உபாகமம் 27:1-26

27  பின்பு, இஸ்ரவேலின் பெரியோர்களுடன்* சேர்ந்து மோசே ஜனங்களிடம், “இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்.  நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்குப் போனவுடன், பெரிய கற்களை நாட்டி அவற்றுக்குச் சாந்து பூசுங்கள்.*+  அந்தக் கற்கள்மேல் இந்தத் திருச்சட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் எழுதுங்கள். உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போக நீங்கள் யோர்தானைக் கடந்தவுடன் இப்படிச் செய்யுங்கள்.+  இன்று நான் உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறபடியே, நீங்கள் யோர்தானைக் கடந்தவுடன், அந்தக் கற்களை ஏபால் மலையில்+ நாட்டி அவற்றுக்குச் சாந்து பூச* வேண்டும்.  அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குக் கற்களால் ஒரு பலிபீடம் கட்ட வேண்டும். இரும்புக் கருவிகளால் அந்தக் கற்களை வெட்டக் கூடாது.+  வெட்டப்படாத முழு கற்களால் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலிபீடம் கட்டி, அதன்மேல் யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்த வேண்டும்.  அங்கே சமாதான பலிகளைச்+ செலுத்தி, அவற்றைச் சாப்பிட்டு,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னால் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+  நீங்கள் நாட்டிய கற்கள்மேல் இந்தத் திருச்சட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் தெளிவாக எழுத வேண்டும்”+ என்று சொன்னார்.  பின்பு, மோசே லேவியர்களான குருமார்களுடன் சேர்ந்து இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், “இஸ்ரவேலர்களே, அமைதியாகக் கேளுங்கள். நீங்கள் இன்று உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஜனங்களாக ஆகியிருக்கிறீர்கள்.+ 10  அதனால் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை நீங்கள் கேட்க வேண்டும், நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்”+ என்று சொன்னார். 11  அன்றைக்கு மோசே எல்லாரிடமும், 12  “யோர்தானைக் கடந்த பின்பு, ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தை அறிவிப்பதற்காக சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் கெரிசீம் மலையில் நிற்க வேண்டும்.+ 13  சாபத்தை அறிவிப்பதற்காக ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் ஏபால் மலையில் நிற்க வேண்டும்.+ 14  எல்லா இஸ்ரவேலர்களிடமும் லேவியர்கள் இப்படிச் சத்தமாகச் சொல்ல வேண்டும்:+ 15  ‘யெகோவாவுக்கு அருவருப்பானதும்+ மனுஷனின்* கைவேலையுமான செதுக்கப்பட்ட சிலையையோ உலோகச் சிலையையோ செய்து அதை மறைத்துவைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’* என்று சொல்ல வேண்டும்.) 16  ‘அப்பா அம்மாவை மதிக்காதவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 17  ‘ஒருவனுடைய நிலத்தின் எல்லைக் குறியைத் தள்ளி வைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 18  ‘கண் தெரியாதவனைத் தவறான வழியில் போக வைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 19  ‘உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கோ, அப்பா இல்லாத பிள்ளைக்கோ,* விதவைக்கோ+ இருக்கிற வழக்கில் நீதியைப் புரட்டுபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 20  ‘தன் அப்பாவுடைய மனைவியுடன் உடலுறவுகொள்வதன் மூலம் தன் அப்பாவைக் கேவலப்படுத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 21  ‘ஏதாவது ஒரு மிருகத்தோடு புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 22  ‘அப்பாவுக்கோ அம்மாவுக்கோ பிறந்த மகளாகிய தன் சகோதரியோடு உடலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 23  ‘மாமியாருடன் உடலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 24  ‘பதுங்கியிருந்து கொலை செய்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 25  ‘ஒரு அப்பாவியைக் கொலை செய்வதற்கு லஞ்சம் வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) 26  ‘இந்தத் திருச்சட்ட வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவன் சபிக்கப்பட்டவன்’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்)” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களுடன்.”
வே.வா., “சுண்ணாம்பினால் வெள்ளையடியுங்கள்.”
வே.வா., “சுண்ணாம்பினால் வெள்ளையடிக்க.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்!”
வே.வா., “ஆசாரியின்.”
வே.வா., “அநாதைக்கோ.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா