எசேக்கியேல் 41:1-26

41  பின்பு, அவர் என்னை ஆலயத்தின் பரிசுத்த அறைக்குக் கொண்டுபோய், அதன் சதுரத் தூண்களை அளந்தார். வலது பக்க தூணின் அகலம் ஆறு முழமாகவும் இடது பக்க தூணின் அகலம் ஆறு முழமாகவும் இருந்தன.  நுழைவாசலின் அகலம் 10 முழமாக இருந்தது. நுழைவாசலின் வலது பக்கத்தில் இருந்த சுவர் ஐந்து முழமாகவும் இடது பக்கத்தில் இருந்த சுவர் ஐந்து முழமாகவும் இருந்தன. பரிசுத்த அறையின் நீளத்தை அவர் அளந்தார். அது 40 முழமாக இருந்தது. அதன் அகலம் 20 முழமாக இருந்தது.  பின்பு, அவர் உள்ளே* போய் அதன் நுழைவாசலின் சதுரத் தூணை அளந்தார். அதன் தடிமன் இரண்டு முழமாக இருந்தது. நுழைவாசலின் அகலம் ஆறு முழமாக இருந்தது. நுழைவாசலின் இரண்டு பக்கங்களிலும் இருந்த சுவர்கள் ஏழு முழமாக இருந்தன.  அடுத்ததாக, பரிசுத்த அறையைப் பார்த்தபடி இருந்த அறையை அவர் அளந்தார். அதன் நீளம் 20 முழமாகவும் அகலம் 20 முழமாகவும் இருந்தது.+ அவர் என்னிடம், “இதுதான் மகா பரிசுத்த அறை”+ என்று சொன்னார்.  பின்பு, ஆலயத்தின் சுவரை அவர் அளந்தார். அதன் தடிமன் ஆறு முழமாக இருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த பக்கவாட்டு அறைகளின் அகலம் நான்கு முழமாக இருந்தது.+  அந்தப் பக்கவாட்டு அறைகள் மூன்று அடுக்குகளாக இருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் 30 அறைகள் இருந்தன. ஆலயத்தின் சுவரைச் சுற்றிலும் இருந்த விளிம்புகள்* அந்தப் பக்கவாட்டு அறைகளின் சட்டங்களைத் தாங்கிப் பிடித்தன. அந்தச் சட்டங்கள் ஆலயத்தின் சுவரைத் துளைத்துக்கொண்டு போகவில்லை.+  மேல் அடுக்குகளுக்குச் சுழன்று போகும் ஒரு வழி* ஆலயத்தின் இரண்டு பக்கங்களிலும் இருந்தது. அது மேலே போகப்போக அகலமாகிக்கொண்டே போனது.+ ஒருவரால் கீழ் அடுக்கிலிருந்து நடு அடுக்கின் வழியாக மேல் அடுக்குக்குப் போக முடிந்தது. கீழ் அடுக்கைவிட நடு அடுக்கும், நடு அடுக்கைவிட மேல் அடுக்கும் அகலமாக இருந்தது.  ஆலயத்தைச் சுற்றிலும் உயரமான தளமேடை இருந்ததைப் பார்த்தேன். பக்கவாட்டு அறைகளின் அஸ்திவாரங்கள் கீழிருந்து மேல்வரை ஆறு முழத்துக்கு இருந்தன, அதாவது நீளமான ஓர் அளவுகோலின் உயரத்துக்கு இருந்தன.  பக்கவாட்டு அறைகளின் வெளிப்புற சுவரின் அகலம் ஐந்து முழமாக இருந்தது. பக்கவாட்டு அறைகளுக்குப் பக்கத்தில் ஒரு காலியான இடம்* இருந்தது. அது ஆலயத்தின் பாகமாக இருந்தது. 10  ஆலயத்துக்கும் சாப்பாட்டு அறைகளுக்கும்+ இடையில் ஒரு திறந்தவெளிப் பகுதி இருந்தது. இரண்டு பக்கங்களிலும் அதன் அகலம் 20 முழமாக இருந்தது. 11  பக்கவாட்டு அறைகளுக்கும் வடக்கிலிருந்த காலியான இடத்துக்கும் இடையில் ஒரு நுழைவாசல் இருந்தது. இன்னொரு நுழைவாசல் தெற்கில் இருந்தது. காலியான இடத்தின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமாக இருந்தது. 12  திறந்தவெளிப் பகுதியைப் பார்த்தபடி மேற்கில் ஒரு கட்டிடம் இருந்தது. அதன் அகலம் 70 முழமாகவும் நீளம் 90 முழமாகவும் இருந்தது. அதனுடைய சுவரின் தடிமன் சுற்றிலும் ஐந்து முழமாக இருந்தது. 13  அவர் ஆலயத்தை அளந்தார். அதன் நீளம் 100 முழமாக இருந்தது. அவர் திறந்தவெளிப் பகுதியையும், கட்டிடத்தையும்,* அதன் சுவர்களையும் சேர்த்து அளந்தபோது, அது 100 முழ நீளத்தில் இருந்தது. 14  கிழக்கே பார்த்தபடி இருந்த ஆலயத்தின் முன்பக்கத்தையும் திறந்தவெளிப் பகுதியையும் சேர்த்து அளந்தபோது அது 100 முழ அகலத்தில் இருந்தது. 15  திறந்தவெளிப் பகுதியைப் பார்த்தபடி இருந்த கட்டிடத்தின் பின்பக்கத்தையும் அதன் இரண்டு பக்கங்களிலும் இருந்த நடைக்கூடங்களையும் அவர் சேர்த்து அளந்தார். அது 100 முழமாக இருந்தது. பின்பு பரிசுத்த அறையையும், மகா பரிசுத்த அறையையும்,+ பிரகாரத்தின் நுழைவு மண்டபங்களையும், 16  அந்த மூன்று பகுதிகளில் இருந்த நடைக்கூடங்களையும், வாசலறைகளையும், குறுகலான ஜன்னல்களையும்+ அவர் அளந்தார். வாசலறைக்குப் பக்கத்தில் தரையிலிருந்து ஜன்னல்கள்வரை மரச்சட்டங்கள் இருந்தன.+ ஜன்னல்களில் சட்டங்கள் அடிக்கப்பட்டிருந்தன. 17  நுழைவாசலின் மேல்பகுதியையும், ஆலயத்தின் உட்புறத்தையும், அதன் வெளிப்புறத்தையும், சுற்றிலும் இருந்த சுவரையும் அவர் அளந்தார். 18  அங்கே கேருபீன்களுடைய உருவங்களும் பேரீச்ச மர உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன.+ இரண்டிரண்டு கேருபீன்களுக்கு நடுவே ஒரு பேரீச்ச மரம் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டு முகங்கள் இருந்தன. 19  மனுஷ முகம் பேரீச்ச மரத்துக்கு இந்தப் பக்கமும் சிங்க முகம் பேரீச்ச மரத்துக்கு அந்தப் பக்கமும் பார்த்தபடி இருந்தன.+ ஆலயம் முழுவதும் அந்த உருவங்கள் இப்படித்தான் செதுக்கப்பட்டிருந்தன. 20  தரையிலிருந்து நுழைவாசலின் மேல்பக்கம்வரை ஆலயத்தின் சுவரில் கேருபீன்களின் உருவமும் பேரீச்ச மரங்களின் உருவமும் செதுக்கப்பட்டிருந்தன. 21  ஆலயத்தின் கதவு நிலைகள்* சதுரமாக இருந்தன.+ பரிசுத்த இடத்துக்கு* முன்னால் 22  மரத்தாலான ஒரு பலிபீடம் இருந்தது.+ அதன் உயரம் மூன்று முழமாகவும் நீளம் இரண்டு முழமாகவும் இருந்தது. அதற்கு மூலைச்சட்டங்கள் இருந்தன. அதன் அடிப்புறமும் சுற்றுப்புறமும் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. அவர் என்னிடம், “இதுதான் யெகோவாவுக்கு முன்னால் இருக்கும் மேஜை”+ என்று சொன்னார். 23  பரிசுத்த அறைக்கும் பரிசுத்த இடத்துக்கும்* இரண்டு கதவுகள் இருந்தன.+ 24  அவை ஒவ்வொன்றும், உள்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் திறந்து மூடும் இரட்டைக் கதவுகளாக இருந்தன. 25  சுவர்களில் இருந்தது போலவே ஆலயத்தின் கதவுகளிலும் கேருபீன்களின் உருவமும் பேரீச்ச மரங்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன.+ வெளியே, நுழைவு மண்டபத்துக்கு முன்னால் ஒரு மரக்கூரை இருந்தது. 26  குறுகலான சட்டங்களுள்ள ஜன்னல்களும்+ பேரீச்ச மர உருவங்களும் நுழைவு மண்டபத்தின் இருபக்க சுவர்களிலும், பக்கவாட்டு அறைகளின் சுவர்களிலும், கூரைகளிலும் இருந்தன.

அடிக்குறிப்புகள்

அதாவது, “மகா பரிசுத்த அறைக்குள்ளே.”
வே.வா., “திட்டுகள்.”
அநேகமாக, “ஒரு சுழல் படிக்கட்டு.”
அநேகமாக, “ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த ஒரு குறுகலான நடைபாதை.”
அதாவது, “ஆலயத்தின் மேற்கில் இருந்த கட்டிடத்தையும்.”
அநேகமாக, “பரிசுத்த அறையின் நுழைவாசல்.”
அநேகமாக, “மகா பரிசுத்த அறைக்கு.”
அநேகமாக, “மகா பரிசுத்த அறைக்கும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா