எசேக்கியேல் 48:1-35
48 “இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களும், வடக்கு எல்லை தொடங்கி அவற்றுக்குக் கிடைக்கும் பங்கின் எல்லைகளும் இவைதான்: தாணின் வடக்கு எல்லை+ எத்லோன் வழியாக லெபோ-காமாத்துக்கும்,*+ ஆத்சார்-ஏனானுக்கும் போகிறது. வடக்கே தமஸ்குவின் எல்லையோரமாக காமாத்வரை+ போகிறது. அது கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
2 தாணின் எல்லைக்குக் கீழே ஆசேரின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
3 ஆசேரின் எல்லைக்குக் கீழே நப்தலியின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
4 நப்தலியின் எல்லைக்குக் கீழே மனாசேயின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
5 மனாசேயின் எல்லைக்குக் கீழே எப்பிராயீமின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
6 எப்பிராயீமின் எல்லைக்குக் கீழே ரூபனின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
7 ரூபனின் எல்லைக்குக் கீழே யூதாவின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
8 கிழக்கிலிருந்து மேற்குவரை போகிற யூதாவின் எல்லைக்குக் கீழே, 25,000 முழ* அகலத்தில் ஒரு பகுதியை நீங்கள் கடவுளுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்.+ கிழக்கிலிருந்து மேற்குவரை அதன் நீளம் மற்ற கோத்திரங்களின் நீளத்தின்படியே இருக்க வேண்டும். அதன் நடுவில் ஆலயம் இருக்கும்.
9 நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்கிற பகுதியின் நீளம் 25,000 முழமாகவும் அதன் அகலம் 10,000 முழமாகவும் இருக்க வேண்டும்.
10 இந்தப் பகுதிதான் குருமார்களுக்கான பரிசுத்த காணிக்கையாக இருக்கும்.+ வடக்கில் அது 25,000 முழமாகவும், மேற்கில் 10,000 முழமாகவும், கிழக்கில் 10,000 முழமாகவும், தெற்கில் 25,000 முழமாகவும் இருக்கும். அதன் நடுவில் யெகோவாவின் ஆலயம் இருக்கும்.
11 சாதோக்கின் வம்சத்தைச்+ சேர்ந்த புனிதமாக்கப்பட்ட குருமார்களுக்கு அந்தப் பரிசுத்த காணிக்கை கொடுக்கப்படும். ஏனென்றால், இஸ்ரவேலர்களும் லேவியர்களும் என்னைவிட்டு விலகிப் போனபோது+ அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகாமல் எனக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தார்கள்.
12 மகா பரிசுத்தமானதாக அர்ப்பணிக்கப்படுகிற நிலத்தில் லேவியர்களின் எல்லைக்குக் கீழே அந்தக் குருமார்களுக்கு ஒரு பகுதி கொடுக்கப்படும்.
13 குருமார்களின் பகுதிக்கு மேலே 25,000 முழ நீளத்திலும் 10,000 முழ அகலத்திலும் லேவியர்களுக்கு ஒரு பகுதி கொடுக்கப்படும். (அதன் மொத்த நீளம் 25,000 முழம், அகலம் 10,000 முழம்.)
14 மிகச் சிறந்த இந்த நிலத்தில் எந்தப் பகுதியையும் அவர்கள் விற்கவோ, மாற்றவோ, யாருக்காவது கொடுக்கவோ கூடாது. ஏனென்றால், அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
15 25,000 முழத்தில் இருக்கிற எல்லைக்குப் பக்கத்திலே 5,000 முழ அகலத்தில் மீந்திருக்கும் பகுதி நகரத்தின் பொது உபயோகத்துக்காக ஒதுக்கப்படும்.+ அங்கே வீடுகளும் மேய்ச்சல் நிலங்களும் இருக்கும். அந்தப் பகுதியின் நடுவில் நகரம் இருக்கும்.+
16 நகரத்தின் அளவுகள் இவைதான்: அதன் வடக்கு எல்லை 4,500 முழமாகவும், தெற்கு எல்லை 4,500 முழமாகவும், கிழக்கு எல்லை 4,500 முழமாகவும், மேற்கு எல்லை 4,500 முழமாகவும் இருக்கும்.
17 நகரத்தின் மேய்ச்சல் நிலங்கள் வடக்கில் 250 முழமாகவும், தெற்கில் 250 முழமாகவும், கிழக்கில் 250 முழமாகவும், மேற்கில் 250 முழமாகவும் இருக்கும்.
18 மிச்சமிருக்கிற பகுதியின் நீளம் பரிசுத்த காணிக்கையின் நிலத்தைப் போலவே+ கிழக்கில் 10,000 முழமாகவும் மேற்கில் 10,000 முழமாகவும் இருக்கும். அது பரிசுத்த காணிக்கையின் அளவில் இருக்கும். அதில் விளைவதை நகரத்துக்காகச் சேவை செய்கிறவர்கள் சாப்பிடுவார்கள்.
19 நகரத்துக்காகச் சேவை செய்கிறவர்கள் இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் அதில் பயிர் செய்வார்கள்.+
20 மொத்த நிலமும் 25,000 முழத்தில் சதுரமாக இருக்கும். நகரத்துக்குச் சொந்தமான பகுதியோடு சேர்த்து அதைப் பரிசுத்த காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்.
21 பரிசுத்த காணிக்கையின் இரண்டு பக்கங்களிலும், நகரத்துக்குச் சொந்தமான பகுதியின் இரண்டு பக்கங்களிலும் மீந்திருக்கிற பகுதி தலைவருக்குச் சொந்தமானதாக இருக்கும்.+ பரிசுத்த காணிக்கையின் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கிற 25,000 முழ எல்லைகளுக்குப் பக்கத்தில் அது இருக்கும். அதை ஒட்டியிருக்கிற கோத்திரங்களின் பகுதிகளைப் போலவே அது இருக்கும். அது தலைவருக்காகக் கொடுக்கப்படும். பரிசுத்த காணிக்கையும் ஆலயமும் அதன் நடுவில் இருக்கும்.
22 லேவியர்களின் பகுதியும் நகரத்துக்குச் சொந்தமான பகுதியும் தலைவருடைய பகுதிக்கு இடையில் இருக்கும். தலைவருடைய பகுதி யூதாவின் எல்லைக்கும்+ பென்யமீனின் எல்லைக்கும் நடுவில் இருக்கும்.
23 மற்ற கோத்திரங்களின் எல்லைகள் இவைதான்: பென்யமீனின் எல்லை கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.+
24 பென்யமீனின் எல்லைக்குக் கீழே சிமியோனின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
25 சிமியோனின் எல்லைக்குக் கீழே இசக்காரின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
26 இசக்காரின் எல்லைக்குக் கீழே செபுலோனின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.+
27 செபுலோனின் எல்லைக்குக் கீழே காத்தின் எல்லை+ கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.
28 காத்தின் எல்லையை ஒட்டிய தெற்கு எல்லை தாமாரிலிருந்து+ மேரிபாத்-காதேசின்+ தண்ணீர் வரையும், அங்கிருந்து பள்ளத்தாக்கு*+ வரையும், பெருங்கடல்* வரையும் போகிறது.
29 இந்தத் தேசத்தைத்தான் நீங்கள் இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குச் சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ இவைதான் அவர்களுக்குக் கிடைக்கும் பங்குகள்”+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
30 “நகரத்திலிருந்து வெளியே போவதற்கான வாசல்கள் இவைதான்: நகரத்தின் வடக்குப் பக்கத்தின் அளவு 4,500 முழமாக இருக்கும்.+
31 நகரத்தின் நுழைவாசல்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்கள் வைக்கப்படும். வடக்கில் ரூபனின் நுழைவாசல், யூதாவின் நுழைவாசல், லேவியின் நுழைவாசல் என மூன்று நுழைவாசல்கள் இருக்கும்.
32 நகரத்துடைய கிழக்குப் பக்கத்தின் நீளம் 4,500 முழமாக இருக்கும். அங்கே யோசேப்பின் நுழைவாசல், பென்யமீனின் நுழைவாசல், தாணின் நுழைவாசல் என மூன்று நுழைவாசல்கள் இருக்கும்.
33 நகரத்துடைய தெற்குப் பக்கத்தின் நீளம் 4,500 முழமாக இருக்கும். அங்கே சிமியோனின் நுழைவாசல், இசக்காரின் நுழைவாசல், செபுலோனின் நுழைவாசல் என மூன்று நுழைவாசல்கள் இருக்கும்.
34 நகரத்துடைய மேற்குப் பக்கத்தின் நீளம் 4,500 முழமாக இருக்கும். அங்கே காத்தின் நுழைவாசல், ஆசேரின் நுழைவாசல், நப்தலியின் நுழைவாசல் என மூன்று நுழைவாசல்கள் இருக்கும்.
35 நகரத்தின் சுற்றளவு 18,000 முழமாக இருக்கும். அந்த நாள்முதல் அந்த நகரம், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’*+ என்ற பெயரால் அழைக்கப்படும்.”
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “காமாத்தின் நுழைவாசலுக்கும்.”
^ இது பெரிய முழத்தைக் குறிக்கிறது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ அதாவது, “மத்தியதரைக் கடல்.”
^ அதாவது, “எகிப்தின் காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.”
^ வே.வா., “யெகோவா-ஷம்மா.”