Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாவம்

பாவம்

பாவம்

சொற்பொருள் விளக்கம்:  எபிரெய மற்றும் கிரேக்க பைபிள் மூலவாக்கியங்களின்படி, சொல்லர்த்தமாய், குறியைத் தவறுதலாகும். தம்முடைய அறிவுள்ள சிருஷ்டிகள் எட்டுவதற்கான “குறியைக்” கடவுள்தாமே நியமிக்கிறார். அந்தக் குறியைத் தவறுவது பாவம், அது அநீதியாக, அல்லது சட்டமீறுதலாகவும் இருக்கிறது. (ரோமர் 3:23; 1 யோவான் 5:17; 3:4) கடவுளுடைய பண்பியல், தராதரங்கள், வழிகள், மற்றும் சித்தம் யாவும் பரிசுத்தமானவை, இவற்றுடன் ஒத்திராத எதுவும் பாவம். இது தவறான நடத்தை, செய்யவேண்டியதைச் செய்யத் தவறுவது, அவபக்தியான பேச்சு, அசுத்தமான எண்ணங்கள், அல்லது தன்னலமான ஆசைகள் அல்லது உள்நோக்கங்கள் ஆகியவற்றை உட்படுத்தலாம். சுதந்தரித்தப் பாவத்தையும் அறிந்து வேண்டுமென்றே செய்யும் பாவத்தையும், ஒருவன் தான் செய்ததன்பேரில் மனஸ்தாபப்பட்டுத் திரும்பும் பாவச் செயலையும் பழக்கமாய்ச் செய்யும் பாவத்தையும் பைபிள் வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஆதாம் பரிபூரணனாயிருந்தானென்றால் அவன் எவ்வாறு பாவம் செய்ய முடிந்தது?

ஆதாம் பரிபூரணனாயிருந்ததைப்பற்றி, ஆதியாகமம் 1:27, 31 மற்றும் உபாகமம் 32:4-ஐ படியுங்கள். யெகோவா தேவன், மனிதன் மனுஷியை உட்பட தம்முடைய பூமிக்குரிய சிருஷ்டிப்பை, “மிகவும் நன்றாயிருந்தது,” என்று சொன்னபோது அது எதைக் குறித்துக் காட்டினது? பரிபூரண செயல் நடப்பிப்பவரான அவர் தாம் செய்ததை “மிகவும் நன்றாயிருந்தது,” என்று சொன்னது, அந்தச் செயல் அவருடைய பரிபூரண தராதரங்களைப் பூர்த்திசெய்திருக்கவேண்டும் என்பதையே.

ஆதாமும் ஏவாளும் பரிபூரணராயிருந்தது அவர்கள் தவறுசெய்ய முடியாதவர்களாய் இருக்கவேண்டுமென தேவைப்படுத்தியதா? இயந்திர மனிதனை உண்டாக்குகிறவன், அது செய்யும்படி தான் என்ன திட்டம் வகுத்து அதை அமைத்திருக்கிறானோ அதையே அது செய்யும்படி எதிர்பார்க்கிறான். ஆனால் ஒரு பரிபூரண இயந்திர மனிதன் ஒரு பரிபூரண மனிதனாக இராது. மிக முக்கியமானவையென கருதப்படும் பண்புகள் ஒரே வகையானவை அல்ல. ஆதாமும் ஏவாளும் மனிதர்களாக இருந்தார்கள், இயந்திர மனிதராக அல்ல. சரியானதை அல்லது தவறானதை, கீழ்ப்படிவதை அல்லது கீழ்ப்படியாமையைத் தெரிந்துகொள்ளும், ஒழுக்கத் தீர்மானங்களைச் செய்யும் திறமையைக் கடவுள் மனிதவர்க்கத்துக்குக் கொடுத்தார். மனிதர் இம்முறையில் திட்டமிட்டமைக்கப்பட்டிருப்பதால், (ஞானமற்றத் தீர்மானங்களையல்ல) அத்தகைய தீர்மானங்களைச் செய்ய திறமையற்றிருப்பதே அபூரணத்தைக் குறித்துக் காட்டுவதாயிருந்திருக்கும்.—உபாகமம் 30:19, 20; யோசுவா 24:15 ஒப்பிடவும்.

ஆதாமும் ஏவாளும் பரிபூரணராய்ச் சிருஷ்டிக்கப்பட்டிருந்ததன் தகுதியைக் காட்ட அதன்பின் அவர்களுடைய எல்லாத் தீர்மானங்களும் சரியானவையாக இருக்கவேண்டுமா? இது அவர்களுக்கு எந்தத் தெரிவும் கிடையாது என்று சொல்வதற்குச் சமமாயிருக்கும். ஆனால் அவர்களுடைய கீழ்ப்படிதல் தானாக இயங்குகிற அத்தகைய முறையில் கடவுள் அவர்களை உண்டாக்கவில்லை. அவர்கள் கடவுளை நேசிப்பதனால் அவருக்குக் கீழ்ப்படியக்கூடும்படி, கடவுள் அவர்களுக்குத் தெரிந்துகொள்ளும் திறமையை அருளினார். அல்லது, அவர்கள் தங்கள் இருதயத்தைத் தன்னலமுள்ளதாகும்படி அனுமதித்தால், கீழ்ப்படியாதவர்களாவார்கள். நீங்கள் எதை மேம்பட்டதெனக் கருதுகிறீர்கள்—ஒருவர் தான் ஒன்றைச் செய்ய வற்புறுத்தப்பட்டதால் அதை உங்களுக்கு செய்வதா அல்லது அவர் விரும்பினதால் அதைச் செய்வதா?—உபாகமம் 11:1; 1 யோவான் 5:3-ஐ ஒத்துப் பாருங்கள்.

அத்தகைய பரிபூரண மனிதர்கள் எவ்வாறு தன்னலமுள்ளவர்களாகி, பாவச் செயல்களுக்குட்பட முடியும்? பரிபூரணராகச் சிருஷ்டிக்கப்பட்டபோதிலும், அவர்களுடைய மாம்ச உடல்கள், சரியான உணவு அளிக்கப்படாதிருந்தால் பரிபூரணநிலையில் தொர்ந்து இயங்கிக்கொண்டிருக்க முடியாது. அவ்வாறே, தவறான எண்ணங்களை மனதில் உட்செல்ல அவர்கள் அனுமதித்துக்கொண்டிருந்தால், இது படிப்படியாய் ஒழுக்கக்கேடடைவதை, பரிசுத்தமற்றுப்போவதை உண்டுபண்ணும். யாக்கோபு 1:14, 15-ல் பின்வருமாறு விளக்கியிருக்கிறது: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்.” ஏவாளின் காரியத்தில், சாத்தான் சர்ப்பத்தைத் தன் பேசும்கருவியாகப் பயன்படுத்திச் சொன்னதை அவள் கவர்ச்சியோடு செவிகொடுத்துக்கேட்டபோது இந்தத் தவறான ஆசைகள் வளரத் தொங்கின. விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடுவதில் தன்னைச் சேர்ந்துகொள்ளும்படியான தன் மனைவியின் தூண்டுதலுக்கு ஆதாம் செவிகொடுத்தான். தவறான எண்ணங்களை வேண்டாமென விலக்கிவிடுவதற்குப் பதில், இருவரும் தன்னல ஆசைகளை மனதில் வைத்து வளர்த்தனர். இவை பாவச் செயல்களில் விளைவடைந்தன.—ஆதி. 3:1-6.

ஆதாமின் பாவம் “கடவுளுடைய திட்டத்தின்” பாகமா?

29-ம் பக்கத்தில், “ஆதாமும் ஏவாளும்” என்ற தலைப்பின்கீழும், 142-ம் பக்கத்தில், “விதி” என்ற தலைப்பின்கீழும் பாருங்கள்.

இந்நாட்களில் “பாவம்” என்ற அத்தகைய ஒன்று உண்மையில் இருக்கிறதா?

உதாரணங்கள்: நோயுற்ற ஒருவன் வெப்பமானியை உடைத்துவிட்டால், அவனுக்குக் காய்ச்சல் இல்லையென அது நிரூபிக்குமா? சட்டப் புத்தகங்களில் எழுதியிருப்பதைத் தான் நம்புவதில்லையென ஒரு திருடன் சொல்லிவிட்டால், அது அவனைக் குற்றமற்றவனாக்கிவிடுமா? அவ்வாறே, பைபிளின் தராதரங்களின்படி வாழ்வது அவசியமென பலர் நம்பாதது பாவத்தை இல்லாததாக்கிவிடுகிறதில்லை.—1 யோவான் 1:8-ஐ பாருங்கள்.

செய்யக்கூடாதென கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுவதைச் செய்ய சிலர் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அது பைபிள் தவறென நிரூபிக்கிறதில்லை. கலாத்தியர் 6:7, 8-ல் பின்வருமாறு எச்சரிப்பு கொடுத்திருக்கிறது: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்.” பாலுறவினால் கடத்தப்பட்ட பெருவாரியாகப் பரவியுள்ள நோய்கள், முறிவுற்றக் குடும்பங்கள் முதலியவை, பைபிள் சொல்வதன் உண்மைக்குச் சாட்சி பகருகின்றன. கடவுள் மனிதனை உண்டாக்கினார்; எது நமக்கு நிலையான சந்தோஷத்தைக் கொண்டுவருமென்பது அவருக்குத் தெரியும். அதை அவர் நமக்கு பைபிளில் சொல்கிறார். அவருக்குச் செவிகொடுத்துக் கேட்பது புத்தியுள்ள காரியம் அல்லவா? (கடவுள் இருப்பதன் அத்தாட்சிக்கு, “கடவுள்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

பெரும்பாலும் பாவம் என்றழைக்கப்படுவது வெறுமென மனிதருக்கு இயல்பானதைச் செய்வதேயல்லவா?

பாலுறவு பாவமா? ஆதாமும் ஏவாளும் ஒருவரோடொருவர் பாலுறவுகொண்டதனால் பாவஞ்செய்தார்களா? பைபிள் இவ்வாறு சொல்கிறதில்லை. ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்,’ என்று கடவுள்தாமே ஆதாம் ஏவாளுக்குச் சொன்னாரென்று ஆதியாகமம் 1:28-ல் சொல்லியிருக்கிறது. இது அவர்களுக்கிடையே பாலுறவுகளை உட்படுத்தும் அல்லவா? மேலும், சங்கீதம் 127:3-ல் தி.மொ.; UV-ல் 4-ம் வசனம்: “பிள்ளைகள் யெகோவாவினால் வரும் சுதந்தரம்,” என்று சொல்லியிருக்கிறது. விலக்கப்பட்ட கனியை ஏவாளே முதல் சாப்பிட்டாள் மேலும் தான் தனியாக இருக்கையிலேயே அவ்வாறு செய்தாள் என்பதைக் கவனிக்கவேண்டும்; பிற்பட்ட சமயத்திலேயே அவள் ஆதாமுக்குச் சிறிதைக் கொடுத்தாள். (ஆதி. 3:6) சந்தேகமில்லாமல், அந்த விலக்கப்பட்ட கனி உண்டாயிருந்த மரம் சொல்லர்த்தமான ஒரு மரமே. பைபிள் தடைக்கட்டளையிடுவது கணவன் மனைவிக்கிடையே கொள்ளும் இயல்பான பாலுறவுகளையல்ல, ஆனால் வேசித்தனம், விபசாரம், ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி, மிருகப் புணர்ச்சி போன்ற பழக்கங்களையேயாகும். இந்தத் தடைக் கட்டளையைக் கொடுத்தது, நாம் உண்டாக்கப்பட்டுள்ள முறையை அறிந்தவரின் பங்கில் அன்புள்ள அக்கறைக்குரிய அத்தாட்சியாயிருக்கிறதென்று இத்தகைய பழக்கங்களின் கெட்ட விளைவுகள் காட்டுகின்றன.

ஆதி. 1:27: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் [ஆதாமை] சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்.” (ஆகையால், இயல்பான காரணமானது, ஆதாம், கடவுளுடைய பரிசுத்த குணங்களைப் பிரதிபலித்து, கடவுளுடைய வழிநடத்துதலுக்கு நன்றியுணர்வோடு கீழ்ப்படிவதாகும். இதில் குறைவுபடுவது குறியைத் தவறுதலாகும், பாவம் செய்வதாகும். ரோமர் 3:23, மேலும் 1 பேதுரு 1:14-16-ஐ பாருங்கள்.)

