எண்ணாகமம் 13:1-33

13  பின்பு யெகோவா மோசேயிடம்,  “இஸ்ரவேலர்களுக்கு நான் தரப்போகிற கானான் தேசத்தை உளவு பார்க்க சில ஆட்களை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தலைவரை+ அனுப்பு”+ என்றார்.  யெகோவாவின் கட்டளைப்படியே, மோசே அவர்களை பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினார்.+ அந்த ஆட்கள் எல்லாரும் இஸ்ரவேலர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.  அவர்களுடைய பெயர்கள் இவைதான்: ரூபன் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா.  சிமியோன் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகன் சாப்பாத்.  யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப்.+  இசக்கார் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகன் ஈகால்.  எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா.+  பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகன் பல்த்தி. 10  செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகன் காதியேல். 11  யோசேப்பு கோத்திரத்தைச்+ சேர்ந்த மனாசே கோத்திரத்திலிருந்து+ சூசியின் மகன் கேதி. 12  தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மியேல். 13  ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாவேலின் மகன் சேத்தூர். 14  நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேசியின் மகன் நாகபி. 15  காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகன் கூவேல். 16  இவர்கள்தான் கானான் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அனுப்பி வைத்த ஆட்கள். நூனின் மகனாகிய ஓசெயாவின் பெயரை யோசுவா*+ என்று மோசே மாற்றினார். 17  கானான் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அவர்களை அனுப்பியபோது அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குப் போங்கள். அதன் பின்பு மலைப்பகுதிக்குப் போங்கள்.+ 18  அந்தத் தேசம் எப்படிப்பட்ட தேசம்,+ அங்குள்ள ஜனங்கள் பலசாலிகளா பலம் இல்லாதவர்களா, கொஞ்சம் பேரா நிறைய பேரா என்று பாருங்கள். 19  அது நல்ல தேசமா மோசமான தேசமா, அவர்கள் குடியிருக்கும் நகரங்கள் மதில் உள்ளவையா, மதில் இல்லாதவையா என்றும் பாருங்கள். 20  அது செழிப்பான நிலமா, தரிசு நிலமா,+ அங்கே மரங்கள் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பாருங்கள். நீங்கள் பயப்படாமல்,+ அங்கு விளைகிறவற்றில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாக அது இருந்தது.+ 21  மோசே சொன்னபடி, அவர்கள் போய் சீன் வனாந்தரத்திலிருந்து+ ரேகோப்+ வரையிலும் லெபோ-காமாத்*+ வரையிலும் அந்தத் தேசத்தை உளவு பார்த்தார்கள். 22  அவர்கள் நெகேபுக்குப் போய் எப்ரோன் நகரத்துக்கு+ வந்துசேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கியர்களான+ அகீமானும் சேசாயும் தல்மாயும்+ வாழ்ந்துவந்தார்கள். அந்த எப்ரோன் நகரம், எகிப்திலுள்ள சோவான் நகரம் கட்டப்படுவதற்கு ஏழு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. 23  அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை*+ அடைந்து, அங்கே ஒரு திராட்சைக் கொடியிலிருந்த ஒரு குலையை அறுத்தார்கள். அதை இரண்டு பேர் ஒரு கம்பத்தில் கட்டித் தூக்கிக்கொண்டு வர வேண்டியிருந்தது. சில மாதுளம்பழங்களையும் அத்திப்பழங்களையும்கூட அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.+ 24  அந்த இஸ்ரவேலர்கள் அங்கே திராட்சைக் குலையை அறுத்ததால் அந்த இடத்துக்கு எஸ்கோல்* பள்ளத்தாக்கு+ என்று பெயர் வைக்கப்பட்டது. 25  இப்படி, அவர்கள் அந்தத் தேசத்தை 40 நாட்கள்+ உளவு பார்த்துவிட்டு, 26  மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் இருந்த இடத்துக்கு, அதாவது பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு,+ திரும்பி வந்தார்கள். அந்தத் தேசத்தில் பார்த்ததையெல்லாம் ஜனங்களுக்குச் சொன்னார்கள். அங்கு விளைந்த பழங்களையும் காட்டினார்கள். 27  அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய தேசத்துக்கு நாங்கள் போனோம். அது நிஜமாகவே பாலும் தேனும் ஓடுகிற தேசம்தான்.+ இதெல்லாம் அங்கு விளைந்ததுதான்.+ 28  ஆனால், அங்கே வாழ்கிற ஜனங்கள் பலசாலிகள். அவர்களுடைய நகரங்கள் மதில் சூழ்ந்த மிகப் பெரிய நகரங்கள். அங்கே ஏனாக்கியர்களையும் பார்த்தோம்.+ 29  நெகேபில்+ அமலேக்கியர்கள்+ குடியிருக்கிறார்கள். மலைப்பகுதியில் ஏத்தியர்களும் எபூசியர்களும்+ எமோரியர்களும்+ வாழ்கிறார்கள். கடல் பக்கத்திலும்+ யோர்தானை ஒட்டியும் கானானியர்கள்+ வாழ்கிறார்கள்” என்றார்கள். 30  அப்போது, காலேப் மோசேக்கு முன்னால் நின்ற ஜனங்களிடம், “நாம் உடனே அங்கு போகலாம். அதை நிச்சயம் கைப்பற்றிவிடுவோம், சுலபமாக ஜெயித்துவிடுவோம்”+ என்று சொல்லி அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தார். 31  ஆனால் அவருடன் போயிருந்த ஆட்கள், “அங்கே போக வேண்டாம், அவர்கள் நம்மைவிட பலசாலிகள், நம்மால் அவர்களை எதிர்க்க முடியாது” என்றார்கள்.+ 32  அதுமட்டுமல்ல, அந்தத் தேசத்தைப் பற்றி இப்படி மோசமாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள்:+ “நாங்கள் உளவு பார்த்த தேசம் அதன் குடிமக்களையே கொன்றுவிடுகிற தேசம். அங்குள்ள ஜனங்களுடைய உருவத்தைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது.+ 33  ராட்சதர்களின் வம்சத்தில் வந்த ஏனாக்கியர்களை அங்கே பார்த்தோம்.+ அந்த ராட்சதர்களுக்குப் பக்கத்தில் நாங்கள் வெறும் வெட்டுக்கிளிகளைப் போலத் தெரிந்தோம். அவர்களும் எங்களை அப்படித்தான் பார்த்தார்கள்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெஹோஷுவா”; அர்த்தம், “யெகோவாவே மீட்பு.”
வே.வா., “காமாத்தின் நுழைவாசல்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”
அர்த்தம், “திராட்சைக் குலை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா