Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறுபிறப்பு கோட்பாடு

மறுபிறப்பு கோட்பாடு

மறுபிறப்பு கோட்பாடு

சொற்பொருள் விளக்கம்:  ஒருவன் ஒன்றன்பின் ஒன்றாகத்தொடரும் வாழ்க்கையில் மனிதனாகவோ மிருகமாகவோ ஒருமுறை அல்லது பல முறைகள் மறுபடியும் பிறக்கிறான் என்ற நம்பிக்கையாகும். பொதுவாய் தொட்டறியமுடியாத “ஆத்துமா” மற்றொரு உடலில் மறுபடியும் பிறக்கிறதென்று நம்பப்படுகிறது. இது பைபிள் போகமல்ல.

முற்றிலும் புதிதாய் அறிமுகமாகும் ஆட்களையும் இடங்களையும் ஏற்கெனவே அறிந்து பழக்கப்பட்டிருப்பதுபோல் உணரும் ஒருவாறான உணர்ச்சி மறுபிறப்பு கோட்பாட்டை உண்மையென நிரூபிக்கிறதா?

உயிரோடிருக்கும் ஓர் ஆண் அல்லது பெண்ணை இப்பொழுது உயிரோடிருந்துகொண்டிருக்கும் மற்றொரு ஆண் அல்லது பெண்ணென நீங்கள் எப்போதாவது தவறாகக் கருதியிருக்கிறீர்களா? இத்தகைய அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏன்? ஏனெனில் சிலர் ஒரே வகையான நடைப்பாங்கு உடையோராய் இருக்கின்றனர் அல்லது முற்றிலும் ஒத்த சாயலுடையோராயும் தோன்றலாம், ஆகையால், ஓர் ஆளை நீங்கள் முன்பு ஒருபோதும் சந்தித்திராதபோதிலும் அவரை அறிந்திருப்பதுபோல் உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி, முந்தின ஒரு வாழ்க்கையில் நீங்கள் அவரோடு அறிமுகமானீர்கள் என்று உண்மையில் நிரூபிக்கிறதில்லையல்லவா?

நீங்கள் முன்னொருபோதும் சென்றிராத ஒரு வீடு அல்லது ஒரு நகரம் நீங்கள் ஏற்கெனவே அறிந்ததுபோல் ஏன் தோன்றலாம்? முந்தின ஒரு வாழ்க்கையில் நீங்கள் அங்கு வாழ்ந்திருந்ததன் காரணமாகவா? பல வீடுகள் ஒரே அமைப்புத் திட்டத்தின்படி கட்டப்படுகின்றன. ஒன்றுக்கொன்று வெகு தொலைவிலிருக்கும் நகரங்களில் பயன்படுத்தும் தட்டுமுட்டுப் பொருட்கள் ஒரே வகையான மாதிரிகளிலிருந்து செய்யப்பட்டிருக்கலாம். மேலும் வெகு தொலைவில் விலகியுள்ள சில இடங்களின் இயற்கைக்காட்சி பெரும்பாலும் ஒன்றுபோல் தோன்றுவது உண்மையல்லவா? ஆகையால் அறிந்து பழக்கப்பட்டதைப்போன்ற உங்கள் உணர்ச்சியின் காரணத்தை மறுபிறப்புக்குச் செல்லாமலே நன்றாய்ப் புரிந்துகொள்ள முடிகிறது.

அறிதுயில் தூண்டிய நிலையில் சொல்ல வைக்கும், மற்றொரு காலத்தில் மற்றொரு இடத்தில் நடத்தின வாழ்க்கையின் முன்னினைவுகள் மறுபிறப்பை நிரூபிக்கின்றனவா?

மூளையில் சேகரித்து வைத்துள்ள மிகுந்த தகவல்களை, அறிதுயில்நிலையின்கீழ் வெளிப்படுத்தும்படி செய்விக்கலாம். அறிதுயிலூட்டித் தகவல் தூண்டுவோர் அரை உணர்வுத் தளத்தின் நினைவாற்றலைத் தட்டியெழுப்புகின்றனர். ஆனால் அந்த நினைவுகள் அங்கே எவ்வாறு சென்றன? ஒருவேளை நீங்கள் ஒரு புத்தகம் வாசித்திருக்கலாம், திரைப்படம் பார்த்திருக்கலாம், அல்லது டெலிவிஷனில் குறிப்பிட்ட ஆட்களைப்பற்றிக் கற்றறிந்திருக்கலாம். நீங்கள் கற்றறிந்துகொண்டிருக்கும் ஆட்களின் இடத்தில் உங்களை வைத்துப்பார்த்தால் அந்த அனுபவம் பெரும்பாலும் உங்களுடையதைப்போன்று, ஓர் உயிர்ப்புள்ள பதிவை உங்களில் ஏற்பட செய்திருக்கலாம். நீங்கள் உண்மையில் செய்தது அவ்வளவு காலமாய்விட்டதால் நீங்கள் ஒருவேளை அதை மறந்துவிட்டிருக்கலாம், ஆனால் அறிதுயில்நிலையின்கீழ் இந்த அனுபவம் நீங்கள் “மற்றொரு வாழ்க்கையை” நினைவுகூருவதுபோல் திரும்ப நினைவுக்குக் கொண்டுவரலாம். எனினும், அது உண்மையென்றால், எல்லாருக்குமே அத்தகைய ஞாபகங்கள் இருக்குமல்லவா? ஆனால் எல்லாருக்கும் அவ்வாறு இல்லை. ஐக்கிய மாகாணங்களில் மேலும் மேலுமதிகமான மீயுயர் நீதிமன்றங்கள் அறிதுயிலூட்டித் தூண்டும் சாட்சியத்தை ஏற்கிறதில்லை என்பது கவனிக்கத்தக்கது. 1980-ல் மினஸோட்டா மீயுயர் நீதிமன்றம் அறிவித்ததாவது: “அறிதுயிலால் தூண்டிகொண்டுவரப்பட்ட நினைவுகள், அல்லது ஞாபகத்தின் எந்தப் பாகமாயினும், உண்மை அல்லது பொய் அல்லது கூடிப்பேசப்பட்டது—கற்பனையைக்கொண்டு காலி இடத்தை நிரப்பினதென தீர்மானிக்க எந்த நிபுணனாலும் முடியாதென்று மிகச் சிறந்த நிபுணத்துவ சாட்சியம் காட்டுகிறது. இத்தகைய முடிவுகள் திருத்தமானவையென விஞ்ஞானப்படி நம்பத்தக்கவையல்ல.” (State v. Mack, 292 N.W. 2d 764)TO CHECK IF THESE ARE TO BE LEFT IN ENGLISH (ஸ்டட் V. மாக், 292 N.W.2d 764) அறிதுயிலூட்டுபவன் அறிதுயிலூட்டப்படுபவனுக்குக் கொடுக்கும் ஆலோசனைகளின் பாதிப்பு இந்த நம்பத்தகாத்தன்மைக்கு ஒரு காரணம்.

மறுபிறப்பு நம்பிக்கையின் அத்தாட்சி பைபிளில் அடங்கியிருக்கிறதா?

மத்தேயு 17:12, 13 மறுபிறப்பு நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறதா?

மத். 17:12, 13: “(இயேசு சொன்னதாவது:) ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுடுவார் என்றார். அவர் யோன் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.”

யோவான் ஸ்னன் எலியாவின் மறுபிறப்பென இது குறித்ததா? “நீர் எலியாவா?” என்று யூத ஆசாரியர்கள் யோனைக் கேட்டபோது அவன், “நான் அவன் அல்ல,” என்றான். (யோவான் 1:21) அப்படியானால், இயேசு கருதினதென்ன? யெகோவாவின் தூதன் முன்னறிவித்தபடி, யோன் “பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு] ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய்” யெகோவாவின் மேசியாவுக்கு முன் சென்றான். (லூக்கா 1:17) ஆகவே யோன் ஸ்னன் தீர்க்கதரிசியாகிய எலியாவினுடையதைப்போன்ற வேலையைச் செய்வதால் தீர்க்ரிசனத்தை நிறைவேற்றிக்கொண்டிருந்தான்.—மல். 4:5, 6.

யோவான் 9:1, 2-லுள்ள விவரப்பதிவு மறுபிறப்பைக் குறித்துக் காட்டுகிறதா?

யோவான் 9:1, 2: “அவர் [இயேசு] அப்புறம் போகயில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.”

“நல்ல மனிதர்களின் ஆத்துமாக்கள் மாத்திரமே மற்ற உடல்களுக்குள் மாற்றப்படுகின்றன,” என்ற யூத பரிசேயர்களின் நம்பிக்கையால் இந்தச் சீஷர்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடுமா? (யூதர்களின் போர்கள், ஜோஸிபஸ், புத்தகம் II, அதி. VIII, பத்தி 14) அவ்வாறு இருக்க முடியாது, ஏனெனில் அவன் ஒரு ‘நல்ல மனிதன்’ என அவர்கள் எண்ணினதுபோல் அவர்களுடைய கேள்வி தெரிவிக்கிறதில்லை. இயேசுவின் சீஷர்களாக அவர்கள் வேத எழுத்துக்களை நம்பினார்கள், ஆத்துமா சாகிறதென்று அறிந்திருந்தார்கள் என்றே பெரும்பாலும் தெரிகிறது. எனினும், கர்ப்பத்திலுள்ளக் குழந்தையும் உயிருடையதாய்ப் பாவத்தில் கருத்தரித்திருப்பதால், இன்னும் பிறவாத அத்தகைய பிள்ளையும் பாவஞ்செய்து, அது அவன் கண்பார்வையற்றுப்போனதில் விளைவடைந்திருக்கலாமோவென அவர்கள் சிந்தித்திருக்கலாம். எவ்வாறாயினும், இயேசுவின் விடை மறுபிறப்பு கோட்பாட்டையோ அல்லது தாயின் கர்ப்பத்திலுள்ள குழந்தை தான் பிறப்பதற்கு முன்பே பாவஞ்செய்கிறதென்ற எண்ணத்தையோ ஆதரிக்கவில்லை. “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல,” என்று இயேசுதாமே விடையளித்தார். (யோவான் 9:3) நாம் ஆதாமின் சந்ததியாராய் இருப்பதால், மனிதக் குறைபாடுகளையும் அபூரணங்களையும் சுதந்தரித்திருக்கிறோமென இயேசு அறிந்திருந்தார். கடவுளை மகிமைப்படுத்த இந்தச் சந்தர்ப்பநிலையைப் பயன்படுத்தி, இயேசு அந்தக் குருடனைப் பார்வையடைய செய்தார்.

ஆத்துமாவையும் மரணத்தையும் பற்றிய பைபிளின் போகம் மறுபிறப்பை அனுமதிக்கிறதா?

ஆதி. 2:7 கூறுவதாவது: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, தி.மொ.] மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; மனுஷன் ஜீவாத்துமாவானான்.” மனிதன்தானே ஆத்துமா என்பதைக் கவனியுங்கள்; ஆத்துமா உடலற்றும், உடலிலிருந்து தனிப்பட்டும் வேறுபட்டும் இருக்கவில்லை. “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசே. 18:4, 20) மேலும் மரித்த ஒருவனைச் “செத்த ஆத்துமா”வெனக் குறிப்பிட்டிருக்கிறது. (எண். 6:6, NW) மரணத்தின்போது “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவனுடைய யோனைகள் அழிந்துபோம்.” (சங். 146:4) ஆகையால் எவராவது மரித்தால், அந்த முழு ஆளும் சாகிறான்; உயிரோடு மீந்திருந்து மற்றொரு ஆளுக்குள் கடந்துசெல்லக்கூடிய எதுவும் இல்லை. (மேலுமான நுட்பவிவரங்களுக்கு, “ஆத்துமா,” “மரணம்” என்ற முக்கிய தலைப்புகளின்கீழ்ப் பாருங்கள்.)

பிர. 3:19, தி.மொ.: “மனிதருக்குச் சம்பவிப்பதே மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் சம்பவிப்பது ஒன்றே; இவைகள் சாவதுபோலவே அவர்களும் சாகிறார்கள்.” (மனிதரின் காரியத்தில் இருப்பதுபோல், ஒரு மிருகம் சாகையில் ஒன்றும் உயிரோடு பிழைத்திருப்பதில்லை. மற்றொரு உடலில் மறுபிறப்பை அனுபவிக்கக்கூடியதற்கு எதுவும் இல்லை.)

பிர. 9:10: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதை உன் பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே [ஷியோலில்] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (மற்றொரு உடலுக்குள் அல்ல, ஷியோலுக்குள்தானே, மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழிக்குள்தானே மரித்தோர் செல்கின்றனர்.)

மறுபிறப்புக்கும் பைபிள் முன்வைக்கும் நம்பிக்கைக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டு?

மறுபிறப்பு கோட்பாடு: இந்த நம்பிக்கையின்படி, ஓர் ஆள் சாகையில், அவன் நல்ல மற்றும் தகுதியான வாழ்க்கை நடத்தியிருந்தால், அந்த ஆத்துமா, அந்த “உண்மையான ஆள்தானே,” மேலும் மேம்பட்ட வாழ்க்கைக்குக் கடந்து செல்கிறான், ஆனால் அவனுடைய பதிவு நல்லதைப் பார்க்கிலும் கெட்டதை அதிகம் உடையதாயிருந்தால் பெரும்பாலும் ஒரு மிருக வாழ்க்கைக்குச் செல்கிறான். ஒவ்வொரு மறுபிறப்பும், அந்த ஆளை அதே காரிய ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருகிறதென நம்பப்படுகிறது, அங்கே அவன் மேலுமான துன்பத்தையும் முடிவான மரணத்தையும் அனுபவிப்பான். இந்த மறுபிறப்பு சுழற்சிகள் உண்மையில் முடிவற்றதென கருதப்படுகின்றன. இத்தகைய எதிர்காலமா உங்களுக்கு உண்மையில் காத்திருக்கிறது? ஐம்புலன்களுக்கு இன்பந்தரும் காரியங்களுங்கான எல்லா ஆசையையும் அழிப்பதே இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழியென சிலர் நம்புகின்றனர். அவர்கள் எதற்குள் தப்பிச் செல்கிறார்கள்? உணர்வற்ற வாழ்க்கையென சிலர் விளக்குகிறதற்குள் செல்கிறார்கள்.

பைபிள்: பைபிளின் பிரகாரம், அந்த ஆத்துமா அந்த முழு ஆளே. கடந்த காலத்தில் ஒருவன் கெட்டக் காரியங்களை ஒருவேளை செய்திருந்தாலும், அவன் மனந்திரும்பி தன் வழிகளை மாற்றிக்கொண்டால், யெகோவா தேவன் அவனை மன்னிப்பார். (சங். 103:12, 13) ஓர் ஆள் சாகையில், எதுவும் தப்பிப்பிழைத்திருப்பதில்லை. மரணம், சொப்பனமற்ற ஆழ்ந்த தூக்கத்தைப்போல் இருக்கிறது. மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவர். இது மறுபிறப்பல்ல, அதே சுபாவத்தன்மையைத் திரும்ப உயிருக்குக் கொண்டுருவதாகும். (அப். 24:15) பெரும்பான்மையர், பூமியில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுவர். இது, கடவுள் இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை அதன் முடிவுக்குக் கொண்டுவந்தப் பின் நடைபெறும். நோய், துன்பம், மரிக்கத் தேவைப்படுவதுங்கூட கடந்தக்காலக் காரியங்களாகிவிடும். (தானி. 2:44; வெளி. 21:3, 4) இதில் நம்பிக்கை வைப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்படி, இதைப்பற்றி மேலுமதிகம் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புமாறு இத்தகைய நம்பிக்கை தொனிக்கிறதா?

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘அது முடிவில் மேம்பட்ட வாழ்க்கையில் பலன்தருமென நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களல்லவா? . . . இங்கே வெளிப்படுத்துதல் 21:1-5-ல் விவரித்துள்ளதைப்போன்ற ஓர் உலகத்தில் நீங்கள் வாழ விரும்புவீர்களா? எனக்குச் சொல்லுங்கள்.’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘இதை நீங்கள் என்னிடம் சொன்னதை நான் மதிக்கிறேன். நான் ஒன்றைக் கேட்கலாமா, இது நீங்கள் எப்பொழுதும் நம்பின ஒன்றா? . . . உங்கள் முந்தின நம்பிக்கையை நீங்கள் விட்டுவிட செய்தது எது?’ (பின்பு பக்கம் 320-ல் அந்தத் தலைப்பின்கீழ் கொடுத்துள்ள எண்ணங்களைப் பயன்படுத்தலாம்.)

பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை:  ‘இந்த நம்பிக்கையுடையோரான மற்றவர்களுடன் நான் கலந்துபேசுவதில் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். நான் உங்களைக் கேட்கலாமா, மறுபிறப்பு தேவையென நீங்கள் ஏன் உணருகிறீர்கள்?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘உங்களுக்கு இருந்ததென நீங்கள் நம்பும் உங்கள் முந்திய வாழ்க்கைகளின் எல்லா நுட்பவிவரங்களும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? . . . ஆனால் ஒருவர் தன் முந்தின தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற வேண்டுமென்றால் அது தேவையல்லவா?’ (2) நாம் மறந்துபோவது நமக்கு இரக்கம் காட்டுவதென அவர் சொன்னால், நீங்கள் பின்வருமாறு கேட்கலாம்: ‘ஆனால், மறதி அனுதின வாழ்க்கையில் ஓர் அனுகூலமென நீங்கள் கருதுகிறீர்களா? பின்னும், ஒவ்வொரு 70 போன்ற ஆண்டுகளில் நாம் கற்ற எல்லாவற்றையும் நாம் மறந்துவிட்டால், நம்முடைய வாழ்க்கைநிலையை முன்னேறச் செய்வதற்கு அது உதவிசெய்யுமா?’ (3) மேம்பட்ட ஆட்களே மனிதராக மறுபடியும் பிறக்கின்றனர் என்று அவர் சொன்னால், நீங்கள் பின்வருமாறு கேட்கலாம்: ‘அப்படியானால், உலக நிலைமைகள் ஏன் தொர்ந்து மோமாகிக்கொண்டே வந்திருக்கின்றன? . . . நம்முடைய நாளில் எவ்வாறு உண்மையான முன்னேற்றம் செய்யப்படுமென பைபிள் காட்டுகிறது. (தானி. 2:44)’