Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடைசி நாட்கள்

கடைசி நாட்கள்

கடைசி நாட்கள்

சொற்பொருள் விளக்கம்:  காரியங்களின் ஓர் ஒழுங்குமுறைக்குரிய முடிவைக் குறிக்கும் நியமிக்கப்பட்ட தெய்வீகத் தீர்ப்பின் நிறைவேற்றத்துக்கு வழிநடத்தும் முடிவான காலப் பகுதியைக் குறிப்பதற்குக் “கடைசி நாட்கள்” என்றச் சொற்றொடர் பைபிளில் பயன்படுத்தியிருக்கிறது. யூத ஒழுங்குமுறை, எருசலேமிலிருந்த ஆலயத்தை மையமாகக் கொண்டமைந்த அதன் வணக்கத்தோடுகூட, அதன் கடைசி நாட்களை, 70-இல் அது அழிக்கப்பட்டதுடன் முடிவடைந்த அந்தக் காலப்பகுதியின்போது அனுபவித்தது. அப்பொழுது நடந்தது, எல்லாத் தேசங்களும் கடவுள் அளித்துள்ள தண்டனைத்தீர்ப்பை எதிர்ப்படும் சமயத்தில் மிகக் கடுமையான முறையிலும் பூகோள அளவிலும் அனுபவிக்கப் போவதைக் குறித்துக்காட்டும் சித்தரிப்பாயிருந்தது. தற்போதைய உலகமெங்கும் பரவியுள்ள, இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறை, 1914-ல் அதன் கடைசி நாட்களுக்குள் பிரவேசித்தது. மேலும் அப்பொழுது உயிரோடிருந்த சந்ததியில் சிலர் “மிகுந்த உபத்திரவத்தில்” அதன் முழுமையான முடிவை நேரில் காண்பதற்கு அப்பொழுதிருப்பார்கள்.

இன்று நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கிறோமென எது குறித்துக் காட்டுகிறது

தனிக்கவனிப்புக்குரிய இந்தக் காலப்பகுதியை அடையாளங் குறித்துக் காட்டும் சம்பவங்களும் நிலைமைகளும் பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த “அடையாளம்” பல அத்தாட்சிகள் அடங்கிய ஒரு கூட்டு அடையாளம் ஆகும்; இவ்வாறு இதன் நிறைவேற்றம், இந்த அடையாளத்தின் அம்சங்கள் யாவும் ஒரே சந்ததியின்போது தெளிவாய்க் காணப்படுவதைத் தேவைப்படுத்துகிது. இந்த அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் மத்தேயு 24-ம், 25-ம் அதிகாரங்கள், மாற்கு 13, லூக்கா 21 ஆகிவற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன; மேலுமான நுட்பவிவரங்கள் 2 தீமோத்தேயு 3:1-5, 2 பேதுரு 3:3, 4, மற்றும் வெளிப்படுத்துதல் 6:1-8 ஆகியவற்றில் இருக்கின்றன. விளக்கிக் காட்டும் உதாரணமாக, இந்த அடையாளத்தின் ஒருசில முனைப்பான பகுதிகளை நாம் கவனித்துப் பார்ப்போம்.

“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்” (மத். 24:7)

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் போர் பூமியில் வாழ்க்கையை முழுவதும் பாழ்ப்படுத்தி இருக்கிறது. சர்வதேச போர்களும் தேசங்களுக்குள் போர்களும் தொடுக்கப்பட்டிகின்றன. ஆனால் முதல் உலகப் போர் 1914-ல் தொங்கி தொடுக்கப்பட்டது. இது போர்க்களத்தில் வெறும் இரண்டு படைகளுக்கிடையே நடந்தச் சண்டை அல்ல. முதல் தடவையாக எல்லாப் பெரும் வல்லரசுகளும் போரில் ஈடுபட்டன. முழு தேசங்களும்—படைத்துறை சாராத பொது ஜனத்தொகயினரும்—போர் முயற்சியை ஆதரிக்கும்படி ஆயத்தமாக்கப்பட்டனர். அந்தப் போரின் முடிவுக்குள் உலக ஜனத்தொகயில் 93 சதவீதம் போரில் உட்பட்டனரென மதிப்பிடப்பட்டிருக்கிறது. (1914-ன் சரித்திரசார்பான தனி விளைவைக் கவனிக்க, பக்கங்கள் 239, 240-ஐப் பாருங்கள்.)

வெளிப்படுத்துதல் 6:4-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி, ‘சமாதானம் பூமியிலிருந்து எடுத்துப்போடப்பட்டது.’ இவ்வாறு 1914 முதற்கொண்டு இந்த உலகம் பொங்கியெழுந்துகொண்டிருக்கும் நிலையில் தொர்ந்திருக்கிறது. 1939-லிருந்து 1945 வரையில் இரண்டாம் உலகப் போர் தொடுக்கப்பட்டது. ஓய்வுபெற்ற கப்பற்படைத் தலைவர் ஜீனி டல ரோக்கோ 1982-ல் சொன்னபடி, 1945 முதற்கொண்டு மற்றும் 270 போர்கள் நடந்திருக்கின்றன. இந்த நூற்றாண்டின்போது 10 கோடிக்கு மேற்பட்ட மக்கள் போர்களில் கொல்லப்பட்டனர். மேலும், உலக இராணு மற்றும் சமுதாய செலவுகள் என்ற பத்திரிகையின் 1982-க்குரிய பதிப்பின் பிரகாரம், அந்த ஆண்டில் 10 கோடி மக்கள் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தீர்க்கதரிசனத்தின் இந்த அம்சத்தை நிறைவேற்றுவதற்கு இன்னும் அதிகம் தேவையா? உடனடியான உபயோகத்துக்காகப் பத்தாயிரக்கணக்கான அணுசக்திப் படைக்கலங்கள் அணிவரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேசங்கள் தங்கள் அணுசக்தி படைக்கலச்சாலையிலுள்ளவற்றில் ஒரு சிறு பின்னப்பகுதியைப் பயன்படுத்தினாலும், நாகரிகம் அழிக்கப்படுமென, பெரும்பாலும் மனிதவினங்கள் முழுமையுமே அழிக்கப்படுமென முதன்மையான விஞ்ஞானிகள் சொல்லியிருக்கின்றனர்.

“இங்குமங்கும் பஞ்சங்களும் [உணவுகுறைபாடுகளும், NW] . . . உண்டாகும்” ( மத். 24:7, தி.மொ.)

மனித சரித்திரத்தில் பல பஞ்சங்கள் உண்டாயிருந்திருக்கின்றன. இந்த 20-ம் நூற்றாண்டு எந்த அளவுக்கு இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது? உலகப் போர் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் விரிவாய்ப் பரவிய பட்டினிக்கு வழிநடத்தினது. ஆப்பிரிக்கா வறட்சியால் பீடிக்கப்பட்டது, இதன்விளைவாக மிக விரிவாய் உணவுகுறைபாடுகள் உண்டாயிற்று. பின்னால் 1980-ல் உணவு மற்றும் விவசாய அமைப்பு, 45 கோடி மக்கள் பட்டினிநிலையில் பசியாயிருந்தனரெனவும், 100 கோடிக்கணக்கான ஆட்களுக்கு உண்பதற்குப் போதிய உணவில்லை எனவும் மதிப்பிட்டது. உணவுபோதாக் குறைவினால் இவர்களில் ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 4 கோடி மக்கள்—சில ஆண்டுகளில் 5 கோடி அளவாகவுங்கூட—உண்மையில் சாகின்றனர்.

இந்த உணவு குறைபாடுகளைப் பற்றியதில் ஏதாவது வேறுபட்டத் தன்மை உண்டா? ஆம்; உணவு கிடைக்கக்கூடியபோதிலும் இவை தொர்ந்துள்ளன. சில நாடுகள் தேவைக்கு மிஞ்சிய பெரும் கையிருப்புகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் நவீன போக்குவரத்து சாதனங்கள் தேவையிலுள்ளோருக்கு இந்தப் பொருட்களை விரைவில் கொண்டுசென்றளிக்க முடியும். ஆனால் தேசீய அரசியல் போக்கும் வாணிக அக்கறைகளும் வேறுவகையில் திட்டமிட்டு கட்டளையிடலாம். உண்மையில், லட்சக்கணக்கான ஆட்களுக்கு உண்பதற்கு வெகு சொற்பமேயுள்ள நாடுகள், தங்கள் மிகச் சிறந்த உணவின் பெரும்பாகத்தை ஏற்கெனவே ஏராளமான உணவுபொருட்களுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டுமிருக்கலாம்.

இந்நிலைமை இனிமேலும் ஒரு தனி இடத்துக்குரியதல்ல, பூகோள நிலைமையாயிருக்கிறது. 1981-ல் தி நியு யார்க் டைம்ஸ் பின்வருமாறு அறிவிப்பு செய்தது: “வாழ்க்கைத் தராதரங்களில் முன்னேற்றமும் உலகமுழுவதும் உணவுக்கானத் தேவை பெருகுவதும் உணவு விலைகளின்பேரில் எதிர்ப்பழுத்தத்தை வைத்திருக்கிறது, இது மிக ஏழ்மையான நாடுகள் தங்கள் உணவு தேவைகளை இறக்குமதிசெய்வதைக் கடினமாக்குகிறது.” பல நாடுகளில், நவீன விஞ்ஞான உதவிகளோடுங்கூட, உணவு உற்பத்தி மொத்த ஜனத்தொகயில் ஏற்படும் பெருக்க வேகத்தோடு உடன் பெருகிக்கொண்டிருக்க முடிவில்லை. தற்கால உணவு நிபுணர்கள் இந்தப் பிரச்னைக்கு உண்மையான தீர்வு எதையும் காண்கிறதில்லை.

“பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும் . . . உண்டாகும்” (லூக்கா 21:11)

கடந்த நூற்றாண்டுகளில் பெரும் பூமியதிர்ச்சிகள் உண்டானது உண்மையே; மேலும், விஞ்ஞானிகள் தங்கள் பதிவுநுட்பப் பண்புள்ள சாதனங்களைக்கொண்டு இப்பொழுது ஆண்டுக்குப் பத்துலட்சத்துக்கு மேற்பட்ட அதிர்ச்சிகளைக் கூர்ந்து கண்டுணருகிறார்கள். ஆனால் ஒரு மகா பூமியதிர்ச்சி உண்டாகையில் அதை அறிந்துகொள்ள ஜனங்களுக்கு எத்தகைய தனித்தன்மவாய்ந்தக் கருவிகளும் தேவையில்லை.

1914 முதற்கொண்டு தனிக் கவனிப்புக்குரிய எண்ணிக்கையான பெரும் பூமியதிர்ச்சிகள் உண்மையாகவே உண்டாயிருந்தனவா? கோலாரோடோவில், போல்டரிலுள்ள தேசீய நிலயியல் சார்ந்த செய்திக் குறிப்புகளுக்குரிய மையத்திலிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலோடு ஏற்புடைய பல துணையாதாரக் குறிப்புகள் இணைத்து குறை நிரப்பி 1984-ல் ஓர் அட்டவணை உண்டாக்கப்பட்டது, இதில் ரிச்டர் அளவுக் கருவியின்படி 7.5 அல்லது அதற்கு மேற்பட்ட அளவாயிருந்த, அல்லது உடைமையில் ஏறக்குறைய 8.5 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள அல்லது அதற்குமேற்பட்ட அளவான அழிவை உண்டுபண்ணின, அல்லது 100 அல்லது அதற்குமேற்பட்ட சாவுகளை உண்டுபண்ணின பூமியதிர்ச்சிகள் மாத்திரமே சேர்க்கப்பட்டன. 1914-க்கு முந்திய 2,000 ஆண்டுகளின்போது அத்தகைய பூமியதிர்ச்சிகள் 856 ஏற்பட்டிருந்தனவெனக் கணக்கிடப்பட்டது. அதே அட்டவணை, 1914-ஐ பின்தொடர்ந்த வெறும் 69 ஆண்டுகளில் மாத்திரமே அத்தகைய 605 பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டனவென காட்டினது. முந்தின 2,000 ஆண்டுகளோடு ஒப்பிட, 1914 முதற்கொண்டு ஓர் ஆண்டுக்குச் சராசரி 20 மடங்குகள் அதிகப்பட்ட பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றனவென இது குறிக்கிறது.

“பல இடங்களில் . . . கொள்ளைநோய்களும் உண்டாகும்” (லூக்கா 21:11)

முதல் உலகப் போர் முடிவடைந்தபோது ஸ்னிஷ் சளிக்காய்ச்சல் பூகோள முழுவதிலும் பரவி, நோய்களின் சரித்திரத்திலேயே இணையற்ற வேகவீதத்தில், 2 கோடிக்கு மேற்பட்ட உயிர்களைக் கொள்ளைக்கொண்டுசென்றது. மருத்துவ விஞ்ஞானத்தில் அவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தும், ஆண்டுதோறும் புற்றுநோய், இருதயநோய், பாலுறவின்மூலமாய்க் கடத்தப்படுகிற மிகப்பல நோய்கள், பல உறுப்புகள் இழைம காழ்ப்புக் கோறு, மலேரியா, நதிக் குருடு, சாகஸின் நோய் ஆகியவை மிகுதியான உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணிக்கொண்டிருக்கின்றன.

‘அக்கிரமம் மிகுதியாவதோடு அநேகருடைய பங்கில் அன்பு தணிந்துபோவது’ (மத். 24:11, 12)

சிறப்புவாய்ந்த குற்றவியல்நூல் வல்லுநர் ஒருவர் சொல்வதாவது: “உலக அளவில் குற்றச் செயல்களை நோக்குகையில் உங்களை மிக ஆச்சரியப்படச் செய்யும் ஒருகாரியம் என்னவெனில் எல்லா இடங்களிலும் அதன் ஊடுருவிப் பரவும் மற்றும் விடாப்பிடியாய் முன்னேறும் அதிகரிப்பேயாகும். விதிவிலக்கு ஏதேனும் இருந்தால் அவை தனிச்சிறப்பான நிலையில் ஒதுங்கிநிற்கத் தோன்றுகிறது, அவை இந்த மேலெழும் பெருக்கத்தில் சீக்கிரத்தில் அமிழ்த்தப்பட்டுப்போகும்.” (குற்றச் செயல்களின் வளர்ச்சி, நியு யார்க், 1977, சர் லியோன் ரட்ஸினோவிக்ஸ் மற்றும் ஜோன் கிங், பக். 4, 5) இந்த அதிகரிப்பு மெய்யானது; இது வெறும் ஏற்றுக்கொள்ளத்தக்க அறிவிப்பு செய்யும் காரியமல்ல. கடந்தக்கால சந்ததிகளிலும் குற்றஞ் செய்தவர்கள் இருந்தார்களென்பது மெய்யே, ஆனால் இப்பொழுது இருப்பதுபோல் குற்றச்செயல் நடப்பிப்பது இவ்வளவு படர்ந்து பரவும் பாங்குடையதாக முன்னொருபோதும் இல்லை. வயதுமுதிர்ந்த ஆட்கள் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்தே இதை அறிந்திருக்கிறார்கள்.

தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்ட இந்த அக்கிரமம், அறிந்திருக்கும் கடவுளுடைய சட்டங்களுக்கு அவமதிப்புக் காட்டுவது, தன் வாழ்க்கையில் கடவுளுக்குப் பதிலாகத் தன்னையே மையமாக வைத்தல் ஆகியவை உட்பட்டிருக்கிறது. இந்த மனப்பான்மையின் விளைவாக, மணவிலக்கு வீதங்கள் விரைவாய் உயர்ந்துகொண்டு செல்கிறது, திருமணத்துக்குப் புறம்பான பாலுறவும் ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியும் விரிவாய் ஏற்கப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டிலும் கோடிக்கணக்கான கருச்சிதைவுகள் நடப்பிக்கப்படுகின்றன. இத்தகைய அக்கிரமம், தங்கள் சொந்தப் போகங்களைப் போதிப்பதைத் தெரிந்துகொண்டு கடவுளுடைய வார்த்தையை அவமதித்துத் தள்ளும் பொய்த் தீர்க்கதரிசிகளின் செல்வாக்குடன் (மத்தேயு 24:11, 12-ல்) சம்பந்தப்படுத்தியிருக்கிறது. பைபிளை உறுதியாய்க் கடைப்பிடிப்பதற்குப் பதில் அவர்களுடைய தத்துவ ஞானங்களுக்குச் செவிகொடுப்பது அன்பற்ற உலகத்தை உண்டுபண்ணுகிறது. (1 யோவான் 4:8) இதன் விவரிப்பை 2 தீமோத்தேயு 3:1-5-ல் வாசியுங்கள்.

“பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” (லூக்கா 21:25, 26)

“உண்மை என்னவெனில் இன்று நம்முடைய வாழ்க்கையை ஆட்கொள்ளும் மிகப் பெரிய தனி உணர்ச்சிவேகம் பயமே,” என்று ஐ.மா. செய்தி மற்றும் உலகச் செய்தியறிவிப்பு தாளில் (அக்டோபர் 11, 1965, பக். 144) சொல்லப்பட்டது. “தற்போது இருப்பதுபோல் முன்னொருபோதும் மனிதவர்க்கம் இவ்வளவு பயங்கொண்டதாக இல்லை,” என்று ஜெர்மன் பத்திரிகை ஹோர்ஸு அறிவித்தது.—எண் 25, ஜூன் 20, 1980, பக். 22.

இந்தப் பூகோள பயச் சூழ்நிலையைப் பல காரணங்கள் உண்டுபண்ணுகின்றன, அவை: வன்முறைக் குற்றச்செயல்கள், வேலையில்லாமை, அத்தனை பல தேசங்கள் தீராதக் கடனில் இருப்பதால் பொருளாதார உறுதியின்மை, உலகமெங்கும் வியாபித்துள்ள சுற்றுப்புற தூய்மைக்கேடு, உறுதியும் அன்புமுள்ள குடும்ப இணைப்புகள் இல்லாமை, மனிதவர்க்கம் அணுசக்தியால் முற்றிலும் அழியும் ஆபத்தை நெருங்கியிருக்கிறதென்ற திணறடிக்கும் உணர்ச்சி முதலியன. லூக்கா 21:25-ல், தேசங்களின் தத்தளிப்பு உணர்ச்சியின் சம்பந்தமாக ‘சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றுவதும் சமுத்திரம் முழக்கமாயிருப்பதும்’ குறிப்பிட்டிருக்கிறது. சூரியன் எழும்புவது, அடிக்கடி, மகிழ்ச்சியான எதிர்பார்ப்பையல்ல, அந்த நாள் கொண்டுவரப்போவதைப் பற்றிய பயத்தையே அடிக்கடி உண்டுபண்ணுகிறது; சந்திரனும் நட்சத்திரங்களும் பிரகாசிக்கையில், குற்றச் செயல்களின் பயம் மக்கள் பூட்டப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இருக்கும்படி செய்கிறது. இந்த 20-ம் நூற்றாண்டில், வானங்களிலிருந்து பளீரென்று கீழே விரைந்திறங்கும் அழிவை அனுப்புவதற்கு விமானங்களும் எறிபடைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, இதற்கு முன் அவ்வாறில்லை. எறிகுண்டுகளின் பயங்கர சுமைகளைக் கொண்டுசெல்லும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல்களில் அலைந்து திரிகின்றன, இத்தகைய வெறும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்தானே 160 நகரங்களை அழிப்பதற்குப் போதிய போர்த்தளவாடங்களைக் கொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. தேசங்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதில் அதிசயமொன்றுமில்லை!

‘கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுவோர் அவருடைய பெயரினிமித்தம் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவதற்குரிய இலக்காயிருப்பார்கள்’ (மத். 24:9)

அரசியலில் தலையிடுவதனால் அல்ல, ‘இயேசு கிறிஸ்துவின் பெயரினிமித்தமே,’ இந்தத் துன்புறுத்தல் உண்டாகிறது, அவரைப் பின்பற்றுவோர் யெகோவாவின் மேசியானிய அரசரென அவரைப் பற்றியிருப்பதாலும், பூமிக்குரிய எந்த அரசருக்கும் மேலாக அவர்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதாலும், மனித அரசாங்கங்களின் விவகாரங்களில் உட்படாமல் ராஜ்யத்தினிடம் உண்மைத்தவறாமல் பற்றியிருப்பதாலும் துன்புறுத்தப்படுகிறார்கள். தற்கால சரித்திரம் சாட்சிபகருகிறபடி, பூமியின் எல்லாப் பாகங்களிலும் இது யெகோவாவின் சாட்சிகளின் அனுபவமாயிருந்து வருகிறது.

‘இராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருப்புள்ள பூமியெங்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படுவது’ (மத். 24:14, NW) 

கடவுளுடைய ராஜ்யம் இயேசு கிறிஸ்துவின் அதிகாரப்பொறுப்பில் பரலோகங்களில் ஆளத் தொங்கிவிட்டது, சீக்கிரத்தில் அது இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறை முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவரும், அதன் ஆட்சியின்கீழ் மனிதவர்க்கம் பூமியில் பரிபூரணத்துக்குக் கொண்டுவப்படும் மேலும் பூமி ஒரு பரதீஸாகும் என்பதே பிரசங்கிக்கப்படவேண்டிய அந்தச் செய்தி. இந்த நற்செய்தி இன்று 212-க்கு மேற்பட்ட நாடுகளிலும் தீவுத்தொகுதிகளிலும், பூமியின் மிகத் தொலைதூரப் பாகங்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது, யெகோவாவின் சாட்சிகள், கூடிய எல்லாருக்கும் கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்கும்படி திரும்பத்திரும்ப வீட்டுக்குவீடு சந்திப்புகள் செய்து, இந்த வேலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மணிநேரங்கள் செலவிடுகிறார்கள்.

“கடைசி நாட்களின்” இந்தச் சம்பவங்களெல்லாம் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?

லூக்கா 21:31, 32: “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் [அதாவது, இந்தத் தற்போதைய பொல்லாத உலகத்தை அது அழித்து பூமியின் விவகாரங்களின் முழு பொறுப்பையும் தானே ஏற்கும் அந்தக் காலம்] சமீபமாயிற்றென்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (1914-ல் இந்த அடையாளத்தின் நிறைவேற்றத்தின் தொக்கத்தில் உயிரோடிருந்த அந்தச் “சந்ததி” வயதில் முதிர்ந்திருக்கிறது. மீந்துள்ள காலம் கட்டாயமாக வெகு குறுகியதாய் இருக்கவேண்டும். இவ்வாறே இருக்கிறதென உலக நிலைமைகள் எல்லா அறிகுறியும் கொடுக்கின்றன.)

1914-ல் “கடைசி நாட்கள்” தொங்கின என்று யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்கின்றனர்?

1914-ம் ஆண்டு பைபிள் தீர்க்கதரிசனத்தால் குறிக்கப்படுகிறது. காலக்கணக்கைப்பற்றிய நுட்பவிவரங்களுக்கு, பக்கங்கள் 95-97-ல், “தேதிகள்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள். இந்தத் தேதியின் திருத்தமானத் தன்மை, இந்தக் காலப் பகுதியை அடையாளங்காட்டுவதற்கு முன்னறிவிக்கப்பட்டுள்ள உலக நிலைமைகள் முன்னறிவிக்கப்பட்டபடியே மிக நுட்பமாக 1914 முதற்கொண்டு நிறைவேறியிருக்கிற இந்த உண்மையால் காட்டப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள கண்கூடான நிகழ்ச்சிகள் இதை விளக்கிக் காட்டுகின்றன.

உலகப்பிரகாரமான சரித்திராசிரியர்கள் இந்த 1914-ம் ஆண்டை எவ்வாறு கருதுகின்றனர்?

