உன்னதப்பாட்டு 5:1-16

5  “என் சகோதரியே, என் மணப்பெண்ணே,நான் என் தோட்டத்துக்கு வந்தேன்.+ வெள்ளைப்போளத்தையும் நறுமணப் பொருளையும் சேகரித்தேன்.+ தேனடையும் தேனும் சாப்பிட்டேன்.திராட்சமதுவும் பாலும் குடித்தேன்.”+ “நண்பர்களே, சாப்பிடுங்கள்! குடியுங்கள்! காதல் போதையில் மயங்குங்கள்!”+   “என் கண் உறங்குகிறது, ஆனால் இதயம் விழித்திருக்கிறது.+ இதோ! என் காதலன் கதவைத் தட்டுகிற சத்தம் கேட்கிறது! ‘என் சகோதரியே, என் அன்பே,என் புறாவே, என் உத்தமியே, கதவைத் திற. என் தலை பனியில் நனைந்துவிட்டது,என் முடி ராத்திரிநேர பனித்துளிகளில் ஈரமாகிவிட்டது.’+   என் மேலாடையைக் கழற்றிவிட்டேனே, மறுபடியும் போட வேண்டுமா? என் பாதங்களைக் கழுவிவிட்டேனே, திரும்பவும் அழுக்காக்க வேண்டுமா?   கதவு துவாரத்திலிருந்து என் காதலன் கையை எடுத்துவிட்டார்.அவரைப் பார்க்க என் இதயம் துடிதுடித்தது.   என் காதலனுக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்.அப்போது, என் கைகளில் பூசியிருந்த வெள்ளைப்போள எண்ணெய் சொட்டியது.என் விரல்களிலும் தாழ்ப்பாள் பிடிகளிலும் அது வடிந்தது.   என் காதலனுக்காகக் கதவைத் திறந்தேன்.ஆனால், அவர் அங்கிருந்து போய்விட்டார். அவர் போனதும்* என் உயிரே என்னைவிட்டுப் போய்விட்டது. அவரைத் தேடினேன், கண்டுபிடிக்க முடியவில்லை.+ கூப்பிட்டேன், பதிலே வரவில்லை.   ஊரில் ரோந்து வந்த காவலாளிகள் என்னைப் பார்த்துவிட்டார்கள். என்னை அடித்தார்கள், காயப்படுத்தினார்கள். மதில்களின் காவலாளிகள் என் சால்வையை* பிடுங்கிக்கொண்டார்கள்.   எருசலேம் மகள்களே, நான் காதல் நோயால் தவிக்கிறேன்.என் காதலனைக் கண்டால் இதைச் சொல்லுங்கள். சொல்வதாக எனக்கு ஆணையிட்டுக் கொடுங்கள்.”   “பெண்களில் பேரழகியே, எங்களுக்குச் சொல்.மற்ற காதலர்களைவிட உன் காதலன் எந்த விதத்தில் சிறந்தவர்? நீ சத்தியம் செய்யச் சொல்லிக் கேட்கிறாயே,மற்ற காதலர்களைவிட உன் காதலன் எந்த விதத்தில் சிறந்தவர்?” 10  “என் காதலனின் அழகு சொக்க வைக்கும் சிவப்பழகு.அவர் பத்தாயிரத்தில் ஒருவர். 11  அவரது தலை சொக்கத்தங்கம் போன்றது. அவரது முடி அசைந்தாடுகிற பேரீச்ச மரக் கீற்று* போன்றது.அவரது தலைமுடி அண்டங்காக்கைபோல் கருமையானது. 12  அவரது கண்கள் நீரோடை ஓரமாய் நிற்கிற புறாக்கள் போன்றவை.அவை பாலில் குளிக்கிற புறாக்கள் போலவும்,குளக்கரையில்* அமர்ந்திருக்கிற புறாக்கள் போலவும் இருக்கின்றன. 13  அவரது கன்னங்கள் நறுமணச் செடிகளின் பாத்திகள்.+மணம் கமழ்கிற மூலிகைக் குவியல்கள். அவரது உதடுகள் லில்லிப் பூக்கள். அவரது உதடுகளிலிருந்து வெள்ளைப்போள எண்ணெய் சொட்டுகிறது.+ 14  அவரது கைகள் படிகப்பச்சை பதித்த தங்க உருளைகள். அவரது வயிறு நீலமணிக்கல் பதித்த பளபளப்பான தந்தம். 15  அவரது கால்கள் சொக்கத்தங்கப் பீடத்தில் நிற்கிற பளிங்குத் தூண்கள். தோற்றத்தில் அவர் லீபனோன், உயரத்தில் தேவதாரு.+ 16  அவருடைய வாய் தித்திக்கும் தேன்.அவர் இனிமையின் மொத்த வடிவம்.+ எருசலேம் மகள்களே, இவர்தான் என் அன்புக்குரியவர், என் ஆருயிர் காதலன்.”

அடிக்குறிப்புகள்

அல்லது, “அவர் பேசியபோது.”
வே.வா., “முக்காட்டை.”
அல்லது, “பேரீச்சைக் குலைகள்.”
அல்லது, “நீரூற்றின் ஓரங்களில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா