Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசுவாசம்

விசுவாசம்

விசுவாசம்

சொற்பொருள் விளக்கம்: “விசுவாசம் நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப்பற்றிய தெளிவான மெய்ப்பிப்பு.” (எபி. 11:1) உண்மையான விசுவாசம் எதையும் எளிதில் நம்பும் குணமல்ல, அதாவது, நல்ல அத்தாட்சியில்லாமல் அல்லது அவ்வாறிருக்கும்படி ஒருவன் விரும்புவதன் காரணமாகத்தானே ஒன்றை நம்புவதற்கு ஆயத்தமாயிருப்பதல்ல. உண்மையான விசுவாசத்துக்கு, அடிப்படையான அல்லது மூலாதாரமான அறிவு, அத்தாட்சியுடன் அறிமுகம், அதோடு அந்த அத்தாட்சி குறிப்பிடுவதற்கு இருதயப்பூர்வ மதித்துணர்வு ஆகியவை தேவைப்படுகின்றன. இவ்வாறு, திருத்தமான அறிவில்லாமல் உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருப்பது சாத்தியமல்லவெனினும், “இருதயத்தில்” ஒருவன் விசுவாசங்காட்டுகிறான் என பைபிள் சொல்லுகிறது.—ரோமர் 10:10.

ஏன் பலருக்கு விசுவாசமில்லை?

விசுவாசம் கடவுளுடைய ஆவியின் ஒரு கனியாகும், தம்முடைய ஆவியை நாடுவோருக்குக் கடவுள் அதை மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார். (கலா. 5:22; லூக்கா 11:13) ஆகையால் விசுவாசமில்லாத ஆட்கள் அந்த ஆவியைத் தேடுவதில்லை, அல்லது அதைத் தவறான நோக்கத்துக்காகத் தேடுகிறார்கள் அல்லது தங்கள் வாழ்க்கையில் அது செயல்படுவதைத் தடைசெய்கிறார்கள். இதைப் பல காரியங்கள் பாதிக்கின்றன:

திருத்தமான பைபிள் அறிவு இல்லை: பைபிள் கடவுளால் ஏவப்பட்டதால், கடவுளுடைய ஆவியினால் தோற்றுவிக்கப்பட்டது. (2 தீமோ. 3:16, 17; 2 சாமு. 23:2) அதைப் படிக்கத் தவறுவது உண்மையான விசுவாசத்துக்குரிய எந்த வளர்ச்சியையும் தடைசெய்கிறது. சர்ச் உறுப்பினர் பைபிளைக் கொண்டிருந்தாலும், கடவுளுடைய வார்த்தைக்குப்பதில் மனிதரின் எண்ணங்கள் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுவந்தால், கடவுளிலும் அவருடைய நோக்கத்திலும் உண்மையான விசுவாசம் அவர்களுக்கு இராது. வாழ்க்கையின் பிரச்னைகளைத் தீர்க்க, அவர்கள் தங்கள் சொந்த எண்ணங்களின்பேரிலும் மற்ற மனிதரின் எண்ணங்களின்பேரிலும் நம்பி சார்ந்திருக்க மனஞ்சாய்வர்.—மத்தேயு 15:3-9-ஐ ஒத்துப்பாருங்கள்.

மதத்திலிருந்து மயக்கந்தெளிதல்: கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதாக உரிமைபாராட்டி ஆனால் அது சொல்வதற்கிசைய வாழத் தவறும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் பாசாங்குத்தனத்தைக் கண்டு பலர் மயக்கந்தெளிந்திருக்கின்றனர். மற்றவர்கள் கிறிஸ்தவமல்லாத மதத்தைக் கடைப்பிடித்திருந்தனர், ஆனால் அதன் பழக்கச் செயல்களின் கெட்ட விளைவுகளை அவர்கள் கண்டனர் அல்லது தங்கள் நம்பிக்கைகள் வாழ்க்கையின் பிரச்னைகளைச் சமாளிக்கத் தங்களுக்கு உண்மையில் உதவிசெய்யவில்லையெனக் கண்டனர். உண்மையான கடவுளைப்பற்றிய திருத்தமான அறிவு அத்தகைய ஆட்களுக்கு இல்லாததனால், மதம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் அவர்கள் விலகிவிடுகின்றனர்.— ரோமர் 3:3, 4; மத்தேயு 7:21-23-ஐ ஒத்துப்பாருங்கள்.

அக்கிரமத்தைக் கடவுள் அனுமதித்திருப்பது அவர்களுக்குப் புரிகிறதில்லை: கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதிக்கிறார் என்பது பெரும்பான்மையருக்கு விளங்குகிறதில்லை: ஆகையால் நடக்கும் எல்லாக் கெட்டக் காரியங்களுக்கும் கடவுள்பேரில் பழிசுமத்துகின்றனர். கடவுளுடைய சித்தத்தின் காரணமாக அல்ல ஆனால் ஆதாமின் பாவத்தின் காரணமாகவே மனிதன் கேட்டை நோக்கி மனஞ்சாய்கிறான் என்பதை அவர்கள் தெரிந்துணருகிறதில்லை. (ரோமர் 5:12) பிசாசாகிய சாத்தான் இருப்பதையும் உலக விவகாரங்களில் அவனுடைய செல்வாக்கையும் பற்றி அவர்கள் ஒருவேளை அறியாதிருக்கலாம், ஆகையால் சாத்தான் நடப்பிக்கும் படுமோசமான காரியங்களைக் கடவுள் நடப்பிப்பதாக அவர்மீது குற்றஞ் சாட்டுகின்றனர். (1 யோவான் 5:19; வெளி. 12:12) இந்தக் காரியங்களைப்பற்றி அவர்கள் ஒரளவு தெரிந்திருந்தால், நடவடிக்கை எடுப்பதைப்பற்றிக் கடவுள் தாமதிக்கிறாரென அவர்கள் உணரலாம், ஏனெனில் சர்வலோக அரசாட்சியைப்பற்றிய விவாதத்தை அவர்கள் தெளிவாய்க் காண்கிறதில்லை மேலும் இந்தச் சமயம் வரையில் கடவுள் பொறுமையாயிருந்தது இரட்சிப்புக்குத் தகுதியற்ற வாய்ப்பைத் தங்களுக்கு அளிக்கிற உண்மையும் அவர்கள் அறிவுக்கு எட்டுகிறதில்லை. (ரோமர் 2:4; 2 பேதுரு 3:9) மேலும், அக்கிரமத்தைப் பழக்கமாய் நடப்பித்துவரும் எல்லாரையும் தாம் அழிக்கப்போகும் ஒரு நேரத்தைக் கடவுள் குறித்துவைத்திருப்பதை அவர்கள் முழுமையாய் உணருகிறதில்லை.—வெளி. 22:10-12; 11:18; ஆபகூக் 2:3.

மாம்ச இச்சைகளாலும் நோக்குநிலைகளாலும் வாழ்க்கை ஆதிக்கம் செலுத்தப்படுகிறது: உண்மையான பொருள்கொண்ட விசுவாசத்தில் குறைவுபடும் ஆட்கள், பொதுவாய், மற்ற அக்கறைகளை நாடித்தொடருவதில் தங்களை முழுவதும் ஈடுடுத்தியிருக்கின்றனர். சிலர் தாங்கள் பைபிளை நம்புவதாகச் சொல்லலாம் ஆனால் அதை அவர்கள் ஒருபோதும் திட்பநுட்பமாய்ப் படித்திருக்க மாட்டார்கள் அல்லது தாங்கள் வாசிப்பதன்பேரில், அதற்கான காரணங்களின்பேரில், மற்றும் அது அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகிறதென்பதன்பேரில் நன்றிமதித்துணர்வுடன் ஆழ்ந்து சிந்திக்கத் தவறியிருக்கலாம். (1 நாளாகமம் 28:9-ஐ ஒத்துப்பாருங்கள்.) சிலருடைய காரியங்களில், அவர்கள் தங்களுக்கிருந்த விசுவாசத்தைப் பேணிக்காக்கத் தவறி, அதற்குப்பதில், அநீதியான காரியங்களுக்கான ஆசை தங்கள் இருதயத்தின் சாய்வை ஆதிக்கங்கொள்ள அனுமதித்ததால் அவர்கள் கடவுளையும் அவருடைய வழிகளையும் விட்டு தூர விலகிச் சென்றனர்.—எபி. 3:12.

ஒருவர் விசுவாசத்தை அடைவது எவ்வாறு?

ரோமர் 10:17: “விசுவாசம் கேள்வியினாலே வரும்.” (அப்போஸ்தலர் 17:11, 12; யோன் 4:39-42; 2 நாளாகமம் 9:5-8, ஆகியவற்றை ஒத்துப்பாருங்கள். ஒருவன் பைபிள் சொல்வதை முதலாவது கண்டுபிடிக்கவேண்டும், அதன் நம்பத்தக்கத் தன்மையைத் தனக்கு உறுதிசெய்துகொள்ளும்படி அவன் அதைக் கவனமாய் ஆராய்ந்தால் தன் நம்பிக்கையை உறுதிசெய்துகொள்வான்.)

ரோமர் 10:10: “இருதயத்திலே விசுவாசிக்கப்படும்.” (தெய்வீகக் காரியங்களில் மதித்துணர்வை வளர்க்க அவற்றின்பேரில் ஆழ்ந்த சிந்தனைசெய்வதால், ஒருவன் அவற்றைத் தன் அடையாளக் குறிப்பான இருதயத்தில் ஆழப் பதியச் செய்கிறான்.)

கடவுளுடைய வாக்குகளின்பேரில் ஒருவன் செயல்பட்டு, பின்பு தான் செய்ததன்பேரில் கடவுளுடைய ஆசீர்வாதங்களின் அத்தாட்சியைக் காண்கையில் விசுவாசம் உறுதிப்படுகிறது.—சங்கீதம் 106:9-12 பார்க்கவும்.

உதாரணம்: ஒருவேளை உங்களுக்கு ஒரு நண்பர் இருக்கலாம், அவரைக் குறித்து நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: ‘அவரை நான் நம்புகிறேன். அவர் தன் வார்த்தையைக் காத்துக்கொள்வாரென நான் நம்பியிருக்க முடியும்; எனக்கு ஒரு பிரச்னை உண்டானால், என் உதவிக்கு அவர் வருவாரென எனக்குத் தெரியும்.’ நேற்றுத்தான் முதல்தடவையாக நீங்கள் சந்தித்த எவரையாவது குறித்து அவ்வாறு பெரும்பாலும் சொல்லமாட்டீர்கள், அல்லவா? அவர் நீங்கள் நீண்காம் கூட்டுறவுகொண்டவராக, தன்னுடைய நம்பத்தக்கத் தன்மையைப் பலதடவைகள் நிரூபித்த ஒருவராக இருக்கவேண்டும். மத விசுவாசத்தைக் குறித்தும் அவ்வாறே இருக்கிறது. விசுவாசத்தைக் கொண்டிருக்க, யெகோவாவையும் காரியங்களைச் செய்யும் அவருடைய வழியையும் அறிவதற்கு நீங்கள் நேரமெடுக்கவேண்டும்.

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற விசுவாசம்

பக்கங்கள் 145-151, “கடவுள்” என்ற முக்கிய தலைப்பின்கீழ் பாருங்கள்.

நீதியுள்ள ஒரு புதிய காரிய ஒழுங்குமுறையின் எதிர்பார்ப்பில் விசுவாசம்

தம்முடைய ஊழியர்களோடு யெகோவாவின் நடவடிக்கைகளைப் பற்றிய பதிவுடன் ஒருவன் நன்றாய்ப் பழக்கப்பட்டவனாகையில், பின்வருமாறு சொன்ன யோசுவாவின் நோக்குநிலையில் பங்குகொள்பவனாகிறான்: “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைப்பற்றிச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; இதைப்பற்றி உங்கள் இருதயத்திலும் மனதிலும் யாதொரு சந்தேகமுமில்லை; அவைகளெல்லாம் உங்கள் விஷயத்தில் நிறைவேறின; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போனதில்லை.”—யோசு. 23:14, தி.மொ.

உடல்நலம் திரும்பப் புதுப்பிக்கப்படுவது, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவது, முதலியவற்றைப்போன்ற பைபிளில் கொடுத்துள்ள வாக்குகள், இயேசு கிறிஸ்து நடப்பித்த அற்புதங்களின் பதிவால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை கட்டுக்கதைகளல்ல. சுவிசேஷ விவரங்களை வாசித்து அவை யாவும் சரித்திர அதிகாரப்பூர்வ குறிகளைக் கொண்டிருக்கும் அத்தாட்சியைக் காணுங்கள். பூகோளம் சார்ந்த இடப்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன; ஒரே காலத்தில் ஆண்ட உலகப்பிரகாரமான அரசர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன; ஒன்றுக்கு மேற்பட்ட கண்கண்ட சாட்சிகளின் விவரப்பதிவுகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அத்தாட்சிகளின்பேரில் ஆழ்ந்து சிந்திப்பது உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்த முடியும்.

யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றங்களுக்கும் அவர்களுடைய பொதுவான மாநாடுகளுக்கும் செல்லுங்கள், அங்கே, பைபிளின் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பது வாழ்க்கைகளை மாற்றுகிறது, ஆட்களை வாய்மையும் ஒழுக்கப்பிரகாரமாய் நேர்மையுமுள்ளோராக்க முடிகிறது, மேலும் எல்லா ஜாதிகளும் தேசத்தாருமான ஜனங்களை உண்மையான சகோதரத்துவ ஆவியில் ஒன்றுசேர்ந்து வாழவும் வேலைசெய்யவும் கூடியதாக்குகிறது என்பவற்றிற்கு அத்தாட்சிகளை நீங்களே நேரில் காணலாம்.

ஒருவருக்கு விசுவாசம் இருந்தால் செயல்கள் உண்மையில் தேவையா?

யாக். 2:17, 18, 21, 22, 26: “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு, கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.”

உதாரணம்: ஒரு வாலிபன் ஒரு வாலிபப் பெண்ணிடம், தான் அவளை நேசிப்பதாகக் கூறிக் காதலிக்கலாம். ஆனால் அவன் தன்னை மணம் செய்துகொள்ளும்படி அவளை ஒருபோதும் கேட்பதில்லையென்றால், தன்னுடைய அன்பு முழுமைவாய்ந்ததென்று அவன் உண்மையில் மெய்ப்பித்துக் காட்டுகிறானா? அவ்வாறே, செயல்கள் நம்முடைய விசுவாசத்தின் மற்றும் நம்முடைய அன்பின் உண்மையான தன்மையை மெய்ப்பித்துக் காட்டும் வழிவகைகளாயிருக்கின்றன. நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறதில்லையென்றால் நாம் அவரை உண்மையில் நேசிக்கிதில்லை அல்லது அவருடைய வழிகள் நேர்மையானவை என்பதை விசுவாசிப்பதில்லை. (1 யோவான் 5:3, 4) ஆனால் என்ன செயல்களை நாம் செய்தாலும் இரட்சிப்பை நாம் சம்பாதிக்க முடியாது. நித்திய ஜீவன், நம்முடைய செயல்களுக்குச் சம்பளம் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மூலம் கடவுள் கொடுக்கும் பரிசு ஆகும்.—எபே. 2:8, 9.