Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிலைகள்

சிலைகள்

சிலைகள்

சொற்பொருள் விளக்கம்: பொதுவாய், ஆட்களின் அல்லது பொருட்களின் காணக்கூடிய உருவமைப்புகள். வணக்கத்துக்குரிய பொருளாயுள்ள ஒரு சிலை ஒரு விக்கிரகமாகும். சிலைகளுக்குமுன் வணக்கச் செயல்களை நடப்பிக்கிறவர்கள், தங்கள் வணக்கம் உண்மையில் அந்தச் சிலை குறித்துக்காட்டும் ஆவிக்குச் செலுத்தப்படுகிறதென அடிக்கடி சொல்கின்றனர். சிலைகளை இவ்வாறு பயன்படுத்துவது கிறிஸ்தவமல்லாத மதங்கள் பலவற்றில் வழக்கமாயுள்ளது. ரோமன் கத்தோலிக்கப் பழக்கத்தைக் குறித்து, நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967, புத். VII, பக். 372) சொல்வதாவது: “ஒரு சிலைக்குச் செலுத்தப்படுகிற வணக்கம் அது குறித்துநிற்கும் அந்த ஆளிடம் போய்ச் சேர்ந்துவிடுவதால், அந்த ஆளுக்குச் செலுத்தவேண்டிய அதே வகையான வணக்கத்தை அந்த ஆளைக் குறித்துநிற்கும் அந்தச் சிலைக்குச் செலுத்தலாம்.” இது பைபிள் போகமல்ல.

வணக்கப் பொருட்களாகப் பயன்படுத்தும் சிலைகளை உண்டுபண்ணுவதைப்பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

யாத். 20:4, 5, கத்.பை.: “மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ளவேண்டாம். அவைகளை வணங்கித் தொவும் [“அவற்றிற்குமுன் தலைவணங்கவோ அவற்றைத் தொழுதுகொள்ளவோ,” NAB] வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவராய் இருக்கிற நாம் . . . எரிச்சல் உள்ளவருமாய் இருக்கிறோம்.” (தடித்த எழுத்துக்கள் கூட்டப்பட்டன.) (சிலைகளை உண்டாக்குவதற்கும் அவற்றிற்குமுன் வணங்குவதற்கும் எதிராகவே தடையுத்தரவு கொடுக்கப்பட்டதைக் கவனியுங்கள்.)

லேவி. 26:1, கத்.பை.: “உங்களுக்கு விக்கிரகங்களையும் கொத்துவேலை உருவங்களையும் செய்துகொள்ளாமலும், நினைவுத்தூண் [புனிதத் தூண், NW] முதலியன நாட்டாமலும், உங்கள் நாட்டில் தொழுவதற்கான சிறப்புள்ள கல்லை நிறுத்தாமலும் இருப்பீர்களாக. ஏனென்றால் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.” (ஜனங்கள் அதற்குமுன் வணங்கித் தொழுதுகொள்ளும்படி எந்தச் சிலையையும் ஒருபோதும் நிறுத்திவைக்கக்கூடாது.)

2 கொரி. 6:16, கத்.வுல்.: “சர்வேசுரனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் பொருத்தமேது? . . . நீங்கள் சுயஞ்சீவிக கடவுளின் ஆலயமாயிருக்கிறீர்கள்.”

1 அருளப்பர் [யோ.] 5:21, கத்.வுல்.: “சிறுபிள்ளைகளே, விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுவீர்களாக” [“விக்கிரகங்கள்,” Dy, CC; “பொய்த் தெய்வங்கள்,” JB].

உண்மையான கடவுளின் வணக்கத்துக்கு வெறும் உதவிகளாகச் சிலைகளைப் பயன்படுத்தலாமா?

அருளப்பர் [யோ.] 4:23, 24, கத்.வுல்.: “உண்மையாக ஆராதிப்பவர்கள் ஞானத்திலும் சத்தியத்திலும் ஆராதிக்குங் காலம் வருகிறது; இப்போதே வந்திருக்கிறது. ஏனெனில் பிதாவானவரும் தம்மை இப்படி ஆராதிக்கிறவர்களைத் தேடுகிறார். சர்வேசுரன் ஞான வஸ்துவாயிருக்கிறார். ஆதலால் அவரை ஆராதிக்கிறவர்கள் ஞானத்திலும் உண்மையிலும் ஆராதிக்கவேண்டும்.” (பக்தி செலுத்துவதற்கு உதவிகளாகச் சிலைகளின்பேரில் சார்ந்திருக்கிறவர்கள் கடவுளை “ஞானத்தில்” [“ஆவியில்,” UV] வணங்குகிறதில்லை, தங்கள் மாம்சக் கண்களால் காணக்கூடியதன்பேரிலேயே சார்ந்திருக்கின்றனர்.)

2 கொரி. 5:6, கத்.வுல்.: “நாம் பிரத்தியக்ஷமாய்த் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பதனாலே, . . .”

இசையாஸ் 40:18, கத்.பை.: “யாருடைய சாயலாய் ஆண்டவரை ஆக்குவீர்கள்? எந்த உருவத்தை அவருக்கு அமைப்பீர்கள்?”

அப். 17:29, கத்.வுல்.: “ஆகையால் நாம் சர்வேசுரனுடைய வம்சமாயிருக்கக்கொள்ள, மனுஷருடைய வேலையினாலும், மனுஷ யுக்தியினாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் இவைகளைப்போல் தெய்வத்துவம் இருக்குமென்று நினைக்கலாகாது.”

ஏசா. 42:8, கத். ப.: “‘ஆண்டவர் நாமே,’ [யாவே, JB], இதுவே நமது பெயர்; நமது மகிமையைப் பிறருக்கோ நமது புகழைச் சிலைகளுக்கோ [“செதுக்கின பொருட்களுக்கோ,” Dy] விடவே மாட்டோம்.”

“பரிசுத்தவான்களைக்” கடவுளிடம் பரிந்துபேசுவோராக, ஒருவேளை நம்முடைய வணக்கத்துக்கு உதவிகளாக அவர்களின் சிலைகளைப் பயன்படுத்தி நாம் வணங்கலாமா?

அப். 10:25, 26, கத்.வுல்.: “இராயப்பர் [பேதுரு] உள்ளே பிரவேசித்தபோது, கொர்னெலியூ அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து, நமஸ்கரித்தான். இராயப்பரோ அவனைத் தூக்கிவிட்டு: எழுந்திரும், நானும் ஓர் மனுஷன்தான் என்று சொல்லி, . . . ” (பேதுரு தான் நேரில் இருக்கையில் இத்தகைய வணக்கத்தை ஏற்கவில்லையெனில், தன்னுடைய சிலை ஒன்றின்முன் முழங்காற்படியிடும்படி நம்மை ஊக்குவிப்பானா? வெளிப்படுத்துதல் 19:10-ஐயும் பாருங்கள்.)

அருளப்பர் 14:6, 14, கத்.வுல்.: “யேசுநாதர் அவரை நோக்கி: வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை. . . . என் நாமத்தினாலே நீங்கள் ஏதேனும் என்னைக் கேட்பீர்களாகில், நான் அதைச் செய்தருளுவேன்.” (தம் மூலமே நாம் பிதாவை அணுக முடியுமெனவும் நம்முடைய வேண்டுதல்கள் இயேசுவின் பெயரிலேயே செய்யப்படவேண்டுமெனவும் இங்கே இயேசு தெளிவாய்க் கூறுகிறார்.)

1 தீமோ. 2:5, கத்.வுல்.: “சர்வேசுரன் ஒருவரே; சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே; இவரே மனுஷனான யேசுக்கிறீஸ்துநாதர்.” (கிறிஸ்தவ சபையின் உறுப்பினருக்கு மத்தியஸ்தர் பாகத்தை வகித்துச் சேவிக்க மற்றவர்களுக்கு இங்கே அனுமதியில்லை.)

பக்கங்கள் 353, 354-ல் “பரிசுத்தவான்கள்” என்ற தலைப்பின் கீழ்ப் பாருங்கள்.

வணங்குவோர் ஒரு சிலை குறித்துநிற்கும் அந்த ஆளையே முக்கியமாய் மனதில் கொண்டிருக்கின்றனரா, அல்லது சில சிலைகள் மற்றவற்றைப் பார்க்கிலும் மேலானவையென கருதப்படுகின்றனவா?

வணங்குவோரின் மனப்பான்மை கருதவேண்டிய முக்கிய காரியமாகும். ஏன்? ஏனெனில், ஒரு “சிலைக்கும்” “விக்கிரகத்துக்கும்” உள்ள முக்கிய வேறுபாடு ஒரு சிலை பயன்படுத்தப்படும் முறையில் இருக்கிறது.

வணங்குவோனின் மனதில், ஓர் ஆளின் ஒரு சிலை அதே ஆளின் வேறொரு சிலையைப் பார்க்கிலும் அதிக மதிப்பு அல்லது முக்கியத்துவம் கொண்டிருக்கிறதா? அப்படியானால், அதை வணங்குவோன் அந்த ஆளை அல்ல, அந்தச் சிலையையே தன் மனதில் முக்கியமாய்க் கொண்டிருக்கிறான். வணங்குவதற்காகக் குறிப்பிட்டக் கோயில்களுக்கு ஆட்கள் நீண்ட யாத்திரை செய்கின்றனர்? அந்தச் சிலைதானே “அற்புத” சக்திகள் கொண்டிருப்பதாய்க் கருதப்படுகிறதல்லவா? உதாரணமாக, கானன் யுவ்ஸ் டெலபோர்ட்டி என்பவர் எழுதிய Les Trois Notre-Dame de la Cathedrale de Chartres என்ற புத்தகத்தில், பிரான்ஸில், சார்ட்ரீஸ் என்ற மாவட்டத் தலைமைக் கிறிஸ்தவமதக் கோயிலிலுள்ள மரியாளின் சிலைகளைப்பற்றி நமக்குப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “செதுக்கப்பட்ட, வர்ண சித்திரந்தீட்டிய அல்லது சாயம்பூசின கண்ணாடி சன்னல்களில் தோன்றிய இந்தச் சிலைகள், சரிசமமாய் புகழ்பெற்றவையல்ல. . . . மூன்று மாத்திரமே உண்மையாய் வணக்கத்துக்குரிய பொருட்கள்: கன்னிமேரி கிரிப்ட், கன்னிமேரி பில்லர், கன்னிமேரி ‘பெல்லைவெரீரி’ ஆகியவை.” ஆனால் வணக்கத்தார் சிலையையல்லாமல் அந்த ஆளை முக்கியமாய் மனதில் கொண்டிருந்தால், ஒரு சிலை மற்றதைப்போலவே சரிசமமாய்க் கருதப்படும் அல்லவா?

வணக்கத்துக்குரிய பொருட்களாயுள்ள சிலைகளைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்?

எரே. 10:14, 15, கத்.பை.: “தட்டான் ஒவ்வொருவனும் தன் சிலைகளால் மானமிழந்தான்; ஏனெனில் அவன் செய்த படிமங்கள் பொய்; அவற்றில் உயிர் இல்லை. அவை பயனற்றவை; நகைப்புக்குரிய வேலைகள்.”

இசையாஸ் 44:13-19, கத்.பை.: “மரத்தில் சிலை செய்யும் தச்சன் மரத்தின்மீது நூலிட்டு, உளியால் பக்குவப்படுத்தி, மூல மட்டப்பலகையால் சரிபார்த்து, கவராயம் என்னும் கருவியால் அளவாகப் பிரித்து ஓர் அழகான மனித உருவத்தைச் செய்கிறான்; அதையெடுத்து ஒரு மாடத்தில் வைக்கிறான். அவன் கேதுரு மரங்களை வெட்டுகிறான்; அல்லது காட்டிலுள்ள மரங்களின் நடுவில் நிற்கும் காஞ்சி மரத்தையோ ஆலமரத்தையோ தேர்ந்தெடுக்கிறான்; அல்லது தான் நட்டு, மழை வளர்த்த கேதுரு மரத்தைத் தேர்ந்துகொள்ளுகிறான். அது மனிதர்களுக்கு விறகாகப் பயன்படும்படி உண்டாக்கப்பட்டது; குளிர் காய்வதற்கும் அதிலிருந்தே விறகு எடுக்கிறான்; அப்பஞ் சுடவும் அதையே பயன்படுத்துகிறான்; அதிலும் மீதியாய் இருப்பதைக் கொண்டுதான் தெய்வத்தை உருவாக்கி வணங்குகிறான்; உளியால் ஒரு சிலை செதுக்கி அதன்முன் தெண்டனிடுகிறான். அதில் பாதியை அடுப்பெரிக்கிறான்; மற்றொரு பாகத்தைப் பயன்படுத்தி இறைச்சி சமைத்துச் சுவையான உணவுப் பொருட்களைத் தயாரித்து வயிறாரச் சாப்பிடுகிறான்; சாப்பிட்டபின் குளிர் காய்கிறான்: “நன்றாகக் குளிர் காய்ந்தேன், நல்ல தீ வளர்த்தேன்” என்று சொல்லிக் கொள்ளுகிறான். மீதியைக் கொண்டோ தனக்கொரு தெய்வமாகச் சிலை செதுக்கி, அதன்முன் குப்புற விழுந்து வணங்கி, “நீரே என் கடவுள், என்னை மீட்டருளும்!” என மன்றாடுகிறான். அவர்கள் ஒன்றும் அறிவில்லை; கண்டுபிடிக்கவுமில்லை. காணமுடியாதபடி அவர்களின் கண்கள் கட்டப்பட்டன; உணரமுடியாதபடி அவர்களின் உள்ளம் அடைபட்டது. ஆதலால் அவர்கள் மனத்தில் சிந்திப்பதில்லை; கண்டுபிடிப்பதில்லை; உணர்வதும் கிடையாது: “ஒரு பாதியை அடுப்பெரித்தேன்; அதன் நெருப்புப் பொறிகளில் அப்பம் சுட்டேன்; இறைச்சி சமைத்துச் சாப்பிட்டேன். அதில் மீதியானதைக் கொண்டு சிலை செதுக்குவேனோ? மரக்கட்டைமுன் குப்புற விழுந்து வணங்குவேனா?” என்று சொல்லக்கூடத் தெரியாமல் உணர்ச்சியற்றுப் போயினர்.”

எசே. 14:6, கத்.பை.: “ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மனந்திரும்புங்கள்; சிலைகளை [மலத்தைப்போன்ற சிலைகளை, NW] வெறுத்துத் திரும்புங்கள். நீங்கள் செய்யும் அருவருப்பானவற்றையெல்லாம் விட்டு, உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.”

எசே. 7:20, கத்.பை.: “தங்கள் அணிகலன்களைப் பார்த்து அவர்கள் அகந்தை கொண்டார்கள்; அவற்றைக் கொண்டு தங்கள் அக்கிரமத்தின் படிமங்களையும் சிலைகளின் உருவங்களையும் செய்தார்கள்; ஆகையால் பொன்னையும் வெள்ளியையும் அவர்களுக்கு வெறுப்புள்ள [“அசுத்தம்,” D; “கழிவுப்பொருள்,” NAB] தாக்குவோம்.”

முற்காலத்தில் நாம் ஒருவேளை வணங்கின ஏதாவது சிலைகளைப் பற்றி நாம் எவ்வாறு உணரவேண்டும்?

உப ஆகமம் 7:25, 26, கத்.பை.: “அவர்களுடைய சித்திர வேலைப்பாடுள்ள விக்கிரகங்களை நெருப்பால் சுட்டெரிக்கக்கடவாய். அவைகள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவைகளாகையால், நீ படுகுழியில் விழாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் விரும்பாமலும், அவற்றில் கொஞ்சமேனும் எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக. அந்த விக்கிரகங்களைப்போல் நீ சாபத்துக்கு உள்ளாகாதபடிக்கு, அவைகளில் யாதொன்றையும் உன் வீட்டிற்குக் கொண்டுபோகத் துணியாதே. அது சாபத்துக்கேற்ற பொருளாதலால், நீ விக்கிரகத்தை அசுத்தமென்றும், தீட்டுள்ள அழுகலென்றும் வெறுத்து, அருவருத்துப் புறக்கணிக்கக்கடவாய் [“அதை முற்றிலும் அருவருக்கவும் அறவே வெறுத்தொதுக்கவும் வேண்டும்,” NW].(இன்று யெகோவாவின் ஜனங்கள் மற்ற ஆட்களுக்குரிய சிலைகளை அழிக்கும்படி அதிகாரமளிக்கப்பட்டில்லை, தங்களிடம் தாங்கள் முன்னாளில் ஒருவேளை வணங்கின ஏதாவது சிலைகள் இருந்தால் அவற்றை எவ்வாறு கருதவேண்டுமென்பதற்கே, இஸ்ரவேலுக்குக் கொடுத்த இந்தக் கட்டளை ஒரு மாதிரியை அளிக்கிறது. அப். 19:19-ஐ ஒத்துப்பாருங்கள்.)

1 அருளப்பர் 5:21, கத்.வுல்.: “சிறுபிள்ளைகளே, விக்கிரகங்களுக்கு விலகி [“பொய்த் தேவர்களிடமிருந்து,” கத்.பை. (திருத்திய பதிப்பு)] உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.”

எசே. 37:23, கத்.பை.: “இனிமேல் அவர்கள் தங்கள் சிலைகளாலும், . . . தங்களையே தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்; . . . அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள்; நாம் அவர்கள் கடவுளாய் இருப்போம்.”

வணக்கத்தில் சிலைகளைப் பயன்படுத்துதல் நம்முடைய சொந்த எதிர்காலத்தின்பேரில் என்ன விளைவுண்டாக்கலாம்?

உப ஆ. 4:25, 26, கத்.பை.: “நீங்கள் அறிவு கெட்டு, உங்களுக்கு யாதொரு உருவத்தையும் [“ஏதாவது விக்கிரகத்தை,” Kx; “ஏதாவது போலியொப்புமையை,” Dy] செய்து, கடவுளாகிய ஆண்டவருக்குக் கோமுண்டாகுமாறு . . . செய்தால், . . . முற்றிலும் அழிந்துபோவீர்களென்று நான் இந்நேரம் விண்ணையும் மண்ணையும் சாட்சி வைக்கிறேன்.” (கடவுளுடைய நோக்குநிலை மாறிவிடவில்லை. மல்கியா 3:5, 6-ஐப் பாருங்கள்.)

1 கொரி. 10:14, 20, கத்.வுல்.: “ஆதலால், எனக்கு மிகவும் பிரியமானவர்களே, விக்கிரக ஆராதனைக்கு விலகியோடுங்கள். . . . அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளைச் சர்வேசுரனுக்கல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன். நீங்கள் பேய்களோடே ஐக்கியப்பட எனக்கு மனதில்லை.”

காட்சி [வெளி.] 21:8, கத்.வுல்.: “கோழைகளும், அவிசுவாசிகளும், அருவருப்புக்குரியவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரர், பொய்யர் அனைவரும் அக்கினியும், கெந்தகமும் எரிகிற தடாகத்திலே பங்கடைவார்கள். இரண்டாம் மரணம் [JB அடிக்குறிப்பு, “நித்திய மரணம்”] இதுவே.”

சங். 115:4-8, கத்.பை. (113:12-16, UV): “அவர்களுடைய சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: வெறும் மனிதக் கைவேலையே. அவைகளுக்கு வாய் உண்டு, பேசுவதில்லை; கண்கள் உண்டு, பார்ப்பதில்லை. செவிகள் உண்டு, கேட்பதில்லை; நாசி உண்டு, முகர்வதில்லை. கைகள் உண்டு, தொடுவதில்லை; கால்கள் உண்டு, நடப்பதில்லை; தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை. அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே; அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே.”