Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாவ அறிக்கையிடுதல்

பாவ அறிக்கையிடுதல்

பாவ அறிக்கையிடுதல்

சொற்பொருள் விளக்கம்: (1) ஒருவன் தன் நம்பிக்கையை அல்லது (2) தன் பாவங்களைக் குறித்து வெளிப்படையாகவோ அல்லது தனிமுறையிலோ அறிவித்தல் அல்லது ஒப்புக்கொள்ளுதல்.

கத்தோலிக்க சர்ச் கற்பித்துள்ளபடி, ஒப்புரவாகுதலின் மத ஆசாரம், காதுக்குள் அறிக்கையிடுதல் (பாதிரியின் காதுக்குள் தானே நேரில் அறிக்கையிடுதல்) உட்பட, வேதப்பூர்வமானதா?

பாதிரியை அழைக்கும் முறை

இன்னும் அடிக்கடி பயன்படுத்தும் பாரம்பரிய அணுகுமுறை: “என்னை ஆசீர்வதியும், பிதாவே, நான் பாவஞ்செய்தேன். என்னுடைய கடைசி பாவ அறிக்கையிலிருந்து [இவ்வளவு காலம்] ஆகிவிட்டது.”—அ.மா. கத்தோலிக் பத்திரிகை, அக்டோபர் 1982, பக். 6.

மத். 23:1, 9, கத்.வுல்.: “யேசுநாதர் . . . திருவுளம்பற்றினதாவது: . . . பூமியில் ஒருவரையும் உங்களுக்குப் பிதாவென்று அழைக்கவேண்டாம்; ஏனெனில் உங்களுடைய ஏக பிதா பரமண்டலங்களிலே இருக்கிறார்.”

மன்னிக்கப்படக்கூடிய பாவங்கள்

“எந்தப் பாவமும், அது எவ்வளவு வினைமையானதாயிருந்தாலும் கவலையில்லை, மன்னிக்கப்படலாமென சர்ச் எப்பொழுதும் போதித்துள்ளது.”—தி கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (விசுவாசத்துக்கு தடங்கலான எதுவுமில்லை என்ற உறுதியளிப்பையும் அச்சிடுவதற்கு அரசியல் இசைவுரிமையையும் கொண்டுள்ளது), R. C. பிராட்ரிக் (நஷ்வில்லி, டென்.; 1976), பக். 554.

எபி. 10:26, கத்.வுல்.: “சத்தியத்தை அறியும் அறிவை நாம் கைக்கொண்ட பின்பு மனதாரப் பாவஞ் செய்வோமாகில், பாவப்பரிகாரமான வேறொரு பலி (நமக்குக்) கிடையாதே.”

மாற்கு 3:29, கத்.வுல்.: “ஸ்பிரீத்துசாந்துவுக்கு விரோதமாய்த் தூஷணித்திருப்பவன் என்றென்றைக்கும் மன்னிப்பை அடையாமல் நித்திய பாவக் குற்றவாளியாயிருப்பான்.”

மனஸ்தாபம் எவ்வாறு காட்டப்படவேண்டும்?

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” ஜெபத்தையும் “மரியாளை ஸ்தாத்திரி” என்பதையும் சொல்லும்படி பாவ அறிக்கையிடுதலைக் கேட்பவர் மனஸ்தாபப்படுபவனுக்கு உத்தரவிடுகிறார்.

மத். 6:7, கத்.வுல்.: “நீங்கள் ஜெபம் செய்யும்போது அஞ்ஞானிகளைப்போல வளர்த்துச் [அதாவது, அர்த்தமற்று திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கும் முறையில்] சொல்லாதேயுங்கள். ஏனென்றால் தங்களுடைய சொல்மிகுதியினால் தங்கள் மன்றாட்டுக் கேட்டருளப்படுமென்று நினைக்கிறார்கள்.”

மத். 6:9-12, கத்.வுல்.: “நீங்கள் இவ்வாறு பிரார்த்திப்பீர்களாக: பரமண்டலங்களிலேயிருக்கிற எங்கள் பிதாவே, . . . எங்கள் கடன்களை எங்களுக்குப் பொறும் [மன்னியும், JB].” (மரியாளிடம் அல்லது மரியாள் மூலம் ஜெபிக்கும்படி பைபிளில் எந்த இடத்திலும் நாம் கட்டளையிடப்பட்டில்லை. பிலிப்பியர் 4:6, மேலும் பக்கங்கள் 258, 259-ல் “மரியாள்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

உரோமர் 12:9, கத்.வுல்.: “உங்கள் சிநேகம் [அன்பு, JB] பாசாங்கற்றிருப்பதாக; தின்மையை வெறுத்து, நன்மையைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள்.”

பாவங்களை மன்னிக்கும்படி இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்கு அதிகாரமளித்தாரல்லவா?

அருளப்பர் [யோவான்] 20:21-23, கத்.பை.: “பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் . . . இவைகளைச் சொல்லி, அவர்கள்மேல் ஊதி: இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னியாதிருக்கப்படும் என்றார்.”

அப்போஸ்தலர் இதை எவ்வாறு புரிந்துகொண்டு பொருத்திப் பயன்படுத்தினர்? ஓர் அப்போஸ்தலன் தனிமுறையான பாவ அறிக்கைக்குச் செவிகொடுத்து பின்பு மன்னிப்புக் கூறின ஒரு தனி சந்தர்ப்பங்கூட பைபிள் பதிவில் இல்லை. எனினும், கடவுளால் மன்னிக்கப்படுவதற்குப் பூர்த்திசெய்யவேண்டிய தேவைகள் பைபிளில் குறித்து வைக்கப்பட்டிருக்கின்றன. தனி நபர்கள் இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்தார்களாவென அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்கீழ், கூர்ந்தறிந்துகொள்ள முடியும் மற்றும் இந்த ஆதாரத்தின்பேரில், கடவுள் அவர்களுக்கு மன்னித்துவிட்டாரா அல்லது அவர்களுக்கு மன்னிக்கவில்லையாவென அறிவிக்க முடியும். உதாரணங்களுக்கு, அப்போஸ்தலர் 5:1-11, மேலும் 1 கொரிந்தியர் 5:1-5 மற்றும் 2 கொரிந்தியர் 2:6-8-ஐப் பாருங்கள்.

மேலும் “அப்போஸ்தல வாரிசுரிமை” என்ற முக்கிய தலைப்பையும் பாருங்கள்.

காதுக்குள் பாவ அறிக்கையிடுவதன் தொக்கத்தைக் குறித்து அறிஞர்களின் நோக்குநிலைகள் வேறுபடுகின்றன

தி நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா, R. C. பிராட்ரிக் என்பவராலாகியது, பின்வருமாறு சொல்லுகிறது: “காதுக்குள் பாவ அறிக்கையிடுவது நான்காம் நூற்றாண்டு முதற்கொண்டு ஏற்கப்பட்ட முறையாயிருந்திருக்கிறது.”—பக். 58.

நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா சொல்வதாவது: “கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் மதப் பிரிவுகளைச் சேர்ந்த, ஒரே காலப்பகுதியில் வாழ்ந்த சரித்திராசிரியர்கள் பலர், தனிமுறையான மனஸ்தாப-சுயசிட்சையின் ஊற்றுமூலங்கள் ஒரு வழக்கமான சிட்சையாக அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற தேசங்களின் சர்ச்சுகளில் இருந்ததென சொல்கின்றனர், அவ்விடங்களில் மனஸ்தாபசிட்சை உட்பட, சடங்காசார விதிமுறைகள் பொதுவாக மடாதிபதியாலும் மற்றும் அவருடைய மடத்துறவி-பாதிரிகளாலும் நடத்தப்பட்டு வந்தன. மடாலய பழக்கமுறை அறிக்கையிடுதலையும், மேலும் பொதுவான மற்றும் தனிமுறையான ஆவிக்குரிய வழிநத்துதலையும் மாதிரியாகக்கொண்டு, திரும்பத்திரும்ப அறிக்கையிடுதலும் மற்றும் தனிப்பட்ட பக்தியின் அறிக்கையிடுதலும் பாமரமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. . . . இருப்பினும், பாவ அறிக்கையிடும் சமயத்திலும் மனஸ்தாப-சுயசிட்சை நிறைவேற்றுவதற்கு முன்பேயும் இரகசிய பாவங்கள், மன்னிக்கப்படுவது 11-வது நூற்றாண்டு வரையில் செய்யப்படவில்லை.”—(1967), புத். XI, பக். 75.

சரித்திராசிரியன் A. H. சேய்ஸ் அறிவிப்பதாவது: “பொதுவான மற்றும் தனிமுறையான பாவ அறிக்கையிடுதல்கள் இரண்டும் பாபிலோனியாவில் பழக்கமாய்ச் செய்யப்பட்டு வந்தனவென சடங்குமுறை மூலவாக்கியங்கள் காட்டுகின்றன. நிச்சயமாகவே, தனிமுறை அறிக்கையிடுதல் மேலும் பழமையான மற்றும் மேலுமதிக வழக்கமான முறையாயிருந்துவந்ததாகத் தோன்றுகிறது.”—பூர்வ எகிப்து மற்றும் பாபிலோனியாவின் மதங்கள் (எடின்பர்க், 1902), பக். 497.

அறிக்கையிடுதலைக் குறித்து யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைகள் யாவை?

யாவரறிய அறிவிப்பதால் தன் விசுவாசத்தை அறிக்கையிடுதல்

ரோமர் 10:9, 10: “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.”

மத். 10:32, 33: “மனுஷர் முன்பாக என்னை [இயேசு கிறிஸ்துவை] அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.”

ஒருவன் கடவுளுக்கு எதிராகப் பாவஞ்செய்கையில்

மத். 6:6-12: “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; . . . பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. . . . எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.”

சங். 32:5, தி.மொ.: “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உம்மிடம் [கடவுளிடம்] ஒப்புக்கொண்டேன்; என் மீறுதல்களை யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோத்தை மன்னித்தீர்.”

1 யோவான் 2:1: “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.”

ஒருவன் தன் உடன்தோழனுக்குத் தவறிழைக்கையில் அல்லது தனக்குத் தவறிழைக்கப்பட்டிருக்கையில்

மத். 5:23, 24: “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”

மத். 18:15: “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து.”

லூக்கா 17:3: “உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.”

எபே. 4:32: “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”

ஒருவன் வினைமையான தவறு செய்வதில் உட்பட்டு ஆவிக்குரிய உதவியை நாடுகையில்

யாக். 5:14-16: “உங்களில் ஒருவன் [ஆவிக்குரியபிரகாரமாய்] வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய [யெகோவாவின், NW] நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் [யெகோவா, NW] அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது [கடவுளால்] அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.”

நீதி. 28:13: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.”

பாவஞ்செய்யும் ஆட்கள் உதவியைத் தேடாவிடில் என்ன செய்வது?

கலா. 6:1: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.”

1 தீமோ. 5:20: “மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை [பழக்கமாய்ப் பாவஞ்செய்வோரை, NW] எல்லாருக்கும் முன்பாகக் [அதாவது, அந்தக் காரியத்தைப்பற்றி நேரில் அறிந்திருப்போருக்கு முன்பாகக்] கடிந்துகொள்.”

1 கொரி. 5:11-13: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. . .. அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.”