எசேக்கியேல் 15:1-8

15  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, காட்டிலுள்ள திராட்சைக் கொடியின் தண்டு மற்ற மரங்களையோ கிளைகளையோ விட எந்த விதத்திலாவது மேலானதா?  அதை வைத்து ஏதாவது பொருள் செய்ய முடியுமா? பாத்திரங்களைத் தொங்கவிடும் மர ஆணியையாவது செய்ய முடியுமா?  அது நெருப்பில்தானே போடப்படும்? நெருப்பில் போட்டவுடனே அதன் இரண்டு முனைகளும் பொசுங்கிவிடும், நடுப்பகுதியும் கருகிவிடும். அதன் பிறகு அது எந்த வேலைக்காவது உதவுமா?  நெருப்பில் போடப்படுவதற்கு முன்பே அது ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் இருந்தது. அப்படியிருக்கும்போது, நெருப்பில் பொசுங்கிப்போன பிறகு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?” என்று கேட்டார்.  “அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘காட்டில் இருக்கிற திராட்சைக் கொடியின் தண்டு நெருப்பில் பொசுங்கும்படி நான் செய்தது போலவே எருசலேம் ஜனங்களுக்கும் செய்வேன்.+  நான் அவர்களுக்கு எதிராக இருக்கிறேன். அவர்கள் நெருப்பிலிருந்து தப்பித்தார்கள், ஆனால் இன்னொரு நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நான் அவர்களை எதிர்க்கும்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.’”+  “‘அவர்கள் எனக்குத் துரோகம் செய்ததால்+ அவர்களுடைய தேசத்தைப் பாழாக்குவேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா