Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீர்க்கதரிசனம்

தீர்க்கதரிசனம்

தீர்க்கதரிசனம்

சொற்பொருள் விளக்கம்:  தேவாவியால் ஏவப்பட்ட ஒரு செய்தி; தெய்வீகச் சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும் செய்தி. தீர்க்கதரிசனமானது, வரவிருக்கும் ஏதோவொன்றைப்பற்றிய முன்னறிவிப்பாக, தேவாவியால் ஏவப்பட்ட ஒழுக்கப் போதகமாக, அல்லது தெய்வீகக் கட்டளை அல்லது தீர்ப்பின் தெரிவிப்பாக இருக்கலாம்.

பைபிளில் பதிவுசெய்துள்ள என்ன முன்னறிவிப்புகள் ஏற்கெனவே நிறைவேற்றமடைந்திருக்கின்றன?

சில மாதிரிகளுக்கு, “பைபிள்,” “கடைசி நாட்கள்,” “தேதிகள்,” என்ற முக்கிய தலைப்புகளையும், “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது நன்மைபயக்குகிறது,” என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 343-346 வரையிலும் பாருங்கள்.

இனிமேலும் நிறைவேறவிருக்கிற முதன்மைவாய்ந்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் சில யாவை?

1 தெ. 5:3: “சமாதானமும் சவுக்கியமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.”

வெளி. 17:16, தி.மொ.: “நீ கண்ட பத்துக்கொம்புகளும் மிருகமுமான அவர்கள் அந்த வேசியைப் [மகா பாபிலோன்] பகைத்து அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி அவள் மாம்சத்தைப் பட்சித்து அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள்.”

எசே. 38:14-20, தி.மொ.: “நீ கோகுக்கு இப்படிச் சொல், யெகோவாவாகிய ஆண்டவர் சொல்வது இதுவே: அக்காலத்தில் என் ஜனமாகிய [ஆவிக்குரிய] இஸ்ரவேல் பயமின்றிக் குடியிருக்கும்போது அது உனக்குத் தெரியவருமே; அப்பொழுது நீயும் உன்னோடே திரள் ஜனங்களும் வடதிசைக் கடைகோடியிலுள்ள உன் ஸ்னத்திலிருந்து வருவீர்கள்; . . . இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோக் வருங்காலத்தில்—இது யெகோவாவாகிய ஆண்டவரின் திருவாக்கு—அக்காலத்திலேயே என் உக்கிரகோபம் என் நாசியில் ஏறும், என் எரிச்சலிலும் என் கோக்கினியிலும் நான் பேச”வேண்டும்.

தானி. 2:44, தி.மொ.: “[கடவுள் ஏற்படுத்தும்] அந்த ராஜ்யம் . . . அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி அழித்துவிடும்; தானோ என்றென்றுமாக நிலைநிற்கும்.”

எசே. 38:23, தி.மொ.: “நான் பல ஜாதியாரின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி அவர்கள் என்னை அறியும்படி செய்வேன்; நானே யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள்.”

வெளி. 20:1-3: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக் கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களை மோம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.”

யோவான் 5:28, 29, NW: “இதைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம், ஏனெனில் அந்த மணிநேரம் வருகிறது அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளிவருவார்கள், நல்ல காரியங்களைச் செய்தவர்கள் ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலுக்கும், தீமையைப் பழக்கமாய்ச் செய்தவர்கள் நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலுக்கும் வருவார்கள்.”

வெளி. 21:3, 4, தி.மொ.: “சிங்காசனத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தங் கேட்டேன்: இதோ, கடவுள் தங்கும் கூடாரம் மனுஷரிடத்திலிருக்கிறது; அவர்களிடத்தில் அவர் தங்குவார். அவர்கள் அவர் ஜனங்களாயிருப்பார்கள், கடவுள் தாமே அவர்களோடிருப்பார். அவர்கள் கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமிராது, துக்கமும் அலறுதலும் வேதனையும் இனி இரா; முந்தினவை ஒழிந்துபோயின என்று விளம்பினது.”

1 கொரி. 15:24-28, தி.மொ.: “கடவுளும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுக்கும்போது முடிவுவரும். . . . ஆகிலும், எல்லாம் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது தெளிவு. எல்லாம் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போதோ கடவுளே எல்லாரிலும் எல்லாமாயிருப்பதற்குக் குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.”

பைபிளிலுள்ள முன்னறிவிப்புகளில் கிறிஸ்தவர்கள் ஏன் கூர்ந்த அக்கறை கொண்டிருக்கவேண்டும்?

மத். 24:42: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.”

2 பேதுரு 1:19-21, தி.மொ.: “தீர்க்கதரிசனம் இதினால் [இயேசு மறுரூபமான சமயத்தில் நடந்ததன் பலனாக] நமக்கு அதிக உறுதியானது. . . . அவ்வசனத்தை நீங்கள் கவனித்திருப்பது நலமாகும். . . . தீர்க்கதரிசனம் ஒருபோதும் மனுஷசித்தத்தினால் வரவில்லை; கடவுளினிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் மனுஷர் பேசினார்கள்.”

நீதி. 4:18: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.”

மத். 4:4: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய [யெகோவாவின், NW] வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (இது அவருடைய மகத்தான தீர்க்கதரிசன வாக்குகளையும் உட்படுத்துகிறது.)

2 தீமோ. 3:16: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (இவ்வாறு கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தை முழுவதும் நாம் ஊக்கமாய்ப் படிப்பதற்கு உகந்தது.”)

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘தீர்க்கதரிசனத்தின்பேரில் நீங்கள் மட்டுக்குமீறிய அழுத்தம் வைக்கிறீர்கள். தேவைப்படுகிறதெல்லாம் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்று நல்ல கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்துவதே’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இயேசு கிறிஸ்து வகித்தப் பாகத்தை நன்றியோடு மதித்துணருவது நிச்சயமாகவே இன்றியமையாதது. ஆனால் முதல் நூற்றாண்டிலிருந்த யூதர் அவரை ஏற்கத் தவறினதன் ஒரு காரணம் அவர்கள் தீர்க்கதரிசனத்துக்குப் போதிய கவனம் செலுத்தாததே என்பது உங்களுக்குத் தெரியுமா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘மேசியா (கிறிஸ்து) எப்பொழுது தோன்றுவார் மேலும் அவர் என்ன செய்வார் என்பவை எபிரெய வேத எழுத்துக்களிலுள்ள தீர்க்கதரிசனங்களில் முன்னறிவித்திருந்தன. ஆனால் பொதுவில் யூதர்கள் அந்தத் தீர்க்கதரிசனங்களில் சொல்லியிருந்தவற்றிற்குக் கவனம் செலுத்தவில்லை. மேசியா என்ன செய்யவேண்டுமென்பதைப்பற்றி அவர்கள் தங்கள் சொந்த எண்ணங்களைக் கொண்டிருந்தார்கள், இதன் விளைவாக அவர்கள் கடவுளுடைய குமாரனை ஏற்காமல் தள்ளிவிட்டனர். (பக்கம் 211-ல், “இயேசு கிறிஸ்து,” என்பதன்கீழ்ப் பாருங்கள்.)’ (2) ‘இன்று கிறிஸ்து பரலோக அரசராக ஆளத்தொடங்கி, எல்லா ஜாதிகளின் ஜனங்களையும் ஜீவனடைவதற்கு அல்லது அழிவடைவதற்குப் பிரித்துக்கொண்டிருக்கிற காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். (மத். 25:31-33, 46) ஆனால் மக்கள் பெரும்பான்மையர் வேறு ஏதோவொன்றிற்காகத் தேடுகின்றனர்.’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘நல்ல கிறிஸ்தவனாயிருப்பது முக்கியமென நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இயேசு கற்பித்தக் காரியங்களில் சிலவற்றை நான் செய்து, நம்முடைய வாழ்க்கையில் எதை முதலாவது வைக்வேண்டுமென அவர் சொன்னதை நான் புறக்கணித்தால் நல்ல கிறிஸ்தவனாயிருப்பேனா? . . . இங்கே மத்தேயு 6:33-ல் பதிவுசெய்திருக்கிறபடி அவர் சொன்னதைக் கவனியுங்கள்.’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘இந்த ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்பித்து, இதை, மீட்பராக அவரில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தினிமித்தம் நாம் மன்னிப்புக் கேட்பதற்கும் முன்னால் வைத்தது உண்மையல்லவா? (மத். 6:9-12)’