Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

கேள்வி 7

நம்முடைய காலத்தைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது?

“ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், . . . இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.”

மத்தேயு 24:7, 8

“போலித் தீர்க்கதரிசிகள் பலர் வந்து நிறைய பேரை ஏமாற்றுவார்கள்; அக்கிரமம் அதிகமாவதால் பெரும்பாலானவர்களின் அன்பு குறைந்துவிடும்.”

மத்தேயு 24:11, 12

“போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்கும்போது, திகிலடையாதீர்கள். இதெல்லாம் நடக்க வேண்டும், ஆனால் முடிவு அப்போதே வராது.”

மாற்கு 13:7

“பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும். அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் உண்டாகும். திகிலுண்டாக்கும் காட்சிகள் தெரியும், வானத்திலிருந்து மாபெரும் அடையாளங்கள் தோன்றும்.”

லூக்கா 21:11

“கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக, பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறவர்களாக இருப்பார்கள்.”

2 தீமோத்தேயு 3:1-5