Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள்

கடவுள்

கடவுள்

சொற்பொருள் விளக்கம்:  ஈடற்ற உன்னதர், அவருடைய தனிச் சிறப்புப் பெயர் யெகோவா. எபிரெய மொழி, பலத்தையும், மாட்சிமை, உயர்மதிப்பு, மற்றும் முதன்மைநிலையையும் பற்றிய எண்ணத்தைத் தெரிவிக்கும் பதங்களைக் “கடவுளுக்குப்” பயன்படுத்துகிறது. உண்மையான கடவுளுக்கு நேர்மாறாக, பொய்க் கடவுட்களும் இருக்கின்றனர். அவர்களில் பலர் தங்களைத்தாங்களே கடவுட்களாக ஏற்படுத்தி வைத்துக்கொண்டனர்; மற்றவர்கள் வணக்கப் பொருட்களாகத் தங்களைச் சேவிப்பவர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றனவா?

சங். 19:1: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.”

சங். 104:24: “யெகோவா, உமது செயல்கள் எவ்வளவு திரளானவை! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உமது சிருஷ்டிகள் நிறைந்துள்ளது.”தி.மொ.

ரோமர் 1:20: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமையும் தெய்வத்துவமும் படைக்கப்பட்டவைகளின் மூலமாய் உலக சிருஷ்டிப்பு முதற்கொண்டு கவனிக்கிறவர்களுக்குத் தெளிவாய்க் காணப்படும்.”—தி.மொ.

நியு சயன்டிஸ்ட் பத்திரிகை சொல்வதாவது: “விஞ்ஞானிகள் மதத்தைத் ‘தவறென நிரூபித்துவிட்டனர்’ என்ற—பொதுவான கருத்து தொர்ந்து இருந்துருகிறது. இது, விஞ்ஞானிகளை அவிசுவாசிகளாயிருக்கும்படி பொதுவாய் எதிர்பார்ப்பதும்; டார்வின் கடவுளுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணிகளை அடித்துவிட்டானென்பதும்; மேலும் அதுமுதற்கொண்டு டுத்தடுத்துத் தொரும் விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப ஆய்வுநூல் புதுவழியமைப்புகள் எந்த உயிர்த்தெழுதலின் சாத்தியத்தையும் தகுதியற்றதெனத் தள்ளிவிட்டன என்பதுமான ஒரு கருத்து. இந்தக் கருத்து முற்றிலும் கண்மூடித்தனமான தவறாகும்.”—மே 26, 1977, பக். 478.

விஞ்ஞானங்களின் ஃபிரெஞ்ச் கலைக்கழகத்தின் ஓர் உறுப்பினர் கூறினதாவது: “இயற்கை ஒழுங்கு மனித மனதால் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது ஏதோவொரு அறிவுணர்வு வல்லமைகளால் ஏற்படுத்தி வைக்கப்படவுமில்லை. . . . இந்த ஒழுங்கு இருந்துவருவது ஒழுங்குபடுத்தியமைக்கும் புத்திக்கூர்மையுடையவர் முன் இருப்பதன் அவசியத்தைத் தேவைப்படுத்துகிறது. இத்தகைய புத்திக்கூர்மையுடையவர் கடவுளேயல்லாமல் வேறொருவருமல்லர்.”—Dieu existe? Oui (பாரிஸ், 1979), கிறிஸ்டியன் சபானிஸ், பியரி-பால் கிராஸி சொன்னதை மேற்கோளாகக் குறிப்பிடுகிறார், பக். 94.

விஞ்ஞானிகள் 100-க்கு மேற்பட்ட இரசாயன மூலப்பொருட்களை அடையாளங்கண்டுபிடித்திருக்கின்றனர். அவற்றின் அணு இயக்கத்துக்குரிய அமைப்பு கடுஞ்சிக்கலான கணக்குத்தவறாத இடையுறவுத்தன்மையைக் காட்டுகிறது. அணு எண்ணின்படி ஒழுங்குபடுத்தப்பட்ட மூலப்பொருட்களின் பட்டியல் தெளிவான திட்ட அமைப்பைக் குறிப்பிடுகிறது. இத்தகைய வியப்புக்கேதுவான திட்ட அமைப்பு தற்செயலாக, குருட்டிணைவு பலனால் உண்டான பொருளாக இருக்க முடியாது.

உதாரணம்: ஒரு நிழற்படக் கருவி, ஒரு வானொலிப் பெட்டி, அல்லது ஒரு கம்ப்யூட்டரை நாம் காண்கையில், அது புத்திக்கூர்மையுள்ள திட்ட அமைப்பாளர் ஒருவரால் உண்டுபண்ணப்பட்டிருக்கவேண்டுமென நாம் உடனடியாக ஒப்புக்கொள்கிறோம். அப்படியானால், அவற்றைப் பார்க்கிலும் மிக அதிகச் சிக்கலான பொருட்கள்—கண், செவி, மற்றும் மனித மூளை—புத்திக்கூர்மையுள்ள திட்ட அமைப்பாளரால் படைத்துருவாக்கப்படவில்லையென்று சொல்வது நியாயமானதா?

மேலும் பக்கங்கள் 84-86-ல், “படைப்பு” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

அக்கிரமமும் துன்பமும் இருந்துவருவது கடவுள் இல்லையென்று நிரூபிக்கிறதா?

உதாரணங்களைக் கவனியுங்கள்: கொலைசெய்வதற்குக் கத்திகள் பயன்படுத்தப்பட்டு வருவது அவற்றை ஒருவரும் திட்டமிட்டு அமைக்கவில்லையென்று நிரூபிக்கிறதா? போர்க் காலங்களில் குண்டுகள் எறிவதற்கு ஜெட் விமானங்களைப் பயன்படுத்துவது அவற்றிற்குத் திட்டமிட்ட அமைப்பாளர் இல்லையென்ற அத்தாட்சியாகுமா? அல்லது அவை பயன்படுத்தும் முறையே மனிதவர்க்கத்துக்குத் துயரத்தை உண்டாக்குகிறதா?

மனிதனின் சொந்த மோமான வாழ்க்கைப் பழக்கங்களும், சுற்றுப்புத்தை அவன் தனக்கும் மற்றவர்களுக்கும் கெடுத்துக்கொள்வதுமான இவற்றின் விளைவினால் பெரும்பான்மையான நோய்கள் உண்டாவது உண்மையல்லவா? மனிதர் தொடுத்தப் போர்கள் மனிதரின் துன்பங்களுக்குப் பெரும்படியான காரணமல்லவா? மேலும் லட்சக்கணக்கானோர் உணவு போக்குறைவினால் துன்பப்படுகையில், மற்ற நாடுகளில் போதியதற்கும் மிஞ்சியிருப்பதும், இவ்வாறு அடிப்படை பிரச்னைகளில் ஒன்று மனிதப் பேராசையாக இருக்கிறதல்லவா? இவை யாவும், கடவுள் இல்லை என்பதற்கல்ல, மனிதர், கடவுள் கொடுத்த தங்கள் திறமைகளையும் இந்தப் பூமியையும்தானே விசனகரமாய்த் தகாத முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கே அத்தாட்சியைக் கொடுக்கின்றன.

மனிதராகிய நமக்கு நடப்பவற்றைக் குறித்துக் கடவுள் உண்மையில் அக்கறைகொள்கிறாரா?

ஆம், நிச்சயமாகவே! இந்த அத்தாட்சியைக் கவனியுங்கள்: “கடவுள் மனிதனுக்குப் பரிபூரண தொக்கத்தைக் கொடுத்தாரென பைபிளில் நமக்குச் சொல்லியிருக்கிறது. (ஆதி. 1:27, 31; உபா. 32:4) எனினும், மனிதன் கடவுளுடைய தயவைத் தொர்ந்து அனுபவித்து மகிழ்வது, அவன் தன்னை உண்டாக்கினவருக்குக் கீழ்ப்படிவதன்பேரில் சார்ந்திருந்தது. (ஆதி. 2:16, 17) மனிதன் கீழ்ப்படிந்திருந்தால், அவன் பரிபூரண மனித வாழ்க்கையைத் தொர்ந்து அனுபவித்து மகிழ்வான்—நோயிராது, துன்பமிராது, மரணமிராது. சிருஷ்டிகர் அவனுக்குத் தேவைப்படும் வழிநடத்துதலைக் கொடுத்து எந்த ஆபத்துக்கும் எதிராக மனிதவர்க்கத்தைப் பாதுகாப்பதற்குத் தம்முடைய வல்லமையைப் பயன்படுத்துவார். ஆனால் மனிதன் கடவுளுடைய வழிநடத்துதலைத் தள்ளிவிட்டான்; சுய-ஆட்சிப் போக்கைத் தெரிந்துகொண்டான். அதற்காகத் தான் ஒருபோதும் திட்டமிட்டமைக்கப்படாத ஒன்றைச் செய்ய முயன்றதில், அவன் தன்பேரில் பெரும் துன்பத்தைக் கொண்டுவந்தான். (எரே. 10:23; பிர. 8:9; ரோமர் 5:12) எனினும், கடவுள், தம்மையும் தம்முடைய வழிகளையும் நேசிப்பதனால் தம்மைச் சேவிக்க மனமுள்ளோரை நூற்றாண்டுகளினூடே பொறுமையாய்த் தேடிக்கொண்டிருக்கிறார். மனிதனின் அபூரணங்களினாலும் தவறான ஆட்சியினாலும் தாங்கள் இழக்கச் செய்திருந்த எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்வதற்கான வாய்ப்பை அவர் அவர்களுக்கு முன் வைக்கிறார். (வெளி. 21:3-5) மனிதரைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்குக் கடவுள் தம்முடைய குமாரனைக் கொண்டு செய்த ஏற்பாடு மனிதவர்க்கத்தின்பேரிலுள்ள கடவுளுடைய பெரிய அன்பின் அதிசயமான அத்தாட்சியாகும். (யோவான் 3:16) கடவுள் ஒரு குறிக்கப்பட்ட நேரத்தையும் வைத்திருக்கிறார் அப்பொழுது அவர், பூமியைக் கெடுக்கிறவர்களை அழிப்பார், நீதியை நேசிக்கிறவர்கள் தம்முடைய சொந்த முதல் நோக்கத்துக்குப் பொருந்த வாழ்க்கையை அனுபவித்து மகிழும்படி செய்வார்.—வெளி. 11:18; சங். 37:10, 11; “துன்பம்” மற்றும் “பொல்லாங்கு” என்ற முக்கிய தலைப்புகளின்கீழும் பாருங்கள்.

கடவுள் உண்மையான ஓர் ஆளா?

எபி. 9:24: “கிறிஸ்துவானவர் . . . பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.”

யோவான் 4:24: “தேவன் ஆவியாயிருக்கிறார்.”

யோவான் 7:28: “என்னை அனுப்பினவர் மெய்ப்பொருளானவர்.”—தி.மொ.

1 கொரி. 15:44: “ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.”

உயிருள்ள ஆட்களோடு நாம் சம்பந்தப்படுத்தும் வகையான உணர்ச்சிகள் கடவுளுக்கு உண்டா?

யோவான் 16:27: “நீங்கள் என்னை நேசித்து நான் கடவுளிடமிருந்து வந்தேனென்று நம்பியிருக்கிறபடியினால் பிதாதாமே உங்களை நேசிக்கிறார்.”

ஏசா. 63:9: “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; . . . அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்”டார்.

1 தீமோ. 1:11: “நித்தியானந்த தேவன்.”

கடவுளுக்கு ஒரு தொக்கம் இருந்ததா?

சங். 90:2: “மலைகள் தோன்றுமுன்னும் பூமியையும் உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும் ஆதியந்தமில்லாத சதாகாலங்களிலும் நீரே கடவுள்.”—தி.மொ.

இது பகுத்தறிவுக்கு ஒத்ததா? நம்முடைய மனம் இதை முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அதை மறுத்துவிடுவதற்கு இது சரியான காரணம் அல்ல. உதாரணங்களைக் கவனியுங்கள்: (1) காலம். காலத்தின் தொக்கமென ஏதோ ஒரு விநாடியை ஒருவரும் குறித்துக் காட்ட முடியாது. நம்முடைய வாழ்க்கை முடிவடைந்தாலும், காலம் முடிவடைகிறதில்லை என்பது உண்மை. காலத்தைப்பற்றி நாம் முற்றிலும் சரியாய்ப் புரிந்துகொள்ளாத அம்சங்கள் இருப்பதால் காலத்தைப்பற்றிய எண்ணத்தை நாம் மறுத்துவிடுகிறதில்லை. அதற்கு மாறாக, அதைத் துணைகொண்டு நாம் நம்முடைய வாழ்க்கையை ஏற்றவாறு சரிப்படுத்தியமைத்துக்கொள்கிறோம். (2) விண்வெளி. வான்கணிப்பாளர் விண்வெளிக்கு தொக்கத்தையோ அல்லது முடிவையோ காண்கிறதில்லை. சர்வலோகத்துக்குள் அவர்கள் எவ்வளவு அதிக தூரம் ஆராய்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமும் அது இருந்துகொண்டிருக்கிறது. அத்தாட்சி காட்டுவதை அவர்கள் மறுத்துவிடுகிறதில்லை; பலர் விண்வெளியை முடிவற்றதெனக் குறிப்பிடுகின்றனர். கடவுள் இருப்பதற்கும் இதே நியமம் பொருந்துகிறது.

மற்ற உதாரணங்கள்: (1) சூரியனின் வெப்பம் அதன் மையப்பகுதியில் 2,70,00,000 டிகிரிகள் பாரன்ஹீட் (1,50,00,000° C.) என்று வான்கணிப்பாளர் நமக்குச் சொல்கின்றனர். இத்தகைய மிகக் கடுமையான வெப்பத்தை நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாததனால் அந்த எண்ணத்தை நாம் மறுத்துவிடுகிறோமா? (2) நம்முடைய பால்வீதி மண்டலத்தின் பரப்பளவு அவ்வளவு பெரிதாயிருப்பதால் ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்களுக்கு (வினாடிக்கு 3,00,000 கி.மீ.) மேல் செல்லும் ஓர் ஒளிக்கதிர் அதைக் குறுக்கே கடப்பதற்கு 1,00,000 ஆண்டுகள் எடுக்கும் என்று அவர்கள் நமக்குச் சொல்கிறார்கள். இத்தகைய தூரத்தை நம்முடைய மனம் உண்மையில் புரிந்துகொள்கிறதா? எனினும் விஞ்ஞான அத்தாட்சி அதை ஆதரிப்பதால் நாம் அதை ஏற்கிறோம்.

