எசேக்கியேல் 4:1-17

4  பின்பு அவர் என்னிடம், “மனிதகுமாரனே, செங்கல் ஒன்றை எடுத்து உன் முன்னால் வை. அதன்மேல் எருசலேம் நகரத்தின் படத்தைச் செதுக்கு.  முற்றுகையிடுவது போல+ அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவரைக் கட்டி,+ மண்மேடுகளை எழுப்பு.+ முகாம்களை அமைத்து, மதில் இடிக்கும் இயந்திரங்களைச் சுற்றிலும் நிறுத்து.+  ஒரு இரும்புத் தகட்டை எடுத்து, அதை இரும்பு மதிலைப் போல உனக்கும் நகரத்துக்கும் இடையில் வை. அந்த நகரத்துக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, அதை முற்றுகையிடு. நீ இப்படி அதை முற்றுகையிடுவது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்.+  அதன்பின் நீ இடது பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டு, இஸ்ரவேல் ஜனங்களின் குற்றத்தைச் சுமக்க வேண்டும்.+ நீ இடது பக்கமாகத் திரும்பிப் படுத்திருக்கும் நாளெல்லாம் அவர்களுடைய குற்றத்தைச் சுமப்பாய்.  இஸ்ரவேல் ஜனங்கள் குற்றம் செய்த வருஷங்களின் கணக்குப்படி 390 நாட்களை உன்மேல் சுமத்துவேன்.+ நீ அவர்களுடைய குற்றத்தைச் சுமக்க வேண்டும்.  அந்த நாட்கள் முடியும்வரை நீ அதைச் சுமக்க வேண்டும். அதன்பின் மறுபடியும் நீ படுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தடவை வலது பக்கமாகத் திரும்பிப் படுத்து, யூதா ஜனங்களின் குற்றத்தை 40 நாட்களுக்குச் சுமக்க வேண்டும்.+ ஒரு நாளுக்கு ஒரு வருஷம் என்ற கணக்கில் இந்த நாட்களை உனக்குச் சொல்லியிருக்கிறேன்.  முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்கு எதிராக முகத்தைத் திருப்பி,+ உன் அங்கியின் கையைச் சுருட்டிக்கொண்டு, அந்த நகரத்துக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.  நான் உன்னைக் கயிறுகளால் கட்டப்போகிறேன். முற்றுகை நாட்கள் முடியும்வரை உன்னால் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குத் திரும்பிப் படுக்க முடியாது.  நீ கோதுமையையும், பார்லியையும், மொச்சையையும், பருப்புகளையும், தினையையும், மாக்கோதுமையையும்* எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து உனக்காக ரொட்டி சுட்டுக்கொள். நீ இடது பக்கமாகத் திரும்பிப் படுத்திருக்கும் 390 நாட்களும் அதைச் சாப்பிட வேண்டும்.+ 10  தினமும் 20 சேக்கல்* எடையுள்ள உணவை அளந்து சாப்பிட வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும். 11  தண்ணீரையும் அரை லிட்டர்* அளவுக்குத்தான் குடிக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். 12  வட்டமான பார்லி ரொட்டியைச் சாப்பிடுவது போல நீ அந்த ரொட்டியைச் சாப்பிட வேண்டும். காய்ந்த மனுஷ மலத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி, அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அந்த ரொட்டியைச் சுட்டு சாப்பிட வேண்டும்” என்று சொன்னார். 13  அதோடு, “இப்படித்தான் இஸ்ரவேலர்களும் நான் அவர்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் அசுத்தமான ரொட்டியைச் சாப்பிடுவார்கள்”+ என்று யெகோவா சொன்னார். 14  அப்போது நான், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இதை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள்! சிறு வயதிலிருந்தே நான் தீட்டுப்பட்ட உணவைச் சாப்பிட்டதில்லை. தானாகச் செத்துப்போன மிருகத்தையோ, இன்னொரு மிருகத்தால் கடித்துக் குதறிப்போடப்பட்ட மிருகத்தையோ நான் சாப்பிட்டதில்லை.+ அசுத்தமான எந்த இறைச்சியும் என் வாய்க்குள் போனதில்லை”+ என்று சொன்னேன். 15  அதற்கு அவர், “சரி, காய்ந்த மனுஷ மலத்துக்குப் பதிலாக மாட்டு சாணத்தின் வறட்டிகளை எரித்து நீ ரொட்டி சுடு” என்றார். 16  பின்பு, “மனிதகுமாரனே, எருசலேமில் நான் பஞ்சத்தைக் கொண்டுவரப்போகிறேன்.*+ ஜனங்கள் பயங்கர கவலையோடு உணவை அளந்து அளந்து சாப்பிடுவார்கள்.+ திகிலோடு தண்ணீரை அளந்து அளந்து குடிப்பார்கள்.+ 17  கடைசியில், சாப்பாடும் தண்ணீரும் கிடைக்காமல் ஒருவரை ஒருவர் வெறித்துப் பார்ப்பார்கள். அவர்களுடைய குற்றத்தினாலேயே அவர்கள் அழிந்துபோவார்கள்” என்றார்.

அடிக்குறிப்புகள்

பூர்வ எகிப்தில் பயிரிடப்பட்ட ஒருவகையான தரம்குறைந்த கோதுமை.
சுமார் 230 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “ஒரு ஹின் அளவில் ஆறிலொரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “ரொட்டிக் கோல்களை முறித்துப்போடுவேன்.” இவை ஒருவேளை ரொட்டிகளை மாட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்ட கோல்களாக இருந்திருக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா