Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசுவாசத்துரோகம்

விசுவாசத்துரோகம்

விசுவாசத்துரோகம்

சொற்பொருள் விளக்கம்: விசுவாசத்துரோகம் என்பது கடவுளுடைய வணக்கம் மற்றும் சேவையைக் கைவிடுதல் அல்லது விட்டுப் பிரிதலைக் குறிக்கிறது. உண்மையில் இது யெகோவாவுக்கு எதிரான கலகம். சில விசுவாசத்துரோகிகள் கடவுளை அறிகிறோம் மற்றும் அவருக்குச் சேவை செய்கிறோம் என்று உரிமை பாராட்டுகின்றனர். ஆனால், அவருடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் போதனைகளை அல்லது கட்டளைகளை ஏற்க மறுக்கின்றனர். மற்றவர்கள் பைபிளை நம்புவதாக உரிமைபாராட்டுகின்றனர் ஆனால், யெகோவாவின் அமைப்பை வேண்டாமெனத் தள்ளுகின்றனர்.

கிறிஸ்தவ சபைக்குள்ளிருந்து விசுவாசத்துரோகிகள் எழும்புவார்களென நாம் எதிர்பார்க்கவேண்டுமா?

1 தீமோ. 4:1: “ஆவியானவர் [தேவாவியால் ஏவப்பட்ட வார்த்தை, NW] வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் [ஏவப்பட்ட வசனிப்புகளுக்கும், NW] பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.”

2 தெச. 2:3: “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாசத்துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் [யெகோவாவின் நாள், NW] வராது.”

விசுவாசத்துரோகிகளின் சில அடையாளக்குறிகள்—

அவர்கள் மற்றவர்களைத் தங்களுடைய சீஷர்களாக்குகின்றனர், இவ்வாறு மார்க்கப்பேதப் பிரிவினைகளை உண்டாக்குகின்றனர்

அப். 20:30: “உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்.”

2 பேதுரு 2:1, 3: “அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழைப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்வார்கள்.”

அவர்கள் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதாக உரிமைபாராட்டுவார்கள், ஆனால், தம்முடைய சீஷருக்கு அவர் நியமித்தப் பிரசங்க மற்றும் போதிக்கும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை

லூக்கா 6:46: “என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும் நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?”

மத். 28:19, 20: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . ஞானஸ்நானம் கொடுத்து [முழுக்காட்டி], நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”

மத். 24:14: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”

அவர்கள் கடவுளைச் சேவிப்பதாக உரிமைபாராட்டலாம், ஆனால், அவருடைய பிரதிநிதிகளை, அவருடைய காணக்கூடிய அமைப்பை ஏற்க மறுக்கின்றனர்

யூதா 8, 11: “சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை [மகத்துவமுள்ளவர்களை, NW] தூஷிக்கிறார்கள். இவர்களுக்கு ஐயோ! இவர்கள் . . . கோ எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள்.”

எண். 16:1-3, 11, 19-21: “கோராகு . . . இஸ்ரவேல் புத்திரர் சபைக்குத் தலைவர்களும் . . . பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட, . . . எழும்பி, மோசக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள் சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் [யெகோவா] அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய [யெகோவாவுடைய] சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். [மோசே சொன்னான்:] நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு] விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள். ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான். அவர்களுக்கு விரோதமாகக் கோகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய [யெகோவாவுடைய] மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது. கர்த்தர் [யெகோவா] மோசயோடும் ஆரோனோடும் பேசி: இந்தச் சபையைவிட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.”

அவர்கள் உண்மை விசுவாசத்தைக் கைவிடுவதோடல்லாமல் பகிரங்கமாகக் குறை கூறுவதன் மூலமும், அவர்களுடைய வேலைக்கு இடையூறாக மற்ற வழிமுறைகளை உபயோகித்தும் தங்களுடைய பழைய கூட்டாளிகளை “அடிக்கிறார்கள்;” அத்தகைய விசுவாசத்துரோகிகளின் முயற்சிகள் இடித்துப்போடவேயல்லாமல் கட்டியெழுப்புவதற்கு அல்ல

மத். 24:45-51: “ஏற்ற வேளையிலே தன் வேலைக்காரருக்குப் போனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? . . . அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து ‘என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன் வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.”

2 தீமோ. 2:16-18: “சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள், அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் சத்தியத்தை விட்டுவிலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.”

உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், விசுவாசத்துரோகிகளை நேரிலோ அல்லது அவர்களுடைய இலக்கியத்தை வாசிப்பதன்மூலமோ தங்களிடத்தில் வரவேற்பார்களா?

2 யோவான் 9, 10: “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல . . . ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால் அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.”

ரோமர் 16:17, 18: “சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். . . . நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும் கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.”

விசுவாசத்துரோகிகளின் சிந்தனையைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆவலைத் திருப்திசெய்வதில் ஏதாவது வினைமையான தீங்கு வரக்கூடுமா?

நீதி. 11:9: “மாயக்காரன் [விசுவாசத்துரோகி, NW] தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்.”

ஏசா. 32:6: “மூடன் மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி [விசுவாசத்துரோகம் செய்து, NW] கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.” (ஏசாயா 65:13, 14-ஐ ஒப்பிடவும்.)

விசுவாசத்துரோகம் எவ்வளவு வினைமையானது?

2 பேதுரு 2:1: “அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.”

யோபு 13:16: “மாயக்காரனோ [விசுவாசத்துரோகியோ, NW] அவர் [கடவுளுடைய] சந்நிதியில் சேரான்.”

எபி. 6:4-6: “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், [“அவர்கள் அப்போது விசுவாசத்துரோகம் செய்தால்,” RS] தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் [கழுமரத்தில், NW] அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.”