Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நரகம்

நரகம்

நரகம்

சொற்பொருள் விளக்கம்:  “நரகம்” என்ற இந்தச் சொல் பைபிள் மொழிபெயர்ப்புகள் பலவற்றில் காணப்படுகிறது. அதே வசனங்களில் மற்ற மொழிபெயர்ப்புகள் “பிரேதக்குழி,” “மரித்தோரின் உலகம்,” போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன. மற்றும் சில பைபிள்கள் “நரகம்” என சில சமயங்களில் மொழிபெயர்த்துள்ள மூலமொழிச் சொற்களை வெறுமென இருக்கிறபடியே எழுத்துப் பெயர்ப்பு செய்கின்றன; அதாவது, அந்தச் சொற்களை மொழிபெயர்க்காமல் இருக்கிறபடியே எழுத்துக்கெழுத்து நம் மொழியில் உருப்படுத்திக் காட்டுகின்றன. இந்தச் சொற்கள் யாவை? எபிரெயுவில் ஷியோல், அதற்குச் சமமான கிரேக்கச் சொல் ஹெய்டீஸ், இது தனிப் பிரேதக்குழியை அல்ல, மரித்த மனிதவர்க்கத்தினரின் பொதுப் பிரேதக் குழியையே குறிப்பிடுகிறது; மேலும் கிரேக்க கீயென்னா நித்திய அழிவைக் குறிக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், கிறிஸ்தவமண்டலத்திலும் கிறிஸ்தவமல்லாத பல மதங்களிலும் நரகம் பேய்கள் குடியிருக்கும் இடம் எனவும் அங்கே பொல்லாதவர்கள், தங்கள் மரணத்துக்குப் பின் தண்டிக்கப்படுகின்றனரெனவும் (இது கடும்வேதனைக்கு உட்படுத்தும் தண்டனையென சிலர் நம்புகின்றனர்) கற்பிக்கப்படுகிறது.

மரித்தோர் வேதனையை அனுபவிக்கிறார்களா இல்லையாவென பைபிள் காட்டுகிறதா?

பிர. 9:5, 10: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் [உணருகிறதில்லை, NW]; . . . செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதை உன் பலத்தோடே செய், நீ போகிற பாதாளத்திலே* செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (அவர்கள் ஒன்றும் உணருகிறதில்லையென்றால், அவர்கள் வேதனையையும் உணருகிறதில்லை என்பது தெளிவாயிருக்கிறது.) (*“ஷியோல்,” AS, RS, NE, JB; “பிரேதக்குழி,” KJ, Kx; “நரகம்,” Dy; “மரித்தோரின் உலகம்,” TEV.)

சங். 146:4: “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோனைகள்* அழிந்துபோம்.” (*“யோசனைகள்,” KJ, 145:4 Dy; “திட்டங்கள்,” JB; “முன்னேற்பாடுகள்,” RS, TEV.)

உடல் செத்தபின் ஆத்துமா பிழைத்திருக்கிறதென பைபிள் காட்டுகிறதா?

எசே. 18:4: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே* சாகும்.” (*“ஆத்துமா,” KJ, Dy, RS, NE, Kx; “அந்த மனிதன்,” JB; “அந்த ஆள்,” TEV.)

“‘ஆத்துமா’ முற்றிலும் ஆவிக்குரியது, உடலற்ற மெய்ம்மை, ‘உடலிலிருந்து’ தனிவேறானது என்று பொருள்கொள்ளும் எண்ணம், . . . பைபிளில் இல்லை.”—La Parole de Dieu (பாரிஸ், 1960), ஜியார்ஜஸ் ஆஸோ, பரிசுத்த வேத எழுத்துக்களின் பேராசிரியர், ரூவென் செமினரி, ஃபிரான்ஸ், பக். 128.

“[எபிரெய வேத எழுத்துக்களில்] நெபஷ் என்ற எபிரெயச் சொல் ‘ஆத்துமா’வென அடிக்கடி மொழிபெயர்க்கப்பட்டபோதிலும், அதில் இல்லாத கிரேக்க அர்த்தத்தை அதில் சேர்த்துக்கொள்வது பிழையாகும். நெபஷ் . . . உடலிலிருந்து பிரிந்து தனியே இயங்குவது ஒருபோதும் எண்ணிப்பார்க்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் ஸைக்கி என்ற இந்தக் கிரேக்க சொல் அடிக்கடி ‘ஆத்துமா’வென மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது ஆனால் இங்கேயும் கிரேக்கத் தத்துவஞானிகள் இந்தச் சொல்லுக்குக் கொண்டிருந்த அர்த்தத்தை அது கொண்டிருப்பதாய் உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடாது. இது பொதுவாய்உயிரை,’ அல்லது ‘உயிராற்றலை,’ அல்லது, சில சமயங்களில், ‘அந்த ஆளைத்தானே’ குறிக்கிறது.—தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா (1977), புத். 25, பக். 236.

என்ன வகையான ஆட்கள் பைபிள் நரகத்துக்குச் செல்கின்றனர்?

துன்மார்க்கர் நரகத்துக்குச் செல்கிறார்களென பைபிளில் சொல்லியிருக்கிறதா?

சங். 9:17, UV: “துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே* தள்ளப்படுவார்கள்.” (*“நரகம்,” 9:18 Dy; “மரணம்,” TEV; “மரணத்துக்குரிய இடம்,” Kx; “ஷியோல்,” AS, RS, NE, JB, NW.)

நேர்மையான ஆட்களும் நரகத்துக்குச் செல்கிறார்களென பைபிளில் சொல்லியிருக்கிறதா?

யோபு 14:13: “[யோபு ஜெபித்ததாவது:] நீர் என்னைப் பாதாளத்தில்* [நரகத்தில், Dy] ஒளித்து, உமது கோம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.” (யோபு “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனும்,” என கடவுள்தாமே சொன்னார்.—யோபு 1:8.) (*“பிரேதக்குழி,” KJ; “மரித்தோரின் உலகம்,” TEV; “ஷியோல்,” AS, RS, NE, JB, NW.)

அப். 2:25-27, “அவரைக் [இயேசு கிறிஸ்துவைக்] குறித்துத் தாவீது: . . . என் ஆத்துமாவைப் பாதாளத்தில்* (நரகத்தில், KJ) விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் . . . என்று சொல்லுகிறான்.” (கடவுள் இயேசுவை நரகத்தில் ‘விட்டுவிடாதது’ இயேசு நரகத்தில், அல்லது ஹேடீஸில் இருந்தாரென, ஓரளவு காலமாவது இருந்தாரென குறிப்பாகக் காட்டுகிறதல்லவா?) (*“நரகம்,” Dy; “மரணம்,” NE; மரணத்துக்குரிய இடம்,” Kx; “மரித்தோரின் உலகம்,” TEV; “ஹேடீஸ்,” AS, RS, JB, NW.)

பைபிள் நரகத்திலிருந்து எவராவது எப்போதாவது வெளியேறுகிறார்களா?

வெளி. 20:13, 14: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் *[நரகமும், KJ] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் [நரகமும், KJ] அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.” (ஆகையால் மரித்தோர் நரகத்திலிருந்து விடுதலைசெய்யப்படுவர். நரகமும் அக்கினிக்கடலும் ஒன்றேயல்ல, நரகம் அக்கினிக்கடலிலே தள்ளப்படும் என்பதையும் கவனியுங்கள்.) (*“நரகம்,” Dy, Kx; “மரித்தோரின் உலகம்,” TEV; “ஹேடீஸ்,” NE, AS, RS, JB, NW.)

பைபிளில் நரகத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதைக் குறித்து ஏன் குழப்பம் உண்டாகியுள்ளது?

“பைபிளின் பூர்வ மொழிபெயர்ப்பாளர் எபிரெய ஷியோலையும் கிரேக்க ஹேடீஸையும் கெஹென்னாவையும் நரகம் என்றச் சொல்லால் விடாது தொடர்ந்து மொழிபெர்த்திருப்பதன் மூலம் மிகுந்த குழப்பமும் பிழைபடப் புரிந்துகொள்ளுதலும் உண்டுபண்ணப்பட்டிருக்கின்றன. பைபிளின் திருத்திய பதிப்புகளின் மொழிபெயர்ப்பாளர்கள் இந்தச் சொற்களை வெறுமென எழுத்துப் பெயர்ப்புச் செய்திருப்பது இந்தக் குழப்பத்தையும் பிழைபட்ட எண்ணத்தையும் கவனிக்கத்தக்கவண்ணம் தெளிவாக்குவதற்குப் போதியதாயில்லை.”—தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா (1942), புத். XIV, பக். 81.

மொழிபெயர்ப்பாளர்கள், மூல-மொழி சொற்களைத் தாங்கள் மொழிபெயர்ப்பதில் மாறாது நிலையாயிருப்பதற்குப் பதில் தங்கள் சொந்த நம்பிக்கைகள் தங்கள் வேலையைப் பாதித்து அவற்றிற்கு இசைவாய்த் தோன்றச் செய்ய அனுமதித்தனர். உதாரணமாக: (1) (ஆங்கில) கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, ஷியோல் என்பதை “நரகம்,” “பிரேதக்குழி,” மற்றும் “பாதாளம்” என மொழிபெயர்த்திருக்கிறது; ஹேய்டீஸ் என்பதை “நரகம்,” “பிரேதக்குழி” என மொழிபெயர்த்திருக்கிறது; கீயென்னா என்பதையும் “நரகம்,” என மொழிபெயர்த்திருக்கிறது. (2) (ஆங்கில) டுடேஸ் இங்கிலிஷ் வெர்ஷன், ஹேய்டீஸ் என்பதை “ஹேடீஸ்,” என எழுத்துப்பெயர்ப்புச் செய்திருக்கிறது, மேலும் அதை “நரகம்,” என்றும் “மரித்தோரின் உலகம்,” என்றும் மொழிபெயர்த்திருக்கிறது. “நரகம்,” என்று ஹேய்டீஸை மொழிபெயர்த்ததுமட்டுமல்லாமல் கீயென்னா என்பதற்கும் அதே மொழிபெயர்ப்பை அது பயன்படுத்துகிறது. (3) தி ஜெருசலெம் பைபிள், ஹேய்டீஸை ஆறு தடவைகள், எழுத்துப் பெயர்ப்புச் செய்கிறது, ஆனால் மற்றப் பகுதிகளில் அதை “நரகம்” எனவும் “கீழுலகம்” எனவும் மொழிபெயர்த்திருக்கிறது. மேலும் அது ஹேய்டீஸ் என்பதை இரண்டு சந்தர்ப்பங்களில் “நரகம்,” என மொழிபெயர்த்திருப்பதுபோல், கீயென்னாவையும் “நரகம்” என மொழிபெயர்த்திருக்கிறது. இவ்வாறு மூல-மொழி சொற்களின் சரியான அர்த்தங்கள் தெளிவற்றுப் புரியாதவையாக்கப்பட்டிருக்கின்றன.

பொல்லாதவர்களுக்கு நித்திய தண்டனை உண்டா?

மத். 25:46: “இவர்கள் நித்திய ஆக்கினையை [“வெட்டுண்டுபோதலை,” Int; கிரேக்கில், கோசின்] அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போர்கள்.” (தி எம்ஃபாட்டிக் டயக்ளாட்டில் “ஆக்கினைக்குப்” பதில் “வெட்டுண்டுபோதல்” என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஓர் அடிக்குறிப்பு பின்வருமாறு கூறுகிறது: “கோலாசின் . . . கோஸூ என்ற மூலச் சொல்லிலிருந்து வருகிறது, அது, பின்வருபவற்றைக் குறித்துக்காட்டுகிறது: 1. வெட்டிப்போடுதல்; மரங்களின் கிளைகளைத் தறித்துப்போடுவதைப்போல், தறித்தகற்றுதல். 2. டுத்துவைப்பது, அடக்கிவைப்பது. . . . 3. கடிந்துகொள்வது, தண்டிப்பது. வாழ்க்கையிலிருந்து, அல்லது சமுதாயத்திலிருந்து ஒருவரை அகற்றுவது, அல்லது தடுத்துவைப்பதுங்கூட, தண்டனையாகக் கருதப்பட்டது—இவ்வாறு இந்தச் சொல்லின் மூன்றாவது உருவகமுறையான பயன்படுத்துதல் எழும்பியது. அதன் முதல் உட்பொருள் ஏற்கப்பட்டது, ஏனெனில் அது அந்த வாக்கியத்தின் இரண்டாவது உறுப்பினரோடு மேம்பட்ட முறையில் ஒத்திருக்கிறது, இவ்வாறு அந்த எதிரிணையின் வலிமையையும் அழகையும் காத்துவைக்கிறது. நீதிமான்கள் உயிரடையச் செல்கிறார்கள், பொல்லாதவர்கள் உயிரிலிருந்து வெட்டுண்டுபோதலுக்கு, அல்லது மரணத்துக்குச் செல்கிறார்கள். 2 தெச. 1:10-ஐப் பாருங்கள்.”)

2 தெச. 1:10: “அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய* தண்டனையை அடைவார்கள்.” (*“நித்திய பாழ்க்கடிப்பை,” NAB, NE; “நித்திய இழப்புக்குள்ளாவார்கள்,” JB; “நித்திய தண்டனைக்குக் கண்டனம் செய்யப்படுகிறார்கள்,” Kx; “அழிவில் நித்திய தண்டனையை,” Dy.)

யூதா 7, தி.மொ.: “சோதோம் கொமாராவும் சுற்று ஊர்களும் அவர்களைப்போல் விபசாரத்தில் மிதமிஞ்சி அந்நிய மாம்சத்தை நாடித் தொர்ந்ததினாலே நித்திய அக்கினியாகிய தண்டனையடைந்து திருஷ்டாந்தமாகக்!  கிடக்கின்றன.” (சோதோம் கொமாராவை அழித்த அந்த அக்கினி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணைந்துபோயிற்று. ஆனால் அந்த அக்கினி உண்டாக்கின விளைவு நீடித்திருக்கிறது; அந்தப் பட்டணங்கள் திரும்பக் கட்டப்படவில்லை. எனினும், கடவுளுடைய நியாயத்தீர்ப்பு, வெறுமென அந்தப் பட்டணங்களுக்கு எதிராக மட்டுமல்ல அவற்றில் வாசம்செய்த அந்தப் பொல்லாதக் குடிமக்களுக்கு எதிராகவும் இருந்தது. அவர்களுக்குச் சம்பவித்தது ஓர் எச்சரிக்கை உதாரணமாயிருக்கிறது. லூக்கா 17:29-ல், அவர்கள் ‘அழிக்கப்பட்டார்கள்’ என்று இயேசு சொல்கிறார்; யூதா 7 அந்த அழிவு நித்தியமானதென காட்டுகிறது.)

வெளிப்படுத்துதலில் குறிப்பிட்டுள்ள ‘சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவதன்’ பொருளென்ன?

வெளி. 14:9-11; 20:10: “மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை [கிரேக்கில், பஸானிஸ்மோ] சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.” “மேலும் அவர்களை மோம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.”

இந்த வசனங்கள் குறிப்பிடுகிற அந்த ‘வாதனை’ என்ன? ‘பூமியின் குடிகளை வேதனைப்படுத்தின தீர்க்கதரிசிகளைப்’ பற்றி வெளிப்படுத்துதல் 11:10-ல் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இத்தகைய வேதனை இந்தத் தீர்க்கதரிசிகள் யாவரறிய அறிவிக்கும் செய்திகள், மதிப்பிழக்கும்படி செய்யும் மறைகுற்றத்தை வெளிப்படுத்துவதன் விளைவாய் உண்டாகிறது. வெளிப்படுத்துதல் 14:9-11-ல் அந்த அடையாளக்குறிப்பான “மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்கள்” “அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்” எனச் சொல்லப்படுகிறது. இது மரணத்துக்குப் பின் உணர்வுடன் வாதிக்கப்படுவதைக் குறிக்க முடியாது, ஏனெனில் “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிர. 9:5) அப்படியானால், அவர்கள் இன்னும் உயிரோடிருக்கையில் இத்தகைய வாதனையை அனுபவிக்கும்படி எது செய்விக்கிறது? “மிருகத்தையும் அதின் சொரூபத்தையும்” வணங்குகிறவர்கள் ‘அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலால்’ குறிக்கப்படுகிற இரண்டாம் மரணத்தை அனுபவிப்பார்கள் என்று கடவுளுடைய ஊழியர்கள் யாவரறிய அறிவிப்பதேயாகும். அவர்கள் அக்கினியால் அழிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட புகை சதாகாலங்களிலும் எழும்புவது எப்படியென்றால் அந்த அழிவு நித்தியமாயிருக்கும் ஒருபோதும் மறக்கப்படாது. வெளிப்படுத்துதல் 20:10-ல் பிசாசானவன் “அக்கினியும் கந்தகமுமான கடலிலே” ‘சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவதை’ அனுபவிப்பானெனச் சொல்லியிருப்பது எதைக் குறிக்கிறது? வெளிப்படுத்துதல் 21:8-ல் “அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல்,” “இரண்டாம் மரணத்தைக்” குறிக்கிறதென தெளிவாய்ச் சொல்லியிருக்கிறது. ஆகையால் பிசாசானவன் அங்கே சதாகாலமும் “வாதிக்கப்படுவது” அவனுக்கு விடுதலையே கிடையாது; அவன் சதாகாலமும் கட்டுப்பாட்டுக்குள், உண்மையில் நித்திய மரணத்தில் வைக்கப்பட்டிருப்பான் எனக் குறிக்கிறது. (பாஸனாஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்த) “வாதித்தல்” என்ற இந்தச் சொல்லின் உபயோகம் மத்தேயு 18:34-ல் அது பயன்படுத்தியிருப்பதை ஒருவருக்கு நினைப்பூட்டுகிறது, அங்கே இதே அடிப்படை கிரேக்கச் சொல் ‘சிறைக்காவலாளனுக்குப்’ பயன்படுத்தப்படுகிறது.—RS, AT, ED, NW.

