Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிணாமம்

பரிணாமம்

பரிணாமம்

சொற்பொருள் விளக்கம்: உயிர்ப்பொருள் பரிணாமம் என்பது உயிருள்ள முதல் உயிரினம் உயிரற்ற சடப்பொருளிலிருந்து தோன்றிவளர்ந்ததென்ற கோட்பாடாகும். பின்பு, அது இனப்பெருக்கமடைகையில், வெவ்வேறுபட்ட உயிர்ப்பொருள் வகைகளாக மாறி இறுதியில் பூமியில் என்றாவது வாழ்ந்துள்ள எல்லா வகைகளான தாவர மற்றும் மிருக உயிர்களைத் தோற்றுவித்ததென சொல்லப்படுகிறது. இந்த எல்லாம் ஒரு சிருஷ்டிகரின் தெய்வீகத் தலையிடுதல் இல்லாமலே நிறைவேற்றப்பட்டதென சொல்லப்படுகிறது. சிலர், கடவுள் பரிணாம வழிவகையால் சிருஷ்டித்தார் என்றும், முதல் மூலத்தொடக்கமான உயிர்வகைகளை அவர் உண்டாக்கினார் எனவும் பின்பு, மனிதன் உட்பட, உயர்தர உயிர்வகைகள் பரிணாமத்தின் மூலமாய்த் தோற்றுவிக்கப்பட்டனவெனவும் சொல்லி, கடவுளில் நம்பிக்கையை பரிணாமத்தோடு நயமாக இணைக்க முயற்சி செய்கின்றனர். இது பைபிள் போகமல்ல.

பரிணாமம் உண்மையில் விஞ்ஞான முறைப்படியானதா?

“விஞ்ஞான விதிமுறை” பின்வருமாறு உள்ளது: நடப்பதைக் கூர்ந்து கவனி; இந்தக் கவனிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, எது உண்மையாயிருக்கலாமென்பதைக் குறித்து ஓர் ஊகக் கோட்பாட்டை உருவாக்கு; இந்த ஊகக் கோட்பாட்டை மேலுமான கூர்ந்தக் கவனிப்புகளையும் செய்முறைசோனைகளையும் கொண்டு சோதித்துப்பார்; அந்த ஊகக் கோட்பாட்டின்பேரில் ஆதாரங்கொண்டு முன்மதிப்பிட்டுரைத்தவை நிறைவேற்றப்படுகின்றனவாவென்று காண உன்னிப்பாய்க் கவனி. பரிணாமத்தில் நம்பிக்கை வைத்து அதைக் கற்பிக்கிறவர்கள் பின்பற்றுவது இந்த விதிமுறைத்தானா?

வான்கணிப்பாளர் ராபர்ட் ஜஸ்ட்ரோ சொல்வதாவது: “தங்களுக்குக் கடும் மனச்சங்கடமுண்டாக [விஞ்ஞானிகள்] திட்டவட்டமான பதிலைக் கொண்டில்லை, ஏனெனில் வேதியியல் வல்லுநர் உயிரற்றப் பொருளிலிருந்து உயிரை உண்டாக்குவதன்பேரில் இயற்கையின் சோனைகளை உருப்படுத்திக் காட்டுவதில் ஒருபோதும் வெற்றியடையவில்லை. அது எவ்வாறு நிகழ்ந்ததென்று விஞ்ஞானிகளுக்குத் தெரியாது.”—The Enchanted Loom: Mind in the Universe (நியு யார்க், 1981), பக். 19.

பரிணாமக்கோட்பாட்டாளர் லோரன் ஈஸ்லி பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “இறைமையியல் வல்லுநரை புராணக்கதை மற்றும் அற்புதத்தின்பேரில் நம்பிக்கை வைத்திருப்பதற்காகக் குற்றங்கூறி இடித்துரைத்தப் பின்பு விஞ்ஞானம் அதன் சொந்தப் புராணக்கதையை உண்டுபண்ணவேண்டியதாயுள்ள பொறாமைகொள்ளமுடியாத நிலையில் தன்னைக் கண்டது: அதாவது, நீண்டகால முயற்சிக்குப் பின், இன்று நடந்தேறுவதாக நிரூபிக்கப்பட முடியாத ஒன்று, உண்மையில், கடந்த பண்டைக்காலத்தில் நடந்தேறினதென்ற போலிக் கருத்தாகும்.”—மிகப் பெரிய பயணம் (நியு யார்க், 1957), பக். 199.

நியு சயன்டிஸ்ட் என்பதன் பிரகாரம்: “மேலும் மேலும் அதிக எண்ணிக்கையான விஞ்ஞானிகள், மிகக் குறிப்பிடத்தக்கதாய்ப் பெருகும் எண்ணிக்கையான பரிணாமக்கோட்பாட்டாளர்கள் . . . டார்வின் பரிணாமக்கோட்பாடு உண்மையான விஞ்ஞானமுறையான கோட்பாடு அல்லவே அல்லவென வாதிடுகின்றனர். . . . இந்தக் குற்றங்காண்போரில் பலர் மிக உயர்ந்த அறிஞருக்குரிய சான்றுரிமைப் பெற்றவர்கள்.”—ஜூன் 25, 1981, பக். 828.

இயற்பியல் ஆய்வாளர் H. S. லிப்சன் பின்வருமாறு கூறினார்: “ஏற்கத்தக்க ஒரே விளக்கம் சிருஷ்டிப்பே. இது, நிச்சயமாகவே எனக்கு இருப்பதுபோல், இயற்பியல் ஆய்வாளர்களுக்கு வெறுக்கத்தக்கதாயிருக்கிறது, எனினும், பரிசோதனைசெய்ததன் அத்தாட்சி அதை ஆதரிக்கிறதென்றால் நாம் விரும்பாத ஒரு கோட்பாட்டை நாம் மறுத்துவிடக்கூடாது.” (தடித்த எழுத்துக்கள் சேர்க்கப்பட்டது.)—இயற்பியல் வெளியீடு, 1980, புத். 31, பக். 138.

பரிணாமத்தை ஆதரித்து வாதாடுவோர் கருத்தொற்றுமை உடையவர்களா? இந்தக் காரியங்கள் அவர்கள் போதிப்பதைப்பற்றி எவ்வாறு உணரும்படி உங்களைச் செய்விக்கிறது?

டார்வினின் உயிரினவகை வேறுபாட்டுத் தோற்றம் என்பதன் நூற்றாண்டு நிறைவு விழா பதிப்புக்குரிய முகவுரையில் (லண்டன், 1956) பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “நாம் அறிந்துள்ளபடி, பரிணாமத்தின் காரணவிளக்கங்களைப்பற்றி மட்டுமல்லாமல் அது உண்மையில் நடந்தேறும் வளர்ச்சிமுறையைப்பற்றியுங்கூட உயிர்நூல் அறிஞருக்குள் பெரும் கருத்து வேறுபாடு இருக்கிறது. அத்தாட்சி திருப்தியற்றதாயிருப்பதாலும் எந்த நிச்சய முடிவுக்கும் வருவதை அனுமதியாததாலுமே இந்தக் கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. ஆகையால் பரிணாமத்தைப்பற்றிய இந்தக் கருத்துவேறுபாடுகளுக்கு விஞ்ஞானத் துறையிலிராத பொதுமக்களின் கவனத்தை இழுப்பது சரியும் தகுந்ததுமாயுள்ளது.”—W. R. தாம்சன், உயிர்நூல் சம்பந்த தீங்கிழைக்கும் நுண்மக் கட்டுப்பாட்டாராய்ச்சிக்குரிய நிறுவனத்தின் அக்கால மேலாளர், ஒட்டாவா, கானடா.

“டார்வின் மரித்து ஒரு நூற்றாண்டு சென்றபின்னும், பரிணாமம் உண்மையில் எவ்வாறு நடந்தேறியது என்பதை மெய்ப்பித்துக்காட்டத்தக்க மிகச் சிறிதளவான அல்லது தோற்றத்திலாயினும் சரியெனக் காட்டும் கருத்துருவமும் நமக்கு இன்னும் இல்லை.—மேலும் சமீப ஆண்டுகளில் இது அந்த முழு கேள்வியின் பேரிலும் தொர்ச்சியான அசாதாரண சண்டைகளுக்கு வழிநடத்தியிருக்கிறது. . . . பரிணாமக் கோட்பாட்டாளர்களுக்குள்ளேயே சற்றேறக்குறைய வெளிப்படையான ஒரு போர்நிலை இருந்துவருகிறது, ஒவ்வொரு வகை [பரிணாம் சார்ந்த] தனிப்பிரிவும் ஏதோவொரு புதிய மாற்றத்தை வற்புறுத்துகிறது.”—C. பூக்கர் (லண்டன் டைம்ஸ் எழுத்தாளர்), தி ஸ்ர், (ஜோஹன்னஸ்பர்க்), ஏப்ரல் 20, 1982, பக். 19.

கண்டுபிடி என்ற விஞ்ஞான பத்திரிகையில் பின்வருமாறு சொல்லியிருந்தது: “பரிணாமம் . . . பைபிள் தத்துவம்-மாறாக் கோட்பாட்டாளரானக் கிறிஸ்தவர்களின் தாக்குதலுக்குட்பட்டிருப்பது மட்டுமல்லாமல், மதிப்புவாய்ந்த விஞ்ஞானிகளாலும் எதிர்த்து விவாதிக்கப்படுகிறது. புதைபடிவ பதிவை ஆராய்ச்சிசெய்யும் விஞ்ஞானிகளுக்கிடையில் (paleontologists) கருத்துவேறுபாடு மிகுதியாகிக்கொண்டேயிருக்கிறது.”—அக்டோபர் 1980, பக். 88.

