Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊக்கமூட்டுதல்

ஊக்கமூட்டுதல்

ஊக்கமூட்டுதல்

சொற்பொருள் விளக்கம்: தைரியத்தைக் கொடுக்கும் அல்லது நம்பிக்கையளிக்கும் ஒன்று. எல்லாருக்கும் ஊக்கமூட்டுதல் தேவை. அதைக் கொடுப்பது தனிப்பட்ட உதவி அளிப்பதை அல்லது போற்றுதலைத் தெரிவிப்பதைத் தேவைப்படுத்தலாம். ஒரு கடினமான நிலைமையை எவ்வாறு சமாளிப்பதென்று காண ஒருவருக்கு உதவிசெய்வதை அல்லது மேம்பட்ட எதிர்காலத்தில் நம்பிக்கை வைப்பதற்குக் காரணங்களைக் கலந்துபேசுதலை இது அடிக்கடி உட்படுத்துகிறது. இத்தகைய ஊக்கமூட்டுதலுக்கு பைபிள் எவற்றையும்விட மிக மேன்மையான ஆதாரத்தை அளிக்கிறது, கீழே எடுத்துக் குறிப்பிட்டுள்ள வசனங்கள் பல்வேறு நிலைமைகளை எதிர்ப்படும் ஆட்களுக்கு ஊக்கமூட்டுதலைக் கொடுப்பதில் உதவியாயிருக்கலாம். சில சமயங்களில் வெறுமென உடனொத்துணரும் அனுதாப மனப்பான்மையைக் காட்டுவதால்தானே அதிக நலம் செய்யப்படலாம்.—ரோமர் 12:15.

நோயின் காரணமாகத் துன்பம் அனுபவிப்போருக்கு—

வெளி. 21:4, 5: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”

மத். 9:35: “இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, . . . உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, . . . சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, . . . சொஸ்தமாக்கினார்.” (ராஜ்யத்தைப்பற்றிய தம்முடைய பிரசங்கவேலையோடு இத்தகைய சுகப்படுத்துதலைச் சம்பந்தப்படுத்தினதன் மூலம், தம்முடைய ஆயிர ஆண்டு ஆட்சியின்போது தாம் மனிதவர்க்கத்துக்குச் செய்யவிருப்பதன் அதிசயமான முன்காட்சியை இயேசு அளித்தார்.)

2 கொரி. 4:13, 16: “நாங்களும் விசுவாசிக்கிறோம், . . . ஆனபடியினாலே, நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷன் [நம்முடைய மாம்ச உடல்] அழிந்துவந்தாலும் எங்கள் உள்ளான மனுஷன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டு [புதுப் பலம் அளிக்கப்பட்டு] வருகிறது.” (மாம்சப்படியான கருத்தில் நாம் ஒருவேளை தோய்வுற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் ஆவிக்குரியபிரகாரம், கடவுளுடைய மிக அருமையான வாக்குறுதிகளை நாம் தொர்ந்து உட்கொண்டுவருகையில், புதுப்பிக்கப்பட்டு வருகிறோம்.)

லூக்கா 7:20-23-ஐயும் பாருங்கள்.

அன்பானவர்களை மரணத்தில் இழந்தவர்களுக்கு—

ஏசா. 25:8, 9, தி.மொ.: “அவர் மரணத்தை என்றுமாக விழுங்குவார்; யெகோவாவாகிய கடவுள் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்துப்[போடுவார்] . . . அக்காலத்திலே ஜனங்கள்: இதோ, இவரே நமது கடவுள், இவருக்கென்று காத்திருந்தோம், இவர் நம்மை ரட்சிப்பார்; இவரே யெகோவா இவருக்கென்றே காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பில் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லுவார்கள்.”

யோவான் 5:28, 29, NW: “இதைக் குறித்து ஆச்சரியப்படாதேயுங்கள், ஏனெனில் அந்த மணிநேரம் வருகிறது, அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலிருப்பவர்கள் யாவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளிவருவார்கள், நல்ல காரியங்களைச் செய்தவர்கள் ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலுக்கும், தீயக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்தவர்கள் நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலுக்கும் வருவார்கள்.”

யோவான் 11:25, 26: “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.”

சங். 146:5, 9, தி.மொ.: “தன் கடவுளாகிய யெகோவாவை நம்பிக் காத்திருக்கிறவன் பாக்கியவான். . . . அநாதைப் பிள்ளையையும் விதவையையும் அவர் ஆதரிக்கிறார்.” (இப்பொழுதும் கடவுள், இழப்புக்காளானவர்கள் பேரில் அத்தகைய அன்புள்ள அக்கறைகொள்கிறார்.)

லூக்கா 7:11-16; 8:49-56-ஐயும் பாருங்கள்.

கடவுளுடைய சித்தத்தைச் செய்வதனால் துன்புறுத்தலை எதிர்ப்படும் ஆட்களுக்கு—

சங். 27:10, தி.மொ.: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும் யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.”

1 பேதுரு 4:16: “ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.”

நீதி. 27:11: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (பெரும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் எவனும் கடவுளைத் தொர்ந்து சேவிக்கமாட்டானென்ற சாத்தானின் பொய்க் குற்றச்சாட்டுக்கு ஒரு பதிலை, நாம் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பதன் மூலம் கொடுக்கிறோம்.)

மத். 5:10-12: “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.”

அப். 5:41, 42: “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் [அப்போஸ்தலர்கள்] அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.”

பிலி. 1:27-29: “எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக் குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.”

அநீதியினிமித்தம் மனமுறிவுற்றோருக்கு—

சங். 37:10, 11: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்னத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”

ஏசா. 9:6, 7, தி.மொ.: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ராஜாதிகாரம் அவர் தோள்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமான ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதான பிரபு எனப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவன் ராஜ்யத்தையும் அவர் பலப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்கென அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”

தானி. 2:44, தி.மொ.: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் கடவுள் என்றென்றும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி அழித்துவிடும்; தானோ என்றென்றுமாக நிலைநிற்கும்.”

ஏசாயா 32:1, 2; 2 பேதுரு 3:13-ஐயும் பாருங்கள்.

பொருளாதாரப்  பிரச்னைகளால்  கடும் நெருக்கடியிலிருப்போருக்கு—

ஏசா. 65:21, 22: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள். திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; . . . நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”

சங். 72:8, 16, தி.மொ.: “ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள் வரைக்கும் [மேசியானிய அரசர்] அரசாளுவார். . . . தேசத்தில் [பூமியில், UV], மலையின் உச்சியிலும், திரள் தானியமிருக்கும்.”

மத். 6:33: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [வாழ்க்கைக்குரிய பொருள்சம்பந்தத் தேவைகள்] உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”

ரோமர் 8:36, 38, 39: “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும் தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”

எபிரெயர் 13:5, 6-ஐயும் பாருங்கள்.

தங்கள் சொந்தக் குற்றங்களினிமித்தம் சோர்வுற்றிருக்கும் ஆட்களுக்கு—

சங். 34:18, தி.மொ.: “உடைந்த இருதயமுள்ளவர்களுக்கு யெகோவா சமீபம், நைந்த ஆவியுள்ளவர்களை ரட்சிக்கிறார்.”

சங். 103:13, 14, தி.மொ.: “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நமது உருவம் இன்னதென்று அவருக்குத் தெரியும்; நாம் மண்ணே என்று நினைவுகூருகிறார்.”

நெகே. 9:17, தி.மொ.: “கடவுளாகிய நீரோ வெகுவாய் மன்னிப்பவர், இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர்.”

2 பேதுரு 3:9, 15: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்.”