங்கே அப். 4:12-ல் அப்போஸ்தலன் பேதுரு சொன்னதை நீங்கள் மதிக்கிறீர்களல்லவா? . . . இயேசுவின் பெயரில் நாம் விசுவாசம் வைக்கும்படி அந்தப் பெயரை யார் கொடுத்தாரென நீங்கள் அறிய விரும்பினதுண்டா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘இயேசுதாமே நமக்குச் சொல்கிறார். (யோவான் 17:3)’ (2) ‘தம்முடைய பிதாவின் பெயரைத் தெரியப்படுத்தினாரென இயேசு சொன்னதைக் கவனியுங்கள். (யோவான் 17:6) அவருடைய சொந்தப் பெயரென்ன? இது உங்கள் மனதுக்கு என்ன தொர்புகளைக் கொண்டுவருகிறது? (யாத். 3:15; 34:5-7)’

‘நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களா?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இதுவரையில் நான் அவ்வாறு இருக்கிறேன். நான் இப்படிச் சொல்வதேனென்றால் நம்முடைய நிலைநிற்கையில் மட்டுக்குமீறி நம்பிக்கையுடையோராய் நாம் இருக்கக்கூடாதென்ற பைபிளின் அறிவுரையையும் நான் அறிந்திருக்கிறேன். அந்த வசனத்தோடு நீங்கள் பழக்கப்பட்டிருக்கிறீர்களா? (1 கொரி. 10:12)’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘இதற்குக் காரணம் என்ன? மறுபடியும் பிறந்து பரலோக வாழ்க்கையின் நம்பிக்கையைக் கொண்டிருந்தவர்களுக்கு (எபி. 3:1), அப்போஸ்தலன் பவுல் எழுதினான் . . . (எபி. 3:12, 14) கடவுளுடைய வார்த்தையின் அறிவில் வளருவதன்மூலம் நாம் நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறோம்.

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘வெறுமென ஆம், என்று சொல்வதன்மூம் அதற்கு நான் பதிலளிக்கலாம். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட இரட்சிப்பைப் பற்றி பைபிளில் பேசியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக, வெளிப்படுத்துதல் 7:9, 10, 14-ன் கருத்தை நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து சிந்தித்ததுண்டா? . . . ஆகவே, இங்கே இந்தப் பூமியில்தானே வாழும்படி, வரவிருக்கிற மிகுந்த உபத்திரவத்தினூடே இரட்சிக்கப்படப்போகிற ஜனங்கள் இருப்பார்கள். (மத். 5:5)’

‘நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்கிறீர்களா?’

பக்கங்கள் 219, 220-ல், “இயேசு கிறிஸ்து” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

‘144,000 பேர்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்களென நீங்கள் சொல்கிறீர்கள்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நாங்கள் உண்மையில் நம்புவதை நான் உங்களுக்குச் சொல்லக்கூடும்படி, நீங்கள் இந்தக் குறிப்பைக் கொண்டுவந்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன். இயேசுவின் மூலம் கடவுள் செய்துள்ள இரட்சிப்புக்குரிய ஏற்பாட்டில் உண்மையான விசுவாசத்தை மெய்ப்பித்துக் காட்டும் அத்தனை ஆட்களுக்கும் இரட்சிப்பு திறந்திருக்கிறது. ஆனால் 1,44,000 பேர்கள் மாத்திரமே கிறிஸ்துவுடன் இருப்பதற்குப் பரலோகத்துக்குச் செல்வார்களென பைபிளில் சொல்லியிருக்கிறது. இதை நீங்கள் எப்போதாவது பைபிளில் கண்டிருக்கிறீர்களா? . . . இது இங்கே வெளிப்படுத்துதல் 14:1, 3-ல் இருக்கிறது.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘அவர்கள் பரலோகத்தில் என்ன செய்வார்கள்? (வெளி. 20:6)’ (2) ‘சந்தேகமில்லாமல் எவரின் மீதாவது ஆட்சிசெய்வார்கள். அவர்கள் யாராயிருக்கலாம்? . . . (மத். 5:5; 6:10)’