Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கள்ளத் தீர்க்கதரிசிகள்

கள்ளத் தீர்க்கதரிசிகள்

கள்ளத் தீர்க்கதரிசிகள்

சொற்பொருள் விளக்கம்: மனிதனுக்கு மிஞ்சிய ஒரு தோற்றுமூலத்திலிருந்து வந்தவையென தாங்கள் கூறுபவையும், ஆனால் உண்மையான கடவுளிடமிருந்து தோன்றாதவையும் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்துக்கு ஒத்திராதவையுமான செய்திகளை அறிவிக்கும் தனியாட்களும் அமைப்புகளுமாகும்.

உண்மையான தீர்க்கதரிசிகளையும் கள்ளத் தீர்க்கதரிசிகளையும் அடையாளங்கண்டுபிடிப்பது எவ்வாறு?

உண்மையான தீர்க்கதரிசிகள் இயேசுவில் தங்கள் விசுவாசத்தைத் தெரியப்படுத்துகின்றனர், ஆனால் அவருடைய பெயரில் பிரசங்கிப்பதாக உரிமைபாராட்டுவதைப்பார்க்கிலும் அதிகம் தேவைப்படுகிறது

1 யோவான் 4:1-3: “ஏவப்பட்ட வெளிப்படுத்தல்கள் கடவுளிடமிருந்து தோன்றினவையாவெனக் காண அவற்றைச் சோதித்துப் பாருங்கள், ஏனெனில் கள்ளத் தீர்க்கதரிசிகள் பலர் உலகத்துக்குள் சென்றிருக்கிறார்கள். கடவுளிடமிருந்து வரும் ஏவப்பட்ட வெளிப்படுத்தல்களை நீங்கள் இதனால் அறிந்துகொள்ளலாம்: இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்ததாக அறிக்கை செய்யும் ஏவப்பட்ட ஒவ்வொரு வெளிப்படுத்தலும் கடவுளிடமிருந்து தோன்றுகிறது, ஆனால் இயேசுவை அறிக்கை செய்யாத ஏவப்பட்ட ஒவ்வொரு வெளிப்படுத்தலும் கடவுளிடமிருந்து தோன்றுகிறதில்லை.”—NW.

மத். 7:21-23: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? . . . என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”

உண்மையான தீர்க்கதரிசிகள் கடவுளுடைய பெயரில் பேசுகிறார்கள், ஆனால் அவரைப் பிரதிநிதித்துவம் செய்வதாக வெறுமென உரிமைபாராட்டுவது போது

உபா. 18:18-20: “உன்னைப்போல [மோசேயைப்போல்] ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.” (எரேமியா 14:14; 28:11, 15-ஐ ஒத்துப்பாருங்கள்.)

இயேசு பின்வருமாறு கூறினார்: “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்யாமல் பிதா எனக்குக் கற்பித்தபடியே இவற்றைப் பேசுகிறேன்.” (யோவான் 8:28, தி.மொ.) அவர் சொன்னதாவது: “நான் என் பிதாவின் நாமத்தில் வந்தேன்.” (யோவான் 5:43, தி.மொ.) இயேசு மேலும் சொன்னதாவது: “சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான்.”—யோவான் 7:18.

தனித்த ஆட்களாவது அமைப்புகளாவது, கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைபாராட்டி ஆனால் கடவுளுடைய சொந்தப் பெயரைப் பயன்படுத்தப் பின்வாங்கினால், மேலும் காரியங்களின்பேரில் தங்கள் சொந்த அபிப்பிராயங்களையே வெளிப்படுத்திக் கூறுவதைப் பழக்கமாக்கினால், உண்மையான தீர்க்கதரிசிக்குரிய இந்த முக்கிய தகுதிபெற்றவர்களாக இருக்கிறார்களா?

“பெரிய அடையாளங்களை,” அல்லது “அற்புதங்களை,” நடப்பிப்பதற்கான திறமை உண்மையான தீர்க்கதரிசியை நிரூபிக்கும் கட்டாய அத்தாட்சி அல்ல

மத். 24:24: “ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.”

2 தெச. 2:9, 10: “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.”

மறுபட்சத்தில், மோச யெகோவாவின் கட்டளையின்பேரில் அற்புதங்களை நடப்பித்தான். (யாத். 4:1-9) அற்புதங்களை நடப்பிக்கும்படி யெகோவா இயேசுவுக்கும் அதிகாரமளித்தார். (அப். 2:22) ஆனால் அற்புதங்களைப் பார்க்கிலும் அதிகமாக கடவுள் தங்களை உண்மையில் அனுப்பினாரென்ற அத்தாட்சியைக் கொடுத்தனர்.

உண்மையான தீர்க்கதரிசிகள் முன்னறிவிப்பது நிறைவேற்றமடைகிறது, ஆனால் அது எப்பொழுது அல்லது எவ்வாறிருக்குமென்பது அவர்களுக்கு விளங்காதிருக்கலாம்

தானி. 12:9: “தானியேலே, போலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.”

1 பேதுரு 1:10, 11: “தீர்க்கதரிசிகள் . . . கிறிஸ்துவுக்குரிய பாடுகளையும் அவற்றைப் பின்தொடர்ந்து வரப்போகிற மகிமைகளையும் பற்றித் தங்களிலுள்ள ஆவி முன்னதாகவே சாட்சி பகர்ந்தபோது கிறிஸ்துவைப்பற்றி எந்தக் குறிப்பிட்ட காலத்தையும் என்ன வகையான காலத்தையும் குறிப்பாகத் தெரிவித்ததென தொர்ந்து அலசியாராய்ந்துகொண்டிருந்தனர்.”—NW.

1 கொரி. 13:9, 10: “நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.”

நீதி. 4:18: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.”

அப்போஸ்தலரும் மற்றப் பூர்வ கிறிஸ்தவ சீஷர்களும் சில தவறான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர், ஆனால் பைபிள் அவர்களைக் ‘கள்ளத் தீர்க்கதரிசிகளுடன்’ வகைப்படுத்துகிறதில்லை.—லுக்கா 19:11; யோன் 21:22, 23; அப். 1:6, 7-ஐ பாருங்கள்.

தாவீது யெகோவாவின் வணக்கத்துக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவதைக் குறித்துத் தன் இருதயத்தில் கொண்டிருந்ததைத் தொர்ந்து நிறைவேற்றும்படி தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனை ஊக்கப்படுத்தினான். ஆனால் பின்னால் யெகோவா, தாவீது அதைக் கட்டப்போவதில்லையென தாவீதுக்குத் தெரிவிக்கும்படி நாத்தானிடம் கூறினார். நாத்தான் முன்-சொன்ன அதற்காக யெகோவா அவனைத் தள்ளிவிடவில்லை, அவனைத் தொர்ந்து பயன்படுத்திக்கொண்டிருந்தார், ஏனெனில் யெகோவா அவனுக்குத் தெளிவாக்கினபோது அவன் மனத்தாழ்மையுடன் அந்தக் காரியத்தைத் திருத்திக்கொண்டான்.—1 நாளா. 17:1-4, 15.

உண்மையான தீர்க்கதரிசியின் அறிவிப்புகள் உண்மையான வணக்கத்தை முன்னேற்றுவிக்கின்றன மற்றும் கடவுளுடைய வெளிப்படுத்தின சித்தத்துக்குப் பொருந்தியிருக்கின்றன

உபா. 13:1-4: “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியோ சொப்பனங் காண்கிறவனோ எழும்பி: வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவிப்போம், வாருங்கள்—அவர்கள் உங்களுக்குத் தெரியாத தேவர்கள்—என்று சொல்லி உங்களுக்கு ஒரு அடையாளத்தையாகிலும் அற்புதத்தையாகிலும் அறிவிக்கவே, அவன் அறிவித்த அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியோ சொப்பனங்காண்கிற அந்த மனிதனோ சொல்லுகிறவைகளுக்கு நீங்கள் செவிகொடுக்கவேண்டாம்; உங்கள் கடவுளாகிய யெகோவாவில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சோதித்துப்பார்க்கிறார். நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவா காட்டிய வழியில் நடந்து, அவருக்குப் பயந்து அவர் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் சப்தத்திற்குச் செவிகொடுத்து அவரைச் சேவித்து அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும்.—தி.மொ.

உலகத்துக்குச் சிநேகிதன்” கடவுளுக்குப் பகைஞன் என்று பைபிள் சொல்வதால், உலகத்தின் விவகாரங்களில் உட்படும்படி தங்கள் சபையோரை ஊக்கப்படுத்தும் பாதிரிமார் உண்மையான வணக்கத்தை முன்னேற்றுவிக்கிறார்களா? (யாக். 4:4; 1 யோவான் 2:15-17) எல்லா ஜாதியாரும் “நான் யெகோவா என்று அறிந்துகொள்ள வேண்டும்,” என்று உண்மையான கடவுள் சொன்னார், மேலும் புறஜாதிகளிலிருந்து கடவுள் “தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்”வாரென்று பைபிள் கூறுகிறது, அப்படியானால் கடவுளுடைய சொந்தப் பெயரைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைத் தங்களாலானவரைக் குறைத்துப்போடும் மத அமைப்புகள் கடவுளுடைய இந்த வெளிப்படுத்தின சித்தத்துக்குப் பொருந்த நடக்கிறார்களா? (எசே. 38:23, NW; அப். 15:14) கடவுளுடைய ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்குக் கற்பித்தார், மேலும் ஒருவர் பூமிக்குரிய மனிதரில் நம்பிக்கை வைப்பதற்கு எதிராக பைபிள் எச்சரிக்கிறது, அப்படியானால் மனித ஆட்சியில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்படி ஜனங்களை ஊக்குவிக்கும் பாதிரிமார் அல்லது அரசியல் அமைப்புகள் உண்மையான தீர்க்கதரிசிகளா?—மத். 6:9, 10; சங். 146:3-6; வெளிப்படுத்துதல் 16:13, 14-ஐ ஒத்துப்பாருங்கள்.

உண்மையான தீர்க்கதரிசிகளும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் தங்கள் வாழ்க்கையிலும் தங்களைப் பின்பற்றுவோரின் வாழ்க்கையிலும் வெளிப்படுத்தும் கனிகளால் அடையாளங் கண்டுகொள்ளப்படுவர்

மத். 7:15-20: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; . . . நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். . . . ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.”

அவர்களுடைய வாழ்க்கை முறை எவ்வாறு அமைந்திருக்கிறது? “மாம்சத்தின் கிரியைகள் . . . அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. . . . ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.”—கலா. 5:19-23; 2 பேதுரு 2:1-3-ஐயும் பாருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் தங்கள் போகங்களில் பிழை செய்திருக்கிறார்களல்லவா?

யெகோவாவின் சாட்சிகள் தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசிகளென உரிமைபாராட்டுகிறதில்லை. அவர்கள் பிழைகள் செய்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரைப்போல், சில சமயங்களில் பிழையான சில எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.—லூக்கா 19:11; அப். 1:6.

கிறிஸ்துவின் வந்திருத்தல் சம்பந்தப்பட்ட கால அம்சங்களை வேத எழுத்துக்கள் அளிக்கின்றன, யெகோவாவின் சாட்சிகள் இவற்றை மிகக் கூர்ந்த அக்கறையுடன் ஆராய்ந்திருக்கின்றனர். (லூக்கா 21:24; தானி. 4:10-17) சாத்தானின் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் காண வாழ்ந்திருக்கப்போகும் அந்தச் சந்ததியை அடையாளங்காட்டுவதற்குக் காலத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தோடு இணையும் பல அம்சங்களடங்கிய ஓர் அடையாளத்தையும் இயேசு விவரித்தார். (லூக்கா 21:7-36) இந்த அடையாளம் நிறைவேறும் அத்தாட்சியையும் யெகோவாவின் சாட்சிகள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றனர். சில காலப் பகுதிகளின் முடிவில் நடக்குமென தாங்கள் விளங்கிக்கொண்டவற்றில் அவர்கள் பிழைகள் செய்திருப்பது மெய்யே, ஆனால் யெகோவாவின் நோக்கங்களின் நிறைவேற்றத்தைக் குறித்ததில் விசுவாசத்தை இழக்கும் அல்லது விழிப்புடன் கூர்ந்து கவனிப்பதை நிறுத்திவிடும் தவறை அவர்கள் செய்யவில்லை. இயேசு கொடுத்தப் பின்வரும் அறிவுரையைத் தங்கள் நினைவின் முன்னிலையில் அவர்கள் விடாமல் தொர்ந்து வைத்திருக்கின்றனர்: “ஆகவே உங்கள் ஆண்டவர் இன்ன நாளிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.”—மத். 24:42, தி.மொ.