எது அதிக நியாயமுள்ளது—இந்தச் சர்வலோகம் புத்திக் கூர்மையுடைய அறிவுள்ள சிருஷ்டிகரின் படைப்பு என்பதா? அல்லது புத்திக்கூர்மையுள்ள வழிநடத்துதல் இல்லாமல் உயிரற்ற மூலத் தோற்றத்திலிருந்து வெறுமென தற்செயலாய் எழும்பியிருக்கவேண்டும் என்பதா? சில ஆட்கள் பிந்திய கருத்தை ஏற்கின்றனர், ஏனெனில் மற்றப்படி நம்புவது, தாங்கள் அவருடைய தன்மைகளை முழுவதும் புரிந்துகொள்ள முடியாத ஒரு சிருஷ்டிகர் இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதைக் குறிக்கும். ஆனால் உயிரணுக்களுக்குள் இருப்பவையும் அவை வளரும் முறையைத் தீர்மானிப்பவையுமான ஜீன்களின் இயக்கங்களை விஞ்ஞானிகள் முழுமையாய்ப் புரிந்துகொள்கிறதில்லை என்பது யாவருக்கும் தெரிந்ததே. மனித மூளையின் இயக்கத்தையும் அவர்கள் முழுவதும் புரிந்துகொள்கிறதில்லை. எனினும், அவை இருப்பதை யார் மறுப்பர்? இந்தச் சர்வலோகத்தை அதன் எல்லாக் கடுஞ் சிக்கலான திட்ட அமைப்புடனும் மிகப்பெரிய அளவுடனும் உண்டாகியிருக்கச் செய்யக்கூடிய அவ்வளவு மிகப் பெரியவரான ஓர் ஆளைப்பற்றி எல்லாவற்றையும் புரிந்துகொள்ள நாம் உண்மையில் எதிர்பார்க்க வேண்டுமா?

கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது முக்கியமா?

ரோமர் 10:13: “யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.”—NW.

எசே. 39:6: “நானே யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள்.”

இயேசு தம்முடைய பிதாவிடம் பின்வருமாறு கூறினார்: “உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் [தம்மை உண்மையுடன் பின்பற்றினோருக்குத்] தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.”—யோவான் 17:26.

மேலும் பக்கங்கள் 196, 197, “யெகோவா” என்பதன்கீழ்ப் பாருங்கள்.

நமக்கு ஏதோ ஒரு மதம் இருக்கும் வரையில், எந்தக் கடவுளை நாம் சேவிக்கிறோம் என்பது முக்கியமா?

1 கொரி. 10:20: “அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்கள்.”

2 கொரி. 4:4: “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (இங்கே பிசாசானவனைத் “தேவன்” என குறிப்பிட்டிருக்கிறது. 1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9-ஐயும் பாருங்கள்.)

மத். 7:22, 23: “அந்நாளில் அநேகர் என்னை [இயேசு கிறிஸ்து] நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (கிறிஸ்தவனென உரிமைபாராட்டிக்கொள்வதுதானேயும், நாம் உண்மையான கடவுளை அவர் ஏற்கத்தக்க முறையில் சேவிக்கிறோமென்பதற்கு உறுதிதருவதில்லை.)

மேலும் பக்கங்கள் 322, 323, “மதம்” என்ற தலைப்பின்கீழ் பாருங்கள்.

யெகோவா “ஒரே உண்மையான கடவுள்,” என்றால் இயேசு என்ன வகையான “கடவுள்”?

இயேசுதாமே தம்முடைய தகப்பனை “ஒரே உண்மையான கடவுள்,” (யோவான் 17:3, NW) எனக் குறிப்பிட்டார். யெகோவாதாமே பின்வருமாறு கூறினார்: “என்னைத் தவிரத் தேவன் இல்லை.” (ஏசா. 44:6) உண்மையான கிறிஸ்தவர்களுக்குப் “பிதாவாகிய ஒரே கடவுள் உண்டு,” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினான். (1 கொரி. 8:5, 6) ஆகையால் யெகோவா ஈடிணையற்றவர். வேறொருவரும் அவருடைய இடத்தைப் பகிர்ந்துகொள்கிறதில்லை. விக்கிரகங்கள், தெய்வமாக்கப்பட்ட மனிதர், சாத்தான் போன்ற இத்தகைய எல்லாப் பொருட்களுக்கும் முற்றிலும் நேர்மாறாக யெகோவா நிற்கிறார். அவை யாவும் பொய்க் கடவுட்கள்.

