Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துன்பம்

துன்பம்

துன்பம்

சொற்பொருள் விளக்கம்: வேதனை அல்லது துயரத்தை ஒருவன் சகிக்கையில் அவன் பட்ட அனுபவமாகும். இந்தத் துன்பம் உடல், மனம், அல்லது உணர்ச்சிவசம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். பல காரியங்கள் துன்பத்தை உண்டாக்கலாம்; உதாரணமாக, போரின் மற்றும் வியாபார பேராசையின் விளைவாகச் செய்யப்பட்ட இன்னல், தலைமுறைதலைமுறையாகக் கடத்தப்படும் தீங்குகள், நோய், விபத்துகள், “நாசகரமான இயற்கைநிகழ்ச்சிகள்,” மற்றவர்கள் சொன்ன அல்லது செய்த அன்பற்றக் காரியங்கள், பேய்த் தொல்லைகள், பேராபத்து வரவிருப்பதைப்பற்றிய உணர்வு, அல்லது தன் சொந்த முட்டாள்தனம் ஆகியவையாகும். இந்தப் பல்வேறு காரணங்களின் விளைவாக உண்டாகும் துன்பம் இங்கே சிந்திக்கப்படும். எனினும், மற்ற ஆட்களின் நெருக்கடி நிலையை ஒருவன் உணர்வதாலும் அல்லது தெய்வபக்தியற்ற நடத்தையை அவன் கவனிப்பதால் அவனுக்குண்டாகும் துக்கத்தாலும் துன்பம் அனுபவிக்கப்படலாம்.

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

அதற்கு யார் உண்மையில் குற்றஞ்சாட்டப்படவேண்டும்?

பெரும்பான்மையான துன்பத்துக்கு மனிதரே குற்றஞ்சாட்டப்படவேண்டும். அவர்கள் போர்கள் தொடுக்கிறார்கள், பெருங்குற்றங்களைச் செய்கிறார்கள், சூழ்நிலைகளைத் தூய்மைக்கேடு செய்கிறார்கள், உடனொத்த மனிதருக்கான அக்கறையினால் அல்லாமல் பேராசையால் தூண்டப்பட்ட ஒரு முறையில் பெரும்பாலும் தொழில் நடத்துகின்றனர், மேலும் தங்கள் உடல்நத்துக்குத் தீங்குண்டாக்கக்கூடுமென்று தாங்கள் அறிந்துள்ள பழக்கங்களில் மனம்போனபோக்கில் சிலசமயங்களில் ஈடுடுகின்றனர். இவற்றை அவர்கள் செய்கையில், மற்றவர்களுக்கும் தங்களுக்குத்தாங்களேயும் தீங்கு செய்கிறார்கள். மனிதர் தாங்கள் செய்பவற்றின் இயல்பான விளைவுகளால் தாக்கப்படாமல் காக்கப்பட்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டுமா? (கலா. 6:7; நீதி. 1:30-33) மனிதர்தாமே செய்யும் இந்தக் காரியங்களுக்காகக் கடவுளைக் குற்றஞ்சாட்டுவது நியாயமா?

சாத்தானும் அவனுடைய பேய்களுங்கூட பொறுப்பில் பங்கேற்கிறார்கள். பெரும்பான்மையான துன்பம் பொல்லாத ஆவிகளுடைய செல்வாக்கின் காரணமாக உண்டாகின்றனவென பைபிளில் வெளிப்படுத்தியிருக்கிறது. எதற்காகக் கடவுளை மிகப்பலர் குற்றஞ்சாட்டுகிறார்களோ அந்தத் துன்பம் அவரிடமிருந்து வருகிறதேயில்லை.—வெளி. 12:12; அப். 10:38; மேலும் 363, 364-ம் பக்கங்களில், “பிசாசாகிய சாத்தான்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.”

துன்பம் எவ்வாறு தொங்கினது? காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது நம்முடைய முதல் மனித பெற்றோரான ஆதாம் ஏவாளின்பேரில் கவனத்தை ஊன்றவைக்கிறது. யெகோவா தேவன் அவர்களைப் பரிபூரணராக சிருஷ்டித்து பரதீஸான சூழ்நிலைமைகளில் அவர்களை வைத்தார். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்களேயானால், அவர்கள் ஒருபோதும் நோயடைந்து அல்லது மரித்துப்போயிருக்கமாட்டார்கள். அவர்கள் என்றென்றும் பரிபூரண மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்திருக்கக்கூடும். துன்பம் மனிதவர்க்கத்துக்கான யெகோவாவின் நோக்கத்தின் பாகமாயில்லை. ஆனால் தாம் அவர்களுக்குக் கொடுத்ததைத் தொர்ந்து அனுபவித்து மகிழ்வது கீழ்ப்படிதலின்பேரில் சார்ந்திருந்ததென்று யெகோவா ஆதாமுக்குத் தெளிவாகச் சொன்னார். தொர்ந்து வாழ்வதற்கு அவர்கள் சுவாசிக்கவும், சாப்பிடவும், பானம்பண்ணவும், தூங்கவும் வேண்டுமென்பது எளிதில் விளங்கின. மேலும் வாழ்க்கையை முழுமையாய் அனுபவித்துமகிழவும் அத்தகைய வாழ்க்கையை என்றென்றுமாக அனுபவிக்கத் தயவுகூரப்படவும் கடவுளுடைய நீதிக்குரிய கட்டளைகளையும் அவர்கள் கைக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் தங்கள் சொந்த வழியில் செல்லவும், நன்மைத் தீமை இன்னதென்பதற்குரிய தங்கள் சொந்தத் தராதரங்களை ஏற்படுத்திவைத்துக்கொள்ளவும் தெரிந்துகொண்டார்கள், இவ்வாறு அவர்கள், உயிரளிப்பவராகிய கடவுளைவிட்டு விலகிப்போனார்கள். (ஆதி. 2:16, 17; 3:1-6) பாவம் மரணத்துக்கு வழிநடத்தினது. பாவிகளாகவே ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பிறப்பித்தார்கள், தங்களுக்கு இனிமேலும் இராத ஒன்றைத் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் கடத்த முடியவில்லை. எல்லாரும் பாவத்தில் பிறந்தார்கள், தவறுசெய்யச் சாயும் மனப்போக்குகளுடனும், நோய்க்கு வழிநடத்தும் பலவீனங்களுடனும், முடிவில் மரணத்தில் விளைவடையும் ஒரு பாவ பரம்பரைச் சொத்துடனும் பிறந்தார்கள். இன்று பூமியிலுள்ள எல்லாரும் பாவத்தில் பிறந்திருப்பதால், நாம் எல்லாரும் பல்வேறு வழிகளில் துன்பத்தை அனுபவிக்கிறோம்.—ஆதி. 8:21; ரோமர் 5:12.

நமக்கு நடப்பதன்பேரில் “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” பாதிப்பைக் கொண்டிருக்கின்றனவென பிரசங்கி 9:11-ல் (NW) சொல்லியிருக்கிறது. நாம் ஒருவேளை காயப்படலாம், அது பிசாசு நேரடியாக உண்டுபண்ணுவதால் அல்ல அல்லது மனிதர் எவராவது அதைச் செய்வதால் அல்ல, ஆனால் தற்செயலாய் நாம் ஓர் இடத்தில் தவறான சமயத்தில் இருந்ததால்தானே ஏற்படலாம்.

மனிதவர்க்கத்துக்கு விடுதலையைக் கொண்டுவர கடவுள் ஏன் ஏதாயினும் செய்கிறதில்லை? ஆதாம் செய்த ஒன்றுக்காக நாம் எல்லாரும் ஏன் துன்பப்படவேண்டும்?

மிகுந்தத் துன்பத்தை நாம் எவ்வாறு தவிர்க்கலாமென, பைபிளில் கடவுள் நமக்குச் சொல்கிறார். வாழ்க்கை நடத்துவதன்பேரில் மிகச் சிறந்த அறிவுரையையும் அவர் அளித்திருக்கிறார். இவற்றைப் பொருத்திப் பயன்படுத்துகையில், இது நம்முடைய வாழ்க்கையைக் கருத்துள்ளதாய் நிரப்புகிறது, சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் பலன்தருகிறது, ஒருவரையொருவர் உண்மையில் நேசிக்கும் ஆட்களுடன் நெருங்கிய கூட்டுறவுக்குள் நம்மைக் கொண்டுவருகிறது, மேலும் உடல்சம்பந்தமாய், தேவையற்ற மிகுந்த துன்பத்தைக் கொண்டுவரக்கூடிய பழக்கவழக்கங்களுக்கு எதிராக நம்மைப் பாதுகாக்கிறது. இந்த உதவியை நாம் அசட்டை செய்தால், நாம் நம்மீதும் மற்றவர்கள்மீதும் கொண்டுவரும் இக்கட்டுக்காகக் கடவுளைக் குற்றஞ்சாட்டுவது சரியா?—2 தீமோ. 3:16, 17; சங். 119:97-105.

எல்லாத் துன்பத்தையும் முடிவுசெய்வதற்கு யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் அந்த முதல் மனித ஜோடியைப் பரிபூரணராகச் சிருஷ்டித்தார், மேலும் வாழ்க்கை அவர்களுக்கு இன்பமாயிருக்கும்படி எல்லா ஏற்பாட்டையும் அன்புடன் செய்தார். அவர்கள் வேண்டுமென்றே கடவுளைவிட்டு விலகிச் சென்றபோது, பெற்றோர் செய்ததன் விளைவுகளிலிருந்து அவர்களுடைய பிள்ளைகளைத் தடுத்துக் காப்பாற்றும்படி கடவுள் தலையிடுவதற்குக் கடமைப்பட்டாரா? (உபா. 32:4, 5; யோபு 14:4) நாம் நன்றாய் அறிந்திருக்கிறபடி, மணம்செய்தத் தம்பதிகள் பிள்ளைகளைப் பிறப்பிக்கும் அதோடுகூடிய மகிழ்ச்சியை அனுபவிக்கலாம், ஆனால் அவர்களுக்கு உத்தரவாதங்களும் இருக்கின்றன. பெற்றோரின் மனப்பான்மைகளும் நடத்தைகளும் அவர்களுடைய பிள்ளைகளைப் பாதிக்கின்றன. இருப்பினும், யெகோவா, அதிசயமான தகுதியற்றத் தயவை வெளிப்படுத்துபவராய், தம்முடைய சொந்த மிகவும் நேசிக்கப்பட்ட குமாரனை, அவர் தம்முடைய உயிரை மீட்கும் பொருளாச் செலுத்தும்படியும், இவ்வாறு ஆதாமின் சந்ததியாரில், நன்றிமதித்துணர்வோடு இந்த ஏற்பாட்டில் விசுவாசங் காட்டுகிறவர்களுக்கு விடுதலையை அளிக்கும்படியும் பூமிக்கு அனுப்பினார். (யோவான் 3:16) இதன் பலனாக, ஆதாம் இழந்ததை—துன்பமில்லாத, பரதீஸான பூமியில், பரிபூரண மனித வாழ்க்கையை—மீண்டும் பெறும் வாய்ப்பு இன்று வாழும் ஜனங்களுக்குத் திறந்திருக்கிறது. இது எத்தகைய தயாளமான ஏற்பாடு!

பக்கங்கள் 306-308-ல், “மீட்கும் பொருள்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

ஆனால் அன்பான கடவுள் துன்பம் இவ்வளவு காலம் தொர்ந்திருக்க ஏன் அனுமதிக்கவேண்டும்?

இப்பொழுது வரை அவர் அதை அனுமதித்ததனால் நாம் நன்மையடைந்திருக்கிறோமா? “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [யெகோவா, NW] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:9) ஆதாம் ஏவாள் பாவஞ்செய்ததைப் பின்தொடர்ந்து, கடவுள் அவர்கள்பேரில் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்றியிருந்தால், நம்மில் ஒருவரும் இன்று இருக்கமாட்டோம். நிச்சயமாகவே இதை நாம் விரும்புவதில்லை. மேலும், பாவிகளாயிருந்த எல்லாரையும் கடவுள் பின்னால் ஒரு சமயத்தில் அழித்திருந்தால், நாம் பிறந்திருக்கமாட்டோம். இந்தப் பாவமுள்ள உலகம் இப்பொழுது வரையில் இருக்கக் கடவுள் அனுமதித்திருப்பது, நாம் உயிரோடிருக்கவும் அவருடைய வழிகளைக் கற்கவும், நம்முடைய வாழ்க்கையில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்யவும், நித்திய ஜீவனுக்காக அவர் செய்துள்ள அன்புள்ள ஏற்பாடுகளை நமக்குக் கிடைக்கக்கூடியதாக்கிக் கொள்ளவும் நமக்கு வாய்ப்பை அளித்துள்ளது. யெகோவா நமக்கு இந்த வாய்ப்பை அருளியது அவருடைய பங்கில் மிகுந்த அன்பின் அத்தாட்சியாயிருக்கிறது. இந்தப் பொல்லா ஒழுங்குமுறையை அழிப்பதற்குக் கடவுள் ஒரு காலத்தைக் குறித்திருக்கிறாரெனவும் அதைச் சீக்கிரமாய்ச் செய்வாரெனவும் பைபிள் காட்டுகிறது.—ஆபகூக் 2:3; செப். 1:14.

இந்தக் காரிய ஒழுங்குமுறையில் தம்முடைய ஊழியர்களின்மீது வரக்கூடிய எல்லாத் தீங்கையும் கடவுள் சரிசெய்யமுடியும் மேலும் அவ்வாறே செய்வார். துன்பத்தை உண்டாகச் செய்பவர் கடவுளல்ல. ஆனால் இயேசு கிறிஸ்துவின்மூலம் கடவுள் மரித்தோரை உயிர்த்தெழுப்புவார், கீழ்ப்படிதலுள்ளவர்களை அவர்களுடைய எல்லா நோயினின்றும் சுகப்படுத்துவார், பாவத்தின் எல்லாத் தடத்தையும் அடியோடு அழித்துப்போடுவார், மேலும் முந்தின துக்கத்தையும் நம்முடைய மனதிலிருந்து மறைந்துபோகச் செய்வார்.—யோவான் 5:28, 29; வெளி. 21:4; ஏசா. 65:17.

கடந்துசென்ற காலம் ஏதேனில் எழுப்பப்பட்ட விவாதங்களைத் தீர்ப்பதற்குத் தேவைப்பட்டது. நுட்பவிவரங்களுக்கு, பக்கங்கள் 363, 364, மேலும் 428-430-ஐ பாருங்கள்.

நாம்தாமே துயர்த்தீர்ப்பை அனுபவிக்க ஆவலாயிருக்கிறோம். ஆனால் கடவுள் நடவடிக்கை எடுக்கையில், அது ஒருசிலருக்கு மட்டுமல்ல, சரியானதை நேசிக்கும் எல்லாரின் சார்பாகவும் இருக்கவேண்டும். கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல.—அப். 10:34.

உதாரணங்கள்: வேதனையான அறுவைச் சிகிச்சைக்குட்படுவதிலிருந்து நன்மையான பலன் உண்டாகும் என்பதால், அன்புள்ள பெற்றோர் ஒருவர் தன் பிள்ளை அதற்குட்பட அனுமதிக்கலாமென்பது உண்மையல்லவா? மேலும், வேதனையான நோய்களுக்கு “விரைவாய்த் தீர்க்கும் பரிகாரங்கள்” பெரும்பாலும் வெறும் மேலீடானவையே என்பதும் உண்மையல்லவா? காரணத்தை முற்றிலும் நீக்குவதற்கு அதிகக் காலம் அடிக்கடி தேவைப்டுகிறது.

கடவுள் ஏன் ஆதாமை மன்னித்துவிட்டு அவ்வாறு மனிதவர்க்கம் அனுபவித்துள்ள இந்தப் பயங்கரத் துன்பத்தைத் தடுக்கவில்லை?

அது உண்மையில் துன்பத்தைத் தடுத்திருக்குமா அல்லது அதற்குப் பதில், அது கடவுளைத் துன்பத்துக்குப் பொறுப்புள்ளவராக்கியிருக்குமா? தன் பிள்ளைகள் வேண்டுமென்றே செய்தத் தவறுக்குக் கண்டிப்பான சிட்சைக்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாகத் தகப்பன் அதை வெறுமென கண்டுங்காணாமல் விட்டால் என்ன நடக்கிறது? அந்தப் பிள்ளைகள் முதல் ஒரு வகையான தவறிலும் பின்பு மற்றொன்றிலும் அடிக்கடி உட்படுவார்கள், இந்த உத்தரவாதத்தின் பெரும்பாகம் தகப்பன்மீதேயிருக்கிறது.

இவ்வாறே, வேண்டுமென்று செய்த ஆதாமின் பாவத்தை யெகோவா மன்னித்திருந்தால், அது உண்மையில் கடவுளை அந்தத் தவறுக்குப் பங்குள்ளவராகச் செய்திருக்கும். அது பூமியில் நிலைமைகளைச் சற்றேனும் முன்னேற்றுவித்திருக்காது. (பிரசங்கி 8:11-ஐ ஒப்பிடுங்கள்.) அல்லாமலும், தேவதூதர்களான குமாரர்கள் கடவுளை அவமதிப்பதிலும் விளைவடைந்திருக்கும், மேலும் மேம்பட்ட எதற்குமுரிய நம்பிக்கைக்கு உண்மையான ஆதாரம் எதுவுமில்லை எனவும் குறிக்கும். ஆனால் அத்தகைய நிலைமை ஒருபோதும் ஏற்பட்டிராது, ஏனெனில் நீதி யெகோவாவின் ஆட்சியின் மாற்றியமைக்க முடியாத ஓர் அஸ்திபாரமாகும்.—சங். 89:14.

பிள்ளைகள் வினைமையான உடல் மற்றும் மன ஊறுபாடுகளுடன் பிறக்கும்படி கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?

அத்தகைய ஊறுபாடுகளைக் கடவுள் உண்டாக்குகிறதில்லை. அவர் முதல் மனித ஜோடியைப் பரிபூரணராயும், தங்கள் சொந்தச் சாயலில் பரிபூரண பிள்ளைகளைப் பிறப்பிக்கும் திறமையுடனும் சிருஷ்டித்தார்.—ஆதி. 1:27, 28.

நாம் ஆதாமிலிருந்து பாவத்தைச் சுதந்தரித்தோம். அந்தச் சுதந்தரிப்பு உடல் மற்றும் மன ஊறுபாடுகளை அடையும் தன்மையைத் தன்னோடு கொண்டுசெல்கிறது. (ரோமர் 5:12; மேலுமான விவரங்களுக்கு 394-ம் பக்கத்தைப் பாருங்கள்.) சுதந்தரித்த இந்தப் பாவச் சொத்து கருப்பையில் கர்ப்பந்தரித்தச் சமயத்திலிருந்து நம்முடன் இருக்கிறது. இந்தக் காரணத்தினிமித்தமே அரசன் தாவீது பின்வருமாறு எழுதினான்: “என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.” (சங். 51:5) ஆதாம் பாவஞ்செய்யாதிருந்தால், கடத்துவதற்கு விரும்பத்தக்கத் தன்மைகள் மாத்திரமே இருந்திருக்கும். (யோவான் 9:1, 2-ன்பேரில் விளக்கக்குறிப்புகளுக்கு 319-ம் பக்கத்தைப் பாருங்கள்.)

பெற்றோர் தங்கள் இன்னும் பிறவாதக் குழந்தைக்குத் தீங்குசெய்ய முடியும்—உதாரணமாக, கருத்தரித்திருக்கையில் போதப்பொருள் துர்ப்பியோகம் செய்வதன்மூலம் அல்லது புகைப்பழக்கத்தில் ஈடுடுவதன்மூலம் அவ்வாறு செய்யலாம். நிச்சயமாகவே, எல்லாக் குழந்தைப் பிறப்பிலும் பிறப்பு ஊறுபாடுகளுக்கு அல்லது தங்கள் பிள்ளையின் உடல்நலக்கேட்டுக்கு அந்தத் தாய் அல்லது தகப்பன் பொறுப்புள்ளவராயிருப்பதில்லை.

கிறிஸ்துவின் மீட்பின் கிரய பலிக்குரிய நன்மைகளை யெகோவா அன்புடன் பிள்ளைகளுக்கு வழங்குகிறார். கடவுளை உண்மையுடன் சேவிக்கும் பெற்றோருக்கு அக்கறைகாட்டுபவராய்க் கடவுள் அவர்களுடைய இளம் பிள்ளைகளைப் பரிசுத்தமானவர்களாகக் கருதுகிறார். (1 கொரி. 7:14) இது தங்கள் பிள்ளைகளின்பேரிலுள்ள அன்பான அக்கறையினால், கடவுளுடன் தங்கள் சொந்த நிலைநிற்கையைப்பற்றிக் கவனமாயிருக்கும்படி கடவுள்-பயமுள்ள பெற்றோருக்கு உள்நோக்கத்தூண்டுதலளிக்கிறது. விசுவாசித்துக் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலைக் காட்டுவதற்குப் போதிய வயதான இளைஞருக்கு, தம்முடைய ஊழியராக அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையைக் கொண்டிருக்கும் சிலாக்கியத்தை யெகோவா அருளுகிறார். (சங். 119:9; 148:12, 13; அப். 16:1-3) தம்முடைய பிதாவின் பரிபூரண பிரதிபலிப்பாயிருந்த இயேசு, சிறுவர்களின் சுகநலத்தில் விசேஷித்த அக்கறை காட்டினது, மரித்தோரிலிருந்தும் ஒரு பிள்ளையை எழுப்பினது கவனிக்கத்தக்கது. நிச்சயமாகவே மேசியானிய அரசராக அவர் இவ்வாறு தொர்ந்து செய்வார்.—மத். 19:13-15; லூக்கா 8:41, 42, 49-56.

உடைமைக்கும் உயிருக்கும் விரிவான சேதத்தை உண்டுபண்ணும் “இயற்கை துன்பநிகழ்ச்சிகளைக்” கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?

இன்றைய செய்திகளில் அவ்வளவு அடிக்கடி தோன்றும் பூமியதிர்ச்சிகள், புயற்காற்றுகள், வெள்ளப்பெருக்குகள், மழையில்லா வறட்சிகள், எரிமலை எழுச்சிகள், ஆகியவற்றைக் கடவுள் உண்டுபண்ணுகிறதில்லை. சில ஜனங்களின்மீது தண்டனையைக் கொண்டுவர அவர் இவற்றைப் பயன்படுத்திக்கொண்டில்லை. பேரளவில், இவை, பூமியின் சிருஷ்டிப்பு முதற்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் இயற்கை சக்திகளால் உண்டுபண்ணப்படுகின்றன. நம்முடைய நாளில் பெரும் பூமியதிர்ச்சிகளும் உணவு குறைபாடுகளும் இருக்குமென பைபிளில் முன்னறிவித்திருக்கிறது, ஆனால், வானிலை ஆராய்ச்சியாளன் ஒருவன் தான் முன்னுணர்ந்து கூறும் தட்பவெப்பநிலைக்குத் தான் எவ்வகையிலும் பொறுப்புள்ளவனாக இல்லையோ, அவ்வாறே இது, கடவுளோ அல்லது இயேசுவோ அவற்றிற்குப் பொறுப்புள்ளவர்களென குறிக்கிறதில்லை. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்குரிய கூட்டு அடையாளத்தில் முன்னறிவித்துள்ள மற்ற எல்லாக் காரியங்களோடுங்கூட இவை சம்பவிப்பதால், கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள் அருகில் இருக்கின்றனவென்ற அத்தாட்சியின் பாகமாக இவை இருக்கின்றன.—லூக்கா 21:11, 31.

செய்யப்பட்டுள்ள தீங்குக்கு மனிதரே அடிக்கடி கனத்தப் பொறுப்புள்ளோராயிருக்கின்றனர். எம்முறையில்? போதிய எச்சரிக்கை கொடுத்தும், பலர் அபாய நிலப்பகுதியிலிருந்து வெளியேற மறுக்கின்றனர் அல்லது தேவைப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றனர்.—நீதி. 22:3; மத்தேயு 24:37-39-ஐ ஒப்பிடுங்கள்.

இத்தகைய இயற்கை சக்திகளைக் கடவுள் கட்டுப்படுத்த முடியும். இயேசு தம்முடைய மேசியானிய ராஜ்யத்தின்கீழ் மனிதவர்க்கத்துக்குச் செய்யவிருப்பதற்கு ஓர் உதாரணமாக, கலிலேயாக் கடலில் உண்டான கடும்புயலை அமைதிப்படுத்துவதற்குக் கடவுள் இயேசு கிறிஸ்துவுக்கு அதிகாரமளித்தார். (மாற்கு 4:37-41) கடவுளைவிட்டு விலகிப்போவதன்மூலம், ஆதாம் தன் சார்பாகவும் தன் சந்ததியின் சார்பாகவும் அத்தகைய தெய்வீகத் தலையிடுதலைத் துறந்துவிட்டான். கிறிஸ்துவின் மேசியானிய ஆட்சியின்போது ஜீவன் அளிக்கப்படுவோர் அத்தகைய அன்புள்ள கவனிப்பை, கடவுளால் அதிகாரமளிக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மாத்திரமே கொடுக்கக்கூடிய இந்த வகையான கவனிப்பை அனுபவிப்பார்கள்.—ஏசா. 11:9.

துன்பம் அனுபவிக்கும் ஆட்கள் பழிபாவங்களினிமித்தம் கடவுளால் தண்டிக்கப்படுகிறார்களா?

வாழ்க்கைக்குரிய தெய்வீகத் தராதரங்களை மீறுகிறவர்கள் கெட்ட விளைவுகளை அனுபவிக்கின்றனர். (கலா. 6:7) சிலசமயங்களில் அவர்கள் கசப்பான விளைவை சீக்கிரத்தில் அறுவடைசெய்கின்றனர். மற்றச் சந்தர்ப்பங்களில், அவர்கள் நெடுங்காலம் செழித்திருப்பதாகத் தோன்றலாம். இதற்கு மாறாக, ஒருபோதும் தவறுசெய்யாத இயேசு கிறிஸ்து, கொடுமையாய்த் தவறாக நடத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஆகையால், இந்தக் காரிய ஒழுங்குமுறயில் வாழ்வுவளத்தைக் கடவுளுடைய ஆசீர்வாதத்தின் அத்தாட்சியாக் கருதக்கூடாது, துன்பத்தையும் அவருடைய கண்டனத் தெரிவிப்பின் அத்தாட்சியாகக் கருதக்கூடாது.

யோபு தன் உடைமைகளை இழந்து வெறுக்கத்தக்க நோயால் அல்லற்படுத்தப்பட்டபோது, அது கடவுள் கண்டனம்பண்ணினதால் உண்டாகவில்லை. சாத்தானே அதற்கு உத்தரவாதமுள்ளவனென்று பைபிளில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. (யோபு 2:3, 7, 8) ஆனால் யோபப் பார்க்க வந்த தோர்கள் யோபு ஏதோ பொல்லாப்பைச் செய்திருக்கவேண்டுமென்றே அவனுடைய அந்த நெருக்கடிநிலை நிரூபிக்கவேண்டுமென விவாதித்தனர். (யோபு 4:7-9; 15:6, 20-24) யெகோவா பின்வருமாறு சொல்லி அவர்களைக் கடிந்துகொண்டார்: “உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோம் மூளுகிறது; . . . நீங்கள் என்னைப் பற்றித் தகுதியானவைகளைப் [உண்மையானதைப், NW] பேசவில்லை.”—யோபு 42:7, தி.மொ.

பொல்லாதவர்கள் ஒருவேளை சிறிதுகாலம் செழிக்கலாம். ஆசாப் பின்வருமாறு எழுதினான்: “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.”—சங். 73:3, 5, 8, 12.

கடவுளுக்குக் கணக்குக்கொடுக்கும் அந்த நாள் வரும். அந்தச் சமயத்தில் அவர் இந்தப் பொல்லாதவர்களை என்றென்றுமாக அழித்துப்போடுவதனால் அவர்களைத் தண்டிப்பார். நீதிமொழிகள் 2:21, 22-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” நேர்மையுள்ளவர்கள்—இவர்களில் பலர் துன்பத்தை அனுபவித்தனர்—பரிபூரண சுகத்தையும் பூமியின் ஏராளமான விளைவின் நிறைவான பங்கையும் அனுபவித்து மகிழ்வார்கள்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘இந்த எல்லாத் துன்பத்தையும் கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இது நம்மெல்லாரையும் ஆழமாய்ப் பாதிக்கும் காரியம். இந்தக் கேள்வியைக் கொண்டுவர உங்களைச் செய்வித்தது எதுவென நான் கேட்கலாமா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘(பக்கங்கள் 393-396-ல் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.)’ (2) ‘(அவருக்குத் தனிப்பட்டவண்ணமாய்த் துன்பத்தைக் கொண்டுவந்திருக்கிற அந்தத் தனிவகை நிலைமையிலிருந்து துயர்த்தீர்ப்பை அளிக்கும் மற்ற வேதவசனங்களைக் குறிப்பிடுங்கள்.)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்  (அவர்களுடைய கவலை உலகத்தில் நடக்கும் அநீதிகளின் காரணமானதாயிருந்தால்): ‘இந்நிலைமைகள் இன்று இருந்துவருவதன் காரணத்தை பைபிள் காட்டுகிறது. (பிர. 4:1; 8:9) நமக்குத் துயர்த்தீர்ப்பைக் கொண்டுவருவதற்குக் கடவுள் என்ன செய்யப்போகிறாரென்பதையுங்கூட அது காட்டுகிறதென உங்களுக்குத் தெரியுமா? (சங். 72:12, 14; தானி. 2:44)’

பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை:  ‘நீங்கள் கடவுளில் நம்பிக்கையுள்ள ஆளெனத் தெரிகிறது. கடவுள் அன்பானவரென நீங்கள் நம்புகிறீர்களா? . . . அவர் ஞானமுள்ளவரெனவும் சர்வவல்லமையுள்ளவரெனவும் நீங்கள் நம்புகிறீர்களா? . . . அப்படியானால் துன்பத்தை அனுமதிக்க அவருக்கு ஏதோ நல்ல காரணங்கள் இருக்கவேண்டும். அந்தக் காரணங்கள் என்னவென பைபிள் காட்டுகிறது. (பக்கங்கள் 393-396-ஐ பாருங்கள்.)’