Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்

உயிர்

உயிர்

சொற்பொருள் விளக்கம்:  தாவரங்களையும், மிருகங்களையும், மனிதரையும், ஆவி ஆட்களையும் உயிரற்றப் பொருட்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் செயலுள்ள நிலைமையாகும். உடலுள்ள உயிர்ப் பொருட்கள் பொதுவாய் வளர்ச்சி, உயிர்ப்பொருள் மாறுபாடு, புறத்தூண்டுதல்களுக்கு எதிருணர்ச்சி, இனப்பெருக்கம் ஆகிய ஆற்றல்களை உடையன. தாவரவர்க்கம் செயலுள்ள உயிரை உடையது ஆனால் அறிவுள்ள-ஆத்துமாவாக உயிரைக் கொண்டில்லை. மிருகமும் மனிதனுமான பூமிக்குரிய ஆத்துமாக்களில், அவர்களை உயிரூட்டுவதற்கு உயிர்ச்-சக்தியும், அந்த உயிர்ச்-சக்தியைத் தொடர்ந்திருக்கச் செய்வதற்கு மூச்சோட்டமும் இருக்கின்றன.

அறிவுள்ள ஆட்களைக் குறிக்கையில், உயிர் அதன் முற்று முழுமையான கருத்தில், அதற்குரிய உரிமையுடன் வாழும் பரிபூரண வாழ்வாகும். மனித ஆத்துமா சாவாமையுடையதல்ல. ஆனால் கடவுளின் உண்மையுள்ள ஊழியர் பரிபூரணத்தில்—பலர் பூமியிலும், ஒரு “சிறு மந்தை” தேவனுடைய ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாகப் பரலோகத்திலும்—நித்திய ஜீவனுடனிருக்கும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றனர். ராஜ்ய வகுப்பாரின் உறுப்பினர், ஆவி வாழ்க்கைக்குத் தாங்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில் சாவாமையும் அருளப்படுகின்றனர், இது சிருஷ்டிக்கப்பட்ட எந்தப் பொருளாலும் தளராமல் தொடரச் செய்யவைப்பதற்குத் தேவையிராத உயிர்த்தன்மையாகும்.

மனித வாழ்க்கையின் நோக்கமென்ன?

உயிரின் மூலக்காரணரைக் கண்டறிவதே நம்முடைய வாழ்க்கை நோக்கமுடையதாயிருப்பதற்கு அடிப்படை. உயிர், சிந்தனையாற்றல் இல்லாதத் தற்செயலின் விளைவாயுண்டானதென்றால், நம்முடைய வாழ்க்கை, கட்டாயமாக, நோக்கமில்லாதிருக்கும், மேலும் நாம் திட்டமிடக்கூடியதற்கு நம்பத்தக்க நிலையான எதிர்காலம் இராது. ஆனால் அப்போஸ்தலர் 17:24, 25, 28 பின்வருமாறு நமக்குத் தகவல் அளிக்கிறது: “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் . . . எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கி[றார்], . . . அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” வெளிப்படுத்துதல் 4:11-ல் (தி.மொ.) கடவுளை நோக்கிப் பேசி, மேலும் சொல்லியிருப்பதாவது: “எங்கள் ஆண்டவரே, கடவுளே [யெகோவாவே, NW], மகிமையையுங் கனத்தையும் வல்லமையையும் பெறப் பாத்திரர் நீரே. யாவற்றையும் படைத்தீர், அவை இருந்ததற்கும் படைக்கப்பட்டதற்கும் உமது சித்தமே காரணம்.” (பக்கங்கள் 145-151-ல், “கடவுள்” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.)

மகிழ்ச்சியாயிருப்பதற்குத் தேவைப்பட்ட சிருஷ்டிகரின் கட்டளைகளுடனும் அவருடைய வழிநடத்துதலுடனும் முரண்படும் ஒரு வாழ்க்கைப் போக்கு ஏமாற்றத்தில் விளைவுறுகிறது. கலாத்தியர் 6:7, 8-ல் பின்வருமாறு எச்சரித்திருக்கிறது: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்.”—மேலும் கலாத்தியர் 5:19-21. (“சுதந்திரம்” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.)

