ஆபகூக் 3:1-19

3  ஆபகூக் தீர்க்கதரிசி கடவுளிடம் பாடிய புலம்பல் பாட்டு:   “யெகோவாவே, இதுவரை நீங்கள் செய்திருக்கிற காரியங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். யெகோவாவே, அவற்றை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. சரியான சமயத்தில்* மறுபடியும் அவற்றைச் செய்யுங்கள். சரியான சமயத்தில்* அவற்றை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள். உங்களுடைய கோபத்தைக் காட்டும்போது,* எங்களுக்கு இரக்கம் காட்ட மறந்துவிடாதீர்கள்.+   கடவுள் தேமானிலிருந்து வந்தார்.பரிசுத்தமான கடவுள் பாரான் மலையிலிருந்து வந்தார்.+ (சேலா)* வானம் அவருடைய மகிமையால் நிறைந்தது.+பூமி அவருடைய புகழால் நிரம்பியது.   அவர் ஒளிபோல் பிரகாசமாக இருந்தார்.+ அவருடைய பலம் அவர் கையில் மறைந்திருந்தது.அங்கிருந்து இரண்டு ஒளிக்கதிர்கள் புறப்பட்டன.   கொள்ளைநோய் அவருக்கு முன்னால் போனது.+கடும் காய்ச்சல் அவருடைய காலடிகளுக்குப் பின்னால் போனது.   அவர் அசையாமல் நின்று பூமியை அதிர வைத்தார்,+ ஒரு பார்வை பார்த்து தேசங்களை நடுநடுங்கச் செய்தார்.+ காலம்காலமாக இருந்த மலைகள் நொறுங்கின.பழங்கால குன்றுகளும் தரைமட்டமாயின.+ பூர்வ காலத்திலிருந்து அவர் செய்துவரும் செயல்களே இவை.   கூஷானின் கூடாரங்களைத் திகில் கவ்வியது. மீதியான் தேசத்தின் கூடாரத் துணிகள் படபடத்தன.+   யெகோவாவே, ஆறுகள்மீதா உங்களுக்கு ஆக்ரோஷம்?நதிகள்மீதா உங்களுக்கு ஆவேசம்? கடல்மீதா உங்களுக்குக் கடும் கோபம்?+ உங்கள் குதிரைகளில் ஏறி வந்தீர்களே.+உங்களுடைய ரதங்கள் வெற்றி* பெற்றனவே.+   நீங்கள் வில்லைக் கையில் ஏந்திக்கொண்டிருக்கிறீர்கள். உறுதிமொழியின்படியே, கம்புகள்* தாக்குவதற்குத் தயாராக இருக்கின்றன. (சேலா) நீங்கள் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்குகிறீர்கள். 10  மலைகள் உங்களைப் பார்த்து வேதனையில் துடிதுடித்தன.+ மழைநீர் வெள்ளமாக அடித்துக்கொண்டு போனது. ஆழத்திலுள்ள தண்ணீர் பெரும் இரைச்சல் போட்டது.+ அது மேல்நோக்கிப் பீச்சியடித்தது. 11  சூரியனும் சந்திரனும் வானத்தில் அசையாமல் நின்றன.+ உங்களுடைய அம்புகள் ஒளியைப் போல வேகமாகப் பாய்ந்தன.+ உங்களுடைய ஈட்டி மின்னலைப் போல மின்னியது. 12  நீங்கள் கடும் கோபத்தோடு பூமியில் நடந்துபோனீர்கள். ஆக்ரோஷத்தோடு தேசங்களை மிதித்துப் போட்டீர்கள். 13  உங்கள் ஜனத்தைக் காப்பாற்றுவதற்கு, நீங்கள் தேர்ந்தெடுத்த* ஜனத்தைக் காப்பாற்றுவதற்கு, புறப்பட்டுப்போனீர்கள். பொல்லாதவனுடைய வீட்டுத் தலைவனை நொறுக்கினீர்கள். அந்த வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. (சேலா) 14  பாவப்பட்டவனைப் பதுங்கியிருந்து தாக்குவதில் அவனுடைய போர்வீரர்களுக்கு ஒரே கொண்டாட்டம்!என்னைத் துரத்தியடிக்க* அவர்கள் புயல் வேகத்தில் வந்தார்கள். ஆனால், நீங்கள் அவர்களுடைய ஆயுதங்களை வைத்தே அவர்களுடைய தலையைப் பிளந்தீர்கள். 15  கடலில் உங்கள் குதிரைகளை ஓட்டிக்கொண்டு போனீர்கள்.கொந்தளிக்கும் தண்ணீர்மேல் சவாரி செய்தீர்கள். 16  செய்தியைக் கேட்டு நான் குலைநடுங்கினேன்.என் உதடுகள் துடிதுடித்தன. என் எலும்புகள் உளுத்துப்போயின.+கால்கள் கிடுகிடுவென்று ஆடின. ஆனாலும், அழிவு* நாளுக்காக நான் பொறுமையோடு* காத்திருக்கிறேன்.+ஏனென்றால், எங்களைத் தாக்குபவர்களுக்கு எதிராக அது வருகிறது. 17  அத்தி மரம் பூத்துக் குலுங்காமல் போகலாம்.திராட்சைக் கொடியில் பழங்கள் இல்லாமல் போகலாம்.ஒலிவ மரம் காய்க்காமல் போகலாம்.வயல்களில் பயிர்கள் விளையாமல் போகலாம்.பட்டியில் ஆடுகள் காணாமல் போகலாம்.தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் போகலாம். 18  ஆனாலும், நான் யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுவேன்.என்னை மீட்கும் கடவுளை நினைத்து பூரித்துப்போவேன்.+ 19  உன்னதப் பேரரசராகிய யெகோவாவே என் பலம்.+அவர் என்னை மான்களைப் போலத் துள்ளி ஓட வைப்பார்.உயரமான இடங்களில் என்னை நடக்க வைப்பார்.”+

அடிக்குறிப்புகள்

அல்லது, “எங்களுடைய காலத்தில்.”
அல்லது, “எங்களுடைய காலத்தில்.”
வே.வா., “நீங்கள் கலவரத்தை வெடிக்கச் செய்யும்போது.”
வே.வா., “மீட்பு.”
அல்லது, “அம்புகள்.”
வே.வா., “அபிஷேகம் செய்த.”
வே.வா., “சிதறடிக்க.”
வே.வா., “இக்கட்டு.”
வே.வா., “அமைதியாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா