Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நினைவு ஆசரிப்பு (கர்த்தருடைய இராப்போஜனம்)

நினைவு ஆசரிப்பு (கர்த்தருடைய இராப்போஜனம்)

நினைவு ஆசரிப்பு (கர்த்தருடைய இராப்போஜனம்)

சொற்பொருள் விளக்கம்:  இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருதலின் ஒரு போஜனம்; ஆகையால், அவருடைய மரணத்தின் ஒரு நினைவு ஆசரிப்பு, அவருடைய மரணத்தின் பலன்கள் வேறு எந்த ஆளுடையதைப் பார்க்கிலும் மிகப் பரந்த செல்வாக்குடையவையாய் இருந்திருக்கின்றன. இதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நினைவுகூரும்படி தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்ட ஒரே நிகழ்ச்சி. இது கர்த்தரின் இராப்போஜனம் அல்லது கர்த்தரின் மாலைப் போஜனம் என்றும் அறியப்படுகிறது.—1 கொரி. 11:20.

இந்த நினைவு ஆசரிப்பின் உட்பொருள் என்ன?

தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலருக்கு இயேசு சொன்னதாவது: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்துகொண்டிருங்கள்.” (லூக்கா 22:19, NW) ஆவியால்-பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ சபையின் உறுப்பினருக்கு எழுதுகையில், அப்போஸ்தலன் பவுல் மேலும் சொன்னதாவது: “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்துப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் ஆண்டவர் வருமளவும் அவர் மரணத்தைப் பிரஸ்தாபித்து வருகிறீர்கள்.” (1 கொரி. 11:26, தி.மொ.) ஆகையால், இந்த நினைவு ஆசரிப்பு, யெகோவாவின் நோக்கத்தின் நிறைவேற்றத்தில் இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தின் உட்பொருளுக்கு முக்கிய கவனம் செலுத்த வைக்கிறது. முக்கியமாய் புதிய உடன்படிக்கையின் சம்பந்தமாக இயேசுவின் பலிக்குரிய மரணத்தின் உட்பொருளையும் பரலோக ராஜ்யத்தில் அவரோடு சதந்தரவாளிகளாயிருக்கப்போகிறவர்களை அவருடைய மரணம் பாதிக்கும் முறையையும் இது முனைப்பாய்க் காட்டுகிறது.—யோவான் 14:2, 3; எபி. 9:15.

மேலும் ஆதியாகமம் 3:15-லும் அதன்பின்னும் சொல்லப்பட்டிருக்கிற கடவுளுடைய நோக்கத்துக்குப் பொருந்த இயேசுவின் மரணத்தையும் அது நிறைவேற்றப்பட்ட முறையையும், யெகோவாவின் பெயரை நியாயங்காட்டி நிரூபிக்கச் சேவித்ததையும் இந்த நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுகிறது. தம்முடைய மரணம் வரையிலும் யெகோவாவுக்குத் தம் உத்தமத்தைக் காத்துக்கொண்டதன்மூலம், ஆதாமின் பாவம் சிருஷ்டிகர் மனிதனைத் திட்டமிட்டமைத்ததில் எந்தக் குறைபாடோ இருந்ததனால் அல்ல எனவும், மிகக் கடுமையான நெருக்கடியின்கீழும் மனிதன் பரிபூரண தெய்வபக்தியைக் காத்துகொள்ள முடியும் எனவும் இயேசு நிரூபித்தார், இவ்வாறு இயேசு யெகோவா தேவனை சிருஷ்டிகராகவும் சர்வலோகப் பேரரசராகவும் மெய்ப்பித்துக் காட்டினார். இதுமட்டுமல்லாமல், இயேசுவின் மரணம், ஆதாமின் சந்ததியாரை மீட்பதற்குத் தேவைப்பட்ட பரிபூரண மனித பலியை அளிக்கும்படியும், இவ்வாறு, விசுவாசங்காட்டும் கோடிக்கணக்கானோர், யெகோவாவின் தொக்க நோக்கத்தின் நிறைவேற்றமாகவும் மனிதவர்க்கத்தின்பேரில் அவருடைய பெரும் அன்பின் வெளிக்காட்டாகவும், பரதீஸான பூமியில் என்றென்றும் வாழ்வதைச் சாத்தியமாக்க யெகோவா நோக்கங்கொண்டார்.—யோவான் 3:16; ஆதி. 1:28.

மனிதனாகப் பூமியில் தம்முடைய கடைசி இரவின்போது எத்தகைய மிகப் பெரும் சுமை இயேசுவின்மீது தங்கியிருந்தது! தம்முடைய பரலோகத் தகப்பன் தமக்கு நோக்கங்கொண்டிருந்ததை அவர் அறிந்திருந்தார், மேலும் அதோடு சோனையின்கீழ் தாம் உண்மையுள்ளவராக நிரூபிக்கவேண்டியிருந்ததையும் அவர் அறிந்திருந்தார். அவர் தவறியிருந்தால், அது அவருடைய பிதாவுக்கு எத்தகைய நிந்தையையும் மனிதவர்க்கத்துக்கு எத்தகைய இழப்பையும் குறித்திருக்கும்! அவருடைய மரணத்தைக்கொண்டு நிறைவேற்றப்படவிருந்த இந்த எல்லாவற்றின் காரணமாக, அதை நினைவுகூரவேண்டுமென இயேசு கட்டளையிட்டது மிக அதிகத் தகுந்ததாயிருந்தது.

நினைவு ஆசரிப்பின்போது பரிமாறும் அப்பத்தின் மற்றும் திராட்ச மதுவின் உட்பொருள் என்ன?

நினைவு ஆசரிப்பைத் தொங்கிவைத்தபோது இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்குக் கொடுத்த அந்தப் புளிப்பில்லாத அப்பத்தைக் குறித்து, அவர்: “இது என் உடலைக் குறிக்கிறது,” என்றார். (மாற்கு 14:22, NW) அந்த அப்பம் அவருடைய பாவமற்ற சொந்த மாம்ச உடலைக் குறித்தது. இதை மனிதவர்க்கத்தின் எதிர்கால வாழ்க்கை எதிர்பார்ப்புகளுக்குச் சார்பாக அவர் கொடுப்பார், மேலும் இந்தச் சந்தர்ப்பத்தில், பரலோக ராஜ்யத்தில் இயேசுவுடன் பங்குகொள்ளும்படி தெரிந்துகொள்ளப்படுவோருக்கு அது கூடியதாக்கும் வாழ்க்கை எதிர்பார்ப்புகளுக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது.

திராட்ச மதுவைத் தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலருக்குக் கடத்துகையில், இயேசு: “இது என் ‘உடன்படிக்கையின் இரத்தத்தைக்’ குறிக்கிறது, இது பலருக்காக ஊற்றப்படவிருக்கிறது” என்று சொன்னார். (மாற்கு 14:24, NW) அந்தத் திராட்ச மது அவருடைய சொந்த உயிர்-இரத்தத்தைச் சின்னமாகக் குறித்தது. அவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசம் வைப்போருக்கு அதன்மூலமே பாவ மன்னிப்பு கூடியதாயிருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு தம்முடைய எதிர்கால உடன் சுதந்தரவாளிகளுக்குப் பாவத்திலிருந்து சுத்திகரிப்பை அது கூடியதாக்கப்போகிறதை முக்கியப்படுத்திக் காட்டினார். மேலும் அந்த இரத்தத்தைக்கொண்டே யெகோவா தேவனுக்கும் ஆவியால்-அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபைக்குமிடையில் புதிய உடன்படிக்கை செயற்பட செய்யப்படுமெனவும் அவருடைய சொற்கள் காட்டுகின்றன.

பக்கங்கள் 261-263-ல் “பூசை (மாஸ்)” என்பதன்கீழ்ப் பாருங்கள்.

அப்பத்திலும் திராட்ச மதுவிலும் யார் பங்குகொள்வர்?

இயேசு, தாம் மரணமடைவதற்கு முன்பு கர்த்தருடைய இராப்போஜனத்தை தொங்கிவைத்தபோது அதில் யார் பங்குகொண்டனர்? அவரை உண்மையுடன் பின்பற்றின பதினோருபேரேயாவர், அவர்களுக்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “ஒரு ராஜ்யத்துக்காக என் பிதா என்னுடன் ஓர் உடன்படிக்கை செய்திருப்பதுபோல், நானும் உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்கிறேன்.” (லூக்கா 22:29, NW) அவர்களெல்லாரும் கிறிஸ்துவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்ளும்படி அழைக்கப்பட்ட ஆட்கள். (யோவான் 14:2, 3) இன்று அப்பத்திலும் திராட்ச மதுவிலும் பங்குகொள்வோரும், கிறிஸ்து அந்த ‘ராஜ்யத்துக்கான உடன்படிக்கைக்குள்’ கொண்டுவரும் ஆட்களாகவே இருக்கவேண்டும்.

பங்குகொள்வோர் எத்தனை பேர்கள்? ஒரு “சிறு மந்தை” மாத்திரமே தங்கள் பரிசாகப் பரலோக ராஜ்யத்தைப் பெறுவரென இயேசு சொன்னார். (லூக்கா 12:32) அந்த முழு எண்ணிக்கை 1,44,000 பேர். (வெளி. 14:1-3) இந்தத் தொகுதியாரைத் தெரிந்தெடுப்பது பொ.ச. 33-ல் தொங்கியது. நியாயப்படி, இப்பொழுது ஒரு சிறிய எண்ணிக்கை மாத்திரமே பங்குகொள்வோராயிருப்பர்.

பங்குகொள்வோர் மாத்திரமே நித்திய ஜீவனை அடைவரென யோன் 6:53, 54 குறிப்பிடுகிறதா?

யோவான் 6:53, 54: “இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். . . . என்றார்.”

இந்தப் புசித்தலும் பானம்பண்ணுதலும் அடையாளக்குறிப்பான முறையில் செய்யப்படவேண்டுமென்பது தெளிவாயிருக்கிறது; மற்றப்படி இதைச் செய்பவன் கடவுளுடைய சட்டத்தை மீறுபவனாயிருப்பான். (ஆதி. 9:4; அப். 15:28, 29) எனினும், யோன் 6:53, 54-ல் இயேசு சொன்னது கர்த்தருடைய இராப்போஜனத்தைத் தொங்கிவைத்ததன் சம்பந்தமாகச் சொல்லப்பவில்லை. அவர் இதைச் சொன்னதைக் கேட்ட ஒருவருக்கும், கிறிஸ்துவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் குறிப்பிடுவதற்கு அப்பமும் திராட்ச மதுவும் பயன்படுத்தின ஓர் ஆசரிப்பைப்பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. அதற்கு ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின் வரையில் இந்த ஏற்பாடு அறிமுகப்படுத்தப்படவில்லை, மேலும் கர்த்தருடைய இராப்போஜனத்தைப்பற்றிய அப்போஸ்தலன் யோனின் அறிவிப்பு, அவனுடைய பெயரைக் கொண்ட சுவிசேஷத்தில் இதற்குப்பின் ஏழுக்கும் மேற்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால்வரை (யோவான் 14 வரை) தொங்குகிறதில்லை.

அப்படியானால், ஒருவன் நினைவுகூருதலின் நாளின்போது அப்பத்திலும் திராட்ச மதுவிலும் பங்குகொள்ளாவிடில், எவ்வாறு அடையாளக்குறிப்பான முறையில் ‘மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ண’ முடியும்? இவ்வாறு புசித்து பானம்பண்ணுவோர் “நித்தியஜீவன்” அடைவரென்று இயேசு சொன்னதைக் கவனியுங்கள். இதற்கு முன்னால் 40-ம் வசனத்தில், நித்திய ஜீவனை அடைய ஆட்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை விளக்குகையில், இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்தைப்பற்றி என்ன சொன்னார்? “குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் [விசுவாசங்காட்டுகிறவன், NW] எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவது” பிதாவின் சித்தமெனக் கூறினார். அப்படியானால், நியாயமாகவே, அடையாளக் குறிப்பான கருத்தில் ‘அவருடைய மாம்சத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணுவது,’ பலிசெலுத்தப்பட்ட இயேசுவின் மாம்சத்தின் மற்றும் இரத்தத்தின் மீட்கும் வல்லமையில் விசுவாசங்காட்டுவதால் செய்யப்படுகிறது. இந்த விசுவாசங்காட்டுவது, கிறிஸ்துவுடன் பரலோகங்களிலாயினும் அல்லது பூமிக்குரிய பரதீஸிலாயினும் நிறைவான ஜீவனை அடையவிருக்கும் எல்லாரிடமும் எதிர்பார்க்கப்படும் தேவை.