இயேசு குறிப்பிட்ட ‘எரிகிற கெஹென்னா’ என்ன?

கெஹென்னாவைக் குறிப்பிடுவது கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் 12 தடவைகள் தோன்றுகிறது. ஐந்து தடவைகள் அக்கினியோடு நேரடியாய்ச் சம்பந்தப்படுத்தியிருக்கிறது. கீயென்னன் டோ பைராஸ் என்ற இந்தக் கிரேக்கச் சொற்றொடரை மொழிபெயர்ப்பாளர்கள் “நரக அக்கினி” (KJ, Dy), “நரகத்தின் அக்கினிகள்” (NE), “அக்கினி பாதாளம்” (AT), மற்றும் “கெஹென்னாவின் அக்கினிகள்” (NEB) என்றவாறு மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

சரித்திரத் தகவல்: இன்னோம் பள்ளத்தாக்கு (கெஹென்னா) எருசலேமின் மதில்களுக்கு வெளியில் இருந்தது. சிறிது காலத்துக்கு அது, பிள்ளைகளைப் பலிசெலுத்துவது உட்பட விக்கிரக வணக்கத்துக்குரிய இடமாயிருந்தது. முதல் நூற்றாண்டில் கெஹென்னா எருசலேமின் குப்பைகளை எரிப்பதற்கு இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அக்கினியால் எரிக்கப்பட்டுப்போகும்படி செத்த மிருகங்களின் உடல்கள் அந்தப் பள்ளத்தாக்கினுள் எறியப்பட்டன, நெருப்பு எரிவதற்கு மேலும் உதவிசெய்ய கந்தகமும் அதற்குள் எறியப்பட்டது. மேலும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு, ஞாபகார்த்தக் கல்லறைகளில் அடக்கம் செய்வதற்குத் தகுதியற்றவர்களெனக் கருதப்பட்டவர்களின் பிணங்களும் கெஹென்னாவுக்குள் எறியப்பட்டன. இவ்வாறு, மத்தேயு 5:29, 30-ல் இயேசு ஒருவருடைய “சரீரம் முழுவதும்” கெஹென்னாவுக்குள் போப்படுவதைப் பற்றிப் பேசினார். இடைவிடாமல் எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்குள் அந்த உடல் விழுந்தால் அது எரிக்கப்பட்டுப்போம், ஆனால் அது அந்த ஆழமான கணவாயின் ஓரத்தில் விழுந்துவிட்டால் அதன் அழுகும் மாம்சம் என்றும் இருந்துகொண்டிருக்கும் புழுக்களால், அல்லது முட்டைப் புழுக்களால் மொய்க்கப்படும். (மாற்கு 9:47, 48) உயிருள்ள மனிதர் கெஹென்னாவுக்குள் போப்படவில்லை; ஆகையால் அது உணர்வுடன் வதைக்கப்படும் இடமல்ல.