ஆதாமிலிருந்து சுதந்தரித்தப் பாவம், தொடக்கத்தில் கடவுள் நோக்கங்கொண்டபடி வாழ்க்கையின் முழு மகிழ்ச்சியனுபவத்தைத் தற்போது அடைவதிலிருந்து மனிதரைத் தடுக்கிறது. ஆதாம் பாவஞ்செய்தப்பின் கொடுக்கப்பட்ட தெய்வீகத் தண்டனைத்தீர்ப்பின் விளைவாக, “அந்தச் சிருஷ்டி [மனிதவர்க்கம்] . . . நிலையில்லாமைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது,” என்று ரோமர் 8:20-ல் (தி.மொ.) கூறியிருக்கிறது. பாவமுள்ள மனிதனாகத் தன் சொந்த நிலைமையைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினான்: “நானோ மாம்சமானவன், பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டவன். எப்படியெனில், நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே அனுசரிக்கிறேன். உள்ளான மனுஷனைப் பார்த்தால், கடவுளின் நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியப்படுகிறவனாயிருக்கிறேன். என் அவயவங்களிலோ வேறொரு பிரமாணத்தைக் காண்கிறேன். அது என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போடி என் அவயவங்களிலிருக்கும் பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்குகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்!”—ரோமர் 7:14, 19, 22-24, தி.மொ.

பைபிள் நியமங்களை நாம் பொருத்திப் பயன்படுத்தி கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை முதலாவது வைக்கையில் இப்பொழுது கூடிய மிக அதிக மகிழ்ச்சியை நாம் கண்டடைகிறோம், மேலும் நம் வாழ்க்கை கருத்துவளம் நிறைந்து நோக்கமுள்ளதாகிறது. கடவுளைச் சேவிப்பதன்மூலம் நாம் அவருக்கு எவ்வகையிலும் பயன்பெருக்குவதில்லை; ‘நாம் பயனடையக்கூடியவற்றையே’ அவர் நமக்குக் கற்பிக்கிறார். (ஏசா. 48:17) பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”—1 கொரி. 15:58.

உயிரடைவதற்கு யெகோவா செய்துள்ள ஏற்பாடுகளில் நாம் விசுவாசம் வைத்து அவருடைய வழிகளில் நடந்தால் பரிபூரணத்தில் நித்திய ஜீவனடையும் எதிர்பார்ப்பை பைபிள் நமக்குமுன் வைக்கிறது. இந்த நம்பிக்கை உறுதியாய் ஆதாரங்கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறது; அது ஏமாற்றத்துக்கு வழிநத்தாது; இந்த நம்பிக்கைக்குப் பொருத்தமான செயல் இப்பொழுதேயும் நம் வாழ்க்கையை உண்மையான நோக்கமுள்ளதாக நிரப்ப முடியும்.—யோவான் 3:16; தீத்து 1:3; 1 பேதுரு 2:6.

மனிதர் ஒருசில ஆண்டுகளே வாழ்ந்து பின்பு சாகும்படி உண்டாக்கப்பட்டார்களா?

ஆதி. 2:15-17: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, தி.மொ.] மனுஷனை [ஆதாமை] ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் [யெகோவா, தி.மொ.] மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (கடவுள் இங்கே மரணத்தைத் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக அல்ல, ஆனால் பாவத்தின் விளைவாக உண்டாகுமென்றே குறிப்பிட்டுப் பேசினார். அதைத் தவிர்க்கும்படியே அவர் ஆதாமை ஊக்கப்படுத்தினார். ரோமர் 6:23-ஐ ஒத்துப்பாருங்கள்.)

ஆதி. 2:8, 9: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, தி.மொ.] கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர் [யெகோவா, தி.மொ.], பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும், நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.” (ஆதியாகமம் 3:22, 23-ல் சொல்லியிருக்கிறபடி, ஆதாமின் பாவத்துக்குப் பின் அந்த மனித ஜோடி, தோட்டத்தின் நடுவிலிருந்த அந்த ஜீவ விருட்சத்தின் கனியைச் சாப்பிடாதபடி ஏதேனிலிருந்து வெளியே துரத்தப்பட்டனர். ஆகையால் ஆதாம் தன் சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிதலுள்ளவனாக நிலைத்திருந்தால், ஏற்றக் காலத்தில் கடவுள், அவன் என்றென்றும் வாழ்வதற்குத் தன் தகுதியை நிரூபித்ததன் அடையாளமாக அந்த விருட்சத்தின் கனியைச் சாப்பிட அனுமதித்திருப்பாரெனத் தெரிகிறது. ஏதேனில் அந்த ஜீவ விருட்சம் இருந்தது அத்தகைய எதிர்பார்ப்பைக் குறித்துக் காட்டினது.)

சங். 37:29: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (பூமியையும் மனிதவர்க்கத்தையும் குறித்தக் கடவுளுடைய அடிப்படையான நோக்கம் மாறிவிடவில்லையென இந்த வாக்குத் தெளிவாக்குகிறது.)

