Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மூதாதையர் வணக்கம்

மூதாதையர் வணக்கம்

மூதாதையர் வணக்கம்

சொற்பொருள் விளக்கம்: மரித்த மூதாதையர் காணக்கூடாதப் பிராந்தியத்தில் உணர்வுடன் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் உயிரோடிருக்கிறவர்களுக்கு உதவிசெய்யக்கூடும் அல்லது தீங்கிழைக்கக்கூடும் என்பதால் அவர்களைச் சாந்தப்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்குக் கனத்தையும் வணக்கத்தையும் (சடங்குகள் மூலம் அல்லது மற்ற முறைகளில்) செலுத்தும் பழக்கம். இது பைபிள் போகமல்ல.

உயிரோடிருக்கிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மரித்த மூதாதையர் அறிவார்களா மற்றும் உயிரோடிருக்கிற ஆட்களுக்கு இந்த மூதாதையர் உதவிசெய்யக்கூடுமா?

பிர. 9:5: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”

யோபு 14:10, 21: “மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்.”

சங். 49:10, 17-19: “ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். . . . அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை, அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. . . . அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.”

ஒரு பலிபீடத்தின்மீதோ அல்லது கல்லறையின்மீதோ வைக்கப்பட்ட உணவு தொப்படாமல் அப்படியே இருப்பது உண்மையல்லவா? இது மரித்தவர்கள் அதிலிருந்து நன்மையடைவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறதல்லவா?

“ஆவிக்கொள்கை” என்ற முக்கிய தலைப்பையும் பாருங்கள்.

மரித்த நம்முடைய மூதாதையர் நமக்குத் தீங்கிழைக்கக்கூடும் என்ற பயத்துக்கு ஏதாவது காரணமிருக்கிறதா?

பிர. 9:5, 6: “மரித்தவர்கள் . . . சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.”

உடல் மரித்தாலும் ஓர் ஆளின் ஆவிக்குரிய ஒரு பாகம் தப்பிப்பிழைக்கிறதா?

எசேக். 18:4: “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (மேலும் 20-வது வசனம்)

சங். 146:3, 4: “பிரபுக்களையும் இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள் . . . அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோனைகள் அழிந்துபோம்.”

உடல் மரிக்கையில் மனிதரின் உணர்வுள்ளதும், உயிரோடிருக்கக் கூடியதுமான ஒரு பாகம் தப்பிப்பிழைக்கிறது என்பதற்கு எந்த அத்தாட்சியையும் விஞ்ஞானிகளும் அறுவை மருத்துவர்களும் கண்டுபிடிக்கவில்லை.

மேலும் பக்கங்கள் 100-102-ல், “மரணம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நீங்கள் உயிரோடிருக்கையில் உங்களுக்கு மரியாதையும் அன்பும் காட்டுவதை விரும்புவீர்களா அல்லது நீங்கள் மரித்தப்பின் உங்கள் கல்லறையில் சடங்குகள் செய்வதை விரும்புவீர்களா?

எபே. 6:2, 3: “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும் பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.” (பைபிள் நியமங்களில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் அத்தகைய கனத்தைக் கொடுக்கிறார்கள். அது அவர்கள் பெற்றோர்கள் உயிரோடிருக்கையில் அவர்களுடைய இருதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.)

நீதி. 23:22: “உன்னைப்பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.”

1 தீமோ. 5:4: “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.”

மரித்தவர்களிடமிருந்து வெளிவரும் செய்திகள் என்று ஆவி மத்தியஸ்தர்கள் உரிமைபாராட்டுகையில், உண்மையில் எங்கிருந்து இவை வருகின்றன?

ஏசா. 8:19: “அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?” (அது உண்மையில் நம்மை நமக்கு அன்பானவர்களிடத்தில் தொர்புகொள்ள வைக்கிறதென்றால் கடவுள் அத்தகைய பழக்கத்திற்கு எதிராக எச்சரிப்பாரா?)

அப். 16:16: “நாங்கள் ஜெபம் பண்ணுகிற இடத்துக்குப் போகயில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்து, குறிசொல்லுகிறதனால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.”

பக்கங்கள் 384-386-ல் “ஆவிக்கொள்கை” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

யாருக்கு நம்முடைய வணக்கத்தைச் செலுத்தவேண்டும்?

லூக்கா 4:8: “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: . . . உன் தேவனாகிய கர்த்தரைப் [யெகோவாவை, NW] பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.”

யோவான் 4:23, 24: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.”

மரித்தவர்கள் உட்பட, குடும்ப உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஒன்றாக இணைக்கப்படுவதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

யோவான் 5:28, 29, NW: “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம். ஏனென்றால், அந்த மணிநேரம் வருகிறது, அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளிவருவார்கள், நல்ல காரியங்களைச் செய்தவர்கள் ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலுக்கும், தீயக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்தவர்கள் நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலுக்கும் வருவார்கள்.”