மத்தேயு 10:28-ல், இயேசு தமக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை “ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [கெஹென்னாவில், NW] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்,” என்று எச்சரித்தார். இதன் பொருளென்ன? இங்கே கெஹென்னாவின் அக்கினியில் வாதிக்கப்படுவதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பதைக் கவனியுங்கள்; அதற்கு மாறாக, ‘கெஹென்னாவில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்’ என்று அவர் சொல்கிறார். “ஆத்துமாவை” தனியே பிரித்துக் குறிப்பிடுவதால், இயேசு இங்கே, கடவுள், ஒருவனின் உயிரடையும் எதிர்பார்ப்புகள் முழுவதையும் அழிக்க முடியுமென்பதை அறிவுறுத்திக் கூறுகிறார்; இவ்வாறு அவனுக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கை இல்லாமற்போகும். ஆகையால், ‘எரியும் கெஹென்னாவைக்’ குறிப்பிடும் குறிப்புகள் வெளிப்படுத்துதல் 21:8-ன் ‘அக்கினிக் கடல்’ குறிக்கும் அதே பொருளைக் கொண்டிருக்கின்றன, அதாவது, அழிவு, “இரண்டாம் மரணம்” என்பதே.

பாவத்துக்குத் தண்டனை என்னவென பைபிள் கூறுகிறது?

ரோமர் 6:23: “பாவத்தின் சம்பளம் மரணம்.”

ஒருவன் தன் மரணத்துக்குப்பின் தன் பாவங்களுக்காக இனிமேலும் தண்டனைக்கு உட்பட்டவனாயிருக்கிறானா?

ரோமர் 6:7, தி.மொ.: “மரித்தவன் இனிப் பாவத்திற்குக் கடன் பட்டவனல்ல [“பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே,” UV].”

பொல்லாதவர்கள் நித்தியமாய் வாதிக்கப்படுவது கடவுளுடைய குணத்தோடு பொருந்தக்கூடுமா?

எரே. 7:31: “தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் [விசுவாசத் துரோகிகளான யூதேயர்] இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.” (அது கடவுளுடைய இருதயத்துக்குள் வரவில்லையென்றால், நிச்சயமாகவே அத்தகைய காரியத்தை அவர் பெரிய அளவில் வைத்துப் பயன்படுத்துகிறதில்லை.)

உதாரணம்: தன் பிள்ளை தவறுசெய்ததற்காக அதைத் தண்டிக்க, தன் பிள்ளையின் கையை நெருப்பின்மீது பிடிக்கும் பெற்றோர் ஒருவரைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) சரியான மனநிலையிலுள்ள மனிதப் பெற்றோர் எவரும் செய்யமாட்டாத ஒன்றை அவர் செய்வாரா? நிச்சயமாகவே செய்யமாட்டார்!

ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றி இயேசு சொன்னதில் மரணத்துக்குப்பின் பொல்லாதவர்கள் வாதிக்கப்படுவதை இயேசு கற்பித்தாரா?

லூக்கா 16:19-31-லுள்ள விவரப்பதிவு சொற்பொருளுடையதா அல்லது வேறு ஏதோவொன்றைப்பற்றிய வெறும் ஓர் உபமானமா? அது “சரித்திரப்பூர்வ எந்த ஆட்களையும் குறிக்காமல் கதை உருவிலுள்ள உவமையே,” என தி எருசலெம் பைபிள் ஓர் அடிக்குறிப்பில் ஒப்புக்கொள்கிறது. நேர்ப்பொருளுடையதென எடுத்துக்கொண்டால், தெய்வீகத் தயவை அனுபவித்து மகிழ்கிற யாவரும் ஒரே மனிதனின், ஆபிரகாமின் மடியில் பொருந்தக் கூடுமென பொருள்கொள்ளும்; ஒருவனின் விரல் நுனியிலுள்ள தண்ணீர் ஹேடீஸின் அக்கினியால் ஆவியாக மாறாது என்றும்; அங்கே வேதனைப்படுவோருக்கு வெறும் ஒரு சொட்டுத் தண்ணீர் வேதனையைத் தணித்துவிடும் என்றும் பொருள்கொள்ளும். இது பகுத்தறிவுக்குப் பொருந்தியதாய் உங்களுக்குத் தொனிக்கிறதா? அது நேர்ப்பொருளுள்ளதென்றால், பைபிளின் மற்றப் பாகங்களுக்கு முரண்படும். பைபிள் இவ்வாறு முரண்பட்டால், சத்தியத்தை நேசிக்கும் ஒருவர் தன் விசுவாசத்துக்கு ஆதாரமாக அதைப் பயன்படுத்துவாரா? ஆனால் பைபிள் தன்னில்தானே முரண்படுகிறதில்லை.

இந்த உவமைக் குறிப்பதென்ன? அந்த “ஐசுவரியவான்” பரிசேயரைக் குறிப்பிட்டான். (14-ம் வசனத்தைப் பாருங்கள்.) லாசரு என்னும் தரித்திரன், பரிசேயர் இழிவாய்க் கருதின, ஆனால் மனந்திரும்பி இயேசுவைப் பின்பற்றினவர்களான பொது யூத ஜனங்களைக் குறிப்பிட்டான். (லூக்கா 18:11; யோன் 7:49; மத்தேயு 21:31, 32 ஆகியவற்றைப் பாருங்கள்.) அவர்களுடைய மரணங்களும் அடையாளக் குறிப்பானவை, சூழ்நிலைமைகளில் மாற்றத்தைக் குறித்தன. இவ்வாறு, முன்னால் இழிவாய்க் கருதப்பட்டவர்கள் தெய்வீகத் தயவுக்குரிய நிலைக்குள் வந்தனர், முன்னால் பார்வைக்குத் தயவு பெற்றவர்கள்போலிருந்தவர்கள் கடவுளால் தள்ளப்பட்டவர்களானார்கள், இவர்கள் அதேசமயத்தில் தாங்கள் இழிவாய்க் கருதினவர்கள் அறிவிக்கும் நியாயத்தீர்ப்புச் செய்திகளால் வாதிக்கப்பட்டார்கள்.—அப். 5:33; 7:54.

நரக அக்கினி போகத்தின் தொக்கம் என்ன?

பூர்வ பாபிலோனிய மற்றும் அசீரிய நம்பிக்கைகளில் “கீழுலகம் . . . பயங்கரங்கள் நிறைந்த இடமாகவும், மிகுந்த பலமும் கொடிய மூர்க்கமுமுள்ள தெய்வங்களாலும் பேய்களாலும் அடக்கி ஆட்சிசெய்யப்படுவதாகவும் சித்தரிக்கப்படுகிறது,” (பாபிலோனியா மற்றும் அசீரியாவின் மதம் என்ற ஆங்கில புத்தகம், பாஸ்டன், 1898, மாரிஸ் ஜஸ்ட்ரோ, இளை., பக். 581) கிறிஸ்தவமண்டலத்தின் நரகத்தைப்பற்றிய அக்கினி எண்ணத்தின் தொக்க அத்தாட்சி பூர்வ எகிப்தின் மதத்தில் காணப்படுகிறது. (மரித்தோரின் புத்தகம், (ஆங்கிலம்), நியு ஹைட் பார்க், N.Y., 1960, E. A. உவாலிஸ் பட்ஜ் என்பவரின் முகவுரையைக் கொண்டது, பக்கங்கள் 144, 149, 151, 153, 161) முன்னே பொ.ச.மு. 6-ம் நூற்றாண்டில் தொங்கின புத்தமதம், காலப்போக்கில் வெப்ப மற்றும் குளிர் நரகங்களை முக்கிய பகுதிகளாய் வகுத்தமைத்தது. (தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா, 1977, புத். 14, பக். 68) இத்தாலியிலுள்ள கத்தோலிக்கச் சர்ச்சுகளில் வருணித்துக் காட்டப்பட்டுள்ள நரகத்தைப்பற்றிய ஓவியங்கள் எட்ருஸ்கனில் மூலத்தோற்றத்தைக் கொண்டிருப்பதாக ஆராய்ந்தறியப்பட்டிருக்கிறது.—La civilta etrusca (மிலான், 1979), உவெர்னர் கெல்லெர், பக். 389.

ஆனால் கடவுளை அவமதிக்கும் இந்தக் கோட்பாட்டின் உண்மையான வேர்கள் இன்னும் மிக ஆழமாய்ச் செல்கின்றன. வாதிக்கும் ஒரு நரகத்தோடு சம்பந்தப்பட்ட பேய்த்தனமான எண்ணங்கள் கடவுள்பேரில் பொய்ப்பழிதூற்றுகின்றன. கடவுள்பேரில் பழிதூற்றுவதில் தலைமையானவனான பிசாசானவனோடு (பிசாசு, என்ற இந்தப் பெயரின் பொருள் “பழிதூற்றுபவன்” என்பதாகும்) தொங்கின, இவனை இயேசு கிறிஸ்து “பொய்க்குப் பிதா,” என்றழைத்தார்.—யோவான் 8:44.