கேள்வி 10
நம் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”
“பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.”
“மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.”
“அப்போது, கண் தெரியாதவர்களுக்குக் கண் தெரியும். காது கேட்காதவர்களுக்குக் காது கேட்கும். நடக்க முடியாதவர்கள் மான்போல் துள்ளி ஓடுவார்கள். பேச முடியாதவர்கள் சந்தோஷத்தில் பாடுவார்கள். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும். பாலைநிலத்தில் ஆறுகள் பாய்ந்தோடும்.”
“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”
“ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார். ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார். ஏனென்றால், மரத்தின் ஆயுள் காலத்தைப் போல என் ஜனங்களின் ஆயுள் காலமும் இருக்கும். நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.”