ஆமோஸ் 2:1-16

2  “யெகோவா சொல்வது இதுதான்:‘“மோவாப் திரும்பத் திரும்பக் குற்றம்* செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.சுண்ணாம்புக்காக அவன் ஏதோம் ராஜாவின் எலும்புகளைச் சுட்டெரித்தான்.   அதனால், மோவாபுக்குத் தீ வைக்கப்போகிறேன்,கீரியோத்தின் கோட்டைகள் சாம்பலாகும்.+பயங்கர கூச்சலும் போர் முழக்கமும் ஊதுகொம்பின் சத்தமும் கேட்கும்.அப்போது, மோவாப் அழிந்துபோவான்.+   அவனுடைய தலைவனுக்கு* நான் முடிவுகட்டுவேன்.தலைவனோடு சேர்த்து எல்லா அதிகாரிகளையும் கொல்வேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’   யெகோவா சொல்வது இதுதான்:‘யூதா திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.யூதா ஜனங்கள் யெகோவாவின் சட்டத்தை* ஒதுக்கித்தள்ளினார்கள்.அவருடைய விதிமுறைகளை அசட்டை செய்தார்கள்.+முன்னோர்கள் நம்பிய அதே பொய்களை நம்பி வழிவிலகிப் போனார்கள்.+   அதனால், நான் யூதாவுக்குத் தீ வைக்கப்போகிறேன்.எருசலேமின் கோட்டைகள் சாம்பலாகும்.’+   யெகோவா சொல்வது இதுதான்:‘இஸ்ரவேல் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.இஸ்ரவேல் ஜனங்கள் வெள்ளிக்காக நீதிமான்களை விற்கிறார்கள்.ஒரு ஜோடி செருப்புக்காக ஏழைகளை விற்கிறார்கள்.+   எளிமையான ஜனங்களைக் கீழே தள்ளி மிதிக்கிறார்கள்.+தாழ்மையான* ஜனங்களை ஒதுக்கித்தள்ளுகிறார்கள்.+ அப்பாவும் மகனும் ஒரே பெண்ணோடு உறவுகொள்கிறார்கள்.என்னுடைய பரிசுத்த பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.   ஜனங்களிடமிருந்து அடமானமாக வாங்கிய உடைகளைப்+ பலிபீடங்களுக்குப்+ பக்கத்தில் விரித்து உட்காருகிறார்கள்.அபராதப் பணத்தில் திராட்சமது வாங்கி தங்கள் கோயில்களில் குடிக்கிறார்கள்.’   ‘இஸ்ரவேலர்களே, நான்தான் உங்கள் கண்ணெதிரில் எமோரியனை ஒழித்துக்கட்டினேன்.+தேவதாரு மரம்போல் உயரமாகவும், கருவாலி மரம்போல் பலமாகவும் இருந்தவனை வீழ்த்தினேன்.மேலே இருந்த அவனுடைய பழங்களைப் பாழாக்கினேன், கீழே இருந்த அவனுடைய வேர்களை நாசமாக்கினேன்.+ 10  அவனுடைய தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்தேன்.அதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+வனாந்தரத்தில் 40 வருஷங்களாக வழிநடத்தினேன்.+ 11  உங்கள் மகன்களில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகத் தேர்ந்தெடுத்தேன்.+உங்கள் வாலிபர்களில் சிலரை நசரேயர்களாக நியமித்தேன்.+ என் ஜனங்களே, இதெல்லாம் உண்மைதானே?’ என்று யெகோவா கேட்கிறார். 12  ‘ஆனால், நீங்கள் நசரேயர்களுக்குத் திராட்சமது கொடுத்துவந்தீர்கள்.+தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது” என்று கட்டளை போட்டீர்கள்.+ 13  அதனால், நிறைய கதிர்க்கட்டுகளைச் சுமக்கிற வண்டி அதன் சக்கரத்தின் கீழே இருக்கிற எல்லாவற்றையும் நொறுக்கிவிடுவது போல,நான் உங்களை உங்கள் இடத்திலேயே நொறுக்கிவிடுவேன். 14  வேகமாக ஓடுகிறவனுக்கு ஒளிந்துகொள்ள இடம் இருக்காது.+பலசாலிக்குப் பலம் இருக்காது.படைவீரன் ஒருவனாலும் உயிர்தப்ப முடியாது. 15  வில்வீரனால் எதிர்த்து நிற்க முடியாது.வேகமாக ஓடுகிறவனால் தப்பிக்க முடியாது.குதிரைவீரனால் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. 16  வீரர்களில் மகா தைரியசாலிகள்கூடஅந்த நாளில் வெற்று உடம்போடு ஓடுவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மூன்று, நான்கு குற்றங்கள்.”
நே.மொ., “நீதிபதிக்கு.”
வே.வா., “அறிவுரையை.”
வே.வா., “சாந்தமான.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா