Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

உப+ஆகமம்=உபாகமம். அர்த்தம், “இரண்டாவது சட்டப் பதிவு.”

  • 1

    • இஸ்ரவேலர்கள் ஓரேப் மலையிலிருந்து புறப்படுகிறார்கள் (1-8)

    • கோத்திரத் தலைவர்களும் நியாயாதிபதிகளும் நியமிக்கப்படுகிறார்கள் (9-18)

    • காதேஸ்-பர்னேயாவில் ஜனங்கள் கீழ்ப்படியாமல் போகிறார்கள் (19-46)

      • கானான் தேசத்துக்குப் போக அவர்கள் மறுக்கிறார்கள் (26-33)

      • கானானியர்களிடம் தோற்றுப்போகிறார்கள் (41-46)

  • 2

    • வனாந்தரத்தில் 38 வருடங்கள் அலைந்துதிரிகிறார்கள் (1-23)

    • எஸ்போனின் ராஜாவான சீகோனைத் தோற்கடித்தல் (24-37)

  • 3

    • பாசானின் ராஜாவான ஓகைத் தோற்கடித்தல் (1-7)

    • யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள தேசம் பிரிக்கப்படுதல் (8-20)

    • பயப்படாமல் இருக்கும்படி யோசுவாவிடம் சொல்லப்படுகிறது (21, 22)

    • மோசே கானான் தேசத்துக்குப் போகப் போவதில்லை (23-29)

  • 4

    • கீழ்ப்படிந்து நடக்கும்படி ஜனங்களிடம் சொல்லப்படுகிறது (1-14)

      • கடவுள் செய்தவற்றை அவர்கள் மறக்கக் கூடாது (9)

    • யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர் (15-31)

    • யெகோவாவைத் தவிர வேறு கடவுள் இல்லை (32-40)

    • யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள அடைக்கல நகரங்கள் (41-43)

    • திருச்சட்டம் கொடுக்கப்படுகிறது (44-49)

  • 5

    • ஓரேப் மலையில் யெகோவா செய்யும் ஒப்பந்தம் (1-5)

    • பத்துக் கட்டளைகள் திரும்பவும் சொல்லப்படுகிறது (6-22)

    • சீனாய் மலை அடிவாரத்தில் ஜனங்கள் பயப்படுகிறார்கள் (23-33)

  • 6

    • முழு இதயத்தோடு யெகோவாமேல் அன்பு காட்ட வேண்டும் (1-9)

      • “இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள்” (4)

      • கடவுளைப் பற்றிப் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும் (6, 7)

    • யெகோவாவை மறந்துவிடக் கூடாது (10-15)

    • யெகோவாவைச் சோதித்துப் பார்க்கக் கூடாது (16-19)

    • பின்வரும் சந்ததிக்குச் சொல்லித் தர வேண்டும் (20-25)

  • 7

    • ஏழு தேசங்கள் அழிக்கப்பட வேண்டும் (1-6)

    • இஸ்ரவேலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் (7-11)

    • கீழ்ப்படிந்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (12-26)

  • 8

    • யெகோவா தரும் ஆசீர்வாதங்கள் பற்றிய நினைப்பூட்டுதல் (1-9)

      • ‘மனிதன் உணவால் மட்டும் உயிர்வாழ்வதில்லை’ (3)

    • யெகோவாவை மறந்துவிடக் கூடாது (10-20)

  • 9

    • இஸ்ரவேலர்களுக்கு கானான் தேசம் கொடுக்கப்பட்டதற்கான காரணம் (1-6)

    • இஸ்ரவேலர்கள் நான்கு தடவை யெகோவாவின் கோபத்தைக் கிளறுகிறார்கள் (7-29)

      • தங்கத்தால் செய்யப்பட்ட கன்றுக்குட்டி (7-14)

      • ஜனங்கள் சார்பாக மோசே மன்றாடுகிறார் (15-21, 25-29)

      • ஜனங்கள் இன்னும் மூன்று தடவை யெகோவாவின் கோபத்தைக் கிளறுகிறார்கள் (22)

  • 10

    • மறுபடியும் இரண்டு கற்பலகைகள் செய்யப்படுகின்றன (1-11)

    • ஜனங்களிடம் யெகோவா கேட்கும் காரியங்கள் (12-22)

      • யெகோவாவுக்குப் பயந்து, அவர்மேல் அன்பு காட்ட வேண்டும் (12)

  • 11

    • நீங்கள் யெகோவாவின் மகத்துவத்தைப் பார்த்தீர்கள் (1-7)

    • வாக்குக் கொடுக்கப்பட்ட தேசம் (8-12)

    • கீழ்ப்படிவதால் கிடைக்கும் பலன்கள் (13-17)

    • கடவுளுடைய வார்த்தைகளை இதயத்தில் பதிய வைக்க வேண்டும் (18-25)

    • ‘ஆசீர்வாதமும் சாபமும்’ (26-32)

  • 12

    • கடவுள் தேர்ந்தெடுக்கிற இடத்தில் அவரை வணங்க வேண்டும் (1-14)

    • இறைச்சியைச் சாப்பிடலாம், ஆனால் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது (15-28)

    • மற்ற தெய்வங்களை வணங்கி பாவக்குழியில் விழுந்துவிடக் கூடாது (29-32)

  • 13

    • கடவுளுக்கு எதிராக நடக்கிறவர்களுக்குச் செய்ய வேண்டியவை (1-18)

  • 14

    • முறையற்ற விதத்தில் துக்கம் அனுசரிப்பது (1, 2)

    • சுத்தமான உணவுகளும் அசுத்தமான உணவுகளும் (3-21)

    • யெகோவாவுக்குப் பத்திலொரு பாகம் கொடுக்கப்பட வேண்டும் (22-29)

  • 15

    • ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும் கடன்கள் ரத்து (1-6)

    • ஏழைகளுக்கு உதவ வேண்டும் (7-11)

    • ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும் அடிமைகள் விடுதலை (12-18)

      • ஊசியால் ஓர் அடிமையின் காதைக் குத்துதல் (16, 17)

    • ஆடுமாடுகளின் முதல் குட்டிகள் அர்ப்பணிக்கப்படுகின்றன (19-23)

  • 16

    • பஸ்கா பண்டிகை; புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை (1-8)

    • வாரங்களின் பண்டிகை (9-12)

    • கூடாரப் பண்டிகை (13-17)

    • நியாயாதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் (18-20)

    • வணக்கத்திற்காக எந்தப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது (21, 22)

  • 17

    • பலி செலுத்தப்படுகிற மிருகங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது (1)

    • மற்ற தெய்வங்களைக் கும்பிடுகிறவர்களுக்கு எதிரான நடவடிக்கை (2-7)

    • சிக்கலான வழக்குகள் சம்பந்தமாகச் செய்ய வேண்டியவை (8-13)

    • ஒரு ராஜாவை ஏற்படுத்தும்போது செய்ய வேண்டியவை (14-20)

      • திருச்சட்டத்தின் நகலை ராஜா எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் (18)

  • 18

    • குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டிய பங்கு (1-8)

    • மாயமந்திர பழக்கவழக்கங்களுக்குத் தடை (9-14)

    • மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி (15-19)

    • பொய்த் தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டுகொள்ளும் விதம் (20-22)

  • 19

    • கொலைக் குற்றமும் அடைக்கல நகரங்களும் (1-13)

    • எல்லைக் குறியைத் தள்ளிவைக்கக் கூடாது (14)

    • வழக்கு விசாரணையில் சாட்சிகள் (15-21)

      • இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் தேவை (15)

  • 20

    • போருக்குப் புறப்படும்போது செய்ய வேண்டியவை (1-20)

      • படையிலிருந்து விலக்களிக்கப்படும் வீரர்கள் (5-9)

  • 21

    • கொலையாளி யாரென்று தெரியாவிட்டால் செய்ய வேண்டியவை (1-9)

    • போரில் பிடித்துவரப்பட்ட பெண்களைக் கல்யாணம் செய்வது (10-14)

    • மூத்த மகனின் உரிமை (15-17)

    • அடங்காத மகன் (18-21)

    • மரக் கம்பத்தில் தொங்கவிடப்படுகிறவன் சபிக்கப்பட்டவன் (22, 23)

  • 22

    • மற்றவர்களுடைய மிருகங்களை அலட்சியப்படுத்தக் கூடாது (1-4)

    • ஆண்களின் உடையை பெண்களும் பெண்களின் உடையை ஆண்களும் போடக் கூடாது (5)

    • உயிரினங்களிடம் ஈவிரக்கம் இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது (6, 7)

    • மொட்டைமாடிக்குக் கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டும் (8)

    • பொருத்தமில்லாத இரண்டைச் சேர்க்கக் கூடாது (9-11)

    • உடையின் ஓரங்களில் குஞ்சங்கள் வைக்க வேண்டும் (12)

    • ஒழுக்கக்கேடு சம்பந்தமான சட்டங்கள் (13-30)

  • 23

    • கடவுளுடைய சபையில் இருக்கத் தகுதியில்லாதவர்கள் (1-8)

    • முகாம் தீட்டுப்படாதபடி பார்த்துக்கொள்வது (9-14)

    • எஜமானிடமிருந்து தப்பித்து வந்த அடிமைகள் (15, 16)

    • விபச்சாரத்திற்குத் தடை (17, 18)

    • வட்டி வாங்குவதும் நேர்ந்துகொள்வதும் (19-23)

    • மற்றவர்களின் தோட்டத்திலோ வயலிலோ சாப்பிட அனுமதிக்கப்பட்டவை (24, 25)

  • 24

    • கல்யாணமும் விவாகரத்தும் (1-5)

    • உயிருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் (6-9)

    • ஏழைக்கு இரக்கம் காட்ட வேண்டும் (10-18)

    • வயலிலோ மரத்திலோ மீதியாக விடப்பட்டதை எடுப்பது சம்பந்தமான சட்டங்கள் (19-22)

  • 25

    • குற்றவாளியை அடிப்பது சம்பந்தமான சட்டங்கள் (1-3)

    • போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது (4)

    • கொழுந்தனைக் கல்யாணம் செய்வது (5-10)

    • அடிதடியின்போது அடிப்பவனின் பிறப்புறுப்பைப் பிடிக்கக் கூடாது (11, 12)

    • சரியான எடைக்கற்களும் படிகளும் (13-16)

    • அமலேக்கியர்கள் அழிக்கப்பட வேண்டும் (17-19)

  • 26

    • முதல் விளைச்சலைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் (1-11)

    • இரண்டாவது தடவை கொடுக்கப்படும் பத்திலொரு பாகம் (12-15)

    • இஸ்ரவேலர்கள் யெகோவாவின் விசேஷ சொத்து (16-19)

  • 27

    • கற்களின் மேல் திருச்சட்டம் எழுதப்பட வேண்டும் (1-10)

    • ஏபால் மலையிலும் கெரிசீம் மலையிலும் (11-14)

    • சாபங்கள் பற்றிச் சொல்லப்படுகின்றன (15-26)

  • 28

    • கீழ்ப்படிகிறவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (1-14)

    • கீழ்ப்படியாதவர்களுக்கு வரும் சாபங்கள் (15-68)

  • 29

    • மோவாப் தேசத்தில் இஸ்ரவேலர்களுடன் செய்யப்படும் ஒப்பந்தம் (1-13)

    • கீழ்ப்படியாதவர்களுக்குக் கொடுக்கப்படும் எச்சரிப்புகள் (14-29)

      • ரகசியமான விஷயங்களும், வெளிப்படுத்தப்பட்ட விஷயங்களும் (29)

  • 30

    • யெகோவாவிடம் திரும்பி வருதல் (1-10)

    • யெகோவாவின் கட்டளைகள் கஷ்டமானவை அல்ல (11-14)

    • வாழ்வையோ சாவையோ தேர்ந்தெடுத்தல் (15-20)

  • 31

    • மோசே சாகப்போகும் நேரம் நெருங்கிவிடுகிறது (1-8)

    • திருச்சட்டம் எல்லாரும் கேட்கும்படி வாசிக்கப்படுகிறது (9-13)

    • யோசுவா தலைவராக நியமிக்கப்படுகிறார் (14, 15)

    • இஸ்ரவேலர்கள் அடங்காமல் போவார்கள் என்று முன்னறிவிக்கப்படுகிறது (16-30)

      • இஸ்ரவேலர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல் (19, 22, 30)

  • 32

    • மோசேயின் பாட்டு (1-47)

      • யெகோவா கற்பாறை போன்றவர் (4)

      • கற்பாறைபோல் பாதுகாப்பவரை இஸ்ரவேலர்கள் மறந்துவிடுகிறார்கள் (18)

      • ‘பழிவாங்குவது என் பொறுப்பு’ (35)

      • “தேசங்களே, அவருடைய ஜனங்களோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்” (43)

    • நேபோ மலையில் மோசே இறந்துபோவார் (48-52)

  • 33

    • எல்லா கோத்திரங்களையும் மோசே ஆசீர்வதிக்கிறார் (1-29)

      • யெகோவாவின் ‘கைகள் என்றென்றும் உன்னைத் தாங்கும்’ (27)

  • 34

    • கானான் தேசத்தை யெகோவா மோசேக்குக் காட்டுகிறார் (1-4)

    • மோசே இறந்துபோகிறார் (5-12)