Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுதந்திரம்

சுதந்திரம்

சுதந்திரம்

சொற்பொருள் விளக்கம்:  ஓர் ஆள், தான் மற்றவர்கள்பேரில் சார்ந்திராத, அவர்களுடைய கட்டளைக்கோ செல்வாக்குக்கோ கீழ்ப்பட்டிராத அல்லது அவ்வாறில்லையென தான் பாராட்டிக்கொள்கிற ஒரு நிலையாகும். விருப்பப்படித் தெரிந்துகொள்ளும் சுயாதீனம் அளிக்கப்பட்டிருப்பதால், மனிதர், ஓரளவு சுதந்திரத்துக்கு இயல்பான விருப்பம் உடையோராய் இருக்கின்றனர். எனினும், மட்டுக்குமீறிச் சென்றால், இந்த விருப்பம் கீழ்ப்படியாமைக்கும், கலகத்துக்குங்கூட வழிநடத்துகிறது.

ஆட்கள் பைபிள் தராதரங்களை ஒருபுறம் தள்ளிவிடுகையில், அவர்கள் உண்மையில் சுதந்திரத்தை அடைகிறார்களா?

ரோமர் 6:16, 23: “மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? . . . பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”

கலா. 6:7-9: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்வொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். நன்மசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.”

பால்சம்பந்த ஒழுக்கப்பண்பு: “வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.” (1 கொரி. 6:18) “ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் . . . தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.” (நீதி. 6:32) (ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியைக் குறித்து, ரோமர் 1:24-27-ஐ பாருங்கள்.) (தகாப் பாலுறவுகள், அந்தக் கணநேரத்துக்கு இன்பந்தருவதாகத் தோன்றலாம். ஆனால் அவை வெறுக்கத்தக்க நோய்களுக்கு, வேண்டாதக் கர்ப்பந்தரித்தலுக்கு, கர்ப்பச்சிதைவு, பொறாமை, அமைதிகுலைந்த மனச்சாட்சி, உணர்ச்சிவசக் கலவரம் ஆகியவற்றிற்கும், நிச்சயமாகவே, கடவுளுடைய கண்டனத்துக்கும் வழிநடத்துகின்றன, அவர்பேரிலேயே நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகள் சார்ந்திருக்கின்றன.)

பொருட்களில் நாட்டங்கொண்டு தேடுதல்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். (1 தீமோ. 6:9, 10) “ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.” (லூக்கா 12:19-21) (பொருளுடைமைகள் நிலையான சந்தோஷத்தைக் கொண்டுவருகிறதில்லை. ஐசுவரியங்களைச் சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகள் மகிழ்ச்சியற்ற குடும்பங்களுக்கும், உடல்நலக் கேட்டுக்கும், ஆவிக்குரிய அழிவுக்கும் பெரும்பாலும் வழிநடத்துகின்றன.)

மட்டுக்குமீறிய மதுபானக் குடிவெறி: “ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. . . . முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.” (நீதி. 23:29, 30, 32) (மதுபானம் குடிப்பது தன் பிரச்னைகளை மறக்க ஒருவனுக்கு உதவிசெய்வதைப்போல் தோன்றலாம், ஆனால் அது அவற்றைத் தீர்க்கிறதில்லை. அவன் குடிமயக்கந்தெளிகையில், அந்தப் பிரச்னைகள் இன்னும் அங்கிருக்கின்றன, அடிக்கடி மற்றவர்களும் அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மதுபானம் மட்டுக்குமீறி பயன்படுத்தப்டுகையில், அது அந்த ஆளின் சுய-மரியாதையை, அவனுடைய சுக ஆரோக்கியத்தை, அவன் குடும்ப வாழ்க்கையை, கடவுளுடன் அவனுடைய உறவைப் பாழ்ப்படுத்துகிறது.)

போதைப்பொருளின் துர்ப்பழக்கம்: பக்கங்கள் 106-112-ல், “போதைப்பொருட்கள்,” என்பதன்கீழ்ப் பாருங்கள்.

துர்ச்சகவாசங்கள்: அதிக வேலையில்லாமல் ஏராளமான பணத்தை அடைவது எவ்வாறென தங்களுக்குத் தெரியுமென்று ஒரு கும்பற்காரர்கள் உங்களிடம் சொன்னால், நீங்கள் அவர்களோடு செல்வீர்களா? “நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.” (நீதி. 1:10-19) ஒருவன் யெகோவாவை வணங்குபவன் அல்லவென்றால், ஆனால் உண்மையில் நல்லமுறையில் இருப்பதாகத் தோன்றினால், அவனைப் பொருத்தமான நண்பனாக நீங்கள் கருதுவீர்களா? சீகேம் ஒரு கானானிய பிரபுவின் மகன், அவன் “தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்,” ஆனால் அவன் “அவளைக் [தீனாளைக்] கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்,” என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (ஆதி. 34:1, 2, 19) நீங்கள் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றச் சத்தியங்களை மற்ற ஆட்கள் நம்பாதிருப்பது உங்களுக்கு ஏதாவது வேறுபாட்டை உண்டுபண்ணவேண்டுமா? “மோசம்போகாதிருங்கள். துர்ச்சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” (1 கொரி. 15:33, தி.மொ.) யெகோவாவை நேசியாதவர்களை நீங்கள் உங்கள் நண்பர்களாகத் தெரிந்துகொண்டால் யெகோவா எவ்வாறு உணருவார்? அவ்வாறு செய்த யூதாவின் ஓர் அரசனுக்கு யெகோவாவின் பேச்சாளன் பின்வருமாறு கூறினான்: “இதினிமித்தம் யெகோவாவின் கடுங்கோபம் உம்மேல் வந்திருக்கிறது.”—2 நாளாகமம் 19:1, 2, தி.மொ.

கடவுளுடைய கட்டளைகளுக்கு மதிப்புக்கொடாமல் தங்கள் சொந்தத் தீர்மானங்களைச் செய்ய சுயாதீனராய் உணரும்படி மனிதரைத் தூண்டுவித்தவன் யார்?

ஆதி. 3:1-5: “சர்ப்பமானது [சாத்தானால் வாயாகப் பயன்படுத்தப்பட்டது; வெளிப்படுத்துதல் 12:9-ஐ பாருங்கள்] . . . ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் [தேவனைப்போல், NW] இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.”

ஒருவன் தன் சொந்த ஆசைகளைத் திருப்திசெய்யும்படி கடவுளுடைய சித்தத்தைப் புறக்கணிக்கையில் என்ன ஆவி அவனைத் தூண்டி இயக்குகிறது?

எபே. 2:1-3: “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே [சாத்தான் அதன் அதிபதியாயிருக்கிற] இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும் [காரிய ஒழுங்குமுறையின்படி, NW] கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.”

கடவுளைச் சேவிப்பதாக உரிமைபாராட்டுகிறவர்கள் என்ன சுதந்திர மனப்பான்மைகளைத் தவிர்ப்பது இன்றியமையாதது?

நீதி. 16:18: “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.”

நீதி. 5:12: “ஐயோ, போகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே! . . . என்று முறையிடுவாய்.” (சூழமைவு காட்டுகிறபடி, இத்தகைய மனப்பான்மை ஒருவரை வினைமையான பிரச்னைகளுக்கு வழிநடத்தக்கூடும்.)

எண். 16:3, தி.மொ.: “இவர்களனைவரும் மோசக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி அவர்களைப் பார்த்து: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் அனைவரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க யெகோவாவின் சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.”

யூதா 16: “இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.”

3 யோவான் 9: “அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.”

நீதி. 18:1, NW: “பிரிந்துபோவோன் சுயேச்சையாய் நடந்து, சகல விவேகத்தோடும் சண்டை செய்வான்.”

யாக். 4:13-15: “நாங்கள் இன்றைக்கோ நாளைக்கோ இன்ன பட்டணத்திற்குப்போய் அங்கே ஒரு வருஷந் தங்கி வியாபாரஞ் செய்து சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைத்தினம் உங்கள் ஜீவன் எப்படிப்பட்டதாகுமென்று உங்களுக்குத் தெரியாதே. அது கொஞ்சநேரந் தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையே. ஆகவே அப்படிச்சொல்லாமல், ஆண்டவருக்குச் [யெகோவாவுக்குச், NW] சித்தமானால் நாங்கள் உயிரோடிருந்து இன்னின்னதைச் செய்வோமென்று சொல்வது நியாயம்.”

ஒருவன் சுதந்திரத்துக்காக ஆசைப்படுவது கிறிஸ்தவ சபைக்குப் புறம்பேயுள்ள உலகத்தின் மாதிரியைப் பின்பற்ற அவனை வழிநடத்துகையில், அவன் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வருகிறான்? கடவுள் இதை எவ்வாறு கருதுகிறார்?

1 யோவான் 2:15; 5:19: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.”

யாக். 4:4: “ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.”