Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

கேள்வி 5

பைபிள் சொல்லும் முக்கியச் செய்தி என்ன?

“உனக்கும் பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”

ஆதியாகமம் 3:15

“நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.”

ஆதியாகமம் 22:18

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.”

மத்தேயு 6:10

“சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப்போடுவார்.”

ரோமர் 16:20

“எல்லாமே மகனுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட பின்பு, எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்திய கடவுளுக்கு மகனும் கீழ்ப்பட்டிருப்பார். அப்போது, கடவுள்தான் எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.”

1 கொரிந்தியர் 15:28

‘ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அந்தச் சந்ததி கிறிஸ்துதான். அதோடு, நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், உண்மையிலேயே ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறீர்கள்.’

கலாத்தியர் 3:16, 29

“உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமான அரசாங்கமானது. அவர் என்றென்றும் ராஜாவாக ஆட்சி செய்வார்.”

வெளிப்படுத்துதல் 11:15

“உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.”

வெளிப்படுத்துதல் 12:9

“அவர் பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பை, அதாவது பிசாசாகிய சாத்தானை, பிடித்து 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போட்டார்.”

வெளிப்படுத்துதல் 20:2