“தற்காலத்தின் வாய்ப்பான நிலையிலிருந்து பின் நோக்கிப் பார்க்கையில் முதல் உலகப் போர் தொடங்கினது இருபதாம் நூற்றாண்டு—பிரிட்டிஷ் சரித்திராசிரியன் அர்னால்ட் டோயன்பீயின் உணர்ச்சிவிளக்கமான சொற்றொடரில்—“இக்கட்டுகளின் காலத்தைக்” கொண்டுவந்தது, அதிலிருந்து நம்முடைய நாகரிகம் இன்னும் வெளியேறவேயில்லையென இன்று நாம் தெளிவாய்க் காண்கிறோம். கடந்த நூற்றாண்டின் கடைசி பாதியின் குமுறல்கள் யாவும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ 1914-ல் தோன்றி வளர்வுற்றவையேயாகும்.”—அரசர்குலப் பரம்பரைகளின் வீழ்ச்சி: பழைய ஒழுங்கின் தகர்வு (நியு யார்க், 1963), எட்மன்ட் டேலர், பக். 16.

“இரண்டாம் உலகப் போர் சந்ததியின் ஜனம், என் சந்ததி, தங்கள் போட்டத்தைத் தற்கால தீர்வுகட்ட மாறு நிலையாக எப்பொழுதும் சிந்திப்பார்கள். . . . சரித்திரத்துடன் நம் வீணிலை, நம் சொந்தக் குறியிடம் நமக்கு அனுமதிக்கப்படவேண்டும். ஆனால், சமுதாய நடைமுறை விதிகளில், முதல் உலகப் போருடன் இதைவிட மிக அதிகத் தீர்வான மாற்றம் உண்டாயிற்றென நாம் அறியவேண்டும். நூற்றாண்டுகளாகக் கட்டியமைக்கப்பட்டு வந்திருந்த அரசியல் மற்றும் சமுதாய ஒழுங்குமுறைகள், அப்பொழுதே நொறுங்கின—சிலசமயங்களில் ஒருசில வாரங்களில் அவ்வாறாயின. மற்றவை நிலைபேறாக மாற்றப்பட்டன. முதல் உலகப் போரிலேயே அந்த நெடுங்காலப் பழமையான உறுதிப்பாடுகள் இழக்கப்பட்டன. . . . இரண்டாம் உலகப்போர் இந்த மாற்றத்தைத் தொர்ந்து உண்டாக்கியது, விரிவாக்கியது மற்றும் உறுதிசெய்தது. சமுதாயச் சொற்களில் குறிப்பிட இரண்டாம் உலகப் போர் முதல் உலகப் போரின் கடைசி சண்டையாகும்.”—நிலையற்றச் சகாப்தம் (பாஸ்டன், 1977), ஜான் K. கல்பிரேத், பக். 133.

“பாதி நூற்றாண்டு சென்றுவிட்டது, எனினும் அந்த மகாப் போரின் [1914-ல் தொங்கின, முதல் உலகப் போரின்] பெருவிபத்து தேசங்களின் உடலிலும் ஆத்துமாவிலும் விட்டுச்சென்ற அந்தக் காயத்தழும்பு இன்னும் மறையவில்லை. . . . இந்த வேதனையான அனுபவத்தின், இயற்கை மற்றும் ஒழுக்கச் சம்பந்தமான அளவு அவ்வளவுபெரிதாயிருக்க விட்டுப்போன எதுவும் முன்னிருந்ததுபோல் இல்லை. சமுதாயம் அதன் முழுமையில்: அரசாங்க ஒழுங்குமுறைகள், தேசீய எல்லைகள், சட்டங்கள், படைக்கலம்பூண்ட படைகள், அரசுகளுக்கிடையேயுள்ள உறவுகள், அவைமட்டுமல்லாமல் கருத்துப்போக்குகள், குடும்ப வாழ்க்கை, செல்வவளங்கள், பதவிகள், தனிப்பட்டவரின் உறவுகளும்—எல்லாம் மேலிருந்து கீழ்வரை மாற்றப்பட்டது. . . . முடிவில் மனிதவர்க்கம்தானே அதன் சமநிலையை இழந்துவிட்டது, இந்நாள்வரை ஒருபோதும் அதைத் திரும்பப் பெறவில்லை.”—ஜெனரல் சார்ல்ஸ் டி கால். 1968-ல் பேசினது (லெ மான்டி, நவம். 12, 1968, பக். 9).

தற்போதைய உலக ஒழுங்குமுறையின் முடிவுக்குப் பின் எவராவது உயிரோடிருப்பார்களா?

ஆம், சந்தேகமில்லாமல் இருப்பர். இந்தத் தற்போதைய பூகோள ஒழுங்குமுறையின் முடிவு, அணுசக்திப் போரில் வகைதொகையற்றப் படுகொலையின் விளைவாக வராது, ஆனால் “சர்வவல்ல கடவுளுடைய மகா நாளின் யுத்தமும்” அடங்கியுள்ள ஒரு மிகுந்த உபத்திரவத்தில் வரும். (வெளி. 16:14, 16, தி.மொ.) இந்தப் போர் இந்தப் பூமியையும் அழிக்காது, முழு மனிதவர்க்கத்துக்கும் அழிவைக் கொண்டுவரவும் செய்யாது.

மத். 24:21, 22, தி.மொ.: “அக்காலத்தில் மிகுந்த உபத்திரவமுண்டாயிருக்கும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகமுண்டானதுமுதல் இந்நாள்வரையும் நேரிட்டதுமில்லை, இனி நேரிடப்போவதுமில்லை. அந்நாட்கள் குறுக்கப்படாதிருந்தால் மாம்சமான எதுவும் தப்பிப்போவதில்லை. தெரிந்தெடுக்கப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறுக்கப்படும்.” (ஆகையால் சில “மாம்சம்,” மனிதவர்க்கத்தில் சிலர், தப்பிப்பிழைப்பார்கள்.)

நீதி. 2:21, 22: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”

சங். 37:29, 34: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். . . . நீ கர்த்தருக்குக் காத்திருந்து [யெகோவாவில் நம்பிக்கைக் கொண்டிரு, NW], அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.”

பொல்லாதவர்களை அழிப்பதற்குமுன் இவ்வளவு அதிகக் காலம் செல்லும்படி கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?

2 பேதுரு 3:9: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [யெகோவா, NW] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.”

மாற்கு 13:10: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பவேண்டும்.”

மத். 25:31, 32, 46: “மனுஷகுமாரன் [இயேசு கிறிஸ்து] தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, . . . நிறுத்துவார்.” “இவர்கள் [கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரரை அரசரின் பிரதிநிதிகளாகக் கண்டுணர்ந்து ஏற்காதவர்கள்] நித்திய அறுப்புண்டுபோதலுக்குள் செல்வார்கள், நீதிமான்களோ நித்திய ஜீவனுக்குள் செல்வார்கள்.”

பக்கங்கள் 363, 364 மற்றும் 428-430-ஐ பாருங்கள்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘நிலைமைகள் இன்றுதான் மோமாயில்லை; எப்பொழுதுமே போர்களும், பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும், குற்றச் செயல்களும் இருந்திருக்கின்றன’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் அவ்வாறு உணருவதன் காரணத்தை நான் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தக் காரியங்கள் அனுதினசெய்தியாயிருக்கும் ஓர் உலகத்துக்குள் நாம் பிறந்திருக்கிறோம். ஆனால் இந்த 20-ம் நூற்றாண்டைப்பற்றி ஏதோ தீவிர நிலையில் அடிப்படையாய் வேறுபட்டிருக்கிறதென சரித்திராசிரியர் விளக்குகின்றனர். (பக்கங்கள் 239, 240-லுள்ள மேற்கோள்களை வாசியுங்கள்.)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘போர்கள் பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், மற்றும் குற்றச்செயல்கள் இருப்பது மாத்திரமே தனிக் கவனிப்புக்குரியதல்ல. இயேசு சொன்ன அடையாளம் ஒரு கூட்டு அடையாளம் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘தனிமையில் எந்த ஒரு சம்பவமோ நாம் “கடைசி நாட்களில்” இருப்பதை நிரூபிக்குமென அவர் சொல்லவில்லை. ஆனால் அந்த முழு அடையாளமும் வெளிப்படத் தெரிகையில், அவ்வாறிருப்பதைக் குறிக்கிறது—மேலும் முக்கியமாய் அது பூகோள அளவிலும் பைபிள் காலக்கணக்கால் உறுதிசெய்யப்பட்ட ஓர் ஆண்டுமுதல் தொங்கியும் காணப்படுகையில் அவ்வாறு பொருள்கொள்கிறது.’ (பக்கங்கள் 234-239 வரையிலும், மற்றும் பக்கங்கள் 95-97 வரையிலும் பாருங்கள்.)

