ஆதியாகமம் 10:1-32
10 நோவாவின் மகன்களான சேம்,+ காம், யாப்பேத் ஆகியவர்களின் வரலாறு இதுதான்.
பெருவெள்ளம் வந்த பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.+
2 யாப்பேத்தின் மகன்கள்: கோமர்,+ மாகோகு,+ மாதாய், யாவான், தூபால்,+ மேசேக்,+ தீராஸ்.+
3 கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ்,+ ரீப்பாத், தொகர்மா.+
4 யாவானின் மகன்கள்: எலிஷா,+ தர்ஷீஸ்,+ கித்தீம்,+ தொதானீம்.
5 இவர்களுடைய வம்சத்தார் அவரவர் மொழியின்படியும், குடும்பத்தின்படியும், தேசத்தின்படியும் தீவுகளில்* பரவியிருந்தார்கள்.
6 காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம்,+ பூத்,+ கானான்.+
7 கூஷின் மகன்கள்: சிபா,+ ஆவிலா, சப்தா, ராமாகு,+ சப்திகா.
ராமாகுவின் மகன்கள்: சேபா, தேதான்.
8 கூஷுக்கு நிம்ரோது பிறந்தான். இந்தப் பூமியில் நிம்ரோதுதான் முதன்முதலில் பலம்படைத்தவனாக ஆனான்.
9 இவன் பெரிய* வேட்டைக்காரனாக இருந்தான், யெகோவாவையே எதிர்த்தான். அதனால்தான், “யெகோவாவையே எதிர்த்த பெரிய வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல” என்ற வழக்குச்சொல் வந்தது.
10 அவன் முதன்முதலாக ஆட்சி செய்த நகரங்கள்: சினேயார் தேசத்திலிருந்த+ பாபேல்,+ ஏரேக்,+ அக்காத், கல்னே.
11 அவன் அந்தத் தேசத்திலிருந்து அசீரியாவுக்குப்+ போய் நினிவே,+ ரெகொபோத்-இர், காலாக் ஆகியவற்றையும்
12 நினிவேக்கும் காலாக்குக்கும் இடையில் ரெசேனையும் கட்டினான். இதுதான் மாநகர்.*
13 மிஸ்ராயீமின் மகன்கள்: லூதீம்,+ அனாமீம், லெகாபீம், நப்தூகீம்,+
14 பத்ருசீம்,+ கஸ்லூகிம் (இவருடைய வம்சத்தார்தான் பெலிஸ்தியர்கள்),+ கப்தோரிம்.+
15 கானானின் முதல் மகன் சீதோன்.+ இன்னொரு மகன் ஏத்.+
16 அதன்பின் எபூசியர்கள்,+ எமோரியர்கள்,+ கிர்காசியர்கள்,
17 ஏவியர்கள்,+ அர்கீயர்கள், சீநியர்கள்,
18 அர்வாதியர்கள்,+ செமாரியர்கள், காமாத்தியர்கள்+ ஆகியவர்களுக்கு கானான் மூதாதை ஆனான். பிற்பாடு, இந்த கானானியர்களின் குடும்பங்கள் சிதறிவிட்டன.
19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது.
20 குடும்பங்களின்படியும், மொழிகளின்படியும், தேசங்களின்படியும், சமுதாயங்களின்படியும் வாழ்ந்துவந்த காமின் சந்ததியார் இவர்கள்தான்.
21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவன் மூத்தவனாகிய யாப்பேத்தின் சகோதரன்,* ஏபேருடைய சந்ததியாருக்கு+ மூதாதை.
22 சேமின் மகன்கள்: ஏலாம்,+ அஷூர்,+ அர்பக்சாத்,+ லூத், அராம்.+
23 அராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
24 அர்பக்சாத்தின் மகன் சேலா.+ சேலாவின் மகன் ஏபேர்.
25 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒரு மகனின் பெயர் பேலேகு,*+ ஏனென்றால் அவருடைய வாழ்நாளில்தான் ஜனங்கள் எல்லா இடங்களுக்கும் பிரிந்துபோனார்கள். இன்னொரு மகனின் பெயர் யொக்தான்.+
26 யொக்தானின் மகன்கள்: அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராக்,+
27 ஹதோராம், ஊசால், திக்லா,
28 ஓபால், அபிமாவேல், சேபா,
29 ஓப்பீர்,+ ஆவிலா, யோபாப்; இவர்கள் எல்லாரும் யொக்தானுக்குப் பிறந்தவர்கள்.
30 இவர்கள் குடியிருந்த பகுதி, மேசாமுதல் கிழக்கத்திய மலைப்பகுதியான செப்பார்வரை பரவியிருந்தது.
31 குடும்பங்களின்படியும், மொழிகளின்படியும், தேசங்களின்படியும் சமுதாயங்களின்படியும் வாழ்ந்துவந்த சேமின் சந்ததியார் இவர்கள்தான்.+
32 வம்சங்களின்படியும் தேசங்களின்படியும் வாழ்ந்துவந்த நோவாவுடைய மகன்களின் குடும்பத்தார் இவர்கள்தான். பெருவெள்ளத்துக்குப் பின்பு இவர்களுடைய சந்ததியார்தான் பூமியெங்கும் பரவினார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “கடலோரப் பகுதிகளில்.”
^ வே.வா., “பலம்படைத்த.”
^ அநேகமாக, நினிவே, ரெகொபோத்-இர், காலாக், ரெசேன் ஆகிய எல்லா நகரங்களும் சேர்ந்து ஒரு மாநகரமாகக் கருதப்பட்டது.
^ அல்லது, “அவன் யாப்பேத்தின் அண்ணன்.”
^ அர்த்தம், “பிரிவு.”