புதைபடிவ பதிவு எந்தக் கருத்தை ஆதரிக்கிறது?

டார்வின் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “பல உயிரினவகைகள் . . . உண்மையில் ஒரே சமயத்தில் உயிர்வாழத் தொங்கியிருந்தால், இந்த உண்மை பரிணாமக்கோட்பாட்டுக்கு அழிவுக்கேதுவாயிருக்கும்.” (உயிரினவகைகளின் தொக்கம், நியு யார்க், 1902, பகுதி இரண்டு, பக். 83) “பல உயிரினவகைகள்” ஒரே சமயத்தில் தோன்றியிருக்கலாயின என்று அத்தாட்சி காட்டுகிறதா, அல்லது பரிணாமக் கருத்தின்படி படிப்படியான வளர்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறதா?

சரியான முடிவுக்கு வருவதற்குப் போதியளவு புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவா?

ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் விஞ்ஞானி போர்ட்டர் கீயர் பின்வருமாறு சொல்கிறார்: “உலக முழுவதிலும் பொருட்காட்சி சாலைகளில் பத்துக்கோடி புதைபடிவங்கள், எல்லாம் பெயர்ப்பட்டியலோடு வரிசைப்படுத்தியும் இனவுறுதிப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளன.” (நியு சயன்டிஸ்ட், ஜனவரி 15, 1981, பக். 129) பூமி வரலாற்றுக்கு ஒரு வழிகாட்டி என்பதில் மேலும் சொல்லியிருப்பதாவது: “புதைபடிவ ஆய்வாளரான விஞ்ஞானிகள் புதைபடிவங்களின் உதவியைக்கொண்டு கடந்த யுகங்களின் வாழ்க்கையைப்பற்றி மிகச் சிறந்த காட்சியை இப்பொழுது நமக்குக் கொடுக்கமுடியும்.”—(நியு யார்க், 1956), ரிச்சர்ட் கரிங்டன், மென்டர் பதிப்பு, பக். 48.

புதைபடிவ பதிவு உண்மையில் காட்டுவதென்ன?

இயற்கை வரலாற்றுக்குரிய சிக்காகோவின் செயற்கள பொருட்காட்சி சாலையின் வெளியீடு பின்வருமாறு குறிப்பிட்டது: “டார்வினின் [பரிணாமக்] கோட்பாடு எப்பொழுதும் புதைபடிவங்களிலிருந்துவரும் அத்தாட்சியுடன் நெருங்க இணைக்கப்பட்டு வந்திருக்கிறது, மேலும் புதைபடிவங்கள், வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய டார்வினிய கருத்துவிளக்கங்களின் சார்பாகச் செய்யப்பட்டிருக்கிற பொது விவாதத்தின் மிக முக்கிய பாகத்தை அளிக்கின்றனவென ஒருவேளை பெரும்பான்மையர் கருதிக்கொள்ளலாம். விசனகரமாக, இது முற்றிலும் உண்மையல்ல. . . . நுண்ணயத்துடன் படிப்படியாய் ஒன்று மற்றொன்றில் இழையும் தொர் நிகழ்ச்சிக்கோவயான மெள்ள படிப்படியாய் முன்னேறுகிற ஒரு பரிணாமத்தை மண்ணியல் ஆராய்ச்சிப் பதிவு அப்பொழுதும் அளிக்கவில்லை இன்னும் அளிக்கிறதில்லை.”—ஜனவரி 1979, புத். 50, எண் 1, பக். 22, 23.

உயிர்வாழ்க்கையைப்பற்றிய ஒரு நோக்கு என்பதில் சொல்லியிருப்பதாவது: “தொல்லுயிரூழிக் காலப்பகுதியின் மூலமுதலிலிருந்து தொங்கி ஏறக்குறைய கோடி ஆண்டுகள் நீடித்தக் காலத்தில், எலும்புக்கூடுகளாக்கப்பட்ட முதுகெலும்பற்ற உயிரினங்களின் பெரும்படியான தொகுதிகள் எல்லாம் நம்முடைய கிரகத்தில் எப்போதாவது பதிவுசெய்யப்பட்ட எதைப் பார்க்கிலும் மிக அதிகமாய்க் கண்ணைக் கவர்ந்திழுக்கும் பல்வகைமையில் எழும்புவதில் தங்கள் முதல் தோற்றத்தை உண்டுபண்ணின.”—(கலிஃபோர்னியா, 1981), சல்வேடார் E. லுரியா, ஸ்டீஃபன் ஜே கோல்ட், சாம் சிங்கெர், பக். 649.

புதைபடிவ ஆய்வாளரான விஞ்ஞானி ஆல்ஃப்ரட் ரோமர் பின்வருமாறு எழுதினார்: “இதற்குக் [தொல்லுயிரூழிக் காலப்பகுதிக்கு] கீழே, படிவியற் படுகைகளின் மிகப் பரந்தகன்ற திண்மையான அடுக்குகள் உள்ளன அவற்றில் தொல்லுயிரூழிக்கால உருப்படிவங்களுக்கு முன்னோடிகளானவைகள் எதிர்பார்க்கப்படவேண்டும். ஆனால் நாங்கள் அவற்றைக் காண்கிறதில்லை; இந்த மேலும் பழமையான படுகைகள் உயிரின் அத்தாட்சியே இல்லாமல் ஏறக்குறைய வெறுமையாயிருக்கின்றன, மேலும் இந்தப் பொதுவானக் காட்சி தொல்லுயிரூழிக் காலங்களின் தொக்கத்தில் ஒரு விசேஷித்த சிருஷ்டிப்பைக் குறிக்கும் எண்ணத்தோடு ஒத்திருக்கிறதென்று நியாயமாய்ச் சொல்லலாம்.”—இயற்கை வரலாறு, அக்டோபர் 1959, பக். 467.

விலங்கு நூலாய்வாளர் ஹெரல்ட் காஃபின் பின்வருமாறு கூறுகிறார்: “எளியதிலிருந்து சிக்கலானவற்றிற்கு படிப்படியாக உருமலர்ச்சியுறும் பரிணாமம் சரியானதென்றால், தொல்லுயிரூழிக் காலத்து இந்த முழுவளர்ச்சியுற்ற வாழும் உயிரினங்களின் மூதாதைகள் காணப்படவேண்டும்; ஆனால் அவை கண்டுபிடிக்கப்படவில்லை மேலும் அவற்றை என்றாவது கண்டுபிடிப்பதன் எதிர்பார்ப்பு அதிகம் எதுவும் இல்லையென விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த உண்மைகளின் ஆதாரத்தில் மாத்திரமே, பூமியில் உண்மையில் கண்டுபிடித்ததன் ஆதாரத்தின்பேரில், திடீர் சிருஷ்டிப்பு-செயலில் முக்கிய உயிர்வகைகள் நிலைநாட்டப்பட்டதென்ற கோட்பாடே மிக நன்றாய்ப் பொருந்துகிறது.”—லிபெர்ட்டி, செப்டம்பர்/அக்டோபர் 1975, பக். 12.

காஸ்மாஸ் என்ற தன் புத்தகத்தில் கார்ல் சாகன் பின்வருமாறு நேர்மையாய் ஒப்புக்கொண்டார்: “மகா திட்ட அமைப்பாளர் இருப்பதன் எண்ணத்தோடு புதைபடிவ அத்தாட்சி ஒத்திருக்கமுடியும்.”—(நியு யார்க், 1980), பக். 29.

பரிணாம படிமுறை, சடிதிவகைமாற்றங்களின் விளைவாக, அதாவது, உயிர்மத்தின் இணைமரபுக் கீற்றுகளில் (ஜீன்களில்) திடீர்த் தீவிர மாற்றங்களின் விளைவாக நடந்தேறியிருக்கக்கூடுமா?

சயன்ஸ் டைஜஸ்ட் கூறுவதாவது: “முக்கிய ஒழுங்கியக்கும் ஜீன்களில் சடிதிவகைமாற்றங்கள் ஏற்படுவதே தங்கள் திடீர் மாற்றக் கோட்பாட்டுக்குத் தேவைப்படுகிற தோற்றம் பற்றிய பரிகாரமென பரிணாமக்கோட்பாட்டு சீர்திருத்தவாதிகள் நம்புகின்றனர்.” எனினும், அந்தப் பத்திரிகை பிரிட்டிஷ் விலங்கு நூலாய்வாளர் காலின் பாட்டர்சன் பின்வருமாறு கூறுவதாகவும் குறிப்பிடுகிறது: “ஊகக்கோட்டைக்குக் கட்டுப்பாடில்லை. இந்த ஒழுங்கியக்கும் தனித்திறம் வாய்ந்த ஜீன்களைப்பற்றி நாங்கள் ஒன்றும் அறிந்தில்லை.” (பிப்ரவரி 1982, பக். 92) வேறு வார்த்தைகளில் சொல்ல, இந்தக் கோட்பாட்டை ஆதரிக்க ஓர் அத்தாட்சியுமில்லை.

தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “சடிதிவகைமாற்றங்களில் மிகப் பெரும்பான்மையானவை உயிரினத்துக்குச் சேதம் உண்டாக்குபவையாயிருக்கும் உண்மை, சடிதிவகைமாற்றமே பரிணாமத்துக்குத் தேவையான மூலப்பொருட்களின் தோற்றுமூலமென்ற கருத்தோடு ஒத்துப்போவது கடினமாகத் தோன்றுகிறது. சடிதிவகைமாற்றத்தால் மூலமுன்னினத்திலிருந்து வேறுபட்ட உயிரினங்களென விளக்கி உயிர்நூல் பாடபுத்தகங்களில் கொடுத்துள்ள படங்கள் நிச்சயமாகவே இயற்கைப் பிறழ்வான உயிரினங்களின் மற்றும் கோஉருவங்களின் ஒரு சேகரிப்பேயாகும், சடிதிவகைமாற்றம் கட்டியமைக்கும் புறவளர்ச்சியாயிருப்பதற்கு மாறாக அழிவுசெய்வதாகவே இருக்கிறது.”—(1977), புத். 10, பக். 742.

பள்ளிப் பாடபுத்தகங்களிலும், என்ஸைக்ளோபீடியாக்களிலும் பொருட்காட்சிச் சாலைகளிலும் படம் மற்றும் ஓவியத்தால் காட்டியுள்ள “வாலில்லாக்குரங்கு-மனிதரைப்” பற்றியதென்ன?

“அத்தகைய திரும்ப இணைத்து உருவாக்கினவற்றிலுள்ள மாம்சமும் முடியும் மனக் கற்பனையின்பேரிலேயே நிரப்பப்படவேண்டியிருக்கிறது. . . . தோலின் நிறமும்; முடியின் நிறம், உருவகை, மற்றும் பரப்பீடும்; உருவத் தோற்றங்களும்; முகத்தின் பக்கத்தோற்றமும்—ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய எந்த மனிதருக்காயினும் இருந்த எதையும் நாங்கள் முற்றிலும் ஒன்றும் அறிந்தில்லை.”—மனித மரபினரின் உயிர்நூல் (நியு யார்க், 1971), ஜேம்ஸ் C. கிங், பக். 135, 151.

“ஓவியரின் கருத்துருவாக்கங்களில் மிகப் பெரும்பான்மையானவை அத்தாட்சியின்பேரிலல்லாமல் கற்பனையின்பேரிலேயே அதிகம் ஆதாரங்கொள்ள செய்யப்பட்டிருக்கிறது. . . . வாலில்லாக் குரங்குக்கும் மனிதனுக்குமிடையே ஏதோவொன்றை ஓவியர்கள் உருவாக்கவேண்டும்; அந்த உருமாதிரி எவ்வளவு அதிகப் பழமையானதென்று சொல்லப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாய்க் குரங்கைப்போலிருக்கும்படி அவர்கள் அதைச் செய்கிறார்கள்.”—சயன்ஸ் டைஜஸ்ட், ஏப்ரல் 1981, பக். 41.

“பண்டைக்கால மனிதர் காட்டுமிராண்டிகளாக இருக்கவேண்டியதில்லையென நாம் மெள்ளக் கற்றறிந்துவருவதுபோல், பனியூழிக்கால பூர்வ மனிதர் அறிவற்ற மிருகங்களைப்போன்றோ அரைக்-குரங்குகளாகவோ அங்கக்கோணலுடைய குறையறிவு மக்களாகவோ இல்லையென்பதை நாம் தெளிவாய் உணரக் கற்றுக்கொள்ளவேண்டும். இதிலிருந்து நியாந்தெர்த்தல் அல்லது பீக்கிங் மனிதன் என்றுங்கூட மறுபடியும் உண்டுபண்ண எடுக்கும் எல்லா முயற்சிகளும் வருணிக்க முடியாத முட்டாள்தனமென்பதையும் உணரவேண்டும்.”—மனிதன், கடவுள் மற்றும் மாயவித்தை (நியு யார்க், 1961), ஐவர் லிஸ்னர், பக். 304.

பரிணாமத்தை உண்மை நிகழ்ச்சியென பாடப்புத்தகங்கள் காட்டுகின்றன அல்லவா?

“பல விஞ்ஞானிகள் கொள்கைப்பிடிவாத வீறாப்புடனிருக்கும் சோனைக்குப் பணிந்துவிடுகிறார்கள், . . . உயிரினவகை வேறுபாட்டுத் தோற்றத்தின்பேரில் கேள்வி முடிவாகத் தீர்க்கப்பட்டுவிட்டதுபோல் மறுபடியும் மறுபடியும் காட்டப்படுகிறது. உண்மையிலிருந்து அவ்வளவுதூரம் விலகியதாக எதுவும் இருக்கமுடியாது. . . . ஆனால் கொள்கைப்பிடிவாத வீறாப்புடனிருக்கும் போக்கு விடாது தொருகிறது, இது விஞ்ஞானத்தின் ஆக்க நலத்துக்கு எந்தச் சேவையும் செய்வதில்லை.”—தி கார்டியன், லண்டன், இங்கிலாந்து, டிசம்பர் 4, 1980, பக். 15.

இந்தப் பூமியிலுள்ள எல்லாம் ஆறு நாட்களில் சிருஷ்டிக்கப்பட்டனவென்று நம்புவது பகுத்தறிவுக்கு ஒத்ததாயிருக்கிறதா?

கடவுள் எல்லாவற்றையும் ஆறு 24-மணிநேர நாட்களில் சிருஷ்டித்தாரெனப் போதிக்கும் மதக் குழுக்கள் சில இருக்கின்றன. ஆனால் பைபிளில் சொல்லியிருப்பது அதுவல்ல.

ஆதியாகமம் 1:3-31-ல் ஏற்கெனவே உண்டாக்கப்பட்டிருந்த இந்தப் பூமியை மனிதக் குடியிருப்புக்காகக் கடவுள் எவ்வாறு ஆயத்தஞ்செய்தாரென சொல்கிறது. இது ஆறு நாட்களின் காலப்பகுதியின்போது செய்யப்பட்டதென சொல்கிறது, ஆனால் அவை 24-மணிநேரங்களைக்கொண்ட நாட்களென சொல்லியில்லை. ஒருவன் தன் “பாட்டனாரின் நாள்,” என அந்த ஒருவரின் முழு வாழ்நாளைக் கருதிக் குறிப்பிடுவது அசாதாரணமல்ல. அவ்வாறே பைபிளிலும் நீடித்த ஒரு காலப்பகுதியை விவரிக்க “நாள்” என்றச் சொல் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறது. (2 பேதுரு 3:8-ஐ ஒப்பிடுங்கள்.) இவ்வாறு ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தின் ‘நாட்கள்’ நியாயப்படி பல ஆயிர ஆண்டுகள் நீடித்திருக்கலாம்.

மேலுமான நுட்பவிவரங்களுக்கு, பக்கம் 88-ஐப் பாருங்கள்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘பரிணாமத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘காரியங்களில் கடவுள் ஏதாவது பங்குகொண்டாரென நீங்கள் நம்புகிறீர்களா, அல்லது உயிரின் தோற்றத்தின் தொக்கமுதற்கொண்டே கண்டிப்பாய்த் தற்செயலின் காரியமாயிருந்ததென்பது உங்கள் நம்பிக்கையா? (பின்பு அவர் சொல்வதன் அடிப்படையின்பேரில் தொர்ந்து பேசுங்கள்.)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘விஞ்ஞானப்பூர்வ உண்மையென முழுமையாய் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஒன்றை ஏற்க மறுப்பது நடைமுறையானதாயிராது அல்லவா? . . . இந்தக் குறிப்பின்பேரில் வெகுவாய் கவனத்தைக் கவரும் விஞ்ஞானிகளின் சில கூற்றுகள் என்னிடம் இங்கிருக்கின்றன. (பக்கங்கள் 121, 122-ல், “பரிணாமம் உண்மையில் விஞ்ஞான முறைப்படியானதா?” என்ற உபதலைப்பின்கீழுள்ள குறிப்பை அல்லது பக்கங்கள் 122, 123-ல், “பரிணாமத்தை ஆதரித்து வாதாடுவோர் கருத்தொற்றுமை உடையவர்களா? . . . ” என்பதன் கீழுள்ளதைப் பயன்படுத்துங்கள்.)’

பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை:  ‘ஒன்றை நிரூபிப்பதற்கு உறுதியான அத்தாட்சி இருக்கையில், அதையே நாம் எல்லாரும் நம்பவேண்டும் அல்லவா? . . . என்னுடைய பள்ளிப் பாடபுத்தகங்களில் பரிணாமத்தை ஆதரிக்க புதைபடிவங்களின் படங்கள் கொடுக்கப்பட்டிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அதன்பின்பு அந்தப் புதைபடிவ பதிவைப் பற்றி விஞ்ஞானிகள் கூறியுள்ள வெகுவாய்க் கவனத்தைக் கவரும் விளக்கக் குறிப்புரைகள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். அவற்றில் சில இங்கே என்னிடம் இருக்கின்றன. (பக்கங்கள் 123, 124-ல், “புதைபடிவ பதிவு எந்தக் கருத்தை ஆதரிக்கிறது?” என்பதன் கீழுள்ள குறிப்பைப் பயன்படுத்துங்கள்.)’

கூடுதலான யோ னை: ‘நீங்கள் வாழ்க்கையை அது உண்மையில் இருக்கிறபடி எதிர்ப்பட விரும்பும் ஒருவர் என்று நான் முடிவு செய்தது சரிதானா? . . . நானும் அவ்வாறே விரும்புகிறேன்.’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘நான் ஒரு நாட்டுப்புற பகுதியில் நடந்துசெல்கையில் மரக்கட்டைகளும் கற்களும் ஒரு வீடாக உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்டால், எனக்கு முன்னால் யாரோ ஒருவர் அங்கிருந்து அதைக் கட்டினாரென்பது எனக்குச் சந்தேகமில்லாமல் தெரியவேண்டும். . . . ஆனால், இப்பொழுது, அந்த வீட்டின் ஓரத்தில் வளரும் பூக்கள் வெறும் தற்செயலால் உண்டானவையென நான் முடிவுசெய்வது நியாயமாகுமா? அவ்வாறு நான் உணர்ந்தால் நான் கூர்ந்து நோக்கி அந்தச் சிக்கலான திட்ட அமைப்பைக் கவனிக்கவேண்டும், ஏனெனில் எங்கே ஒரு திட்ட அமைப்பு இருக்கிறதோ அங்கே ஒரு திட்ட அமைப்பாளரும் இருக்வேண்டுமென்பது அடிப்படையான சத்தியமென நான் அறிந்திருக்கிறேன். எபிரெயர் 3:4-ல் இதுவே நமக்குப் பைபிளில் சொல்லியிருக்கிறது.’

அல்லது இவ்வாறு விடையளிக்கலாம்:  (வயதான ஆளுக்கு): ‘மனிதன் தான் இன்று இருக்கிறபடியான அவனுடைய முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பரிணாமமே காரணமென்பது பரிணாமத்திலுள்ள அடிப்படையான கருத்துக்களில் ஒன்று அல்லவா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘நீங்கள் அதிகக் காலம் வாழ்ந்துள்ள ஒருவர். நீங்கள் சிறுபிள்ளையாயிருக்கையில் காரியங்கள் எவ்வாறு இருந்தனவென்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்பொழுது இருக்கிறபடி அவ்வளவு அதிகக் குற்றச் செயல்கள் அப்பொழுது இருந்தனவா? . . . வீட்டுக் கதவை நீங்கள் எப்பொழுதும் பூட்டிவைக்கவேண்டியிருந்ததா? . . . அக்காலத்திலிருந்த ஆட்கள் இன்றுள்ளோர் காட்டுவதைப் பார்க்கிலும் தங்கள் அயலாருக்கும், முதியோருக்கும் அதிக அக்கறை காட்டினார்கள் என்று நீங்கள் சொல்வீர்களா? . . . ஆகையால், தொழில்நுட்பத் துறைகளில் பெரும் முன்னேற்றம் இருந்திருக்கையில், மனிதர்தாமேயும் மிக முக்கியமான பண்புகளில் சிலவற்றை இழந்துகொண்டிருக்கின்றனரெனத் தோன்றுகிறது. இது ஏன்?’ (2) ‘நாம் இருவருமே கவனித்திருக்கிற வாழ்க்கையின் இந்த உண்மைகள் இங்கே பைபிளில் ரோமர் 5:12-ல் எழுதப்பட்டிருப்பதோடு ஒத்திருக்கிறதென நான் காண்கிறேன். . . . ஆகையால், உண்மையில் கீழ்நோக்கிச் சரியும் போக்கே இருந்துள்ளது.’ (3) ‘ஆனால் இது எவ்வாறு மாறுமென பைபிள் காட்டுகிறது. (தானி. 2:44; வெளி. 21:3, 4)’

‘பரிணாம வழிவகையின்மூலம் கடவுள் மனிதனை சிருஷ்டித்தாரென்று நான் நம்புகிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘உங்களுடையதைப்போன்ற கருத்தைக் கொண்டுள்ள மற்றவர்களிடம் நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கடவுளில் உறுதியான நம்பிக்கையுள்ள ஆளென்ற முடிவுக்கு நான் வந்தது சரிதானே? . . . ஆகவே உங்கள் விசுவாசம் உங்கள் வாழ்க்கையில் உண்மையில் முதலிடத்தைக் கொள்கிறது; அதை வழிகாட்டியாகக் கொண்டு, மற்றக் காரியங்களை மதிப்பிட நீங்கள் முயற்சிசெய்கிறீர்கள், நான் சொல்வது சரிதானே? . . . நானுங்கூட அம்முறையிலேயே காரியங்களைக் கருதுகிறேன்.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘நான் நம்புவது உண்மையில் சத்தியம் என்றால், அது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளோடு முரண்படப்போவதில்லையென நான் அறிவேன். அதே சமயத்தில் கடவுளுடைய வார்த்தை சொல்வதைப் புறக்கணிப்பது என் பங்கில் முட்டாள்தனமாயிருக்குமெனவும் நான் அறிந்திருக்கிறேன், ஏனெனில் கடவுள் தம்முடைய செயல்களைப்பற்றி நம்மில் எவரும் அறிவதைப் பார்க்கிலும் மிக அதிகம் அறிந்திருக்கிறார். இங்கே ஆதியாகமம் 1:21-ல் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிள் சொல்லும் இது என் மனதை மிகவும் கவர்ந்தது (“தங்கள் தங்கள் ஜாதியின்படியே” என்பதை அழுத்திக் காட்டுங்கள்).’ (2) ‘பின்பு ஆதியாகமம் 2:7-ல் கடவுள் மனிதனை முந்தின மிருகங்களிலிருந்தல்ல, தூசியிலிருந்தே உண்டாக்கினாரென்று நாம் அறிகிறோம்.’ (3) ‘மேலும் 21, 22-ம் வசனங்களில் ஏவாள், ஒரு மிருகத்திலிருந்தல்ல, ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை தொக்கப் பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டாளென நாம் காண்கிறோம்.’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘(மேல் காட்டியபடி, ஒரு பொது வாத ஆதாரத்தை நிலைநாட்டினபின் . . . ) ஆதாமைப்பற்றி பைபிளில் குறிப்பிட்டிருப்பது வெறும் உருவகக்கதை என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது உண்மையானால், அது எந்த முடிவுக்கு வழிநடத்துகிறது?’ (1) ‘இங்கே ரோமர் 5:19-ல் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்: “ஒரே மனுஷனுடைய [ஆதாமின்] கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய [இயேசு கிறிஸ்துவின்] கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” 1 கொரிந்தியர் 15:22-ல் அதைப்போல் சொல்லியிருக்கிறது: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” ஆனால் ஆதாம் என்ற பெயர்கொண்ட “ஒரே மனிதன்” உண்மையில் இல்லையென்றால், அப்பொழுது அத்தகைய மனிதன் ஒருபோதும் பாவஞ்செய்யவில்லை. அவன் பாவஞ்செய்து பாவத்தின் சுதந்தரத்தைத் தன் சந்ததியாருக்குக் கடத்தவில்லையென்றால், கிறிஸ்து மனிதவர்க்கத்துக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்குத் தேவையில்லை. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரை உண்மையில் கொடுக்கவில்லையென்றால், நம்முடைய தற்போதைய ஒருசில ஆண்டுகளுக்கப்பால் உயிர்வாழும் எதிர்பார்ப்பும் இல்லை. இது உண்மையில் கிறிஸ்தவத்துக்கு எதுவும் விடப்படவில்லை எனக் குறிக்கும்.’ (2) ‘எனினும், கிறிஸ்தவத்திலேயே வேறு எங்கும் காணமுடியாத மிக உயர்ந்த ஒழுக்க நியமங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. சத்தியத்தையும் நேர்மையையும் குறித்த மிகச் சிறந்தப் போகங்கள் அடிப்படையாய்ப் பொய்யாக இருக்கும் ஒன்றிலிருந்த மூலத்தொடக்கங்கொள்ள முடியுமா?’ (பக்கங்கள் 27-29-ல், “ஆதாமும் ஏவாளும்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

‘மிக உயர்ந்த கல்வி பெற்ற ஆட்கள் அதை நம்புகிறார்கள்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘உண்மைதான், எனினும் அதை நம்புவதாகச் சொல்வோருங்கூட பரிணாமத்தில் நம்பும் மற்றவர்களோடு டுமையாய்க் கருத்துவேறுபாடு கொண்டிருக்கலாமென்பதை நான் கண்டுணர்ந்தேன். (122, 123-ம் பக்கங்களில் கொடுத்துள்ள குறிப்புகளிலிருந்து உதாரணங்களை எடுத்துக் கூறுங்கள்.) ஆகையால், நாம்—பரிணாமத்தையா அல்லது சிருஷ்டிப்பையா—எதை நம்பவேண்டுமென்பதைக் காண நாம்தாமே தனிப்பட்டு அத்தாட்சியை கவனமாய்ச் சோதித்துப் பார்க்கவேண்டும்.’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘அது உண்மைதான், எனினும் அதை நம்பாத உயர் கல்விபெற்ற மற்ற ஆட்கள் இருப்பதையும் நான் கண்டுணர்ந்தேன்.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘ஏன் இந்த வேறுபாடு? அவர்கள் எல்லாரும் அதே அத்தாட்சியையே கண்டிருக்கிறார்கள். உள்நோக்கம் இதில் புகுந்திருக்கக்கூடுமா? இருக்கலாம்.’ (2) ‘எவற்றை நம்புவதென நீங்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? (தனிப்பட்டவர்களைக் குற்றங்காணாமல்) அந்தத் தொகுதியை முழுமையாக நோக்கினால், எந்தத் தொகுதி அதிக நேர்மையாயிருக்குமென நீங்கள் நம்புகிறீர்கள்—மனிதன் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டான் என நம்பி ஆகையால் அவருக்குக் கணக்கொப்புவிக்க வேண்டியவர்களாக உணருவோரா, அல்லது தாங்கள் தற்செயலின் விளைவாய் உண்டானவர்களெனவும் ஆகவே தங்களுக்குத் தாங்களேதான் கணக்கொப்புவிக்க வேண்டுமென சொல்லிக்கொள்வோரா?’ (3) ‘ஆகையால், உயிரைப்பற்றிய கேள்விகளுக்கு மிக அதிகத் திருப்திதரும் பதில்களை அளிப்பது சிருஷ்டிப்பா பரிணாமமா என்பதைக் காண நாம்தாமே அத்தாட்சியைச் சோதித்தறியவேண்டும்.’