அவர்கள் தெளிந்தறிந்து யாவருமறியும்படிசெய்த இன்றியமையாத பைபிள் சத்தியங்களோடு ஒப்பிட, நோக்குநிலையில் திருத்தங்கள் தேவைப்பட்ட காரியங்கள் அற்பமாயிருக்கின்றன. பின்வருபவை இந்தச் சத்தியங்களில் சிலவாகும்: யெகோவாவே ஒரே உண்மையான கடவுள். இயேசு கிறிஸ்து திரித்துவ கடவுளின் பாகமல்லர், அவர் கடவுளின் ஒரேபேறான குமாரன். கிறிஸ்துவின் மீட்பின் கிரய பலியில் விசுவாசம் வைப்பதன்மூலம் மாத்திரமே பாவத்திலிருந்து மீட்பு கூடியதாயிருக்கிறது. பரிசுத்த ஆவி ஓர் ஆளல்ல, அது யெகோவாவின் கிரியை நடப்பிக்கும் சக்தி, அதன் கனிகள் உண்மை வணக்கத்தாரின் வாழ்க்கையில் காணப்படவேண்டும். பூர்வ புறமதத்தார் உரிமைபாராட்டினபடி, மனித ஆத்துமா அழியாமையுடையதல்ல; அது சாகிறது, எதிர்கால வாழ்க்கையின் நம்பிக்கை உயிர்த்தெழுதலிலேயே இருக்கிறது. சர்வலோக அரசாட்சியின்பேரிலுள்ள விவாதத்தின் காரணமாகவே கடவுள் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார். கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்துக்கு ஒரே நம்பிக்கை. 1914 முதற்கொண்டு நாம் இந்தப் பூகோள பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உண்மையுள்ள 1,44,000 கிறிஸ்தவர்கள் மாத்திரமே பரலோகத்தில் கிறிஸ்துவுடன் அரசர்களும் ஆசாரியர்களுமாயிருப்பார்கள், ஆகவே, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தின் மீதிபேர் யாவரும் பரதீஸான பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.

பின்வரும் இது யெகோவாவின் சாட்சிகளின் போகங்களைக் குறித்து கவனிக்கவேண்டிய மற்றொரு உண்மை: இவை ஆட்களை ஒழுக்கப்பிரகாரமாய் உயர்த்தியிருக்கின்றனவா? இந்தப் போகங்களைக் கடைப்பிடிக்கிறவர்கள் தங்கள் நேர்மையினிமித்தம் தங்கள் சமுதாயங்களில் முனைப்பாய்த் தோன்றுகிறார்களா? இந்தப் போகங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதனால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை நன்மைதரும் முறையில் பாதிக்கப்படுகிறதா? தங்களுக்குள் அன்புடையோராயிருப்பதால் தம்முடைய சீஷர்கள் உடனடியாக அடையாளங் கண்டுகொள்ளப்படுவரென இயேசு சொன்னார். (யோவான் 13:35) யெகோவாவின் சாட்சிகளுக்குள் இந்தப் பண்பு முதன்மையாயிருக்கிறதா? உண்மைநிகழ்ச்சிகள்தாமே தங்களுக்காகப் பேச விடுகிறோம்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘யெகோவாவின் சாட்சிகளே பொய்த் தீர்க்கதரிசிகள் என்று என் போகர் சொல்கிறார்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நான் உங்களிடம் இதைக் கேட்கலாமா, நாங்கள் நம்புவதை அல்லது செய்வதை விவரித்து இத்தகைய ஆட்கள் பொய்த் தீர்க்கதரிசிகளாயிருப்பரென்று சொல்லும் எதையாவது பைபிளில் அவர் காட்டினாரா? . . . பொய்த் தீர்க்கதரிசிகளை பைபிள் விவரிக்கும் முறையை நான் காட்டலாமா?’ (பின்பு பக்கங்கள் 132-136-ல் சுருக்கமாய்க் கொடுத்துள்ளக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப் பயன்படுத்துங்கள்.)

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘இத்தகைய வினைமையான குற்றச் சாட்டைத் திட்டமான அத்தாட்சி ஆதரிக்கவேண்டுமென்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களென்று நான் நிச்சயமாயிருக்கிறேன். திட்டமான உதாரணங்கள் எவற்றையாவது உங்கள் போகர் குறிப்பிட்டாரா? (நிறைவேற்றமடையாத “முன்னறிவிப்புகள்” என விவாதிக்கும் எவற்றையாவது வீட்டுக்காரர் குறிப்பிட்டால், பக்கம் 134-லிலும் பக்கம் 135-ன் அடியிலிருந்து 137-ன் தொக்கம் வரையிலுமுள்ள விவரத்தைப் பயன்படுத்துங்கள்.)’

பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை:  ‘எதைப்பற்றியாவது இவ்வாறு எவராவது உங்களைக் குற்றப்படுத்தினால், உங்கள் நிலையை அல்லது நோக்குநிலையை விளக்கவாவது வாய்ப்புக் கொடுப்பதை நீங்கள் நிச்சயமாய் வரவேற்பீர்களல்லவா? . . . ஆகவே நான் பைபிளிலிருந்து உங்களுக்குக் காட்டலாமா . . . ?’