வேத எழுத்துக்களில் இயேசுவை “ஒரு கடவுள்,” எனவும் “வல்லமையுள்ள கடவுள்” எனவும் பேசியிருக்கிறது. (யோவான் 1:1; ஏசா. 9:6, தி.மொ.) ஆனால், யெகோவா இருப்பதுபோல், அவர் சர்வவல்லமையுள்ள கடவுளென அதில் எங்கும் பேசப்படவில்லை. (ஆதி. 17:1) இயேசு “அவருடைய [கடவுளுடைய] மகிமையின் பிரகாசம் [பிரதிபலிப்பு, NW],” என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் பிதா அந்த மகிமையின் மூலகாரணர். (எபி. 1:3) இயேசு தம்முடைய பிதாவின் ஸ்னத்தை எவ்வகையிலும் நாடுகிறதில்லை. அவர் சொன்னதாவது: “உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்கவேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செய்யவேண்டும்.” (லூக்கா 4:8, NW) அவர் ‘தேவனுடைய ரூபமாயிருக்கிறார்,’ மேலும் “இயேசுவின் நாமத்தில் . . . முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு,” பிதா கட்டளையிட்டிருக்கிறார், ஆனால் இதெல்லாம் “பிதாவாகிய தேவனுக்கு மகிமையாகச்” செய்யப்படுகிறது.—பிலி. 2:5-11; பக்கங்கள் 212-216-ஐயும் பாருங்கள்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘எனக்குக் கடவுளில் நம்பிக்கை இல்லை’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் எப்பொழுதும் இவ்வாறு உணர்ந்தீர்களா? . . . இந்த முடிவுக்கு வருவதற்கு முன், அவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டுவித்த ஏதாவது அத்தாட்சியை எவரிடமாவது நீங்கள் ஆராய்ந்துபார்த்தீர்களா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘இது எனக்கு மிகுந்த அக்கறையூட்டும் பேச்சுப் பொருள், நான் இதற்கு மிகுதியான சிந்தனை செலுத்தியிருக்கிறேன். எனக்கு மிக உதவியாயிருந்த குறிப்புகளில் சில இவை: . . . (பக்கம் 145-ல், “கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றனவா?” என்ற உபதலைப்பின்கீழும், பக்கங்கள் 84-86-ல் “சிருஷ்டிப்பு” என்பதன்கீழும் பாருங்கள்.)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘சிருஷ்டிகர் ஒருவர் இருப்பதை நீங்கள் நம்புகிறதில்லையென பொருள்கொள்கிறீர்களா, அல்லது சர்ச்சுகளில் அவ்வளவு மிகப் பாசாங்குத்தனத்தை நீங்கள் கண்டதால் அவர்கள் கற்பிப்பதில் உங்களுக்கு விசுவாசமில்லையா?’ பின்சொன்னது காரணமாயிருந்தால், நீங்கள் மேலும் சொல்லலாம்:  ‘கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்கும் உண்மையான கிறிஸ்தவத்துக்குமிடையே பெரும் வேறுபாடு இருக்கிறது. கிறிஸ்தவமண்டலம் ஜனங்களைக் கொடுமைப்படுத்தியிருப்பது உண்மையே, ஆனால் கிறிஸ்தவம் அவ்வாறு செய்யவில்லை. கிறிஸ்தவமண்டலம் போரிட்டுள்ளது, ஆனால் கிறிஸ்தவம் அவ்வாறு செய்யவில்லை. கிறிஸ்தவமண்டலம் சரியான ஒழுக்க வழிநடத்துதலை அளிக்கவில்லை, ஆனால் கிறிஸ்தவம் அவ்வாறு செய்வில்லை. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், கிறிஸ்தவமண்டலத்தை ஆதரிக்கிறதில்லை. அதற்கு நேர்மாறாக, அது கிறிஸ்தவமண்டலத்தைக் கண்டனம் செய்கிறது.’

பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை:  ‘உங்களைப்போல் உணர்ந்த மற்றவர்களுடன் அக்கறையூட்டும் உரையாடல்களை நான் அனுபவித்திருக்கிறேன். அவர்களில் சிலர், இந்த உலகத்தில் நடக்கும் எல்லாத் துன்பங்களையும் அக்கிரமங்களையும் காண்கையில் கடவுளில் நம்பிக்கைவைக்கத் தங்களால் முடிகிறதில்லையென்று சொன்னார்கள். நீங்களும் அவ்வாறு உணருகிறீர்களா? (அப்படியானால், 146, 147-ம் பக்கங்களில், “அக்கிரமமும் துன்பமும் இருந்துவருவது கடவுள் இல்லையென்று நிரூபிக்கிறதா?” என்ற உபதலைப்பின்கீழுள்ள குறிப்புகள் சிலவற்றைப் பயன்படுத்துங்கள்.)’

‘நான் பார்க்க முடிகிறதை மாத்திரமே நம்புகிறேன், நான் கடவுளை ஒருபோதும் பார்த்ததில்லை’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இந்தக் கருத்து இந்நாட்களில் வெகு சாதாரணமாயிருக்கிறது. அதற்கு ஒரு காரணமுண்டு. பொருளுடைமைகளின்பேரில் அழுத்தம் வைக்கும் ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால் நீங்கள் மெய்ம்மைப்படி இருக்க விரும்பும் ஓர் ஆள் அல்லவா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘நாம் கண்களால் பார்க்க முடியாதவையும் ஆனால் அவை இருப்பதை நம்ப நல்ல காரணங்கள் இருப்பதால் அவ்வாறு நாம் நம்புவதுமான சில பொருட்கள் இருக்கின்றனவா? நாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றியதென்ன? காற்று வீசுகையில் நாம் அதை உணரலாம். நாம் அதைப் பார்க்காவிடினும் அது நம்முடைய நுரையீரல்களை நிரப்புகிறதென நாம் சொல்ல முடியும். அதன் விளைவுகளை நாம் காண்பதால் அதை நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது, அல்லவா?’ (2) ‘மேலும் புவி ஈர்ப்பு விசையை நாம் பார்க்கமுடியாது. ஆனால் நாம் எதையாவது கீழே போடுகையில் புவி ஈர்ப்பு விசை இயங்குவதன் அத்தாட்சியைக் காண்கிறோம். மணங்கள் வீசுவதையும் நாம் பார்க்கிறதில்லை, ஆனால் நம்முடைய மூக்கு அவற்றை முகர்ந்தறிகிறது. ஒலியலைகளை நாம் பார்க்கமுடியாது, ஆனால் நம்முடைய காதுகள் அவற்றை உணர்ந்துகொள்கின்றன. ஆகையால் நாம் பார்க்க முடியாத பொருட்கள் இருப்பதை நாம் நம்புகிறோம்—நல்ல காரணம் இருந்தால் அவ்வாறு நம்புகிறோம், சரிதானே?’ (3) ‘காணமுடியாத கடவுள் உண்மையில் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறதா? (பக்கங்கள் 145, 146-ல் “கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றனவா?” என்ற உபதலைப்பின்கீழுள்ள குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.)’

‘கடவுளைப்பற்றி என் சொந்தக் கருத்து எனக்கு இருக்கிறது’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் இந்தக் காரியத்துக்கு எண்ணம் செலுத்தியிருக்கிறவர் மேலும் கடவுளில் நம்பிக்கை வைப்பவர் என்பதை அறிவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து என்னவென நான் கேட்கலாமா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘நாம் நம்புவது எதுவாயினும் அது கடவுள்தாமே சொல்வதற்குப் பொருந்த இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்வது முக்கியமென்பதை நீங்கள் மதிக்கிறீர்களென நான் நிச்சயமாயிருக்கிறேன். இந்தக் காரியத்தின்பேரில் வெறும் ஓர் எண்ணத்தை மாத்திரம் நான் பைபிளிலிருந்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமா? (சங். 83:17)’