இந்த நினைவு ஆசரிப்பை எவ்வளவு அடிக்கடி, மற்றும் எப்பொழுது கைக்கொள்ளவேண்டும்?

இதை எவ்வளவு அடிக்கடி செய்யவேண்டுமென இயேசு திட்டவட்டமாய்க் கூறவில்லை. அவர் வெறுமென: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்துகொண்டிருங்கள்,” என்று சொன்னார். (லூக்கா 22:19, NW) பவுல் சொன்னதாவது: “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்துப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் ஆண்டவர் வருமளவும் அவர் மரணத்தைப் பிரஸ்தாபித்து வருகிறீர்கள்.” (1 கொரி. 11:26, தி.மொ.) “போதெல்லாம்” என்பது ஓர் ஆண்டில் பல தடவைகளைக் குறிக்கவேண்டியதில்லை; இது பல ஆண்டுகளைக்கொண்ட ஒரு காலப்பகுதியில் ஆண்டுக்கொருமுறை ஆசரிப்பதைக் குறிக்கலாம். கலியாண ஆண்டு-நிறைவுநாள் போன்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியை நீங்கள் நினைவுகொண்டாடினால், அல்லது ஒரு நாடு அதன் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவத்தை நினைவு கொண்டாடுகையில், இது எவ்வளவு அடிக்கடி செய்யப்படுகிறது? ஆண்டுக்கு ஒருமுறை அதன் ஆண்டுநிறைவு தேதியில் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்களாகியிருந்த யூதர், இனிமேலும் கைக்கொள்ள தேவைப்படாத, ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடின யூத பஸ்காவின் நாளில் கர்த்தரின் இராப்போஜனத்தைத் தொங்கிவைத்ததோடும் இது ஒத்திருக்கும்.

முதல் நூற்றாண்டில் பொதுவாயிருந்த யூதப் பஞ்சாங்கக் கணிப்பின் பிரகாரம் நிசான் 14, அன்று சூரியனின் மறைவுக்குப் பின் யெகோவாவின் சாட்சிகள் இந்த நினைவு ஆசரிப்பை மேற்கொள்கின்றனர். யூத நாள் சூரிய மறைவின்போது தொங்கி அடுத்த சூரிய மறைவுவரை நீடிக்கிறது. ஆகையால் இயேசு, இந்த நினைவு ஆசரிப்பைத் தாம் தொங்கிவைத்த அதே யூதப் பஞ்சாங்க நாளில் மரித்தார். இளவேனிற்கால பகல், இரவு சமநாளுக்கு மிக அருகில் ஏற்படும் சந்திரனின் முதல் வளர்பிறை எருசலேமில் காணக்கூடியதானதற்குப் பின் உண்டாகும் சூரிய மறைவு நிசான் மாதத்தின் தொக்கமாகும். நினைவு ஆசரிப்பு நாள் அதற்கு 14 நாட்களுக்குப் பின்னாகும். (இவ்வாறு இந்த நினைவு ஆசரிப்புக்கான தேதி தற்கால யூதர்கள் கைக்கொள்ளும் பஸ்கா நாளுடன் ஒத்திராது. ஏன்? அவர்களுடைய பஞ்சாங்க மாதங்களின் தொக்கம் வானூலுக்குரிய சந்திர வளர்பிறையோடுதானே ஒத்திருக்கும்படி அமைக்கப்படுகிறது, எருசலேமின்மேல் காணக்கூடியதாகும் சந்திர வளர்பிறையோடு அல்ல, இது 18-லிருந்து 30 மணிநேரங்களுக்குப் பின்னரே வரலாம். மேலும், இன்று பெரும்பாலரான யூதர் பஸ்காவை நிசான் 15-ல் கொண்டாடுகின்றனர், மோசயின் நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருந்ததற்குப் பொருந்த இயேசு செய்ததுபோல் 14-ல் அல்ல.)