Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிலுவை

சிலுவை

சிலுவை

சொற்பொருள் விளக்கம்: இயேசு கிறிஸ்துவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட கருவி கிறிஸ்தவமண்டலத்தின் பெரும்பான்மையரால் சிலுவை என குறிப்பிடப்படுகிறது. இந்தச் சொல் லத்தீன் சொல் க்ரக்ஸ் (crux) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.

காவற்கோபுர பிரசுரங்கள், இயேசுவைக் கழுமரத்தில் கைகள் தலைக்குமேல் உயர்த்தி அறையப்பட்டதாகக் காண்பிப்பதேன்?

“சிலுவை” (“வாதனைக்குரிய கழுமரம், NW) என்று பல நவீன பைபிள் மொழிபெயர்ப்புகளில் மொழிபெயர்த்துள்ள இந்தக் கிரேக்கச் சொல் ஸ்ரஸ் என்பதாகும். பூர்வ கிரேக்க இலக்கியங்களில் இந்தச் சொல் வெறுமென ஒரு நேரான கழுமரத்தை அல்லது மரத்துண்டைக் குறித்தது. பின்னால் ஒரு குறுக்குத் துண்டைக் கொண்டிருக்கும், மரண தண்டனையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கழுமரத்தைக் குறிப்பிடவும் இது பயன்படுத்தப்பட்டது. தி இம்ப்பீரியல் பைபிள்-அகராதி இதை ஒப்புக்கொள்கிறது, அதில் சொல்லியிருப்பதாவது: “சிலுவை என்பதற்கான கிரேக்கச் சொல், [ஸ்டாரஸ்], சரியாகவே ஒரு கழுமரத்தைக் குறிப்பிட்டது. இது ஒரு நேரான கம்பமாகவோ அல்லது வேலிக்கம்பத் துண்டாகவோ இருக்கிறது, இதன்மீது ஏதாவது தொங்கவிடப்படலாம் அல்லது ஒரு சிறு நிலத்தை அடைத்துவைக்க [வேலியிட] இது பயன்படுத்தப்படலாம். . . . (நம்முடைய சிலுவை என்ற சொல் வருவிக்கப்பட்ட) க்ரக்ஸ் ரோமர்களுக்குள்ளேயும் ஆரம்பத்தில் ஒரு நேரான மரத்துண்டைக் குறித்ததெனத் தோன்றுகிறது.”—P. ஃபேர்பேரன் பதிப்பித்தது (லண்டன், 1874), புத். I, பக். 376.

கடவுளுடைய குமாரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றினது சம்பந்தப்பட்டதிலும் இவ்வாறே இருந்ததா? பயன்படுத்தப்பட்ட கருவியைக் குறிக்க பைபிளும் ஸைலான் என்றச் சொல்லைப் பயன்படுத்துவது கவனிக்கத்தக்கது. லிட்டல் மற்றும் ஸ்ட் இயற்றிய, ஒரு கிரேக்க-ஆங்கில அகராதி, இது பின்வருமாறு பொருள்படுவதாக விளக்கமளிக்கிறது: “துண்டிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு ஆயத்தமாயுள்ள மரத்துண்டு, விறகு கட்டை, மரம், போன்றவை. . . . மரத்துண்டு, மரக்கட்டை, உத்தரம், கம்பம் . . . குறுந்தடி, தடி . . . குற்றவாளிகள் அதன்மீது அறையப்பட்ட கழுமரம் . . . பசுமையான மரக்கட்டையாலானது, மரம்.” மேலும் “புஏ-இல், சிலுவை,” எனவும் கூறி, அப்போஸ்தலர் 5:30-ஐயும் 10:39-ஐயும் உதாரணங்களாக மேற்கோள் குறிப்பளிக்கிறது. (ஆக்ஸ்ஃபர்ட், 1968, பக். 1191, 1192) எனினும், அந்த வசனங்களில் KJ, RS, JB, Dy, மற்றும் தமிழ் UV மொழிபெயர்ப்புகள் ஸைலான் என்பதை “மரம்” என மொழிபெயர்த்திருக்கின்றன. (இந்த மொழிபெயர்ப்பை கலாத்தியர் 3:13; உபாகமம் 21:22, 23-உடன் ஒப்பிடுங்கள்.)

J. D. பார்ஸன்ஸ் (லண்டன், 1896) எழுதிய கிறிஸ்தவமல்லாத சிலுவை, என்ற புத்தகத்தில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “புதிய ஏற்பாட்டை உண்டுபண்ணும் பல எழுத்துக்களில் எதிலும், மூல கிரேக்கில், இயேசுவின் காரியத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்ரஸ் சாதாரண ஸ்ரஸைத் தவிர வேறொன்று என்ற மறைமுகமான அத்தாட்சியையாகிலும் கொண்டுள்ள ஒரு தனி வாக்கியமும் இல்லை; அது ஒரே மரக்கட்டைத் துண்டல்லாமல், இரண்டு துண்டுகள் அடங்கியதாய், சிலுவை வடிவத்தில் ஒன்றுசேர ஆணியடிக்கப்பட்டிருந்ததென்பதற்கு எதுவுமே இல்லை. . . . சர்ச்சின் கிரேக்க மூலப் பிரதிகளை நம்முடைய சொந்த மொழியில் மொழிபெயர்க்கையில் ஸ்ரஸ் என்ற சொல்லை ‘சிலுவை’ என மொழிபெயர்த்து, மேலும் அந்தச் செயலை ஆதரிக்க ‘சிலுவை’ என்றச் சொல் ஸ்ரஸின் பொருளென நம்முடைய அகராதிகளில் குறித்துவைத்துவிட்டு, அப்போஸ்தலரின் நாட்களில் அந்தச் சொல்லின் முக்கிய பொருள் அதுவல்லவெனவும், அதற்கு வெகு காலத்துக்குப்பின் வரை அது அதன் முக்கிய அறிகுறியாகவில்லை, அப்போது அவ்வாறானதும், உறுதிப்படுத்தும் சான்று இராதபோதிலும், இயேசு அறையப்பட்ட அந்தக் குறிப்பிட்ட ஸ்ரஸ் அந்தக் குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்டிருந்ததென ஏதோவொரு காரணத்துக்காக கருதிக்கொள்ளப்பட்டதினிமித்தமே என, கவனமாய் விளக்காமல் விட்டது நம்முடைய போகர்களின் பங்கில் பேரளவில் தவறான வழிநடத்துதலாயிருக்கிறது.”—பக். 23, 24; மேலும் தி கம்ப்பேனியன் பைபிள் என்ற ஆங்கில பைபிளையும் பாருங்கள் (லண்டன், 1885), பிற்சேர்க்கை எண் 162.

இவ்வாறு இயேசு பாரம்பரிய சிலுவையின்மீதல்ல நேரான கழுமரத்தின்மீதே மரித்தார் என பேரளவான முக்கிய அத்தாட்சிகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

கிறிஸ்தவ மண்டல சிலுவையின் சரித்திரப்பூர்வத் தொக்கங்கள் யாவை?

“பழைய உலகத்தின் ஏறக்குறைய எல்லாப் பாகங்களிலிருந்தும் வெவ்வேறு வடிவங்களில் சிலுவைகள் குறிக்கப்பட்டுள்ள பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை கிறிஸ்தவ சகாப்தத்திற்கும் வெகு முந்திய காலத்தவை. இந்தியா, சீரியா, பெர்சியா மற்றும் எகிப்து போன்ற தேசங்கள் எண்ணற்ற உதாரணங்களைக் கொடுத்திருக்கின்றன . . . கிறிஸ்தவ காலத்துக்கும் முந்திய காலத்திலும் மற்றும் கிறிஸ்தவர்களல்லாதவர்களுக்கிடையேயும் ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறய உலகளாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப்பட்டதென கருதப்படலாம். மிகப்பல சந்தர்ப்பங்களில் இது ஏதாவதொரு வகை இயற்கை வழிபாட்டுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது.”—என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1946), புத். 6, பக். 753.

“[இரண்டு உத்தரங்களைக்கொண்ட சிலுவையின்] உருவம் பூர்வ கல்தேய தேசத்தில் அதன் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. இந்தத் தேசத்திலும் மற்றும் எகிப்து உட்பட அண்மையிலிருந்த தேசங்களிலும் தம்மூஸ் [Tammuz] தெய்வத்தின் (இந்தப் பெயரின் முன்னெழுத்தாகியவடிவம்) அடையாளச் சின்னமாக இது பயன்படுத்தப்பட்டது. பொ.. 3-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் கிறிஸ்தவ விசுவாசத்தின் சில கோட்பாடுகளிலிருந்து சர்ச்சுகள் விலகிச் சென்றுவிட்டன அல்லது வேறுமதக்கோட்பாடுகளை ஏற்று உண்மையைத் திரித்துவிட்டன. விசுவாசத்துரோக சர்ச் சம்பந்தமான ஒழுங்கின் கெளரவத்தை அதிகரிக்கும் பொருட்டு, விசுவாசத்தினால் புதுப்பிக்கப்படாத புறமதத்தினர் சர்ச்சுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் தங்கள் புறமத அடையாளங்களையும் சின்னங்களையும் தொர்ந்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். எனவே டெள அல்லதுஎன்ற எழுத்து, அதன் வழக்கமான உருவில், அதன் குறுக்குத் துண்டு சற்றுக் கீழே இறக்கப்பட்டு, கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்துநிற்கும்படி ஏற்கப்பட்டது.”—புதிய ஏற்பாட்டுச் சொற்களின் பொருள்விளக்க அகராதி (லண்டன், 1962), W. E. வைன், பக். 256.

“கிறிஸ்து பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பேயும், அவருடைய பிறப்பு முதற்கொண்டும், சர்ச் போகங்கள் சென்றெட்டாதத் தேசங்களில் பரிசுத்த அடையாளச் சின்னமாகச் சிலுவை பயன்படுத்தப்பட்டுவந்ததென்பது விசித்திரமாயிருக்கிறது, எனினும் சந்தேகமில்லாமல் உண்மையாயிருக்கிறது. . . . கிரேக்கரின் பாக்கஸும், தீரு தேசத்தவரின் தம்மூஸும், கல்தேயரின் பெல்லும், ஸ்காண்டினேவியரின் ஓடினும் அவற்றின் பக்தர்களுக்குச் சிலுவை உருவ சின்னத்தால் அடையாளப்படுத்தப்பட்டன.”—சடங்காசாரத்தில் சிலுவை, சிற்பக்கலை, மற்றும் கலை (லண்டன், 1900), G. S. டையக், பக். 1.

“‘க்ரக்ஸ் அன்சாட்டா’ என்ற வடிவிலுள்ள சிலுவை . . . எகிப்திய ஆசாரியர்களாலும் பிரதான மதகுரு ராஜாக்களாலும் சூரிய தேவனின் ஆசாரியர்களாக அவர்கள் அதிகாரம் பெற்றிருப்பதன் அடையாளச் சின்னமாகக் கைகளில் ஏந்திச் செல்லப்பட்டது. இது ‘ஜீவனின் அடையாளக்குறி’ என்றழைக்கப்பட்டது.”—மரித்தோரை வணங்குதல் (லண்டன், 1904), கர்னல் J. கார்னியர், பக். 226.

“எகிப்தியரின் ஞாபகச் சின்னங்கள் மற்றும் கல்லறைகள் எல்லாவற்றிலும் பல்வேறுவிதமான சிலுவை உருவங்கள் காணப்படுகின்றன. இவை ஃபாலஸின் [ஆண் பாலுறுப்பின் குறியீட்டின்] அல்லது பாலுறவின் அடையாளமாயிருப்பதாகப் பல நிபுணர்கள் கருதுகின்றனர். . . . எகிப்திய கல்லறைகளில் க்ரக்ஸ் அன்சாட்டா [மேல்பாகத்தில் ஒரு வட்டம் அல்லது கைப்பிடியுடனிருக்கும் சிலுவை] ஃபாலஸுடன் அருகருகே காணப்படுகிறது.”—பாலுறவு வழிபாட்டின் ஒரு சுருக்கச் சரித்திரம் (லண்டன், 1940), H. கட்னர், பக். 16, 17; கிறிஸ்தவமல்லாதச் சிலுவை, பக். 183-ஐயும் பாருங்கள்.

“இந்தச் சிலுவைகள் பாபிலோனிய சூரிய தெய்வத்தின் அடையாளச் சின்னங்களாகப் பயன்படுத்தப்பட்டன, , முதலில், கி.மு. 100-44 தேதியிட்ட ஜூலியஸ் ஸீஸரின் ஒரு நாணயத்தில் காணப்படுகின்றன. பின்பு ஸீஸரின் வாரிசு (அகஸ்டஸ்) அடித்த கி.மு. 20-ம் ஆண்டின் ஒரு நாணயத்தில், காணப்பட்டன. கான்ஸ்டன்டீனின் நாணயங்களில் மிக அடிக்கடி பயன்படுத்தப்பட்ட அடையாளக்குறி ஆகும்; ஆனால் இதே அடையாளக் குறி, சூழ்ந்துள்ள வட்டம் இல்லாமலும், செங்குத்தாக மற்றும் கிடையான நிலையிலுள்ள நான்கு சம அளவுள்ள புயங்களுடனும் பயன்படுத்தப்படுகின்றன; இதுவே ‘சூரிய சக்கரமாக’ விசேஷித்த விதத்தில் வணங்கப்பட்ட அடையாளக்குறி. கான்ஸ்டன்டீன் சூரிய தேவனை வணங்குபவனாக இருந்தான் என்பதும், வானங்களில் அத்தகைய ஒரு சிலுவையை அவன் கண்டான் என்ற கட்டுக்கதைக்கு அப்பால் ஏறக்குறைய ஒரு கால் நூற்றாண்டுசெல்லும் வரை “சர்ச்”சுக்குள் பிரவேசியாதிருந்தான் என்பதும் சொல்லப்படவேண்டும்.”—துணை பைபிள், பிற்சேர்க்கை எண் 162; கிறிஸ்தவமல்லாத சிலுவை, பக். 133-141-ஜயும் பாருங்கள்.

சிலுவை வணக்கம் வேதப்பூர்வ பழக்கமா?

1 கொரி. 10:14: “எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.” (விக்கிரகம் என்பது ஆழ்ந்த பக்தி, மரியாதை அல்லது வணக்கத்துக்குரிய ஒரு பொருளாயுள்ள ஒரு சிலை அல்லது அடையாளச் சின்னமாக இருக்கிறது.)

யாத். 20:4, 5, கத்.பை.: “மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக்கொள்ளவேண்டாம். அவைகளை வணங்கித் தொவும் வேண்டாம்.” (ஆட்கள் வணங்குவதற்காக ஓர் உருவத்தையேனும் உண்டாக்கக் கூடாதென கடவுள் தம்முடைய ஜனத்துக்குக் கட்டளையிட்டதைக் கவனியுங்கள்.)

நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியாவிலுள்ள இந்தக் குறிப்புரை கவனத்தைக் கவருவதாயிருக்கிறது: “கிறிஸ்தவத்தின் முதல்நூற்றாண்டுகளின் அடையாள அர்த்தமுள்ள கலைப்பொருட்களில் கொல்கொதாவில் கிறிஸ்துவின் மீட்புக்குரிய மரணத்தைப்பற்றிய சித்தரிப்பு காணப்படுவதில்லை. பூர்வ கிறிஸ்தவர்கள், பழைய ஏற்பாட்டில் விக்கிரகங்கள் தடைச் செய்யப்பட்டிருப்பதால் செல்வாக்குச் செலுத்தப்பட்டு, கர்த்தருடைய வாதனைக்குரிய கருவியையும் கலையாக உருப்படுத்தியமைக்க மனமற்றிருந்தனர்.”—(1967), புத். IV, பக். 486.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றி, கிறிஸ்தவ சர்ச்சின் சரித்திரம் பின்வருமாறு கூறுகிறது: “இயேசு சிலுவையில் அறையப்பட்டுள்ள உருவமும் பயன்படுத்தப்படவில்லை சிலுவையின் கலைமூல உருவமைப்பு எதுவும் இல்லை.”—(நியு யார்க், 1897), J. F. ஹர்ஸ்ட், புத். I, பக். 366.

ஒருவன் சிலுவையை வணங்காமல், மனதில் வைத்து மட்டுமே போற்றிவருவது உண்மையில் ஏதாவது வேறுபாட்டை உண்டுபண்ணுகிறதா?

உங்களுடைய மிக நேசமான நண்பர்களில் ஒருவர் பொய்க் குற்றச் சாட்டுகளின்பேரில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டாரெனில் நீங்கள் எவ்வாறு உணருவீர்கள்? அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட கருவிக்கு ஒத்த ஓர் உருவத்தை உண்டுபண்ணிவைத்துக்கொள்வீர்களா? அதை நீங்கள் மனதில் வைத்துப் போற்றுவீர்களா, அல்லது அதை அறவே வெறுத்துத் தவிர்ப்பீர்களா?

பூர்வ இஸ்ரவேலில், உண்மையற்ற யூதர்கள் பொய்க் கடவுளாகிய தம்மூஸின் மரணத்தின்பேரில் அழுதார்கள், அவர்கள் செய்துகொண்டிருந்ததை ‘அருவருப்பான காரியம்’ என யெகோவா குறிப்பிட்டார். (எசே. 8:13, 14) சரித்திரத்தின்படி, தம்மூஸ் ஒரு பாபிலோனியக் கடவுள், மேலும் சிலுவை அவனுடைய அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது. நிம்ரோதின் நாட்களில் அதன் தொக்கத்திலிருந்து, பாபிலோன், யெகோவாவுக்கு எதிரியாகவும் உண்மையான வணக்கத்துக்குச் சத்துருவாகவும் இருந்தது. (ஆதி. 10:8-10: எரே. 50:29) ஆகவே சிலுவையை மனதில் வைத்துப்போற்றுவதால் ஒருவன், உண்மையான கடவுளுக்கு எதிர்ப்பாயுள்ள வணக்கச் சின்னத்தைக் கனப்படுத்துகிறான்.

எசேக்கியேல் 8:17-ல், (NW) கூறியுள்ளபடி, விசுவாசத்துரோகிகளான யூதர்களும் ‘இளங்கிளையை யெகோவாவின் மூக்குக்கு நேராக நீட்டினார்கள்.’ இதை அவர் ‘அருவருப்பானதாகவும்’ ‘கோபமூட்டுவதாகவும்’ கருதினார். ஏன்? உரையாசிரியர்களில் சிலர் விளக்குகிறபிரகாரம், இந்த “இளங்கிளை,” ஆண் குறி வணக்கத்தில் பயன்படுத்தப்பட்ட ஆண் பாலுறுப்பின் குறியீடாயிருந்தது. அப்படியானால், நாம் கவனித்தப்படி, பூர்வக் காலத்தில் ஆண்-பாலுறுப்பு வணக்கத்தில் சின்னமாகப் பயன்படுத்தப்பட்ட சிலுவையின் உபயோகத்தை யெகோவா எவ்வாறு கருதவேண்டும்?