எபே. 2:1-3: “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை [கிறிஸ்தவர்களைக் கடவுள்] உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே [இயல்பாய், NW] மற்றவர்களைப்போலக் கோக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” (பாவியாகிய ஆதாமின் சந்ததியாராக, நாம் பாவத்தில் பிறந்தோம். பிறப்பிலிருந்தே, நம்முடைய இருதயத்தின் சாய்வு பொல்லாங்கை நோக்கியே இருக்கிறது. இந்தத் தவறான போக்குகளை நாம் தடுத்து நிறுத்தாவிடில், காலப்போக்கில் நாம் அத்தகைய வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டவர்களாகிவிக்கூடும். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்கள் அவற்றைப்போன்றக் காரியங்களைச் செய்துகொண்டிருப்பதால், அது “இயல்பாயும்” தோன்றலாம். ஆனால், கடவுள் மனிதனை உண்டாக்கின முறையையும் மனிதவர்க்கத்துக்கான அவருடைய நோக்கத்தையும் கருதுகையில், கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து எது சரி எது தவறு என்பதை பைபிள் அடையாளங் காட்டுகிறது. நாம் நம்முடைய சிருஷ்டிகருக்குச் செவிகொடுத்து அன்புடன் அவருக்குக் கீழ்ப்படிந்தால், நாம் முன்னொருபோதும் அறிந்திராதவண்ணம் வாழ்க்கை நிறைவான கருத்தேற்பதாகும், மேலும் நமக்கு ஒரு நித்திய எதிர்காலம் இருக்கும். அது எவ்வளவு நல்லதென ருசித்துப் பார்க்கும்படி நம்முடைய சிருஷ்டிகர் நம்மைக் கனிவுடன் அழைக்கிறார்.—சங். 34:8.)

கடவுளுடன் ஒருவனுக்கு இருக்கும் உறவை பாவம் எவ்வாறு பாதிக்கிறது?

1 யோவான் 3:4, 8: “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்.” (இது எவ்வளவு அழுத்தந்திருத்தமாக இருக்கிறது! வேண்டுமென்றே பாவப்போக்கைத் தெரிந்துகொண்டு, அதைப் பழக்கமாக்கிக்கொண்டிருப்பவர்களைக் கடவுள் சட்டத்தைமீறும் குற்றவாளிகளாகக் கருதுகிறார். அவர்கள் தெரிந்துகொண்டிருக்கும் போக்கு சாத்தான்தானே முதல் தெரிந்துகொண்ட போக்காகும்.)

ரோமர் 5:8, 10: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தா[ர்] . . . நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம்.” (பாவிகளைக் கடவுளின் சத்துருக்களெனக் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள். அப்படியானால், நாம் கடவுளுடன் ஒப்புரவாவதற்கு அவர் செய்துள்ள ஏற்பாட்டை நாம் பயன்படுத்திக்கொள்வது எவ்வளவு ஞானமான காரியம்!)

1 தீமோ. 1:13: “[அப்போஸ்தலன் பவுல் சொல்வதாவது] நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்.” (ஆனால் கர்த்தர் அவனுக்குச் சரியான வழியைக் காட்டினபோது, அதைப் பின்தொடருவதிலிருந்து அவன் பின்வாங்கவில்லை.)

2 கொரி. 6:1, 2: “தேவனுடைய கிருபையை நீங்கள் விதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.” (இரட்சிப்புக்குரிய வாய்ப்பு கிடைக்கக்கூடியதாயிருக்கும் காலம் இப்பொழுதேயுள்ளது. பாவிகளான மனிதருக்கு இத்தகைய தகுதியற்றத் தயவைக் கடவுள் என்றென்றும் வழங்கிக்கொண்டிருக்கமாட்டார். ஆகையால், அதன் நோக்கத்தை நாம் தவறவிடாதபடி எச்சரிக்கையோடு கவனம் செலுத்தவேண்டும்.)

நம்முடைய பாவ நிலைமையிலிருந்து எவ்வாறு விடுதலைபெற முடியும்?

“மீட்கும் பொருள்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.