ஆமோஸ் 1:1-15
1 தெக்கோவா ஊரில்+ இருந்த ஒரு மேய்ப்பர்தான் ஆமோஸ்.* அவர் வாழ்ந்த காலத்தில் யூதாவை உசியா ராஜாவும்,+ இஸ்ரவேலை யோவாசின்+ மகன் யெரொபெயாமும்+ ஆட்சி செய்துவந்தார்கள். அந்தச் சமயத்தில், இஸ்ரவேலைப் பற்றிய ஒரு தரிசனத்தை ஆமோஸ் பார்த்தார். நிலநடுக்கம்+ வருவதற்கு இரண்டு வருஷங்களுக்கு முன்னால் இது நடந்தது.
2 ஆமோஸ் இப்படிச் சொன்னார்:
“சீயோனிலிருந்து யெகோவா சிங்கம்போல் கர்ஜிப்பார்.எருசலேமிலிருந்து சத்தமாகக் குரல் கொடுப்பார்.
அப்போது, மேய்ச்சல் நிலங்கள் வறண்டுபோகும்.கர்மேல் மலை உச்சியில் இருக்கிற புல்பூண்டுகளெல்லாம் காய்ந்துபோகும்.”+
3 “யெகோவா சொல்வது இதுதான்:‘“தமஸ்கு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம்* செய்ததால் என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.அவர்கள் இரும்புக் கருவிகளால் கீலேயாத்தைப் போரடித்தார்கள்.*+
4 அதனால், அசகேல்+ ராஜாவின் வீட்டுக்குத் தீ வைக்கப்போகிறேன்.அது பெனாதாத்தில் இருக்கிற கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.+
5 தமஸ்குவின் தாழ்ப்பாள்களை உடைக்கப்போகிறேன்.+பிக்காத்-ஆவேனில் இருக்கிற ஜனங்களை அழிக்கப்போகிறேன்.பெத்-ஏதேனின் ராஜாவைக் கொல்லப்போகிறேன்.சீரியா தேசத்து ஜனங்கள் கீர் தேசத்துக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’
6 யெகோவா சொல்வது இதுதான்:‘“காசா நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.சிறைபிடித்த+ எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.
7 அதனால், காசாவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.+அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.
8 அஸ்தோத்தில் இருக்கிற ஜனங்களை அழிக்கப்போகிறேன்.+அஸ்கலோனின் ராஜாவைக் கொல்லப்போகிறேன்.+எக்ரோனுக்கு எதிராக என்னுடைய கையை ஓங்கப்போகிறேன்.+மீதியிருக்கும் பெலிஸ்தியர்கள் ஒழிந்துபோவார்கள்”+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.’
9 யெகோவா சொல்வது இதுதான்:‘தீரு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.சிறைபிடித்த எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.சகோதரர்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டது.+
10 அதனால், தீருவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.’+
11 யெகோவா இப்படிச் சொல்கிறார்:‘ஏதோம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.வாளை எடுத்துக்கொண்டு சொந்த சகோதரனையே அவன் துரத்தினான்.+இரக்கம் காட்ட மறுத்துவிட்டான்.இன்னமும் வெறித்தனமாகத் தாக்கிக்கொண்டே இருக்கிறான்.பயங்கர கோபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறான்.+
12 அதனால், தேமானுக்குத்+ தீ வைக்கப்போகிறேன்.அது போஸ்றாவின் கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.’+
13 யெகோவா சொல்வது இதுதான்:‘“அம்மோனியர்கள் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.அவர்களுடைய நாட்டின் எல்லையை விரிவாக்குவதற்காக+ கீலேயாத்தில் இருக்கிற கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்தார்கள்.
14 அதனால், ரப்பாவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.+அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.அந்த நாளில் போர் முழக்கம் கேட்கும்.அந்த நாளில் சூறாவளி வீசும்.
15 அவர்களுடைய ராஜாவும் அதிகாரிகளும் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
அடிக்குறிப்புகள்
^ அர்த்தம், “சுமையாக இருப்பது” அல்லது “சுமையைச் சுமப்பது.”
^ நே.மொ., “மூன்று, நான்கு குற்றங்கள்.”
^ வே.வா., “பாடாய்ப் படுத்தினார்கள்.”