Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போதைப்பொருட்கள்

போதைப்பொருட்கள்

போதைப்பொருட்கள்

சொற்பொருள் விளக்கம்: “போதைப்பொருட்கள் என்ற சொற்றொடருக்குப் பல்வேறு பொருள்விளக்கங்கள் இருக்கின்றன. இங்கே அவை தர்க்கித்தாராயப்படும் கருத்தானது, போதைப்பொருட்கள் உணவல்ல, மனநிலையை மாறுபடச் செய்யும் மருத்துவப்படி தேவையென கருதப்படாதப் பொருட்கள், ஆனால் வாழ்க்கையின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கொள்ளத்தேடும் முயற்சியில், கனவுபாங்கான உணர்ச்சியை, அல்லது சுகநலமான அல்லது பெருமிதங்கொண்ட உணர்வை அடைய பயன்படுத்துபவை என்பதாகும்.

இன்பத்துக்காகப் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை பைபிள் உண்மையில் தடைசெய்கிறதா?

அது ஹெராய்ன், கொகய்ன், எல்.எஸ்.டி., பி.சி.பி. (ஏன்ஜெல் டஸ்ட்), மரிஹுவானா (கஞ்சா) மற்றும் புகையிலைப் போன்ற பொருட்களைப் பேரிட்டுக் கூறுகிறதில்லை. ஆனால் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு எவற்றைச் செய்வது எவற்றைத் தவிர்ப்பதென்று நாம் தெரிந்துகொள்ளும்படி தேவைப்பட்ட வழிகாட்டும் நியமங்களை நிச்சயமாகவே அளிக்கிறது. அவ்வாறே, ஒருவரைக் கொல்ல ஒரு துப்பாக்கியைப் பயன்படுத்துவது தவறென பைபிள் சொல்கிறதில்லை, ஆனால் கொலைசெய்யக்கூடாதென அது நிச்சயமாகவே கட்டளையிடுகிறது.

லூக்கா 10:25-27: “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் . . . உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (ஒருவன் தன் வாழ்க்கையை அனாவசியமாய்க் குறுகச் செய்யும் மற்றும் தன் மனதைக் குழம்பிய நிலையடையச் செய்யும் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்துவந்தால் அவன் கடவுளைத் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு மனதோடும் உண்மையில் நேசிக்கிறானா? தன் போத துர்ப்பழக்கத்தை ஆதரிக்க அவன் மற்றவர்களிடமிருந்து திருடினால் தன் அயலானுக்கு அன்பு காட்டுகிறானா?)

2 கொரி. 7:1: “[யெகோவாவை நம்முடைய கடவுளாகவும் நம்முடைய தகப்பனாகவும் கொண்டிருக்கும்] இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (ஆனால் நம்முடைய உடலை அசுத்தப்படுத்துகிற காரியங்களை நாம் தெரிந்து வேண்டுமென்றே செய்தால் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்க நாம் எதிர்பார்க்க முடியுமா?)

தீத்து 2:11, 12: “எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் [“தற்புலனடக்கத்துடன் இருக்க” JB; ‘தற்கட்டுப்பாடுள்ள வாழ்க்கையை வாழ,’ TEV] நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்[ணும்படி] . . . நமக்குப் போதிக்கிறது.” (ஒருவனுடைய பகுத்துணர்வைப் பழுதாக்குகிற அல்லது ஒருவன் தற்கட்டுப்பாட்டை இழக்கும்படி செய்கிற போதப் பொருட்களைப் பயன்படுத்துவது இந்த அறிவுரைக்கு ஒத்திருக்கிறதா?)

கலா. 5:19-21: “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: . . . பில்லிசூனியம், . . . களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (“பில்லிசூனியம்” என இங்கு மொழிபெயர்த்துள்ள ஃபார்மக்கீயா என்ற கிரேக்கச் சொல்லின் நேர்ப்பொருள் “போதைப்பொருள் துர்ப்பழக்கம்,” என்பதே. W. E. வைன் இயற்றிய புதிய ஏற்பாட்டுச் சொற்களின் பொருள்விக்க அகராதியில், இந்தக் கிரேக்கச் சொல்லின்பேரில் விளக்கவுரை அளித்து, பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “மந்திர வித்தையில், போதப்பொருட்களின் உபயோகமானது, அவை வீரியமில்லாதிருந்தாலும் அல்லது வீரியமுள்ளவையாயிருந்தாலும், பல்வேறுபட்ட மந்திரப் பொருட்கள், தாயத்துகள் ஆகியவற்றின் அளிப்போடு ஆவியுலக சக்திகளிடம் ஜெபம் மற்றும் வேண்டுதல் செய்வதோடு சேர்ந்திருந்தன. வேண்டுதல் செய்பவரை அல்லது நோயுள்ளோரைப் பிசாசுகளின் கவனத்திலிருந்தும் மற்றும் வல்லமையிலிருந்தும் காப்பாற்றுவதற்காக இவை திட்டமிடப்பட்டனவென்று சொல்லப்பட்டபோதிலும் உண்மையில் மந்திரவாதியின் விசித்திரமான திறமைகள் மற்றும் வல்லமைகளை வேண்டுதல் செய்பவரின் மனதில் பதியச் செய்வதற்கே இவை திட்டமிடப்படுகின்றன.” [லண்டன், 1940, புத். IV, பக். 51, 52] அவ்வாறே இன்றும், போதப்பொருட்களைப் பயன்படுத்தும் பலர் ஆவியுலகத்தொடர்பு சம்பந்தமான பழக்கங்களில் உட்பட்டிருக்கின்றனர் அல்லது அப்பழக்கங்களில் ஈடுடுவோருடன் கூட்டுறவுகொள்கின்றனர், ஏனெனில் வெறுமையான ஒரு மனம் அல்லது பிரமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு மனம் பேய்களுக்கு எளிதான இரையாயிருக்கிறது. லூக்கா 11:24-26-ஐ ஒப்பிடுங்கள்.)

தீத்து 3:1: “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிரு”ங்கள். (பல இடங்களில் போதப்பொருட்களை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது சட்ட மீறுதலாயிருக்கிறது.)

இந்தப் போதப்பொருட்களில் சில ஒருவன் நல்லமுறையில் உணருவதற்கு உதவிசெய்யலாமாதலால், அவை உண்மையில் அவ்வளவு தீங்குடையவையா?

2 தீமோ. 3:1-5: “கடைசிநாட்களில் [கையாளுவதற்குக் கடினமான, NW] கொடிய காலங்கள் வரும். . . . எப்படியெனில், மனுஷர்கள் . . .. தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும் . . . இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” (கடவுளுடைய வார்த்தையின் நீதியுள்ள நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கும் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதற்கும் மேலாக இன்பத்தை வைக்கும் அத்தகைய அளவுக்கு நாம் இன்பத்தில் நாட்டங்கொள்வதற்கு எதிராக பைபிள் தெளிவாய் எச்சரிக்கிறது.)

சில போதப்பொருட்கள் (நார்க்காட்டிக்ஸ்) வலியை அகற்றவும் மனத்திருப்தியான ஓர் உணர்வை உண்டாக்கவும் கூடும், எனினும் அவையும் துர்ப்பழக்கத்துக்கு அடிமையாக்கும் தன்மை வாய்ந்தவை மேலும் அளவுக்குமீறி உட்கொள்வது மரணத்தையும் விளைவிக்கலாம். சில கரைமங்களை முகர்வது கிளர்ச்சியூட்டும் உணர்வை உண்டாக்கலாம், ஆனால் அது, மூளை, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவற்றிற்கு நிரந்தரக் கெடுதியை உண்டுபண்ணுவதோடுகூட, தெளிவற்றப் பேச்சிலும், உருத்திரிந்தப் பார்வையிலும், தசைக் கட்டுப்பாட்டை இழப்பதிலும் விளைவடையலாம். பிரமையுண்டாக்கும் போதப்பொருட்கள் (ஹலூசினோஜென்ஸ்) ஒரு “மேம்பட்ட” உணர்வை உண்டாக்குகின்றன மற்றும் களைப்பை அகற்றுவதாகத் தோன்றுகின்றன; ஆனால் அவையும் இடைப்பட்ட தூரத்தைப் பகுத்துணருவதில் குழப்பத்தை உண்டாக்கக்கூடும், காரணகாரிய ரீதியில் சிந்திக்கும் திறமையைக் கெடுக்கக்கூடும், ஒருவருக்குரிய தனிப்பண்பியல்பில் நிரந்தர மாற்றங்களை உண்டாக்கக்கூடும், மற்றும் தற்கொலை அல்லது மற்றவர்களைக் கொலைசெய்யும் மனச்சாய்வுகளை உண்டாக்கக்கூடும்.

மரிஹுவானாவைப் (கஞ்சா) பற்றியதென்ன—இது தீங்கற்றதா? இது தீங்கற்றதென சில மருத்துவர் சொல்லியிருக்கின்றனர்

பெர்க்லியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கோவெல் மருத்துவமனையின் மனநோய் மருத்துவ துறை முன்னாள் தலைவரான டேவிட் பவெல்சன், M.D., மரிஹுவானா பயன்படுத்துவதைச் சட்டப்பூர்வமாக்கும்படி ஆதரித்துப் பேசினார். பின்னால், அதிகப்படியான அத்தாட்சிகள் கிடைத்தப்பின், அவர் பின்வருமாறு எழுதினார்: “நாம் எதிர்த்துப் போடவேண்டிய மிக அதிக ஆபத்தான போதப்பொருள் மரிஹுவானா என நான் இப்பொழுது நம்புகிறேன்: 1. அதன் தொக்க உபயோகம் ஏமாற்றுவதாக இருக்கிறது. இதைப் பயன்படுத்துபவன் நல்ல உணர்ச்சியடைவதுபோன்ற போலி உணர்ச்சியளிக்கப்படுகிறான்; அவன் தன் மன மற்றும் உடல் சம்பந்த இயக்கங்கள் படிப்படியாய்ச் சீரழிவதை உணரமுடியாது. 2. அதன் தொர்ந்த உபயோகம் உண்மையல்லாத ஏமாற்றச் சிந்தனைக்கு வழிநடத்துகிறது. ஒன்றுமுதல் மூன்று ஆண்டுகள் தொர்ந்து பயன்படுத்தியபின், நோய்க்குறிகளைக் காட்டும் சிந்தனை வகைகள் சிந்தனை இயக்கத்தை ஆட்கொள்ளத் தொடங்குகிறது.”—எக்ஸிக்யூட்டிவ் ஹெல்த் ரிப்போர்ட், அக்டோபர் 1977, பக். 8.

மரிஹுவானாவிலிருந்து வரும் ஆபத்தைக் குறைத்துப் பேசுவதாக முன்பு சொல்லப்பட்ட ஐக்கிய மாகாணத்திலுள்ள போதப்பொருள் சம்பந்த தேசீய ஸ்பனத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ராபர்ட் L. ட்யூபான்ட், சமீபத்தில் சொன்னதாவது: “[இளம் தலைமுறை மரிஹுவானாவை உபயோகப்படுத்தும்] இந்தக் கொள்ளை நோயால் கொண்டுவரப்பட்ட உடல்நல ஆபத்தே உண்மையான பிரச்னையாக இருக்கிறது, குறைந்தது இரண்டுவகையான ஆபத்துகள் இருக்கின்றன. ஒன்று குடிவெறியினால் வரும் பாதிப்புகளாகும், இவை வாகனம் ஓட்டுவதில் ஆபத்தான விளைவைக் கொண்டுவருவதோடுகூட, மற்ற எல்லாக் காரியங்களிலும் கவனக்குறைவைக் கொண்டுவருகின்றன. மற்றப் பகுதியானது முற்றிலும் உடல் சம்பந்தப்பட்டது. மரிஹுவானா உபயோகிப்பவர்களிடையே தீராத மார்ச்சளி தொர்ந்து உண்டாவது முதற்கொண்டு ஆபத்தான சுரப்பிகள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், நோய்க்கெதிரான பாதுகாப்பு அமைப்புகளில் பாதிப்புகள் மற்றும் ஒருவேளை புற்றுநோயுங்கூட உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.”—மான்ட்ரியல் கெஜெட், மார்ச் 22, 1979, பக். 9.

சயன்ஸ் டைஜஸ்ட் பின்வரும் இந்த விவரங்களைக் கொடுத்தது: “தொடர்ச்சியாக மரிஹுவானாவைப் புகைப்பது காலப்போக்கில் ஞாபகச் சக்தி, உணர்ச்சிவேகம் மற்றும் நடத்தை போன்ற முக்கியமான செயல்களுக்கு அவசியமாக இருக்கும் மூளையிலுள்ள நரம்பு முனைகளுக்கிடையேயுள்ள இடைவெளிகளை விரிவாக்கிவிடக்கூடும், நரம்புகள் தங்கள் செயல்களை நடப்பிக்க அவை தங்களுக்கிடையே தொர்புகொள்ள வேண்டும்.” பின்பு, மிருகங்களை உட்படுத்திய ஆய்வுகளின் முடிவைப்பற்றிக் குறிப்பிடுகையில் அந்தக் கட்டுரை தொர்ந்து பின்வருமாறு சொல்கிறது: “உணர்ச்சி வேகங்களோடு சம்பந்தப்பட்ட உறுப்பு இடைத்தடுக்குச் சார்ந்தப் பகுதியிலும்; ஞாபகச் சக்தி உண்டாவதோடு சம்பந்தப்பட்ட மூளையின் பின்புறமுள்ள மேடு ஒன்றிலும்; சில நடத்தைமுறை இயக்கங்களுக்குக் காரணமாயுள்ள கன்னப்பொட்டெலும்பு மடலின் முன்புறத்திலுள்ள மூளைப்பகுதியிலும் பெரும்பான்மையான குறிப்பிடத்தக்க பாதிப்புகள் உண்டாயின.”—மார்ச் 1981, பக். 104.

மரிஹுவானாவைப் பயன்படுத்துவது மதுபானங்களைக் குடிப்பதைவிட கேடுள்ளதா?

மதுபானம் உணவாயிருக்கிறது, ஆற்றலை அளிப்பதற்கு உடல் அதை இரசாயன மாற்றத்துக்கு உட்படுத்துகிறது; விளைவாயுண்டானவற்றை உடல் நீக்கி ஒழித்துவிடுகிறது. எனினும், மனசம்பந்தமாக போதப்பொருட்களின் பாதிப்பைப்பற்றிக் கண்டறியும் மருத்துவர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “மரிஹுவானா வீரியமிகுந்த போதப்பொருள். இதை மதுபானத்தோடு ஒப்பிடுவது நாம் செய்யும் மிகப் பெரிய தவறு.” “ஒவ்வொரு சின்னஞ்சிறு துளியிலும் [மரிஹுவானாவிலுள்ள] டி.ஹெச்.சி. [THC] மிதமான குடிவெறியை உண்டுபண்ணும் அதனுடைய ஆற்றலில் மதுபானத்தைவிட 10,000 மடங்குகள் சக்திவாய்ந்தது . . . டி.ஹெச்.சி. உடலிலிருந்து மெதுவாக வெளியேற்றப்படுகிறது, மற்றும் அதனுடைய பாதிப்புகளிலிருந்து குணமடைய பல மாதங்கள் எடுக்கின்றன.” (எக்ஸிக்யூட்டிவ் ஹெல்த் ரிப்போர்ட், அக்டோபர் 1977, பக். 3) நாம் எவ்வாறு உண்டாக்கப்பட்டிருக்கிறோமென சிருஷ்டிகருக்குத் தெரியும், அவருடைய வார்த்தை மதுபானங்களை மிதமாய்ப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது. (சங். 104:15; 1 தீமோ. 5:23) ஆனால் அவர் பெருந்திண்டியைக் கண்டனம்செய்வதுபோல், மதுபானத்தை மிதமிஞ்சிய அளவு உட்கொள்வதையும் மிகக் கண்டிப்பாய்க் கண்டனம்செய்கிறார்.—நீதி. 23:20, 21; 1 கொரி. 6:9, 10.

புகையிலை புகைப்பக்கத்தை யெகோவாவின் சாட்சிகள் ஏன் அத்தகைய வினைமையான குற்றமாகக் கருதுகின்றனர்?

பரிசாகிய உயிருக்கு இது அவமதிப்பைக் காட்டுகிறது

அப். 17:24, 25: “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் . . . எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கி”றார்.

“சிகரெட்டுகள் வாழ்நாட்களைக் குறுகச் செய்கின்றனவென்பதற்கு மிகுதியான அத்தாட்சிகள் இருக்கின்றன; இந்தக் காரணத் தொர்பு மற்ற எதையும்போல் மருத்துவத்தில் உறுதியாய் ஸ்பிக்கப்பட்டிருக்கிறது.”—சயன்ஸ் 80, செப்டம்பர்/அக்டோபர், பக். 42.

புகைப்பக்கத்தால் ஐக்கிய மாகாணங்களில் மரித்தவர்களின் வருடாந்தர எண்ணிக்கை 3,00,000, பிரிட்டனில், 50,000; கானடாவில், 50,000 என கணக்கிட்டு அட்டவணைப்படுத்தியிருக்கிறதென அறிக்கைகள் காட்டுகின்றன. “புகைப்பக்கச் சம்பந்தப்பட்ட நோயின் காரணமாக ஆண்டுதோறும் பத்துலட்சத்துக்கு மேற்பட்ட ஜனங்கள் மரிக்கிறார்கள் மற்றும் உலகின் புகையிலை உபயோகத்தில் 52%-க்குக் காரணமாயுள்ள மூன்றாவது உலகம், அந்த மரணங்களின் விரைவாய் அதிகரிக்கும் விகிதத்தை எட்டிக்கொண்டிருக்கிறது.”—தி ஜர்னல் (டொரான்டோ), செப்டம்பர் 1, 1983, பக். 16.

ஐக்கிய மாகாணங்களின் சுகாதாரம், கல்வி, மற்றும் பொதுநல துறையின் முன்னாள் செயலாளர், ஜோசஃப் கலிஃபானோ பின்வருமாறு கூறினார்: “புகைப்பக்கம் மெய்யாகவே மெதுவாக-நடைபெறும் தற்கொலை என்பதற்கு இன்று சந்தேகமே இருக்கமுடியாது.”—அறிவாராய்ச்சிமுறை சார்ந்த விஞ்ஞான உலகம், மார்ச் 20, 1980, பக். 13.

இது, கிறிஸ்தவர்கள் தமக்குச் செலுத்தும்படி கடவுள் கட்டளையிடுவதோடு ஒத்தில்லை

ரோமர் 12:1: “சதோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”

ஐக்கிய மாகாணங்களின் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் தலைவர் C. எவெரெட் கூப் பின்வருமாறு சொன்னார்: “சிகரெட் புகைப்பக்கம் நம்முடைய சமுதாயத்தில் மரணத்தின் தவிர்க்கக்கூடிய முக்கிய காரணமென தெளிவாய்க் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது.” (தி நியு யார்க் டைம்ஸ், பிப்ரவரி 23, 1982, பக். A1) “புகைப்பக்கமுள்ளவனின் சராசரி வாழ்க்கை எதிர்பார்ப்பு புகைப்பக்கம் இல்லாதவனுடையதைப் பார்க்கிலும் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் குறைவாயுள்ளது. மிக அதிகமாய்ப் புகைப்பிடிப்பவனின்—ஒரு நாளுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெட்டிகளளவான சிகரெட்டுகளைக் குடிக்கும் ஓர் ஆளின்—வாழ்க்கை எதிர்பார்ப்பு புகைப்பக்கமில்லாத ஒருவனுடையதைப்பார்க்கிலும் எட்டு ஆண்டுகளளவாகவும் குறுகியதாயிருக்கலாம்.” (தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா, 1984, புக். 17, பக். 430) ஒருவன் தன் உயிரைக் கடவுளுடைய சேவைக்காக ஒப்புக்கொடுத்துவிட்டு பின்பு அந்த உயிரை மெள்ள மெள்ள அழித்துக்கொண்டிருப்பது சரியானதா?

“புகைப்பழக்கம் அவ்வளவு அதிகம் பாழாக்குவதாயிருக்கிறது, முக்கியமாய் இருதயத்துக்கும் நுரையீரல்களுக்கும் அவ்வாறிருக்கிறது, ஒருவன் புகைப்பக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் தடுப்பு மருந்தின் மற்ற அம்சங்கள் அதோடு ஒப்பிட ஒன்றுமில்லாததுபோலாகிவிடுகின்றன.” (தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழக செய்தி சேவை, பிப்ரவரி 18, 1982) “புகைப்பக்கம் உலகத்தில் உடல்நலக்கேட்டின் மிகப் பெரிய தடுக்கக்கூடிய தனி காரணமாயிருக்கலாம்.” (டாக்டர் H. மஹ்லர், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தலைவர், உலக சுகாதாரம் என்பதில், பிப்ரவரி/மார்ச் 1980, பக். 3) ஒருவன் பரிசுத்த சேவைக்காகத் தன்னைக் கடவுளுக்கு அளித்துவிட்டு பின்பு வேண்டுமென்றே தன் உடல்நலத்தைப் பாழாக்குவது பொருத்தமாயிருக்கிறதா?

புகைப்பழக்கம், நாம் நம்முடைய அயலானில் அன்புகூரவேண்டுமென்ற தெய்வீகக் கட்டளையை மீறுவதாயிருக்கிறது

யாக். 2:8, தி.மொ.: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூரவேண்டும்.”—மத்தேயு 7:12-ஐ ஒப்பிடுங்கள்.

“ஒரு சமீப ஆராய்ச்சி . . . புகைப்பக்கங்கொண்டுள்ள ஆண்களின் புகைப்பக்கமில்லாத மனைவிகள், தங்கள் கணவர்களும் புகைப்பக்கமில்லாதப் பெண்களைப் பார்க்கிலும் சராசரி நான்கு ஆண்டுகள் இளைஞராக மரிக்கின்றனரென வெளிப்படுத்தினது.” (தி நியு யார்க் டைம்ஸ், நவம்பர் 22, 1978, பக். C5) “கர்ப்பந்தரித்திருக்கையில் புகைப்பக்கத்தில் ஈடுடுவது பிறவிக்கூறான உருக்குலைவுகளை அவ்வளவு கடுமையானவகையில் உண்டுபண்ணக்கூடுமாதலால் அந்த முதிர் கருவாவது சாகிறது, அல்லது பிறப்பின்பின் சீக்கிரத்திலேயே அந்தக் குழந்தை சாகிறது.” (குடும்ப சுகாதாரம், மே 1979, பக். 8) குடும்ப உறுப்பினரை இத்தகைய அன்பற்ற முறையில் நடத்துவது, அந்த ஆள் கிறிஸ்தவனாகச் செயல்படுகிறதில்லையென்பதற்குத் தெளிவான அத்தாட்சியாகும்.—1 தீமோத்தேயு 5:8-ஐ ஒப்பிடுங்கள்.

“சராசரி புகைப்பழக்கமுடையவன் தன் சிகரெட்டைப் பற்றவைத்து அது எரியும் நேரத்தில் ஒரு சிறு பகுதியளவுநேரம் மாத்திரமே அதிலிருந்து புகைபிடிப்பதில் ஈடுடுகிறான், புகைபிடிக்காதவன் தனக்கு அருகில் உட்கார்ந்து புகைபிடித்துக்கொண்டிருப்பவன் உட்கொள்ளும் ஏறக்குறைய அதே அளவான கார்பன் மோனாக்ஸைட்டையும், தாரையும் நிக்கோடீனையும் தன் விருப்பத்துக்கு எதிராக சுவாசித்து உட்கொள்ளும்படி உண்மையில் வற்புறுத்தப்பட்ட நிலையிலிருக்கலாமென ஆராய்ச்சிகள் காட்டியிருக்கின்றன.” (இன்றைய சுகாதாரம், ஏப்ரல் 1972, பக். 39) இவ்வாறு தன் அயலானிடத்தில் அன்பற்றிருக்கும் ஒருவன் கடவுளை நேசிக்கும் அத்தாட்சியையும் கொடுக்கிறதில்லை.—1 யோவான் 4:20-ஐ பாருங்கள்.

போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது தவறென்றால் அவற்றைத் தயாரிப்பதற்கு உதவும் தாவரங்களைக் கடவுள் ஏன் உண்டாக்கினார்?

துர்ப்பிரயோகம் செய்யப்படும் பொருட்கள் பொதுவாய்ச் சரியான உபயோகங்களையும் உடையனவாயிருக்கின்றன. மனிதனின் இனவிருத்திச் செய்யும் திறமைகளைக் குறித்தும் அவ்வாறிருக்கிறது. திராட்சமதுவைக் குறித்தும் அவ்வாறிருக்கிறது. சணல் செடியின் உலர்ந்த இலைகள் மற்றும் நுனிப் பூக்களிலிருந்து மரிஹுவானா தயாரிக்கப்படுகிறது, இந்தச் செடி கயிறு மற்றும் துணிகளைச் செய்வதற்குப் பயனுள்ள நார்களை அளிக்கிறது. புகைப்பக்கமுள்ளவர்கள் துர்ப்பிரயோகம் செய்யும் புகையிலைகள், கிருமிநாசினிகளையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தயாரிப்பதில் பயன்படுத்தப்படலாம். பூமியின் வள ஆதாரங்கள் பலவற்றைக் குறித்து, அவற்றை நலன்பயக்கும் முறையில் பயன்படுத்துவது எவ்வாறென ஆராய்ந்து அறிவதற்கு இன்னும் மிக அதிகம் இருக்கிறது. களைகளும் நிலம் பயிரிடப்படாதபோது, மண் அரிப்பைத் தடுப்பதிலும் நிலத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுப்பதிலும் பயனுள்ளவை.

ஒருவன் புகைப்பழக்கத்தை அல்லது மற்றப் போதப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட முயற்சி செய்தும் வெற்றிப்பெறவில்லையெனில் அவன் என்ன செய்வது?

முதலாவது, பைபிள் படித்துத் தியானிப்பதால் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கும் அவருடைய நீதியுள்ள புதிய காரிய ஒழுங்குமுறையில் வாழ்வதற்கும் ஊக்கமான ஆவலை நீங்கள் வளர்த்துவருவது தேவை. நீங்கள் அவரிடம் நெருங்குவீர்களாகில், அவர் உங்களிடம் நெருங்குவார், தேவையான உதவியை உங்களுக்குக் கொடுப்பார்.—யாக். 4:8.

இந்தப் பழக்கங்களின் தீங்கை உணர்வதும் அவற்றினிடம் உண்மையான வெறுப்பை வளர்ப்பதும் முக்கியம். (சங். 97:10) இப்புத்தகத்தின் இந்தப் பகுதியில் கொடுத்துள்ள உண்மைகளுக்கு மறுபடியும் கவனம் செலுத்துவதனாலும், இந்தப் பழக்கங்களிலிருந்து வரக்கூடிய தற்காலிக தற்போதைய இன்பத்தின்பேரில் அல்ல, ஆனால் கடவுளுக்குப் பிரியமானதென்னவென்பதன்பேரிலும் இந்தக் கெட்டப் பழக்கங்களின் விளைவுகள் எவ்வளவு மிக வெறுப்புக்குரியவை என்பதன்பேரிலும் ஆழ்ந்து சிந்திப்பதால் இதைச் செய்ய முடியும்.

புகைபிடிக்க அல்லது மற்றப் போதப்பொருட்களில் ஒன்றைப் பயன்படுத்த ஒரு தீவிர ஆசையை நீங்கள் உணர்ந்தால், கடவுளுடைய உதவிக்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். (லூக்கா 11:9, 13; பிலிப்பியர் 4:13-ஐ ஒப்பிடுங்கள்.) உடனடியாக அவ்வாறு செய்யுங்கள். மேலும், உங்கள் பைபிளை எடுத்து அதிலிருந்து சத்தமாய் வாசியுங்கள், அல்லது முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் ஒருவருடன் தொர்புகொள்ளுங்கள். நடந்துகொண்டிருப்பதை அவரிடம் சொல்லி உதவிசெய்யும்படி அவரைக் கேளுங்கள்.