‘இந்தச் சந்ததியைப் பார்க்கிலும் எதிர்கால சந்ததி ஏதாவது இந்தத் தீர்க்கதரிசனத்துக்கு மேலும் நன்றாய்ப் பொருந்தாதென உங்களுக்கு எப்படித் தெரியும்?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இது கவனத்தைத் தூண்டும் ஒரு கேள்வி, இதற்குரிய விடை நாம் மெய்ம்மையில் “கடைசி நாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கும் உண்மையை விளக்கமாய்த் தெரியும்படி செய்கிறது. எவ்வாறு? இயேசு கொடுத்த அடையாளத்தின் பாகம் ஜாதிகளுக்கும் ராஜ்யங்களுக்குமிடையே போர் நடப்பதை உட்படுத்துகிறது. ஆனால் அந்த அடையாளத்தின் நிறைவேற்றம் பெரும் வல்லரசுகளுக்கிடையே மற்றொரு மொத்தப் போர் தொங்கும் வரையில் நாம் காத்திருப்பதைத் தேவைப்படுத்தினால் இன்று என்ன நடக்கும்? அத்தகைய போர், தப்பிப்பிழைப்போர் எவராவது இருந்தால் ஒருசிலரையே விட்டுவைக்கும். ஆகையால், தப்பிப் பிழைப்போர் இருக்கவேண்டுமென்ற கடவுளுடைய நோக்கம் நாம் இந்தப் பழைய ஒழுங்குமுறையின் முடிவுக்கு மிக அருகில் இருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘உலகச் சம்பவங்களை இந்தத் தீர்க்தரிசனத்தோடு ஒத்துப் பார்ப்பது ஒரு விரல் அடையாளத்தை அதற்குரியவருடையதோடு ஒத்துப் பார்ப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. அதே விரல் அடையாளத்துடன் வேறொருவரும் இரார். அவ்வாறே, 1914-ல் தொங்கின சம்பவங்களின் மாதிரி ஏதோவொரு எதிர்கால சந்ததியில் திரும்ப நடைபெறாது.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘அடையாளத்தை உண்டுபண்ணுவதற்கு நடக்கவேண்டிய எல்லாம் தெளிவாய்த் தெரிகின்றன.’ (2) ‘நிச்சயமாகவே, நாம் நோவாவின் நாளில் இருந்த ஜனங்களைப்போலிருக்க விரும்புகிறதில்லை. (மத். 24:37-39)’

‘நாம் இந்த முடிவை நம் வாழ்நாளில் காணப்போவதில்லை’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘ஏதோவொரு சமயத்தில் கடவுள் தலையிடுவாரென நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘அது எப்பொழுதிருக்குமென நம்மில் எவராவது தெரிந்துகொள்ளக்கூடிய ஒரே வழி, அந்தத் தகவலை அவர் நமக்குக் கிடைக்கக்கூடியதாக்கியிருந்தால் மாத்திரமேயாகும். அந்த நாளையும் நாழிகையையும் ஒரு மனிதனும் அறியான் என்று இயேசு தெளிவாய்க் கூறினார். ஆனால் அது சம்பவிக்கப்போகிற இந்தச் சந்ததியின்போது நடக்கவிருக்கும் காரியங்களை அவர் நிச்சயமாகவே நுட்பமாய் விவரித்தார்.’ (2) ‘இந்த விவரிப்பில் நீங்கள்தாமே நேரடியாய் அறிமுகமாயுள்ள சம்பவங்கள் குறிப்பிட்டுப் பேசப்பட்டிருக்கின்றன. (கூடுமானால், முந்தின பக்கங்களில் கொடுத்துள்ள மெய்நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவலைப் பயன்படுத்தி அடையாளத்தின் நுட்பவிவரங்களைக் கலந்துபேசுங்கள்.)’

‘இந்தக் காரியங்களைப்பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதில்லை; அந்தந்த நாளுக்கென நான் வாழ்கிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘எதிர்காலத்தைப்பற்றி மட்டுக்குமீறி கவலைப்பட்டுக்கொண்டிருப்பது நிச்சயமாகவே நல்லதல்ல. ஆனால் நம்மையும் நமக்கு நேசமானோரையும் பாதுகாப்பதற்கேதுவான முறையில் நாம் எல்லாரும் நம் வாழ்க்கையைத் திட்டமிட முயற்சிசெய்கிறோம். மெய்ம்மைப்படித் திட்டம் செய்வது நடைமுறையானது. எதிர்காலத்தில் அதிசயமான காரியங்கள் இருக்கின்றனவென பைபிள் காட்டுகிறது, அவற்றிலிருந்து நன்மையடையும்படி நாம் திட்டமிட்டால் நாம் ஞானமுள்ளவர்கள். (நீதி. 1:33; 2 பேதுரு 3:13)’

‘இந்த எல்லாக் கெட்ட நிலைமைகளின்பேரில் நான் சிந்தித்துக்கொண்டிருப்பதில்லை; எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கை மனப்பான்மையுடனிருக்க நான் விரும்புகிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘கவனத்தைக் கவருவதாய், இயேசு, நம்முடைய நாளில் அவரைப் பின்பற்றுவோர் நம்பிக்கையான மனப்பான்மையுடனிருப்பதற்கு நல்ல காரணம் இருக்குமென சொன்னார். (லூக்கா 21:28, 31)’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘ஆனால் உலகத்தில் நடந்துகொண்டிருப்பவற்றிற்குத் தங்கள் கண்களை மூடிக்கொண்டு மகிழ்ச்சியாயிருக்கும்படி அவர் அவர்களுக்குச் சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். நல்ல ஆதாரத்தின்பேரிலேயே அவர்களுக்கு நம்பிக்கை மனப்பான்மை உண்டாயிருக்குமென அவர் சொல்கிறார்; உலக சம்பவங்களின் உட்பொருளை அவர்கள் புரிந்துகொண்டதாலும் அவற்றின் விளைவென்னவென அறிந்திருப்பதாலும் அவ்வாறிருப்பார்கள்.’