பக்கம் 98-ல், “மரணம்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

ஆனால் இன்று நம் காரியத்தில், வாழ்க்கை, அடிக்கடித் துன்பத்தால் கெடுக்கப்பட்டுவரும், ஒரு குறுகிய வாழ்வாக இருக்கும்படியே கருதப்படுகிறதா?

ரோமர் 5:12: “ஒரே மனுஷனாலே [ஆதாமால்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (இதையே நாம் எல்லாரும் சுதந்தரித்திருக்கிறோம், கடவுள் அவ்வாறு நோக்கங்கொண்டதால் அல்ல, ஆனால் ஆதாமின் பாவத்தின் காரணமாகவே.) (மேலும் “விதி” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

யோபு 14:1: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.” (இந்த அபூரண காரிய ஒழுங்குமுறையில் வாழ்க்கை பேரளவில் இவ்வாறே அமைந்துள்ளது.)

எனினும், இந்தச் சூழ்நிலைமைகளின்கீழும் நம்முடைய வாழ்க்கை நிறைவான நற்பலன்தரக்கூடியதாயும் நோக்கமுள்ளதாயும் இருக்கமுடியும். பக்கங்கள் 243, 244-ல் மனிதவாழ்க்கையின் நோக்கத்தின்பேரில் கொடுத்துள்ளக் குறிப்புகளைப் பாருங்கள்.

பூமியில் வாழ்க்கை வெறுமென யார் பரலோகத்துக்குச் செல்வாரெனத் தீர்மானிப்பதற்குச் சோனைசெய்யும் இடமா?

பக்கங்கள் 162-168-ல், “பரலோகம்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

மாம்ச உடலின் மரணத்துக்குப்பின் தொர்ந்து வாழும் சாவாமையுடைய ஆத்துமா நமக்கு இருக்கிறதா?

பக்கங்கள் 375-380-ல், “ஆத்துமா” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

எந்த ஆதாரத்தின்பேரில் எவராவது தன் தற்போதைய குறுகிய மனித வாழ்க்கையைப் பார்க்கிலும் மேம்பட்ட ஒன்றில் நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும்?

மத். 20:28: “மனுஷகுமாரனும் [இயேசு கிறிஸ்து] ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.”

யோவான் 3:16: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை [செயலில்] விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”

எபி. 5:9: “தாம் [இயேசு கிறிஸ்து] பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரா[னார்].” (மேலும் யோன் 3:36)

எதிர்கால வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகள் எவ்வாறு உண்மையாகும்?

அப். 24:15: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறதுபோல நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.” (இது சென்ற காலத்தில் கடவுளை உண்மையுடன் சேவித்த ஆட்கள் உட்பட, உண்மையான கடவுளுடைய வழிகளை ஏற்க அல்லது ஏற்காது தள்ள அவரைப் பற்றி போதியளவு ஒருபோதும் அறிந்திராத பெரும் எண்ணிக்கையானவர்களும் இதில் அடங்கியிருப்பர்.)

யோவான் 11:25, 26: “இயேசு அவளை [அதன்பின் இயேசு திரும்ப உயிருக்குக் கொண்டுவந்த மனிதனின் சகோதரியை] நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.” (ஆகையால், உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையை மட்டுமல்லாமல், தற்போதைய பொல்லாத உலகம் அதன் முடிவுக்கு வருகையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆட்களுக்கு வேறு ஒன்றையும் இயேசு முன்வைத்தார். கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாக இருக்கும் நம்பிக்கையுடையோருக்கு ஒருபோதும் சாகாமல் உயிர்தப்பிப் பிழைத்திருக்கும் எதிர்பார்ப்பு உண்டு.)

மனித உடல் என்றென்றும் உயிர்வாழும்படி திட்டமிடப்பட்டதென்ற ஏதாவது அத்தாட்சி அந்த உடலமைப்பில் இருக்கிறதா?

மனித மூளை, நம்முடைய தற்போதைய வாழ்நாளில், நாம் 70 அல்லது 100 ஆண்டுகள் வாழ்ந்தாலுஞ்சரி, அதைப் பயன்படுத்தும் எந்த அளவையும் வெகுவாய் மீறும் கொள்திறமை உள்ளதென விரிவாய் அறிந்து ஒப்புக்கொள்ளப்படுகிறது. மனித மூளை “ஒருவனின் வாழ்நாளின் போக்கில் அவன் பயன்படுத்தும் ஆற்றலைப் பார்க்கிலும் மிகுதியான அதிக ஆற்றல் அமையப்பெற்றுள்ளது,” என்று என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் சொல்லியிருக்கிறது. (1976, புத். 12, பக். 998) மனித மூளை “உலகத்தின் மிகப் பெரிய நூல் நிலையங்களிலுள்ள அத்தனை பலவற்றைப்போன்ற, 2 கோடி அளவான பெரும் புத்தகங்களில் அடங்கியவற்றை நிரப்பும்” தகவலைத் தன்னில் கொள்ளக்கூடும் என்று விஞ்ஞானி கார்ல் சாகன் சொல்கிறார். (காஸ்மாஸ்,1980, பக். 278) மனித மூளையின் “தகவல் தொகுப்பு ஒழுங்குமுறையின்,” கொள்திறமையைக் குறித்து, “மனிதன் அதன்மீது வைக்கக்கூடிய கல்வியறிவின் மற்றும் நினைவின் எந்தச் சுமையையும் கையாள அது பூரணத் திறமையுள்ளது—மேலும் அந்த அளவைப்பார்க்கிலும் நூறு கோடி தடவைகள் மிகைப்பட்ட அளவையுங்கூட கையாளக்கூடியது,” என்று உயிர்வேதியில் வல்லுநர் ஐசக் அஸிமோவ் எழுதினார்.”—தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை, அக்டோபர் 9, 1966, பக். 146. (அது பயன்படுத்தப்படப்போவதில்லையென்றால் மனித மூளை ஏன் இத்தகைய கொள்திறமை அளித்து அமைக்கப்பட்டது? முடிவற்ற கல்வியறிவு அடைவதற்கான கொள்திறமை கொண்டுள்ள மனிதர், என்றென்றும் வாழ்வதற்காக உண்மையில் திட்டமிட்டமைக்கப்பட்டனரென்பது நியாயமல்லவா?)

மற்றக் கிரகங்களில் உயிர் உண்டா?

தி நியு யார்க் டைம்ஸ் அறிவிப்பதாவது: “சர்வலோகத்தில் வேறு இடங்களில் அறிவுள்ள உயிருக்காகத் தேடுவது . . . 25 ஆண்டுகளுக்கு முன்னால் தொங்கினது . . . ஆயிரக்கணக்கான கோடி நட்சத்திரங்களை நுட்பமாய் ஆராய உட்படுத்தும் இந்த மலைக்கவைக்கும் கடும் வேலை, பூமிக்கு அப்பால் உயிர் இருக்கும் எந்தத் தெளிவான அத்தாட்சியையும் இதுவரை கொடுத்திருக்கவில்லை.”—ஜூலை 2, 1984, பக். A1.

தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா சொல்வதாவது: “[நம்முடைய சூரிய மண்டலத்துக்கு வெளியில்] வேறு எந்தக் கிரகங்களும் திட்டமாய்க் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சூரிய மண்டலத்துக்கு வெளியில் ஒருவேளை இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்துக்கும், உயிர் தொங்கி மேம்பட்ட நாகரிகத்துக்குப் படிப்படியாய் உருமலர்ச்சியுற்ற ஒரு தற்செயல் நிகழ்ச்சியுண்டு.” (1977, புத். 22, பக். 176) (இந்தக் கூற்றில் பிரதிபலிக்கிறபடி, வானவெளியில் உயிருக்காகத் தேடும் இந்த மிக உச்ச அளவான செலவு ஏற்படுகிற ஆராய்ச்சியின் முக்கிய உள்நோக்கம் பரிணாமக் கோட்பாட்டுக்கு ஏதாவது நிரூபணத்தைக் கண்டுபிடிக்கும் ஆவலாக, அதாவது, கடவுளுக்குத் தான் பொறுப்புடையவனாக இராதபடி, மனிதன் கடவுளால் சிருஷ்டிக்கப்படவில்லை என்ற ஏதோ அத்தாட்சியைக் கண்டுபிடிப்பதற்காக இருக்கக்கூடுமா?)

பூமியில் உயிர்வாழ்வதே இருக்கும் ஒரே உயிர்வாழ்க்கை அல்லவென பைபிள் வெளிப்படுத்துகிறது. அறிவிலும் வல்லமையிலும் மனிதனுக்கு மிக அதிகம் மேம்பட்ட ஆவி ஆட்கள்—கடவுளும் தூதர்களும்—இருக்கின்றனர். அவர்கள் ஏற்கெனவே மனிதவர்க்கத்துடன் தொர்புகொண்டு, உயிரின் தொக்கத்தையும் இந்த உலகம் எதிர்ப்படும் சமாளிக்க முடியாத அளவான பிரச்னைகளுக்குத் தீர்வு என்னவென்பதையும் விளக்கியிருக்கின்றனர். (“பைபிள்” மற்றும் “கடவுள்” என்ற முக்கிய தலைப்புகளின்கீழ்ப் பாருங்கள்.)