Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • பாபிலோனில் கடவுள் தந்த தரிசனங்களை எசேக்கியேல் பார்க்கிறார் (1-3)

    • யெகோவாவின் பரலோக ரதத்தைப் பற்றிய தரிசனம் (4-28)

      • சூறாவளி, மேகம், தீ (4)

      • நான்கு ஜீவன்கள் (5-14)

      • நான்கு சக்கரங்கள் (15-21)

      • பிரகாசமான பனிக்கட்டி போல ஒரு தளம் (22-24)

      • யெகோவாவின் சிம்மாசனம் (25-28)

  • 2

    • எசேக்கியேல் தீர்க்கதரிசியாக அனுப்பப்படுகிறார் (1-10)

      • “அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி” (5)

      • புலம்பல் பாடல்கள் எழுதப்பட்ட ஒரு சுருள் காட்டப்படுகிறது (9, 10)

  • 3

    • கடவுள் கொடுத்த சுருளை எசேக்கியேல் சாப்பிடுகிறார் (1-15)

    • எசேக்கியேல் காவல்காரனாக நியமிக்கப்படுகிறார் (16-27)

      • எச்சரிக்காவிட்டால் ஒருவனின் சாவுக்குப் பொறுப்பாளி ஆகிவிடுவார் (18-21)

  • 4

    • எருசலேமின் முற்றுகை சித்தரித்துக் காட்டப்படுகிறது (1-17)

      • ஜனங்களின் குற்றத்தை 390 நாட்களுக்கும் 40 நாட்களுக்கும் சுமக்கிறார் (4-7)

  • 5

    • எருசலேமின் அழிவு சித்தரித்துக் காட்டப்படுகிறது (1-17)

      • தீர்க்கதரிசி சிரைத்துக்கொண்ட முடி மூன்று பங்காகப் பிரிக்கப்படுகிறது (1-4)

      • மற்ற தேசங்களைவிட எருசலேம் படுமோசமாக இருக்கிறது (7-9)

      • கலகக்காரர்கள் மூன்று விதங்களில் தண்டிக்கப்படுகிறார்கள் (12)

  • 6

    • இஸ்ரவேலின் மலைகளுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-14)

      • அருவருப்பான சிலைகளுக்கு வரும் அவமானம் (4-6)

      • “அப்போது நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்” (7)

  • 7

    • அழிவு வந்துவிட்டது (1-27)

      • இதுவரை வராத ஆபத்து (5)

      • பணம் வீதிகளில் வீசியெறியப்படும் (19)

      • ஆலயம் தீட்டுப்படுத்தப்படும் (22)

  • 8

    • எசேக்கியேல் ஒரு தரிசனத்தில் எருசலேமுக்குக் கொண்டுபோகப்படுகிறார் (1-4)

    • ஆலயத்தில் அருவருப்பான காரியங்களைப் பார்க்கிறார் (5-18)

      • பெண்கள் தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள் (14)

      • ஆண்கள் சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் (16)

  • 9

    • ஜனங்களைக் கொன்றுபோடுகிற ஆறு பேரும், மைப் பெட்டியை வைத்திருப்பவரும் (1-11)

      • தண்டனைத் தீர்ப்பு ஆலயத்தில் ஆரம்பமாகிறது (6)

  • 10

    • சக்கரங்களுக்கு நடுவிலிருந்து நெருப்புத் தணல் எடுக்கப்படுகிறது (1-8)

    • கேருபீன்களையும் சக்கரங்களையும் பற்றிய விவரிப்பு (9-17)

    • கடவுளுடைய மகிமை ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகிறது (18-22)

  • 11

    • கெட்டது செய்யத் திட்டமிடுகிற தலைவர்கள் கண்டனம் செய்யப்படுகிறார்கள் (1-13)

      • நகரம் ஒரு பானைக்கு ஒப்பிடப்படுகிறது (3-12)

    • ஜனங்கள் மறுபடியும் சொந்த தேசத்துக்குத் திரும்புவது பற்றிய வாக்குறுதி (14-21)

      • ‘புதிய மனதை’ கொடுப்பேன் (19)

    • கடவுளுடைய மகிமை எருசலேமைவிட்டு எழும்புகிறது (22, 23)

    • தரிசனத்தில் எசேக்கியேல் மறுபடியும் கல்தேயாவுக்கு வருகிறார் (24, 25)

  • 12

    • சிறைபிடிக்கப்படுவதைப் பற்றிய விவரிப்பு (1-20)

      • அதற்காக மூட்டைமுடிச்சுகளைக் கட்டிவைக்கிறார் (1-7)

      • ஜனங்களின் தலைவன் இருட்டில் புறப்பட்டுப் போவான் (8-16)

      • கவலையோடு உணவும் திகிலோடு தண்ணீரும் சாப்பிடுவார்கள் (17-20)

    • ஏமாற்றுப் பேச்சு முடிவுக்கு வரும் (21-28)

      • ‘நான் சொல்கிற வார்த்தை கொஞ்சம்கூட தாமதிக்காது’ (28)

  • 13

    • பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-16)

      • வெள்ளையடிக்கப்பட்ட சுவர் இடிந்து விழும் (10-12)

    • பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிற பெண்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (17-23)

  • 14

    • சிலைகளை வணங்குகிறவர்கள் கண்டனம் செய்யப்படுகிறார்கள் (1-11)

    • எருசலேம் தண்டனைத் தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது (12-23)

      • நீதிமான்களான நோவா, தானியேல், யோபு (14, 20)

  • 15

    • எருசலேம், ஒன்றுக்கும் உதவாத ஒரு திராட்சைக் கொடி (1-8)

  • 16

    • எருசலேம்மீது கடவுளுக்கு இருக்கிற அன்பு (1-63)

      • தூக்கி எறியப்பட்ட பிள்ளையைப் போல் இருந்தாள் (1-7)

      • கடவுள் அவளை அலங்கரித்து அவளோடு திருமண ஒப்பந்தம் செய்கிறார் (8-14)

      • ஆனால், கடவுளுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் (15-34)

      • விபச்சாரம் செய்ததால் தண்டிக்கப்படுகிறாள் (35-43)

      • சமாரியாவோடும் சோதோமோடும் ஒப்பிடப்படுகிறாள் (44-58)

      • கடவுள் தான் செய்த ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறார் (59-63)

  • 17

    • இரண்டு கழுகுகளையும் திராட்சைக் கொடியையும் பற்றிய புதிர் (1-21)

    • ஒரு கிளையின் கொழுந்து கம்பீரமான தேவதாரு மரமாக வளரும் (22-24)

  • 18

    • அவரவருடைய பாவத்துக்கு அவரவர்தான் பொறுப்பு (1-32)

      • பாவம் செய்கிற எவனும் செத்துப்போவான் (4)

      • தகப்பன் செய்த பாவத்துக்காக மகன் தண்டிக்கப்பட மாட்டான் (19, 20)

      • கெட்டவன் சாக வேண்டுமெனக் கடவுள் ஆசைப்படுவதில்லை (23)

      • மனம் திருந்தினால் வாழ்வு கிடைக்கும் (27, 28)

  • 19

    • இஸ்ரவேலின் தலைவர்களைப் பற்றிய புலம்பல் பாட்டு (1-14)

  • 20

    • இஸ்ரவேலர்கள் அடங்காமல் போனதைப் பற்றிய சரித்திரம் (1-32)

    • இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்துக்குத் திரும்புவதைப் பற்றிய வாக்குறுதி (33-44)

    • தென்திசைக்கு எதிரான தீர்க்கதரிசனம் (45-49)

  • 21

    • கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பின் வாள் உருவப்படுகிறது (1-17)

    • பாபிலோனின் ராஜா எருசலேமைத் தாக்குவான் (18-24)

    • இஸ்ரவேலின் பொல்லாத தலைவன் நீக்கப்படுவான் (25-27)

      • “உன் கிரீடத்தை எடுத்துவிடு” (26)

      • “உரிமைக்காரர் வரும்வரை” (27)

    • அம்மோனியர்களுக்கு எதிரான வாள் (28-32)

  • 22

    • எருசலேம், கொலைக்குற்றத்தைச் சுமக்கிற நகரம் (1-16)

    • இஸ்ரவேலர்கள் ஒன்றுக்கும் உதவாத கசடுபோல் இருக்கிறார்கள் (17-22)

    • இஸ்ரவேலின் தலைவர்களும் ஜனங்களும் கண்டிக்கப்படுகிறார்கள் (23-31)

  • 23

    • விபச்சாரம் செய்துவந்த இரண்டு சகோதரிகள் (1-49)

      • அகோலாள் அசீரியாவோடு விபச்சாரம் செய்கிறாள் (5-10)

      • அகோலிபாள் பாபிலோனோடும் எகிப்தோடும் விபச்சாரம் செய்கிறாள் (11-35)

      • இரண்டு சகோதரிகளுக்கும் தண்டனை (36-49)

  • 24

    • எருசலேம் களிம்பு படிந்த ஒரு பானையைப் போல் இருக்கிறது (1-14)

    • எசேக்கியேலுடைய மனைவியின் மரணமும், அடையாள அர்த்தமும் (15-27)

  • 25

    • அம்மோனியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-7)

    • மோவாபியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (8-11)

    • ஏதோமியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (12-14)

    • பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (15-17)

  • 26

    • தீருவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-21)

      • ‘மீன்வலைகளைக் காய வைக்கும் இடமாக மாறும்’ (514)

      • அதன் கற்களும் மண்ணும் கடலில் போடப்படும் (12)

  • 27

    • மூழ்கிக்கொண்டிருக்கும் தீருவின் கப்பலுக்காகப் பாடப்படும் புலம்பல் (1-36)

  • 28

    • தீரு ராஜாவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-10)

      • “நான் ஒரு கடவுள்” (2, 9)

    • தீரு ராஜாவுக்காகப் புலம்பல் பாட்டு (11-19)

      • ‘நீ ஏதேனில் இருந்தாய்’ (13)

      • “பாதுகாக்கும் கேருபீனாக நான் உன்னை நியமித்தேன்” (14)

      • “கெட்ட வழியில் நடக்க ஆரம்பித்தாய்” (15)

    • சீதோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (20-24)

    • இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திற்குத் திரும்புவார்கள் (25, 26)

  • 29

    • பார்வோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-16)

    • எகிப்து தேசம் பாபிலோனுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும் (17-21)

  • 30

    • எகிப்துக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-19)

      • நேபுகாத்நேச்சாரின் தாக்குதல் முன்னறிவிக்கப்படுகிறது (10)

    • பார்வோன் பலம் இழக்கிறான் (20-26)

  • 31

    • எகிப்தின் வீழ்ச்சி, உயரமான தேவதாரு மரம் (1-18)

  • 32

    • பார்வோனையும் எகிப்தையும் பற்றிய புலம்பல் பாட்டு (1-16)

    • விருத்தசேதனம் செய்யப்படாத ஆட்களோடு எகிப்தின் அடக்கம் (17-32)

  • 33

    • காவல்காரனுடைய பொறுப்புகள் (1-20)

    • எருசலேமின் அழிவைப் பற்றிய செய்தி (21, 22)

    • பாழாக்கப்பட்ட நகரத்தில் இருக்கிற ஜனங்களுக்குச் செய்தி (23-29)

    • செய்தியை ஜனங்கள் கேட்டும் அதன்படி செய்வதில்லை (30-33)

      • ‘காதல் பாட்டுப் பாடுகிறவன்போல்’ எசேக்கியேல் ஜனங்களுக்குத் தெரிகிறார் (32)

      • “அவர்கள் நடுவில் ஒரு தீர்க்கதரிசி இருந்தார்” (33)

  • 34

    • இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-10)

    • யெகோவாவுக்குத் தன்னுடைய ஆடுகள்மேல் இருக்கிற அக்கறை (11-31)

      • “என் ஊழியனாகிய தாவீது” அவர்களை மேய்ப்பான் (23)

      • “சமாதான ஒப்பந்தம்” (25)

  • 35

    • சேயீர் மலைப்பகுதிக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-15)

  • 36

    • இஸ்ரவேலின் மலைகளைப் பற்றிய தீர்க்கதரிசனம் (1-15)

    • இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திற்குத் திரும்புவார்கள் (16-38)

      • “என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தப்படுத்துவேன்” (23)

      • “ஏதேன் தோட்டத்தைப் போல” (35)

  • 37

    • காய்ந்துபோன எலும்புகள் கிடக்கிற பள்ளத்தாக்கைப் பற்றிய தரிசனம் (1-14)

    • இரண்டு கோல்கள் இணைக்கப்படுகிறது (15-28)

      • ஒரு ராஜாவின் கீழ் ஒரே தேசமாக இருப்பார்கள் (22)

      • என்றென்றும் நிலைத்திருக்கிற சமாதான ஒப்பந்தம் (26)

  • 38

    • இஸ்ரவேலர்களின் மேல் கோகுவின் தாக்குதல் (1-16)

    • கோகுவுக்கு எதிராக யெகோவாவின் கோபம் (17-23)

      • ‘நான் யெகோவா என்று தேசத்தார் தெரிந்துகொள்வார்கள்’ (23)

  • 39

    • கோகுவுக்கும் அவனுடைய படைகளுக்கும் வரும் அழிவு (1-10)

    • ஆமோன்-கோகுவின் பள்ளத்தாக்கில் அவர்கள் புதைக்கப்படுவார்கள் (11-20)

    • இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்தில் திரும்பவும் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் (21-29)

      • அவர்கள்மேல் கடவுளுடைய சக்தி பொழியப்படும் (29)

  • 40

    • ஒரு தரிசனத்தில் எசேக்கியேல் இஸ்ரவேலுக்குக் கொண்டுபோகப்படுகிறார் (1, 2)

    • தரிசனத்தில் அவர் ஓர் ஆலயத்தைப் பார்க்கிறார் (3, 4)

    • பிரகாரங்களும் நுழைவாசல்களும் (5-47)

      • வெளிப்புற கிழக்கு நுழைவாசல் (6-16)

      • வெளிப்பிரகாரம்; மற்ற வாசல்கள் (17-26)

      • உட்பிரகாரமும் வாசல்களும் (27-37)

      • ஆலய வேலைகளுக்கான அறைகள் (38-46)

      • பலிபீடம் (47)

    • ஆலயத்தின் நுழைவு மண்டபம் (48, 49)

  • 41

    • ஆலயத்தின் பரிசுத்த அறை (1-4)

    • ஆலயத்தின் சுவரும் பக்கவாட்டு அறைகளும் (5-11)

    • மேற்கிலுள்ள கட்டிடம் (12)

    • கட்டிடங்கள் அளக்கப்படுகின்றன (13-15அ)

    • பரிசுத்த அறையின் உட்புறம் (15ஆ-26)

  • 42

    • சாப்பாட்டு அறைகள் உள்ள கட்டிடம் (1-14)

    • ஆலயத்தின் நான்கு பக்கங்களும் அளக்கப்படுகின்றன (15-20)

  • 43

    • ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிரம்பியிருக்கிறது (1-12)

    • பலிபீடம் (13-27)

  • 44

    • கிழக்கைப் பார்த்த வாசல் மூடப்பட்டிருக்க வேண்டும் (1-3)

    • வேறு தேசத்து ஜனங்களுக்கான கட்டுப்பாடுகள் (4-9)

    • லேவியர்களுக்கும் குருமார்களுக்குமான கட்டுப்பாடுகள் (10-31)

  • 45

    • பரிசுத்த காணிக்கையும் நகரமும் (1-6)

    • தலைவரின் பங்கு (7, 8)

    • தலைவர்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் (9-12)

    • ஜனங்களுடைய காணிக்கைகளும் தலைவரும் (13-25)

  • 46

    • வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொடுக்க வேண்டிய பலிகள், காணிக்கைகள் (1-15)

    • தலைவரின் நிலம் மகன்களுக்கு நிரந்தர சொத்தாகக் கிடைக்கும் (16-18)

    • பலிகளையும் காணிக்கைகளையும் வேக வைக்க வேண்டிய இடங்கள் (19-24)

  • 47

    • ஆலயத்திலிருந்து தண்ணீர் வழிந்தோடுகிறது (1-12)

      • தண்ணீரின் ஆழம் படிப்படியாக அதிகரிக்கிறது (2-5)

      • சவக் கடலின் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறுகிறது (8-10)

      • சதுப்பு நிலங்கள் நல்ல நிலங்களாக மாறுவதில்லை (11)

      • உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் மரங்கள் (12)

    • தேசத்தின் எல்லைகள் (13-23)

  • 48

    • தேசங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன (1-29)

    • நகரத்தின் 12 நுழைவாசல்கள் (30-35)

      • நகரத்திற்கு “யெகோவா அங்கே இருக்கிறார்” என்ற பெயர் வைக்கப்படுகிறது (35)