Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேதிகள்

தேதிகள்

தேதிகள்

சொற்பொருள் விளக்கம்: தேதிகள் சம்பவங்கள் நடந்த காலத்தைக் குறிக்கின்றன. பைபிளில், தனியாட்களின் வாழ்நாட்கள், குறிப்பிட்ட அரசர்கள் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதி, அல்லது கவனிக்கத்தக்க மற்றச் சம்பவங்கள் ஆகியவற்றைச் சம்பந்தப்படுத்தித் தேதிகள் குறிப்பிடப்படுகின்றன. ஆதாமின் சிருஷ்டிப்புக் காலத்தை எட்டும் ஒரே முழு காலக்கணக்கு பைபிளிலேயே அடங்கியிருக்கிறது. மேலும் கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில் சில முக்கிய சம்பவங்கள் நடந்தேறவிருக்கும் காலத்தையும் பைபிள் காலக்கணக்கு முன்னதாகவே மிக நுட்பமாகக் குறிப்பிட்டது. உலகின் பெரும்பான்மையான இடங்களில் இப்பொழுது பிரபலமாக இருக்கும் கிரகோரியன் ஆண்டுக்குறிப்பேடு 1582 வரையில் உபயோகத்துக்கு வரவில்லை. உலகப்பிரகாரமான ஊற்றுமூலங்களில், பூர்வ சரித்திரத்தில் நடந்தேறிய சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் முரண்பாடு இருக்கிறது. எனினும், பாபிலோன் வீழ்ச்சியடைந்தது பொ.ச.மு. 539, ஆகவே யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தது பொ.ச.மு. 537 என்பவைப்போன்ற சில முக்கிய தேதிகள் நன்றாய் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. (எஸ்றா 1:1-3) இத்தகைய தேதிகளைத் தொடக்கநிலைகளாகப் பயன்படுத்தி, பைபிள் சம்பந்த பூர்வ நிகழ்ச்சிகள் நடந்தத் தேதிகளைத் தற்போது நடப்பிலுள்ள ஆண்டுக் குறிப்பேடுகளின் கூற்றில் குறிப்பிடுவது சாத்தியமாயிருக்கிறது.

மனிதர், லட்சக்கணக்கான ஆண்டுகள் பூமியில் இருந்திருக்கின்றனர், பைபிள் காட்டுகிறபடி வெறும் சில ஆயிர ஆண்டுகள்மட்டுமேயல்ல, என்று விஞ்ஞானிகள் நிரூபித்துவிட்டனரா?

விஞ்ஞானிகள் பயன்படுத்தும் தேதிக்குறிப்பிடும் முறைகள் பயனுள்ளவையாக இருப்பவையும் ஆனால் அடிக்கடி மிக முரண்பாடான விளைவுகளுக்கு வழிநடத்துபவையுமான ஊகிப்புகளின்பேரில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மார்ச் 18, 1982-ல் நியு சயன்டிஸ்ட் என்ற பிரசுரத்தில் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “‘நான் சொன்ன கூற்றுகள் வெறுமென ஓர் ஆண்டுக்கு முன்புதானே சொல்லப்பட்டவை என்பதை நம்புவது என்னைத் திடுக்கிடச் செய்கிறது.’ இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை ராயல் ஸ்பனத்தின் மாலைநேர பேச்சில் மேம்பட்ட பார்வையாளருக்கு முன்பாக ரிச்சர்ட் வீக்கே சொன்னார். மனிதவர்க்கத்தை உண்டுபண்ணுவது என்ற தன்னுடைய BBC டெலிவிஷன் தொர் நிகழ்ச்சியில் அவர் சமீபத்தில் ஆதரவுகொடுத்த செயற்கை ஞானம், ‘பல முக்கியமான பகுதிகளில் பிழையுள்ளதாக இருக்கலாம்’ என்று அவர் வெளிப்படுத்த வந்திருந்தார். குறிப்பாக, மனிதனுடைய மிகப் பண்டைய மூதாதை, அவர் டெலிவிஷனில் ஆதரித்துப்பேசிய 1.5-2 கோடி ஆண்டுகளைப் பார்க்கிலும் கணிசமான அளவு இளையவனாயிருப்பதாக இப்பொழுது அவர் அறிகிறார்.”—பக். 695.

காலமதிப்பீடு செய்வதற்குப் புதிய முறைகள் காலப்போக்கில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை எவ்வளவு நம்பத்தக்கவை? பொருட்களை மிதமாக வெப்பமூட்டி ஒளிரச் செய்யும் முறையைக் (தெர்மோலூமினெஸென்ஸ்) குறித்து தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1976, மக்ரோபீடியா, புத். 5, பக். 509) பின்வருமாறு சொல்கிறது: “தற்சமயத்தில் சாதனையைப் பார்க்கிலும் நம்பிக்கையே பொருட்களை மிதமாக வெப்பமூட்டி ஒளிரச் செய்யும் முறையின் தற்போதைய நிலையைச் சிறப்பித்துக் காட்டுகிறது.” மேலும், அமினோ அமிலத்தைப் பயன்படுத்தி ஒளியியக்கமுள்ள ஒரு பொருளை ஒளியியக்க மந்த நிலைக்குக் கொண்டுவரும் முறையால் (amino acid racemization) 70,000 ஆண்டுகள் பழமையானதென காட்டப்பட்ட ஓர் எலும்புக்கூடு கதிரியக்க காலக் கணக்கிடும் முறையால் 8,300 அல்லது 9,000 ஆண்டுகள் மட்டுமே பழமையானதாகக் காட்டப்பட்டதென்று சயன்ஸ் (ஆகஸ்ட் 28, 1981, பக். 1003) அறிக்கை செய்கிறது.

“கதிரியக்கச் சிதைவினால் தீர்மானிக்கப்பட்ட தேதிகள் எல்லாம் குறியிலிருந்து விலகியிருக்கலாம்—ஒருசில ஆண்டுகள் மட்டுமல்ல, பேரளவான ஆண்டுகள் வேறுபடலாம்” என்று இயற்பியல் ஆய்வுத்துறை வல்லுநர் ராபர்ட் ஜென்ட்ரி நம்பினதாகப் பாப்புலர் சயன்ஸ் (நவம்பர் 1979, பக். 81) அறிவிக்கிறது. “மனிதன் 36 லட்சம் ஆண்டுகளாக பூமியில் நடமாடியிருக்கிறான் என்பதற்கு மாறாக, ஒருசில ஆயிர ஆண்டுகள் மட்டுமே இருந்திருக்கலாம்,” என்ற முடிவுக்கு அவருடைய கண்டுபிடிப்புகள் வழிநடத்துமென அந்தக் கட்டுரை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

எனினும், இந்தப் பூமியின் வயதுதானேயும் மனிதனின் வயதைப் பார்க்கிலும் மிக அதிகப் பெரிதென விஞ்ஞானிகள் நம்புகிறார்களென்பது கவனிக்கப்படவேண்டும். பைபிள் இந்தக் கருத்துக்கு முரணாயில்லை.

பைபிளில் கூறியுள்ளபடி, ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த மக்களின் வயதுகள், நாம் பயன்படுத்தும் இதே வகையான ஆண்டுகளின்படி கணக்கிடப்பட்டனவா?

அந்த “ஆண்டுகள்” நம்முடைய மாதங்களுக்குச் சமமாக இருந்திருக்கவேண்டுமென விவாதித்தால், இதன்படி ஏனோஸ் தான் ஏழு வயதாயிருக்கையில் தகப்பனாகியிருப்பான், மற்றும் கேனான் ஒரு குமாரனைப் பெற்றபோது ஐந்து வயதாக மட்டுமே இருந்திருப்பான். (ஆதி. 5:9, 12) இது, சாத்தியமல்லவென்பது தெளிவாயிருக்கிறது.

ஜலப்பிரளயம் சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள நுட்பவிவரமான காலவரிசைப்படி அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாதங்கள் மற்றும் ஆண்டுகளின் நீட்சியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆதியாகமம் 7:11, 24-ஐயும் 8:3, 4-ஐயும் ஒத்துப்பார்ப்பது, ஐந்து மாதங்கள் (இரண்டாம் மாதம் 17-ம் தேதியிலிருந்து 7-ம் மாதம் 17-வது தேதி வரை) 150 நாட்களுக்கு, அல்லது ஐந்து 30 நாட்களைக்கொண்ட மாதங்களுக்குச் சமமாயிருந்ததெனக் காட்டுகிறது. அடுத்த ஆண்டுக்கு வருவதற்கு முன்னால் ஒரு “பத்தாம் மாதத்”துக்கும் அதற்கப்பாலுள்ள மேலுமான காலப்பகுதிக்கும் திட்டமானக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. (ஆதி. 8:5, 6, 8, 10, 12-14) சந்தேகமில்லாமல், அவர்களுடைய ஆண்டுகள் பன்னிரண்டு 30-நாட்களடங்கிய மாதங்களாலாகியவை. இஸ்ரவேலர் பருவக்கால சேர்ப்புப் பண்டிகைகளைத் திட்டமாய்க் குறிக்கப்பட்ட தேதிகளில் ஆசரித்ததால் குறிப்பிட்டுக் காட்ப்படுகிறபடி, மிகத் தொலைவான ஆரம்பக் காலத்திலேயே, கண்டிப்பான சந்திர ஆண்டுக்குறிப்பேடு சூரிய ஆண்டின் நீட்சிக்கு ஏற்ப இடையிடையே ஒழுங்குப்படி சரிப்படுத்தியமைக்கப்பட்டது. இம்முறையில் அந்தப் பண்டிகைகள் பொருத்தமான பருவங்களில் தொர்ந்து வந்தன.—லேவி. 23:39.

மனிதர் என்றென்றும் வாழ்ந்திருக்கும்படி கடவுள் அவர்களை உண்டாக்கினாரென்பதை மனதில் வையுங்கள். ஆதாமின் பாவமே மரணத்துக்கு வழிநடத்தினது. (ஆதி. 2:17; 3:17-19; ரோமர் 5:12) ஜலப்பிரளயத்துக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இன்று நாம் இருப்பதைப் பார்க்கிலும் பரிபூரணத்துக்கு மிக நெருங்கியநிலையில் இருந்தார்கள், ஆகையால் அவர்கள் மிக நீண்டக்காலம் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆயிர ஆண்டுகளுக்குள்ளேயே மரித்தார்கள்.

கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்பிக்கப்பட்டதென யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்கின்றனர்?

அத்தாட்சியளிக்கும் இரண்டு அணுகுமுறைகள் அந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன: (1) பைபிள் காலக் கணக்கு மற்றும் (2) தீர்க்கதரிசன நிறைவேற்றமாக 1914 முதற்கொண்டு நடந்தேறும் சம்பவங்கள். இங்கு நாம் காலக்கணக்கைக் கவனிப்போம். தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்குக் “கடைசி நாட்கள்” என்ற முக்கிய தலைப்பைப் பாருங்கள்.

தானியேல் 4:1-17-ஐ வாசியுங்கள். இந்தத் தீர்க்கதரிசனம் நேபுகாத்நேச்சாரில் ஒரு நிறைவேற்றமடைந்ததென வசனங்கள் 20-37 காட்டுகின்றன. ஆனால் இதற்கு ஒரு பெரிய நிறைவேற்றமும் உண்டு. இதை நாம் எவ்வாறு அறிகிறோம்? அரசன் நேபுகாத்நேச்சாருக்குக் கடவுள் கொடுத்த இந்தச் சொப்பனம் கடவுளுடைய ராஜ்யத்துடனும் “தமக்குச் சித்தமானவனுக்கு . . . மனுஷரில் தாழ்ந்தவ”னுக்கு அதைக் கொடுப்பாரென்ற கடளுடைய வாக்குறுதியுடனும் சம்பந்தப்படுகிறதென 3-ம் மற்றும் 17-ம் வசனங்கள் காட்டுகின்றன. தம்முடைய சொந்தக் குமாரனான இயேசு கிறிஸ்து, தம்முடைய பிரதிநிதியாக மனிதவர்க்கத்தின்மீது ஆளுகை செய்யவேண்டுமென்பது யெகோவாவின் நோக்கமென முழு பைபிளும் காட்டுகிறது. (சங். 2:1-8; தானி. 7:13, 14; 1 கொரி. 15:23-25; வெளி. 11:15; 12:10) அந்த “மனுஷரில் தாழ்ந்தவர்” நிச்சயமாக இயேசுவேயென இயேசுவைப் பற்றிய பைபிளின் விவரிப்பு காட்டுகிறது. (பிலி. 2:7, 8; மத். 11:28-30) அப்படியானால், இந்தத் தீர்க்கதரிசன சொப்பனம், யெகோவா தம்முடைய சொந்தக் குமாரனுக்கு மனிதவர்க்கத்தின்மேல் ஆளும் அதிகாரத்தைக் கொடுக்கும் அந்தக் காலத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கவேண்டியிருந்தது? அந்த மரத்தாலும் அதன் வேர்களைக் கொண்ட அடிமரபாகத்தாலும் குறிப்பிடப்பட்ட மனிதவர்க்கத்தின்மீதான அரசாட்சி “மிருக இருதயத்தைக்” கொண்டிருக்கும். (தானி. 4:16) மனிதவர்க்கத்தின் சரித்திரம் மூர்க்க மிருகங்களின் குணங்களைக் காட்டும் அரசாங்கங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கும். தற்காலங்களில், ரஷியாவைக் குறிப்பிட, கரடியும்; ஐக்கியமாகாணங்களைக் குறிப்பிட, கழுகும்; பிரிட்டனைக் குறிப்பிட, சிங்கமும்; சீனாவைக் குறிப்பிட, வலுசர்ப்பமும் பொதுவாய்ப் பயன்படுத்தப்படுகின்றன. உலக அரசாங்கங்களையும் மற்றும் சாத்தானின் செல்வாக்கின்கீழுள்ள மனித ஆட்சியின் முழு பூகோள ஒழுங்குமுறயையும் குறிப்பதற்கு அடையாளச் சின்னங்களாக மூர்க்க மிருகங்களை பைபிளும் பயன்படுத்துகிறது. (தானி. 7:2-8, 17, 23; 8:20-22; வெளி. 13:1, 2) இந்தக் காரிய ஒழுங்குமுறயின் முடிவைக் குறிப்பிடும் தம்முடைய தீர்க்கதரிசனத்தில் இயேசு காட்டியபடி, எருசலேம் “புறஜாதியாரின் காலம் [நியமிக்கப்பட்ட காலங்கள், NW] நிறைவேறும் வரைக்கும் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.” (லூக்கா 21:24) “எருசலேம்” கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது. ஏனென்றால் அதன் அரசர்கள் “யெகோவாவின் ராஜ்யபார சிங்காசனத்தின்மேல்” உட்கார்ந்தார்களென சொல்லப்பட்டது. (1 நாளா. 28:4, 5, தி.மொ.; மத். 5:34, 35) ஆகையால், மூர்க்க மிருகங்களால் குறிக்கப்பட்ட புறஜாதியாரின் அரசாங்கங்கள் மனித விவகாரங்களை வழிநடத்துவதற்குரிய கடவுளுடைய ராஜ்யத்தின் உரிமையின்மீது ‘மிதிக்கும்.’ மேலும் தாங்கள்தாமே சாத்தானின் கட்டுப்பாட்டின்கீழ் அரசியல் ஆதிக்கம் வகிக்கும்.—லூக்கா 4:5, 6-ஐ ஒப்பிடுங்கள்.

யெகோவா ராஜ்யத்தை இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுத்ததற்கு முன்னால் இத்தகைய அரசாங்கங்கள் எவ்வளவு காலம் இந்த ஆதிக்கத்தைச் செலுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும்? “ஏழு காலங்கள்” (“ஏழு ஆண்டுகள்,” AT மற்றும் Mo, மேலும் JB-ல் 13-ம் வசனத்தின்பேரில் அடிக்குறிப்பு) என்று தானியேல் 4:16-ல் சொல்லியிருக்கிறது. தீர்க்கதரிசன காலத்தைக் கணக்கிடுகையில், ஒரு நாள் ஓர் ஆண்டாக எண்ணப்படுகிறதென பைபிள் காட்டுகிறது. (எசே. 4:6; எண். 14:34) அப்படியானால், எத்தனை “நாட்கள்” உட்படுகின்றன? வெளிப்படுத்துதல் 11:2, 3-ல் அந்தத் தீர்க்கதரிசனத்திலுள்ள 42 மாதங்கள் (3 1⁄2 ஆண்டுகள்) 1,260 நாட்களாகக் கணக்கிடப்படுகின்றனவென தெளிவாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏழு ஆண்டுகள் அதற்கு இரண்டு மடங்காக, அல்லது 2,520 ஆண்டுகளாக இருக்கும். “ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக,” என்ற இந்தக் கட்டளைவிதியைப் பொருத்திப் பயன்படுத்துவது 2,520 ஆண்டுகளாகும்.

“ஏழு காலங்களைக்” கணக்கிடுவது எப்பொழுது தொங்கினது? கடவுளுடைய மாதிரி எடுத்துக்காட்டான ராஜ்யத்தில் கடைசி அரசனான, சிதேக்கியா, எருசலேமிலிருந்தச் சிங்காசனத்திலிருந்து பாபிலோனியரால் நீக்கப்பட்ட பின் கணக்கிடத்தொடங்கப்பட்டது. (எசே. 21:25-27) முடிவாக, பொ.ச.மு. 607-ன் அக்டோபர் தொக்கத்துக்குள் யூத அரசாட்சியின் கடைசி தடம் மறைந்துவிட்டது. அந்தச் சமயத்துக்குள், பாபிலோனியர் பொறுப்பளித்து விட்டுச் சென்ற யூத தேசாதிபதி கெதலியா கொலைசெய்யப்பட்டாயிற்று, மீந்திருந்த யூதர்கள் எகிப்துக்கு ஓடிப்போய்விட்டனர். (எரேமியா, அதிகாரங்கள் 40-43) இது யூதர் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த ஆண்டாகிய, பொ.ச.மு. 537-க்கு 70 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தேறியதென நம்பத்தகுந்த பைபிள் காலக்கணக்கு குறித்துக் காட்டுகிறது; அதாவது, பொ.ச.மு. 607-ன் அக்டோபர் மாதத் தொக்கச் சமயத்துக்குள் நடந்தேறிவிட்டது. (எரே. 29:10; தானி. 9:2; மேலுமான நுட்ப விவரங்களுக்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” புத்தகம், பக்கங்கள் 186-189-இல் பாருங்கள்.)

அவ்வாறென்றால், இந்தக் காலம் 1914 வரை எவ்வாறு கணக்கிடப்படுகிறது? மேலேயுள்ள அட்டவணையில் காட்டியிருக்கிறபடி, பொ.ச.மு. 607-ன் அக்டோபர் தொக்கப் பகுதியிலிருந்து 2,520 ஆண்டுகளைக் கணக்கிடுவது நம்மை பொ.ச. 1914-ன் அக்டோபர் மாதத் தொக்கப் பகுதிக்குக் கொண்டுருகிறது.

“ஏழு காலங்களைக்” கணக்கிடுதல்

“ஏழு காலங்கள்” = 7 × 360 = 2,520 ஆண்டுகள்

பைபிளிலுள்ள “காலம்,” அல்லது ஆண்டு = 12 × 30 நாட்கள் = 360. (வெளி. 11:2, 3; 12:6, 14)

“ஏழு காலங்களின்” நிறைவேற்றத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டுக்குச் சமம். (எசே. 4:6; எண். 14:34)

அக்டோபர் முற்பகுதி, பொ.ச.மு. 607-லிருந்து டிசம்பர் 31, பொ.ச.மு. 607 வரை = 1/4 ஆண்டு

ஜனவரி 1, பொ.ச.மு. 606-லிருந்து டிசம்பர் 31, பொ.ச.மு. 1 வரை = 606 ஆண்டுகள்

ஜனவரி 1, பொ.ச. 1-லிருந்து டிசம்பர் 31, 1913 வரை = 1,913 ஆண்டுகள்

ஜனவரி 1, 1914-லிருந்து அக்டோபர் முற்பகுதி, 1914 வரை = 3/4 ஆண்டு

மொத்தம்: 2,520 ஆண்டுகள்

அந்தச் சமயத்தில் என்ன நடந்தது? மனிதவர்க்கத்தின்மீது ஆளும் அதிகாரத்தை யெகோவா, பரலோகங்களில் மகிமைப்படுத்தப்பட்ட தம்முடைய சொந்தக் குமாரனான இயேசு கிறிஸ்துவினிடம் ஒப்படைத்தார்.—தானி. 7:13, 14.

அப்படியானால் பூமியில் ஏன் இன்னும் இவ்வளவு மிக அக்கிரமம் இருந்துவருகிறது? கிறிஸ்து சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட பின்பு, சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து வெளியேற்றி கீழே இந்தப் பூமிக்குத் தள்ளப்பட்டனர். (வெளி. 12:12) அரசராகிய கிறிஸ்து, யெகோவாவின் அரசாட்சியையும் மேசியாவாகத் தம்மையும் ஏற்க மறுக்கும் எல்லாரையும் அழிக்க உடனடியாகத் தொர்ந்து செயல்படவில்லை. அதற்குப்பதில், அவர் முன்னறிவித்திருந்தபடியே, உலகளாவிய ஒரு பிரசங்கவேலை செய்யப்படவேண்டியிருந்தது. (மத். 24:14) அரசராக அவர் சகல தேசங்களின் ஜனங்களையும் பிரிக்கும் வேலையை நடத்துவார், நீதியுள்ளவர்களாக நிரூபிப்போருக்கு நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பை அளிப்பார், பொல்லாதவர்களை மரணத்தில் நித்திய அழிவுக்கு ஒப்படைப்பார். (மத். 25:31-46) இதற்கிடையில், “கடைசி நாட்களுக்கு” முன்னறிவிக்கப்பட்ட மிகக் கடுமையான நிலைமைகள் நிலவியிருக்கும். “கடைசி நாட்கள்” என்ற தலைப்பின்கீழ் காட்டியிருக்கிறபடி, அந்தச் சம்பவங்கள் 1914 முதற்கொண்டு தெளிவாய்க் காணப்படுகின்றன. 1914-ல் உயிரோடிருந்த சந்ததியின் கடைசி உறுப்பினர் காட்சியிலிருந்து மறைந்துவிடுவதற்கு முன்னால், இந்தத் தற்போதைய பொல்லாத உலகம் அதில் முடிவடையப்போகிற “மிகுந்த உபத்திரவம்” உட்பட, முன்னறிவித்த எல்லாக் காரியங்களும் நடந்தேறும்.—மத். 24:21, 22, 34.

இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு எப்போது வரும்?

இயேசு பின்வருமாறு பதிலளித்தார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனுங்கூட அறியார்.” எனினும், அவர் மேலும் கூறினதாவது: “இவையெல்லாம் சம்பவித்துத் தீரும்வரை இந்தச் [“கடைசி நாட்களின்” “அடையாளம்” அதன் நிறைவேற்றத்தைத் தொங்கினபோது உயிரோடிருந்த] சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத். 24:36, 34, தி.மொ.

மேலும், 1914-ல் இயேசு கிறிஸ்துவின் பொறுப்பில் ராஜ்யம் ஸ்பிக்கப்பட்டதைப் பின்தொர்ந்து வரும் சம்பவங்களைக்குறித்துச் சொன்னபின்பு, வெளிப்படுத்துதல் 12:12 மேலும் கூறுவதாவது: “பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.”