ஆமோஸ் 3:1-15

3  “இஸ்ரவேல் தேசமே, உன்னைப் பற்றி யெகோவா சொல்வதைக் கேள். எகிப்திலிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தவர் சொல்லும் வார்த்தைகளைக் கேள்:   ‘பூமியிலுள்ள தேசங்களிலேயே உன்னை மட்டும்தான் நான் தேர்ந்தெடுத்தேன்.+ அதனால், நீ செய்த குற்றங்களுக்காக உன்னைக் கண்டிப்பாகத் தண்டிப்பேன்.+   முன்கூட்டியே பேசி வைத்துக்கொள்ளாமல் இரண்டு பேரால் சேர்ந்து நடக்க முடியுமா?   இரை இல்லாதபோது காட்டிலுள்ள சிங்கம் கர்ஜிக்குமா? இரை சிக்காதபோது இளம் சிங்கம் குகையிலிருந்து உறுமுமா?   வேடன் வலை விரிக்காமலேயே பறவை சிக்குமா?* எதுவும் விழாமலேயே வலை தானாக எகிறுமா?   ஊதுகொம்பை ஊதும்போது ஜனங்கள் நடுங்காமல் இருப்பார்களா? யெகோவா தலையிடாமலேயே நகரத்துக்கு அழிவு வருமா?   உன்னதப் பேரரசராகிய யெகோவா எந்தவொரு ரகசியமான விஷயத்தையும்அவருடைய தீர்க்கதரிசிகளிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்.+   சிங்கம் கர்ஜிக்கிறது!+ யார்தான் பயந்து நடுங்காமல் இருப்பார்கள்? உன்னதப் பேரரசராகிய யெகோவா பேசுகிறார்! யார்தான் தீர்க்கதரிசனம் சொல்லாமல் இருப்பார்கள்?’+   யெகோவா சொல்வது இதுதான்: ‘அஸ்தோத்தின் கோட்டைகளில் இதை அறிவியுங்கள்.எகிப்தின் கோட்டைகளில் இதைச் சொல்லுங்கள்: “சமாரியாவின் மலைகளுக்கு எதிராக ஒன்றுகூடுங்கள்.+அங்கே இருக்கும் குழப்பத்தைப் பாருங்கள்.அங்கே நடக்கும் மோசடியைக் கவனியுங்கள்.+ 10  பொருள்களைக் கொள்ளையடித்து கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்.அவர்களுக்கு நல்லது செய்யத் தெரியாது.”’ 11  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:‘உன் தேசத்தை எதிரி ஒருவன் சுற்றிவளைப்பான்.+உன் பலத்தை அடக்குவான்.உன்னுடைய கோட்டைகளைக் கொள்ளையடிப்பான்.’+ 12  யெகோவா சொல்வது இதுதான்:‘ஒரு ஆடு சிங்கத்தின் வாயில் சிக்கிவிட்டால், அதனுடைய ஒரு காலோ காதோதான் மேய்ப்பனுக்கு மிஞ்சும்.அதேபோல், இஸ்ரவேல் ஜனங்களில் கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவார்கள்.சமாரியாவில் சொகுசு கட்டில்களிலும் பஞ்சு மெத்தைகளிலும் உட்கார்ந்திருப்பவர்கள் தப்பிக்க மாட்டார்கள்.’+ 13  பரலோகப் படைகளின் கடவுளும் உன்னதப் பேரரசருமாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘கேளுங்கள், யாக்கோபின் வம்சத்தாருக்கு எச்சரிக்கை கொடுங்கள். 14  இஸ்ரவேலர்களை அவர்களுடைய குற்றங்களுக்காகத் தண்டிப்பேன்.+பெத்தேலிலுள்ள பலிபீடங்களை அழிப்பேன்.+பலிபீடங்களில் இருக்கும் கொம்புகளை உடைத்துப் போடுவேன்.’+ 15  ‘குளிர் கால வீடுகளையும் கோடைக் கால வீடுகளையும் இடித்துத் தள்ளுவேன். யானைத்தந்தம் பதிக்கப்பட்ட வீடுகள் தரைமட்டமாகும்.+பெரிய* மாளிகைகள் மண்மேடுகளாகும்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

அல்லது, “இரையில்லாத வலையில் பறவை சிக்குமா?”
அல்லது, “நிறைய.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா